gdiஇறை நேசர்களையும் நபிமார்களையும் கொண்டு
வசீலா தேடும் சட்டத்தில் தெளிவான கருத்து
القول الجلي في التوسل بالنبي والولي
எழுதியவர்;
அஷ்ஷைக்:முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு அப்துஸ்ஸலாம் கிழ்ர்
தமிழாக்கம்.
மௌலவி: அப்துல் சத்தார் மதனி
M.A in (Edu) Sudan.
2015 - 1436
القول الجلي في التوسل بالنبي والولي
« باللغة التاميلية »
تأليف:
الشيخ :محمد بن أحمد بن محمد بن عبد السلام خضر
ترجمة
عبد الستار بن عبد الرشيد خان
2015 - 1436
முன்னுரை
بسم الله الرحمن الرحيم
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
அல்லாஹ் கூறுகின்றான்;
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பு உடையோனும் ஆகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்)
1. “அல்லாஹ் ஒருவன்”என கூறுவீராக!
2. அல்லாஹ் தேவைகளற்றவன்.
3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
4. அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உண்டாவதாக, அவன் பின்வருமாறு கூறுகின்றான்.
﴿الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ ۖ وَكَبِّرْهُ تَكْبِيرًا﴾ الإسراء: 111
“சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்ல” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக! (அல்இஸ்ரா :111)
மேலும் அவன் எத்தகையவன் எனில்;
﴿لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَىٰ﴾ طه:6
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவ்விரண்டுக்கும் இடையே உள்ளவையும், பூமிக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. (தாஹா;6)
மேலும் அவன் எத்தகையவன் எனில்;
﴿مَا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۖ وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ﴾ فاطر:2
மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்துவிட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். (பாதிர்; 2)
மேலும் அவன் எத்தகையவன் எனில்;
﴿ لِّلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَنْ يَشَاء إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاء الذُّكُورَ * أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاء عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِير﴾ٌ الشورى 49-50
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை) களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை) களை வழங்குகிறான்.
அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன், ஆற்றலுடையவன். (அஷ்ஷூரா;49,50)
மேலும் அவன் எத்தகையவன் எனில்;
﴿لهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالأَرْضِ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ﴾ الحديد:2
வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். அனைத்துப் பொருட்கள் மீதும்அவன் ஆற்றலுடையவன். (அல்ஹதீத்;2)
மேலும் அவன் எத்தகையவன் எனில்;
﴿تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ﴾ الملك:1
எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (அல் முல்க்;1)
மேலும் அவன் எத்தகையவன் எனில்;
﴿الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ
وَالَّذِي أَطْمَعُ أَن يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ﴾ الشعراء: 78-82
அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர்வழி காட்டுகிறான்.
அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகச்செய்கிறான்.
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
அவனே என்னை மரணிக்கச் செய்வான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.
“தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்” என ஆசைப்படுகிறேன்.
என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! (அஷ்ஷூஅரா; 78-82)
அல்லாஹ்வே கொடுப்பவனும், தடுப்பவனும், பயன் அளிப்பவனும், தீங்கிழைப்பவனும், உயர்த்துவனும், தாழ்த்துபவனும் ஆவான், அவனுடைய நீதிக்கும் தயாளத்துக்கும், ஞானத்துக்கும் தக்கவாறு கண்ணியமளிப்பனும், இழிவு படுத்துபவனும் அவனே. தன் படைப்புகளின் எவர் (தயவுக்)காகவும் அவன் அவ்வாறு செய்வதில்லை. காரணம் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاء وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ﴾ سورة الجمعة: 4
இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு இதை அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (அல்ஜும்ஆ;4)
மேலும் வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என நான் சாட்சியம் கூறுகின்றேன், தன் நபியை நோக்கி பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்;
﴿قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ ۚ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ﴾ الأعراف: 188
“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல் அஃராப்;188)
மேலும் தன் நபியை நோக்கி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்;
﴿لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ ﴾ آل عمران:128
(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (ஆலு இம்ரான்; 128)
மேலும் அவர்களை நோக்கி;
﴿ قُل لاَّ أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلاَ ضَرًّا إِلاَّ مَا شَاء اللَّهُ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لاَسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ إِنْ أَنَاْ إِلاَّ نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ ﴾ الأعراف: 188
“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டி ருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல் அஃராப்;188)
மேலும் அவர்களை நோக்கி;
﴿قُلْ إِنِّي لا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلا رَشَدًا
قُلْ إِنِّي لَن يُجِيرَنِي مِنَ اللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِن دُونِهِ مُلْتَحَدًا﴾ الجن: 21-22
நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!
அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காண மாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல் ஜின்;21,22)
மேலும் அவர்களை நோக்கி;
﴿قُلْ مَنْ ذَا الَّذِي يَعْصِمُكُمْ مِنَ اللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً ۚ وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا﴾ الأحزاب: 17
“அல்லாஹ் உங்களுக்குத் தீங்கை நாடினால், அல்லது உங்களுக்கு அருளை நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பவன் யார்?” என்று கேட்பீராக! அல்லாஹ்வையன்றி பொறுப்பா ளனையோ, உதவியாளனையோ அவர்கள் காணமாட்டார்கள். (அல் அஹ்ஸாப்;17)
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரும் அடியானுமாவார் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன். அவர்களே பின் வருமாறு எங்களுக்கு கற்றுத் தந்தார்கள்;
إذَا سَأَلْت فَاسْأَلْ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْت فَاسْتَعِنْ بِاَللَّهِ، وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوك بِشَيْءٍ لَمْ يَنْفَعُوك إلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَك، وَإِنْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوك بِشَيْءٍ لَمْ يَضُرُّوك إلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْك؛ رُفِعَتْ الْأَقْلَامُ، وَجَفَّتْ الصُّحُفُ" . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடு. உனக்கு ஒரு நன்மையை செய்யவேண்டும் என்று சமூகம் ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு விதித்ததை தவிர எந்த நன்மையையும் உனக்கு வந்து சேராது. உனக்கு ஒரு தீமையை செய்யவேண்டும் என்று சமூகம் ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு விதித்ததை தவிர எந்த தீமையையும் உனக்கு வந்து சேராது. எழுது கோல்கள் உயர்த்தப்பட்டு ஏடுகள் மூடப்பட்டு விட்டன. (நூல்; திர்மிதி.)
மேலும் நபி (ஸல்) அவர்கள் அபூ பக்கர் (ரலி) அவர்களை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்; அபூ பக்கர் அவர்களே என்னிடத்தில் உதவி தேடப்படுவ தில்லை, அல்லாஹ்விடமே உதவி தேடப்படும்.
இறைவா! முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய கிழையார்கள் தோழர்கள் அனைவர் மீதும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி, அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை நேசராக எடுத்துக் கொண்ட சகல அடியார்கள் மீதும், ஸலாத்தும் ஸலாமும் சொல்வாயாக.
“நபிமார்களையும், இறைநேசர்களையும் கொண்டு உதவி தேடும் சட்டத்தில் தெளிவான கருத்து” என்ற இந்த நூலை, ஆவலாகப் படிக்க விரும்பும் சகல முஸ்லிம் சகோதர்களுக்காகவும், மேலும், இறையச்சம் உடையவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அவாவுடனும் - முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு, முஹம்மத் இப்னு அப்துஸ்ஸலாம் என்வராகிய நான் எழுதுகின்றேன்.
அறிவு, ஈமான் முதலியவைகள் மூலம் அல்லாஹ் எங்களுடைய இதயங்களை பிரகாசமாக்கி வைப்பானாக. மேலும் நேர்வழி பெற்று, சத்தியத்தை பின்பற்றி, அல் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் பணி புரிந்தவர்கள் பட்டியலில் அவன் எம்மை ஆக்குவானாக. வழிகெட்ட, க்ஷைத்தானின் தீண்டுதல்கள், நரகத்துக்கு அழைத்துச் செல்லும் புதுவழிகள், இணைகட்பித்தல் முதலிய பாவங்களில் இருந்து எம்மை அவன் காப்பாற்றுவானாக.
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹீ...
என் அருமைச் சகோதர்களே! அல்குர்ஆனிலும், நபி மொழிகளிலும், மேலும் அரபு மொழி, குர்ஆன் ஹதீஸ் முதலிய கலைகளின் அறிஞர்கள் வாயிலாகவும், “தவஸ்ஸூல்” எனும் அரபிப் பதம்; “நபி (ஸல்) அவர்கள் வாயிலாக அல்லாஹ் எங்களுக்கு கடமையாக்கியவைகள் (செய்வதன்) மூலம் அவனுடைய நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதையே குறிக்கும் என்று வந்துள்ளது.
இதோ அவர்களின் (சில) கருத்துக்களை (இங்கு) விபரமாகத் தருகிறேன்.
1- (வஸல) எனும் அரபுப் பதத்துக்கு “காமூஸ்” அகராதியில் வந்துள்ள கருத்தாவது.
வஸீலா, வாஸிலா, ஆகிய இரண்டு அரபிப் பதங்களும் நெருக்கம், அந்தஸ்து முதலிய கருத்துக்களை குறிக்கும். அல்லாஹ்விடம் வஸீலா தேடினான் என்பது, அவனுடைய நெருக்கத்தைப் பெற்றுத் தரும் ஒரு செயலை செய்தான் என்ற பொருள் படும்.
- “மிஸ்பாகுல் முனீர்” எனும் அகராதியில் (வஸல) எனும் அரபிப் பதத்துக்கு கூறப்பட்டுள்ள கருத்தாவது:
நட்செயல் மூலம் அல்லாஹ்வின் (வஸீலா) நெருக்கத்தை தேடினேன். மேலும் “அஸிலு” என்பது நெறுங்கினேன், விரும்பினேன் முதலிய கருத்துக்களைக் குறிக்கும். மேலும் அப்பதத்திலிருந்தே “வஸீலா” எனும் பதமும் மறுவியுள்ளது, எனவே அல்லாஹ்விடம் வஸீலா தேடினான் என்பது, நட்செயல் மூலம் அவன் நெருக்கத்தை தேடினான் என்ற பொருள் படும்.
2- இப்னுல் அதீர் என்பவருக்குரிய “நிஹாயா” எனும் நூலில் (வஸல) எனும் அரபுப் பதத்துக்கு வந்துள்ள கருத்தாவது:
அதானுக்கு பின் ஓதும் துஆ குறித்த நபி மொழியில் “இறைவா! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வஸீலாவை வழங்குவாயாக என வந்துள்ளது. அதுவும் அல்லாஹ்விடம் நெருங்குவதையே குறிக்கும்.
- “அத்துர்ருன் நதீர்” எனும் நூலில் “அல் வஸீலா” என்பது; ஒரு பொருளை அனுகுவதற்கு, அல்லது அதை நெருங்குவதற்கு உபயோகிக்கப்படும் (சாதனம்) ஒன்றை குறிக்கும், மேலும் “வஸீலா” என்பதன் பன்மை “வஸாஇல்” என்பதாகும் என்றும் வந்துள்ளது.
3- அர் ராகிப் அல் இஸ்பஹானி என்பவருடைய “முப்ரதாத்” எனும் நூலில்;
﴿وَابْتَغُواْ إِلَيْهِ الْوَسِيلَةَ﴾ المائدة:35
“அல்லாஹ்விடம் (நெருங்கி) செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். “(அல் மாஇதா;35) என்ற திருவசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “வஸீலா” எனும் பதத்தின் யாதார்த்தம் வணக்கம், அறிவு நற்காரியம் முதலியவை மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை தேடுவதாகும் என வந்துள்ளது. இதன் (பொருள்) முற்றிலும் (குர்பா) நெருக்கம் எனும் பிரிதொரு பதத்துக்கு நிகரானது.
அல்லாஹ் கூறுகின்றான்;
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللَّهَ وَابْتَغُواْ إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُواْ فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ﴾ المائدة:35
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் (நெருங்கி)செல்வதற் குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். (அல் மாஇதா;35)
இமாம் தப்பாரீ அவர்கள் தனது (அல் குர்ஆன்) வியாக்கியான நூலில் மேல் கூறப்பட்ட அல் குர்ஆன் வசனத்துக்கு விளக்கமளிக்கையில், “அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களை செய்வதன் மூலம் அவனுடைய நெருக்கத்தை தேடிக்கொள்ளுங்கள்” என்பதே அதன் பொருளாகும் என கூறிவிட்டு, (அறியாமை கால) கவிஞன் அன்தராவின் கவிதையில் கூறப்பட்ட “வஸீலா” எனும் பதத்தை இதற்கு ஆதாரமாக கூறியுள்ளார்.
கவிதை;
(ஏ பெண்ணே!) உன் கைகளுக்கு சாயம் பூசி, கண்களுக்கு சுர்மா இட்டுக்கொள்வதன் மூலம் நீ ஆண்களின் (வஸீலா) நெருக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இங்கும் (வஸீலா) நெருக்கம் என்ற கருத்தில் உபயோகிக்கப் பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
சுருங்கக் கூறின்; “வஸீலா” என்பது அல்லாஹ்வு க்கு விருப்பமான செயல்கள் மூலம் அவனை வழிபட்டு அவனுடைய நெருக்கத்தை பெற்றுக் கொள்வதையே குறிக்கும்.
இறைத்தூதர் (வாழ்நாட்களில் அவர்) மூலம், நபித் தோழர்கள் வஸீலா தேடிய முறை;
عنَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَذْكُرُ أَنَّ رَجُلًا دَخَلَ يَوْمَ الجُمُعَةِ مِنْ بَابٍ كَانَ وِجَاهَ المِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَلَكَتِ المَوَاشِي، وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، فَقَالَ: «اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا» قَالَ أَنَسُ: وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ، وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ، وَلاَ دَارٍ قَالَ: فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ، انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ، قَالَ: وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ البَابِ فِي الجُمُعَةِ المُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ» قَالَ: فَانْقَطَعَتْ، وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ قَالَ شَرِيكٌ: فَسَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ؟ قَالَ: «لاَ أَدْرِي
ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர் (மேடை) இருந்த திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழிந்து விட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ‘ஸல்ஃ’ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை.
அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது என்றனர் என ஷரீக் கூறுகிறார். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) (நூல்: புகாரி)
ஒரு குருடர் நபி (ஸல்) அவர்களிடம் வஸீலா தேடிய விபரம் வருமாறு:
கண்பார்வை இழந்த ஒரு சஹாபி நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனது நிலையை முறையிட்டார். உங்களால் பார்க்க முடயவில்லையா? என இறைத் தூதர் அவரிடம் கேட்டார்கள் அதற்கு அவர்; “என்னை அழைத்துச் செல்ல எவரும் இல்லை, அது எனக்கு சுமையாக உள்ளது என்றார்” இதைக் கேட்ட இறைத்தூதர் அவர்கள் அவரை நோக்கி “நீ விரும்பினால் நான் துஆ கேட்கிறேன் நீ விரும்பினால் பொறுமை செய்து கொள். அதுதான் சிறந்ததுமாகும்” என்று கூறினார்கள்.
(இவ் விஷயத்தில் பொறுமை கடை பிடிக்கவிரும்பாத அக்குருடர்) நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள். என்று சொன்னார்.
நபி(ஸல்) அவர்கள் அவரை “வுளு” எனும் சுத்தம் செய்ய வைத்துப் பின்வருமாறு “துஆ” வை கற்றுக் கொடுத்தார்கள். “அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக வஅதவஸ்ஸலு இலைக பிநபிய்யிக நபிய்யிர் றஹ்மதி யா முஹம்மத் யா ரஸூலல்லாஹ் இன்னீ அதவஜ்ஜஹூ பிக இலா றப்பீ பீ ஹாஜதீ ஹாதிஹீ லிதகலிய அல்லாஹூம்ம பஷப்பிஉஹூ பிய்ய வஷப்பிஃனீ பீ நப்ஸீ”.
அதன் பொருள்; “இறைவா! நான் உன்னிடம் கேட்கிறேன் “றஹ்மத்’ அருளுடைய நபியான உனது நபி முகம்மதி(ன் பிரார்த்த)னை மூலம் உன் பக்கம் நெறுங்குகின்றேன். முகம்மதே! யா ரஸூலல்லாஹ் எனது தேவை எனக்கு நிறைவேற்றப்படுவதற்காக எனது இறைவனளவில் தங்கள் (பிரார்த்தணை) மூலம் முன்னோக்குகின்றேன். இறைவா! எனக்கு யாஅல்லாஹ்! எனது விஷயத்தில் (முஹம்மத்(ஸல்) அவர்களுடைய) பிரார்த்தணையை ஏற்பாயாக. அறிவிப்பவர்: உத்மான் பின் ஹூனைப் (றழி) ஆதாரம்: நஸாயீ, திர்மிதி, தபறானீ, பைஹகீ.
பின்னர் அவருடைய கண் பார்வையை அல்லாஹ் மீட்டிக் கொடுத்தான்.
(இறைத்தூதரின் மறைவுக்குப் பின் நபித் தோழர்கள் வஸீலா தேடிய முறை);
இறைத்தூதரின் மறைவுக்குப் பின் நபித் தோழர்களுக்கு ஏதாவது தேவை ஏற்பட்டால், அல்லது துன்பங்கள் நேர்ந்தால், அவர்கள் மிகச் சிறந்த நபித்தேழர்களிடம் சென்று அவர்களுடைய பிரார்த்தணை, சிபார்சுகள் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடியுள்ளார்கள்.
புஹாரி எனும் நூலில் வந்துள்ள ஒரு நபி மொழியில் பின் வருமாறு வந்துள்ளது:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالعَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، فَقَالَ: «اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا»، قَالَ: فَيُسْقَوْنَ
அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி) அவர்கள், அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தார்கள். இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோரு கிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக என்று உமர்(ரலி) கூறுவார்கள். பிறகு அவர்களுக்கு மழை பொழியும். என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உமர் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களிடம் மழை வேண்டி பிரார்திக்க வேண்டியதும் அவர்கள் பின் வருமாறு பிரார்த்தித்தார்கள்;
اللَّهُمَّ إِنَّهُ لَمْ يَنْزِلْ بَلَاءٌ إِلَّا بِذَنْبٍ وَلَمْ يُكْشَفْ إِلَّا بِتَوْبَةٍ وَقَدْ تَوَجَّهَ الْقَوْمُ بِي إِلَيْكَ لِمَكَانِي مِنْ نَبِيِّكَ وَهَذِهِ أَيْدِينَا إِلَيْكَ بِالذُّنُوبِ وَنَوَاصِينَا إِلَيْكَ بِالتَّوْبَةِ فَاسْقِنَا الْغَيْثَ فَأَرْخَتِ السَّمَاءُ مِثْلَ الْجِبَالِ حَتَّى أَخْصَبَتِ الْأَرْضَ وَعَاشَ النَّاسُ (فتح الباري لابن حجر )
யாஅல்லாஹ் எந்தவொரு துன்பமும் பாவத்தின் காரணமாகவே இறங்குகிறது.அது பாவமன்னிப்பின் மூலம் நீங்குகிறது. உன் நபியிடம் எனக்கு இருக்கும் கண்ணியத்தின் காரணமாக இந்த சமூகம் என் (பிரார்த்தணை)னை கொண்டு உன்னிடம் முன்னோக்குகிறது. பாவங்களுக்கு பரிகாரமாக பாவ மன்னிப்பைக் கொண்டு எங்களது கரங்களை உயர்த்தியுள்ளோம். எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். அப்போது மலை போன்று திரண்ட மேகங்களில் இருந்து மழை பொழிந்தது பூமியும் செழிப்பாகி மக்களும் (நிம்மதியாக) வாழ்ந்தார்கள். (நூல்: பத்ஹூல் பாரி)
(பின்வரும் நபிமொழியில் பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளது போல்) குகை வாசிகள் (அல்லாஹ்விடம்) வஸீலா தேடியதும் இந்த வகையை சேர்ந்ததே.
புகாரி முஸ்லிம் ஆகிய இரு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள ஒரு நபி மொழியை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவித்துள்ளார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகை வாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் “நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!” என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (ஏறகெனவே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது! மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள். அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன். அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள். நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக் காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து) விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணப் பந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன் அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன். நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமே விட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது. ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், ‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியை விட்டு விட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!’ என்று கூறினார். ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்! என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!’ என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!’ என்று கூறினேன். அவர் ஒன்று விடாமல் அனைத்தையும் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!". நூற்கள் புகாரி முஸ்லிம்.
இவ்வாரே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் பின்வருமாறு பிராத்தணை செய்துள்ளார்கள் எனும் ஒரு செய்தியை இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்;
اللهم أمرتني فأطعت، ودعوتني فأجبت، وهذا سحر فاغفرلي
இறைவா! நீ எனக்கு கட்டளையிட்டாய் உடனே நான் வழிப்பட்டேன், நீ என்னை அழைத்தாய் உடனே நான் தலை சாய்த்தேன், இது ஸஹர் வேளையாகையால் என்னை நீ மண்ணிப்பாயாக.
அபூ பக்ர் இப்னு அபுத் துன்யா என்பவரும் அனஸ் (ரலி) அவர்களைத் தொட்டும் எடுத்துக் கூறியுள்ள ஒரு அறிவிப்பில், ஒரு முறை நாம் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்த அன்சாரி ஒருவரிடம் சென்றோம், அவருடைய உயிர் பிரிந்ததும் அவர் மீது ஒரு புடவையை விரித்தோம். அவருடைய தலைப் பக்கத்தில் அவருடை வயதான தாய் இருந்தாள், எங்களில் சிலர் அவரை நோக்கி “ஏ தாயே! இத்துன்பத்தை நீ பொறுத்துக் கொள்வாயாக. அல்லாஹ் உமக்கு கூலி தருவான்” என்றார்கள். அதற்கு அந்த மூதாட்டி “என்ன கூறுகின்றீர்கள்? என் அருமை மைந்தன் மரணித்து விட்டாரா?” எனக்கேட்டாள், அதற்கு நாம் ஆம். என்றோம் உடனே அவள் நீங்கள் கூறுவது உண்மை தானே எனக் கூறிவிட்டு தனது இரு கரங்களையும் அல்லாஹ்விடம் ஏந்தி, “இறைவா! நீ எனது எல்லாத் துன்பங்களையும் நிவர்த்தி செய்திட வேண்டும் என வேண்டி, நான் இஸ்லாத்தை ஏற்று உனது தூதரிடம் ஹிஜ்ரதும் செய்தேன் என்பதை நீ அறிவாய், ஆகவே இன்றைய தினத்தில் இந்த துன்பத்தை நீ எனக்காக நிவர்த்தி செய்து தருவாயாக” என பிரார்த்தணை செய்தாள். உடனே அவருடைய முகத்தை நாம் திறந்து பார்த்தோம், இறுதியில் அவருடனே அங்கு நாம் உணவருந்தி விட்டு திரும்பிச் சென்றோம் என வந்துள்ளது.
மேல் கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் நீங்கள் விளங்கிக் கொண்டால், (சகல முஸ்லிம்களும்) பின்பற்றக்கூடிய நபி (ஸல்) அவர்கள் வாயிலாக அல்லாஹ் எங்களுக்கு கற்றுத் தந்த தவஸ்ஸூல் யாதெனில்;
நபி (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் மார்க்கத்தில் அனுமதித்த இதயத்தால், உடலால் செய்யும் அனைத்து நட்செயல்கள், மேலும் அறிவு, தீமையை கைவிடல், அதைத் தடுத்தல் முதலிய விவகாரங்கள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை தேடுவதே அனுமதிக்கப்பட்ட வஸீலா ஆகும்.
(அதாவது அல்லாஹ்வுடைய நெருக்கத்தை தேடுவதற்கு) அவனுக்கு கட்டுப்பட்டு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளையும், கைவிடப்படும் சகல தீமைகளையும் “வஸீலாவாக” கொள்ளலாம்.
அத்தகைய வழிபாடுகளில், அல்லாஹ்வின் பன்புகளையும், கலிமாக்களையும், ஆயத்துகளையும் நினைவு கூர்ந்து, நபி வழியில் பெறப்பட்ட தூஆக்கள் மூலம் அவனிடத்தில் பட்சாதாபப்பட்டு பிரார்த்தணை செய்வதே மகத்துவம் மிக்க ஒரு இபாதத் ஆகும். அவ்வாறு பிரார்த்தணை செய்பவர் தனக்காகவும், தன் பெற்றோர், உறவினர்கள், சகோதர்கள், ஏனைய முஸ்லிம்கள் என எவருக்காகவும் பிரார்த்தணை செய்வதில் தடை ஏதும் இல்லை.
உதாரணமாக, ஏகத்துவம், ஈமான், தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ், நன்னடத்தை, அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் பழகுதல், நட்குணம், பெற்றோருக்கு நன்றி செழுத்துதல், நட்செயல்களில் எதிர்நோக்கும் துன்பங்களை சகித்தல், அல்லாஹ் வுக்கு விருப்பமான செயல்களை செய்தல், அல்லாஹ் வை அதிகமாக “திக்ர்” ஞாபகம் கூறுதல், அல்லாஹ் வுக்காக பிறரை நேசித்தல், அவனுக்காகவே வெறுத்தல், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுதல், நபி வழியை உயிர்ப் பித்தல், புது வழிகளை எதிர்த்தல், (கண் மூடித்தனமான) பின்பற்றுதலை கைவிடல், முன்னோர்களின் அடிச் சுவடுகளை பின்பற்றுதல், பின் வந்தவர்களின் கருத்து மோதல்களிலுருந்து விழகியிருத்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல், உள்ளும் புறமும் அல்லாஹ்வை அஞ்சுதல், தர்மம் செய்தல், அமைதி, பொறுமை, வெட்கம், அனுமதிகப்பட்ட வணக்கங்கள் மூலம் அல்லாஹ்விடம் நெருங்குதல், இழிவான தடைசெய்யப்பட்ட சகல புதுவழிகளையும் கைவிடல் முதலிய அனைத்து நட்செயல்கள் மூலமும் அல்லாஹ்விடம் பிரார்த்தணை செய்யலாம்.
படைப்புகளின் இரட்சகனாகிய அல்லாஹ்வை பற்றி திருப்தியடைந்தவர்கள் அவ்வாறே பிரார்த்தணை செய்தார்கள் என்ற உண்மையை அல் குர்ஆனின் தெளிவான வசனங்களில் இருந்து நேரடியாகவே நாம் விளங்கிக் கொள்கிறோம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
﴿رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ﴾ آل عمران: 53
எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்! (ஆலு இமரான்;53)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا ۚ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ ﴾ آل عمران: 193
“உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (என்றும் கூறுவார்கள்.) (ஆலு இம்ரான்;193)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ﴾ المؤمنون: 109
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்” என்று எனது அடியார்களில் ஒரு சாரார் கூறி வந்தனர். அல் (முஃமனூன்;109)
மேலே நாம் கூறியவைகளை நீங்கள் விளங்கிக் கொண்டால், “இறைவா! நீ தனித்தவன், தேவைகள் அற்றவன் என்ற அடிப்படையில் எனக்கு குறித்த இந்த விடயத்தை நிறைவேற்றித் தருவாயாக என நான் உன்னிடம் கேட்கிறேன், உதவியும் கோறுகின்றேன்” என்று பிரார்த்தணை செய்வதில் பிழை ஏதும் இல்லை.
அல்லது இறைவா உனது திருக் குர்ஆனையும், உன் அழகிய திருநாமங்களையும், உன் உயர்வான பண்புகளையும் கொண்டு குறித்த இந்த விடயத்தை நிறைவேற்றித் தருவாயாக என்பதிலும் பிழை ஏதும் இல்லை.
அல்லது இறைவா! நான் எல்லா நபிமார்களையும், தூதர்களையும் கொண்டு விசுவாசம் கொண்டுள்ள தால், அல்லது நான் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை நேசித்து, அவர்களுக்கு வழிப்பட்டு, அவர்களை விசுவாசமும் கொண்டுள்ளதால் குறித்த இந்த விடயத்தை நிறைவேற்றித் தருவாயாக என்பதிலும் பிழை ஏதும் இல்லை.
அல்லது (இறைவா!) நேர்வழி பெற்ற நான்கு கலீபாக்களையும், ஏனைய நபித்தோழர்களையும் நான் பின்பற்றி, உனது சகல நல்லடியார்களையும், உனது நபியின் பரிசுத்தமான குடுப்பத்தினரையும் நேசித்துள்ளதால் குறித்த இந்த விடயத்தை நிறைவேற்றித் தருவாயாக என்பதிலும் பிழை ஏதும் இல்லை.
அல்லது (இறைவா!) முற்றிலும் உனக்கு வழிப்படும் குறித்த அடியானை நான் நேசிப்பதால், அல்லது உனக்கு மாறு செய்யும் குறித்த அடியானை நான் வெறுப்பதால், அல்லது நிராகரிப்பையும், உன்னையும் உனது தூதர் கொண்டு வந்தவை களையும் நிராகரிப்பவர்களை நான் வெறுப்பதால், அல்லது உனது ஏவல் விளக்கல்களுக்கு மாறு செய்பவர்களை நான் வெறுப்பதால் குறித்த இந்த விடயத்தை நிறைவேற்றித் தருவாயாக என்பதிலும் பிழை ஏதும் இல்லை.
இவ்வாறு (பல உதாரணங்களை) அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அவைகள் அனைத்திலும் (பிரார்த்தணை செய்பவர்) மேல் கூறப்பட்ட மூன்று குகை வாசிகளைப் போல்உண்மையாளராக இருப்பது நிபந்தனையிடப்படும்.
( ஒரு சில மக்களால் நிகழும் தவறுகள்)
அல்லாஹ்விடத்தில் நெருங்குவதற்குரிய எத்தகைய நட்செயல் ரீதியான சாதனங்களுமின்றி, நல்லடியார்கள், இறைநேசர்கள், நபிமார்கள் முதலானோர் (பொருட்டை) கொண்டு அல்லாஹ்வின் நெருக்கத்தை (வஸீலா) பெற சில மனிதர்கள் முயல்வதே இங்கு தடுக்கப்பட்ட ஒன்றாகும்.
அவ்வாறு செய்வது (வெறும்) அபத்தமும், புதுவழியும், வழிகேடும், ஏமாற்றமும் ஆகும். திட்டவட்டமாக மார்க்கத்தில் அதற்கு அனுமதி கிடையாது. மாறாக அது இனைவைப்பாளர்களின் செயலாகும். காரணம் அச்செயல் சிலை வணங்குப வர்களிடமிருந்து வேதக்காரர்களுக்கும், அவர்களிட மிருந்து சில முஸ்லிம்கள் மத்தியிலும் ஊடருவியது.
உதாரணத்துக்கு அவர்களில் சிலர், இறைவா! நபியவர்கள் மீது உனக்குள்ள உரிமையின் பொருட்டாலும், அவர்களுடை கப்ர், அதன் மாடம் முதலியவை மீது உனக்குள்ள உரிமையின் பொருட்டாலும், அல்லது அவருடைய கண்ணியம் பரகத் முதலியவை மீது உனக்குள்ள உரிமையின் பொருட்டினாலும் நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன் எனக் கூறுகின்றனர்.
அல்லது எங்கள் தலைவர் ஹுஸைன் அவர்களே! ஸித்தே, உம்மு ஹாஷிமே, பதவியே, மப்தூலியே, எனக்கு உதவி செய்யுங்கள், உங்களைக் கொண்டு நான் அபயம் கோறுகின்றேன், நிவாரணம் கோறுகின்றேன், எதிரிகள், அனியாயக் காரர்களுக்கு எதிராக எனக்கு உதவி செய்யுங்கள் என பிரார்த்திக்கின்றனர்.
அல்லது அறிவீன இறைமறுப்பாளர்கள் கூறுவதை போன்று அதை விட பாரதூரமான வார்த்தையான, என்னை மன்னித்து பிழை பொறுத்தருளுங்கள், போன்ற வார்த்தைகளை உபயோக்கின்றனர்.
அதை விடப் பாரதூரம் யாதேனில்; (மகானுடைய) கப்ருக்கு சிறம் பணிந்து ஸூஜூது செய்கின்றனர், இன்னும் அதை முன்னோக்கி தொழுகின்றனர், கஃபாவை முன்னோக்குவதை விட அது சிறந்தது என நம்புகின்றனர், சிலர் நம்புவதைப் போல் அது விசேடமானவர்களின் கிப்லா எனவும் புனித கஃபா ஆலயம் பொது மக்களின் கிப்லா எனவும் வித்தியாசப்படுத்துகின்றனர்.
மேலும் சிலர்: நபியின் குடும்பத்தினரே, எங்களுக்கு அருள் பார்வை தருவீர், அல்லாஹ்வின் குடும்பத்தி னரே உதவி செய்வீர் என்று கூறுகின்றனர்.
உண்மையில் இவை யாவும் இறைமறுப்பும், அவனுக்கு இணை வைத்தலும், அவனையும் அவனுடைய தூதரையும் பகைப்பதுமாகும் என்பதை அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், தூய ஏகத்துவ வாதிகளுமே அறிவார்கள்.
எனவே குறித்த நம்பிக்கையுடையோர் சரியான முறையில் அல்லாஹ்வை விளங்கி, தமது குற்றங்களில் இருந்து மீண்டு, தவ்பா செய்யும் வரை அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளாதி ருப்பானாக. காரணம் அவர்களுடைய சொல்லும் செயலும் அல் குர்ஆனில் அல்லாஹ் பிரஸ்தாபித் துள்ளவர்களுக்கு நிகரானதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَٰؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ ۚ﴾ يونس: 18
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். (யூனுஸ்;18)
மேலும் அல்லாஹ் அவர்களைப் பற்றி பிரஸ்தாபிக்கும் போது;
﴿أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ ۚ وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَىٰ إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ﴾ الزمر:3
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களைமிகவும் நெருக்க மாக்கு வார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அஸ்ஸுமுர்;3)
அல்லாஹ்வின் நல்லாடியார்களே! மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَا أَنفُسَهُمْ يَنصُرُونَ﴾ الأعراف:197
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.(அல் அஃராப்;197)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا
أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا﴾ الإسراء:56,57
“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக!
இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமான வர்களே தமது இறைவனிடம் (வஸீலாவை) நெருக்கத்தைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும். (அல் இஸ்ரா;56,57)
﴿قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ اللَّهِ ۖ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍ وَمَا لَهُ مِنْهُم مِّن ظَهِيرٍ﴾ سبأ:22
“அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்கள் என) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள், வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லை - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை. (ஸபஃ;22)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَلَا يَأْمُرَكُمْ أَن تَتَّخِذُوا الْمَلَائِكَةَ وَالنَّبِيِّينَ أَرْبَابًا ۗ أَيَأْمُرُكُم بِالْكُفْرِ بَعْدَ إِذْ أَنتُم مُّسْلِمُونَ﴾ آل عمران:80
“வானவர்களையும், நபிமார்களையும் கடவுள்க ளாக்கிக் கொள்ளுங்கள்!” என்று அவர் உங்களுக்கு ஏவ மாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக ஆன பின் (ஏக இறைவனை) மறுக்குமாறு அவர் உங்களுக்கு ஏவுவாரா? (ஆலு இம்ரான்;80)
அல்லாஹ்வை நிராகரிக்கும் பாவிகளை நோக்கி அவன் பின்வருமாறு கூறுகின்றான்;
﴿وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَٰنُ وَلَدًا
لَّقَدْ جِئْتُمْ شَيْئًا إِدًّا
تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا
أَن دَعَوْا لِلرَّحْمَٰنِ وَلَدًا
وَمَا يَنبَغِي لِلرَّحْمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا
إِن كُلُّ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَٰنِ عَبْدًا
لَّقَدْ أَحْصَاهُمْ وَعَدَّهُمْ عَدًّا
كُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا﴾ مريم:88-95
“அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள்.
அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன.
பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை.
வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.
அவர்களை அவன் சரியாக எண்ணிக் கணக்கிட்டிருக்கிறான்.
அவர்கள் அனைவரும் கியாமத் நாளில் அவனிடம் தன்னந் தனியாகவே வருவார்கள். (மர்யம்;88-95)
மேலும் அல்லாஹ் தனது தூதரை நோக்கி பின் வருமாறு கூறுவதை நீங்கள் அவதானிக்க வில்லையா?
அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ﴾ الشعراء:214
(முஹம்மதே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அஷ்ஷுஅரா; 214)
அபூஹு ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர் களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அப்போது பொதுவாகவும் தனித்தனியாகவும் பெயர் குறிப்பிட்டு, “கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களை காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போக விடாமல்) பசுமையாக்குவேன் (உங்களுடைய உறைவப் பேணி நடந்துக் கொள்வேன்)'' என்று கூறினார்கள். (நூற்கள்; புகாரி முஸ்லிம்)
மேலும் அல்லாஹ் தன் தூதரை நோக்கி பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான்;
﴿قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ ۚ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ﴾ الأعراف:188
“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல் அஃராப்;188)
மேலும் அல்லாஹ் தன் தூதரை நோக்கி பின் வருமாறு கூறுகின்றான்;
﴿قُلْ إِنِّي لا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلا رَشَدًا
قُلْ إِنِّي لَن يُجِيرَنِي مِنَ اللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِن دُونِهِ مُلْتَحَدًا﴾ الجن: 21-22
நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!
அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல் ஜின்;21,22)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ
لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ﴾ الحاقة:44-47
சில சொற்களை இவர் (முஹம்மது) நம் மீது இட்டுக்கட்டியிருந்தால் வலதுகையால் இவரைத் தண்டித்திருப்போம்.
பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். (அல் ஹாக்கா;44-47)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰ إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا﴾ الكهف:110
“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல் கஹ்ப்;110)
மேலும் தன் அடியான் நூஹ் (அலை) அவர்களை நோக்கி அல்லாஹ் பின்வருமாறு கூறுவதை நீங்கள் வாசித்துப் பார்க்கவில்லையா?
அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَنَادَىٰ نُوحٌ رَّبَّهُ فَقَالَ رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنتَ أَحْكَمُ الْحَاكِمِينَ
﴿قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۖ إِنِّي أَعِظُكَ أَن تَكُونَ مِنَ الْجَاهِلِينَ﴾ هود: 45،46
நூஹ் (நபியவர்கள்), தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.
“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான். (ஹூத்;45,46)
ஆதமுடைய மக்களுக்கும், இறைத் தூதர்களுக்கும் தலைவராகவும், ஏனைய (நபிமார்களின்) உம்மத்த வர்களுக்கு மறுமையில் சாட்சியாளராக இருப்ப வரும், அல்லாஹ்விடத்தில் உயர்வும், கண்ணியமும், அந்தஸ்தும் கிடைக்கப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களால் கூட அவர்களுடைய குடும்பத்தினரை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியவல்லை. ஏன் அவர்களுடை சிறிய தந்தைக்காக பாவமன்னிப்புக் கோர எண்ணியதும் அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு அறிவுரை வழங்கினான்.
﴿مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَىٰ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ﴾ التوبة:113
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (அத்தவ்பா;113)
மேலும் அல்லாஹ் அவர்களுக்கு பின் வருமாறு அருளினான்;
﴿إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴾ القصص:56
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்தமுடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுகிறான். அவன் நேர்வழிபெற்றோரை நன்கறிந்தவன். (அல் கஸஸ்;56)
நபிமார்களின் தந்தை என போற்றப்படும் நபி நூஹ் (அலை) அவர்களால் கூட தன்னுடைய மகனுக்காக அல்லாஹ்விடத்தில் பரிந்து பேச முடியவில்லை. ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என அல்லாஹ் அவர்களை பின் வருமாறு தடுத்து எச்சரித்துள்ளான்.
﴿وَنَادَىٰ نُوحٌ رَّبَّهُ فَقَالَ رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنتَ أَحْكَمُ الْحَاكِمِينَ
قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۖ إِنِّي أَعِظُكَ أَن تَكُونَ مِنَ الْجَاهِلِينَ﴾ هود:45,46
(நூஹ் நபியினுடைய மகன் அவரை விட்டு விலகி நிராகரிப்பவர்களுடன் சென்றுவிடவே, அவனும் அழிந்து விடுவானென அஞ்சி) நூஹ் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! (நீயோ என் குடும்பத்த வரை பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்திருக் கிறாய்.) நிச்சயமாக உன்னுடைய வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் நீ மிகவும் மேலான நீதிபதி" என்று சப்தமிட்டுக் கூறினார்.
அதற்கவன், "நூஹே! நிச்சயமாக அவன் உங்கள் குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டி ருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.) ஆதலால், நீங்கள் உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம். அறியாதவர்களில் நீங்களும் ஒருவராகி விட வேண்டாம் என்று நிச்சயமாக நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன்" என்று கூறினான். (ஹீத்;45,46)
நூஹ் நபி அவர்களின் புத்திரன் இறைவனுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்த காரணத்தால் இறைவன் அவ்வாறு கட்டளையிட்டான். ஆகவே அல்லாஹ்வுக்கு வழிபடுவோரை அவன் நெருக்கமாக்கிக் கொள்கிறான் அவனுக்கு மாறு செய்வோரை அவன் வெறுக்கிறான்.
பிர்அவ்னின் மனைவியை நோக்கி அல்லாஹ் கூறியிருப்பதை அவதானியுங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்.
﴿رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ﴾ التحريم:11
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு (இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து, ஃபிர்அவ்னையும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்தணை செய்துகொண்டே இருந்தாள். (அத்தஹ்ரீம்;11)
பிறகு அல்லாஹ் (பிர்அபினின்) மனைவியின் பிரார்த்தணையை ஏற்றான், கணவனின் அத்துமீரல் நிராகரிப்பு முதலிவை காரணமாக அல்லாஹ் மனைவியை தண்டிக்கவில்லை.
நபி லூத், நபி நூஹ் ஆகியோரின் மனைவியர்கள் குறித்து அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்பதை அவதானியுங்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
﴿كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ﴾ التحريم:10
இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன் மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்களிருவரும் நபிமார்களின் மனைவிகளாக இருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து யாதொன்றையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) "நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுங்கள்" என்றே கூறப்பட்டது. (அத்தஹ்ரீம்;10)
நபி இப்ராஹீம் அவர்கள் தன் தந்தையை நோக்கி கூறியதை அவதானியுங்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
﴿لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَا أَمْلِكُ لَكَ مِنَ اللَّهِ مِن شَيْءٍ﴾ الممتحنة:4
“உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” (அல் மும்தஹினா;4)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِّلَّهِ تَبَرَّأَ مِنْهُ ۚإِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ﴾ التوبة:114
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அத்தவ்பா;114)
மேலே கூறப்பட்ட ஆதாரங்களில் இருந்து அல்லாஹ்வின் நீதியும் சமத்துவமும் தன் அடியார் களில் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் பெதுவானது என்பதை விளங்கிக் கொள்கிறோம்.
மேலும் நாம் இங்கு விளங்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம் யாதெனில், அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவர்களும், படைப்புகளில் மிக்க கண்ணியத்துக்கும் சிறப்புக்கும் உரிய (நபி) அவர்கள் உயிரோடு இருக்கும் போது அல்லாஹ் அவர்களுடன் இவ்வாறு நடந்து கொண்டான் என்றால், அவர்கள் மரணித்த பின்னால் அவர்களின் உறவுக்கு அப்பால் உள்ளவர்களுடனோ, அல்லது பதவி, மப்தூலி, தஸூகீ, பய்யூமி, ஸாவீ, முதலான அவர்களை விட பல அந்தஸ்துகளால் குறைந்தவர்களோடு எவ்வாறு நடந்து கொள்வான் என்பதை கூறத்தான் வேண்டுமா? உண்மையில் இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு விவகாரமாகும்.
இதற்குச் சான்றாக, நன்மையான காரியமாயினும் சரியே தீமையான காரியமாயினும் சரியே மனிதன் சம்பாதித்தவைக்கு நிகரான கூலியே அவனுக்கு வழங்கப்படும். அத்துடன் மார்க்கத்தில் விதி விளக்கு அளிக்கப்பட்டவர்களைத் தவிர, பெற்றோர் செய்த நன்மை தீமைகள் மூலம் பிள்ளைகளோ, அதற்கு மாற்றமாகவோ எவருக்கும் அதன் விளைவுகனை அனுபவிக்க முடியாது என்ற உண்மையை மகத்துவமும் ஞானமும் மிக்க அல் குர்ஆனின் பல இடங்களில் தெளிவாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்;
﴿قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبًّا وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ ۚ وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ﴾ الأنعام:164
அன்றி "அல்லாஹ்வே அனைவரையும் படைத்து வளர்த்து வருகையில் அவனையன்றி மற்றெவரை யும் எனக்கு இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு,எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல் அன்ஆம்;164)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿مَّنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ ۖ وَمَنْ أَسَاءَ فَعَلَيْهَا ۗ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ﴾ فصلت:46
யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது. உமது இறைவன் அடியாருக்கு அநீதி இழைப்பவனல்லன். (புஸ்ஸிலத்: 46)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ
ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ﴾ النجم:36-41
மூஸா, முழுமையாக (அல்லாஹ்வின் கட்ளைகளை) நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
அவனது உழைப்பு பின்னர் (மறுமையில்) காட்டப்படும்.
பின்னர் முழுமையான கூலி கொடுக்கப்படுவான். )அன்னஜ்ம்;36-41)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا ۚ وَاسْتَغْفِرُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ﴾ المزمل:30
நன்மையான காரியங்களில் எவைகளை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவைகளையே, மேலான நன்மைகளாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பையும் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (முஸ்ஸம்மில்;30)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ﴾ الزلزة :7،8
அணு அளவு நன்மை செய்தவர்அதைக் காண்பார்.
மேலும் அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அஸ்ஸல்ஸலா;7,8)
மேல் கூறப்பட்ட வசனங்கள் மூலம் (மறுமையின்) எந்த விவகாரமும், இலட்சியங்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டதல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.
பின் வரும் திருக்குர்ஆன் வசனங்களும் இதனையே சுட்டிக்காட்டுகிறன்றன.
﴿ لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ ۗ مَن يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ وَلَا يَجِدْ لَهُ مِن دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا﴾ النساء:123،124.
உங்கள் ஆசைப்படியோ, வேதமுடையோரின் ஆசைப்படியோ (மறுமையில் தீர்ப்பு) இருக்காது. தீய காரியம் செய்தவன் அதற்காகத் தண்டிக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவன் காண மாட்டான்.
ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார் கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அன்னிஸா;123,124)
ஆகவே எவர் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு, சரியான பாதையில் நிலைத்திருந்து, நல்லறங்கள் புரிந்து, ஜிஹாதும் செய்து, வானங்கள் பூமியின் இரட்சகனை திருப்திப் படுத்து முகமாக விரைந்து நல்லறங்களை செய்தவர்களுக்காக அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ளவைகளை பின் வருமாறு விளக்குகின்றான்.
﴿فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ﴾ السجدة:17
அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக கண் குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறியமாட்டார். (அஸ்ஸஜதா;14)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ﴾ الحاقة:24
சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக்கூறப்படும்) (அல் ஹாக்கா;24)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ﴾ الطور:19
(அவர்களை நோக்கி) "நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவைகளை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்" (என்றும் கூறப்படும்). (அத்தூர்;19)
மேலும் அவர்களுக்கு வானவர்கள் முகமன் கூறுவார்கள். அல்லாஹ் கூறுகின்றான்;
﴿سَلَامٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى الدَّارِ﴾ الرعد:24
(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (உங்களுடைய இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.) (அர்ரஃத்;24)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا ۖ حَتَّىٰ إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ﴾ الزمر:73
தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் “உங்கள் மீதுஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!” என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள். (அஸ்ஸுமுர்;73)
இதற்கு மாற்றமாக எவர் பூமியில் குழப்பம் விளைவித்து, பாவங்களையும் செய்து, அல்லாஹ்வின் கோபத்துக்குள்ளான செயல்களில் ஈடுபகின்றார்களோ அத்தகையோர் குறித்து அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்;
﴿إِنَّهُ مَن يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ﴾ طه:74
தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.(தாஹா;74)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿إِنَّ الْمُجْرِمِينَ فِي ضَلَالٍ وَسُعُرٍ
يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ﴾ القمر:47،48
குற்றம் புரிந்தோர் வழிகேட்டிலும், மனக் குழப்பத்திலும் உள்ளனர். அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் “நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்” (எனக்கூறப்படும்) (அல் கமர்;47,48)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ﴾ الرحمن:41
குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள். முன் நெற்றிகளும், பாதங்களும் பிடிக்கப்படும். (அர்ரஹ்மான்;41)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ
وَصَاحِبَتِهِ وَأَخِيهِ
وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ
وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ﴾ المعارج:11-14.
அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததி களையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். (அல் மஆரிஜ்;11,14)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ
نَزَّاعَةً لِّلشَّوَىٰ﴾ المعارج:15،16.
அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும்.
அது தோலை உரிக்கும். (அல் மஆரிஜ்;15,16)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ
طَعَامُ الْأَثِيمِ
كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ
كَغَلْيِ الْحَمِيمِ
خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ
ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
ذُقْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْكَرِيمُ﴾ الدخان:43-49
ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும்.
உருக்கிய செம்பைப் போலும், கொதிக்க வைக்கப் பட்ட நீர் கொதிப்பதைப் போல் வயிறுகளில் அது கொதிக்கும்.
“அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்கு கொண்டுவாருங்கள்!” (என வானவர் களிடம் கூறப்படும்.) பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!
சுவைத்துப் பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரி யவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்றும் கூறப்படும்.) (அத்துகான்;43-49)
பிறகு அவர்களை நோக்கி பின் வருமாறு கூறப்படும் என அல்லாஹ் பிரஸ்தாபிக்கின்றான்;
﴿كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ﴾ المرسلات:46
(இதனைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தாம். (அல் முர்ஸலாத்;46)
உண்மையில் மதிநுட்பமான மனிதன் யார்? என்பதை அல்லாஹ் பின்வருமாறு விளக்கி கூறுகின்றான்;
﴿قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ﴾ الأعلى:14،15.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا﴾ الشمس:9،10.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿أَفَمَن كَانَ مُؤْمِنًا كَمَن كَانَ فَاسِقًا ۚ لَّا يَسْتَوُونَ
أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَىٰ نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ
وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ ۖ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ﴾ السجدة:18-20.
நம்பிக்கை கொண்டவர் குற்றம் செய்தவரைப் போல் ஆவாரா? அவர்கள் சமமாக மாட்டார்கள்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு அவர்கள் (நன்மை) செய்துக் கொண்டிருந்ததால் தங்குமிடமாக சொர்க்கச் சோலைகள் பரிசாகவுள்ளன.
குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். (அஸ்ஸஜதா;18-20)
நாம் மேலே கூறிய விடயங்களை நீங்கள் நன்றாக விளங்கிக் கொண்டால், அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரிடம் பிராத்திப்பதும், அவரை அழைப்பதும், அவரிடம் தஞ்சம் கோருவதும் உங்களுக்கே பேராபத்தை ஏற்படுத்தவல்ல மாபெரும் தீய செயலாகும். இப்படிச் செய்யும் உங்களையும் உங்களைப் போன்றவர்களையும் நோக்கியே அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்;
﴿يَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُ وَمَا لَا يَنفَعُهُ ۚ ذَٰلِكَ هُوَ الضَّلَالُ الْبَعِيدُ
يَدْعُو لَمَن ضَرُّهُ أَقْرَبُ مِن نَّفْعِهِ ۚ لَبِئْسَ الْمَوْلَىٰ وَلَبِئْسَ الْعَشِيرُ﴾ الحج:12،13.
அல்லாஹ்வை அன்றி தனக்குத் தீங்கிழைக்காத தையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான வழி கேடாகும்.
எவனது நன்மையை விட தீமை மிகவும் அருகில் உள்ளதோ அவனை இவன் அழைக்கிறான். அவன் கெட்ட நண்பன், கெட்ட பொறுப்பாளன். (அல் ஹஜ்;12,13)
சன்மார்க்க அறிஞர்களே! இறை விசுவாசிகளின் தலைவர்ளே! முஸ்லிம் தலைவர்களே! இறை நிராகரிப்பை விட இஸ்லாம் மார்க்கத்துக்கு ஆபத்தான ஒரு விடயம் உள்ளதா? விடை கூறுங்கள்.
இவ்வளவு துள்ளியமான இறை நிராகரிப்பை தடுக்காது, வேறு எந்த குற்றத்தை தடுக்குமாறு நாம் பணிக்கப்பட்டுள்ளோம்?!.
அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ﴾ لقمان:13.
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ﴾ الحج:31.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான். (அல் ஹஜ்;31)
என் அருமைச் சகோதர்களே! அல்லாஹ் தன் நபியவர்களை நோக்கி (பின் வருமாறு) கூறியதை நினைவுகூர்ந்து பார்ப்பீர்களாக.
அல்லாஹ் கூறுகின்றான்;
﴿لَّا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَقْعُدَ مَذْمُومًا مَّخْذُولًا﴾ الإسراء:22
அல்லாஹ்வுடன் மற்றொரு கடவுளை நீர் கற்பனை செய்யாதீர்! அவ்வாறு செய்தால் இழிந்தவராகவும், கை விடப்பட்டவராகவும் அமர்ந்து விடுவீர்! (அல்இஸ்ரா;22)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
بَلِ اللَّهَ فَاعْبُدْ وَكُن مِّنَ الشَّاكِرِينَ﴾ الزمر65،66
“நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்.நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (அஸ்ஸுமுர்; 65,66)
இந்நூலின் சாராம்சம் என்னவெனில், தவஸ்ஸுல் ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
ஒன்று: இந்நூலின் ஆரம்பத்தில் நாம் கூறியது போல் அல்லாஹ், அவனுடைய வானவர்கள், வேதங்கள், தூதர்கள், நபி (ஸல்) அவர்கள் மூலம் தன் வேதத்தில் கடமையாக்கிய வழிபாடுகள், நல்லறங்கள், தீமைகளை விட்டொழித்தல் முதலியவை மூலம் அல்லாஹ்விடத்தில் நெருங்க வஸீலா தேடுவது.
(ஒரு அடியானிடம்) இறை விசுவாசம் பூரணமடைய இதுவே ஆகக் குறைந்த அளவாகும்.
இரண்டு; நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தணை, மன்றாட்டம் முதலியவை மூலம் அல்லாஹ்விடம் நெருங்க வஸீலா தேடுவது.
நபியவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களிடம் பிரார்த்தணை செய்யுமாறு கோரியோ, அல்லது கோராமலோ இது போன்ற (பௌதீக) மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் இருந்தன. அவ்வாறே மறுமையில் மனிதர்கள் அவர்களிடம் மன்றாடக் கோருவார்கள், அவர்களும் மன்றாட்டம் நிகழ்த்தி பிரார்த்தணை செய்வார்கள் அதை அல்லாஹ் ஏற்று அங்கீகரித்துக் கொள்வான்.
மூன்று; நபியவர்களதும், இறை நேசர்களதும் பொருட்டை கொண்டு, அல்லது அவர்களின் கண்ணியத்தைக் கொண்டு, அல்லது அவர்களுடை (கப்று) மண்ணரை அதன் மாடம் முதலியவைகள் (பொருட்டைக்) கொண்டு அல்லாஹ்விடம் நெருங்க வஸீலா தேடுவது.
இவ்வாறு வஸீலா தேடுவது (மார்க்கத்தில்) தடுக்கப்பட்டுள்ளதும், வெறுப்புக்குரியதும், மாற்றுக் கருத்துகளுக்கு இடமின்றி ஹராமாக்கப்பட்ட ஒரு செயலும் ஆகும்.
“இஹ்யா” என்ற நூலுக்கு விளக்கம் எழுதிய ஆசிரியரும் வேறு சிலரும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்; ஒரு மனிதர் (இறைவா!) இன்ன மனிதர், அல்லது உனது நபி, தூதர், முதலானோர், இன்னும் கஃபா ஆலயம், மஷ்அருல் ஹராம் முதலானவைகள் பொருட்டைக் கொண்டு வஸீலா தேடுவதை இமாம் அபூஹனீபா, அவர்களும் அவர்களின் (பிரபலமான) இரு தோழர்களும் வெறுத்துள்ளார்கள் காரணம் மேற்கூறப்பட்ட எந்த ஒன்றுக்கும் அல்லாஹ் கடமைப்பட்டவன் அல்ல. மேலும் அவ்வாறு இறைஞ்சுவது முற்றிலும் வெறுக்கப்பட்ட ஒரு செயலாகும்.
நான்கு; மரணித்த நல்ல மனிதர்கள், அல்லது நபி மார்கள் முதலானோரிடம் தனக்காக (அல்லாஹ் விடம்) பிரார்த்திக்க கோருவது.
எமது தூய மார்க்கத்தில் இவ்வாறு கோர அனுமதியில்லை. இவ்வாறு கோருவது சந்தேகத்துக்கு இடமின்றி (மார்க்கத்தில்) ஹராமாக் கப்பட்ட ஒரு புதுவழியாகும். அல் குர்ஆனிலோ நபி மொழிகளிலோ எங்கும் அதற்கு ஆதாரங்கள் கிடையாது. மாறாக அந்த மனிதருடை செயல் காலக் கிரமத்தில், குறித்த நபி அல்லது இறைநேசரிடம் நேரடியாகவே பிரார்த்திக்க அவரை தூண்டும், இதன் மூலம் அவர் காபிராகி விடலாம். அல்லாஹ் நம்மை பாது காப்பானாக.
ஐந்து; (அல்லாஹ் அன்றி) பிறரிடத்தில் பிரார்த்திப்பதும் உதவி கோருவதும்.
உதாரணத்துக்கு எனது தலைவரே! என்னை காப்பாற்றுங்கள், என்னிடம் வாருங்கள், என் பகைவன், எனக்கு அநீதி இழைத்தவன் முதலியோருக்கு எதிராக உதவி செய்யுங்கள், அல்லாஹ்வின் குடும்பத்தினரே என்னை கருணையுடன் நோக்குவீர்கள். இவை போன்ற பிரார்த்தணைகள் இறைமறுப்பும் நிராகரிப்பும் ஆகும்.
இறைவா! நான் அறிந்து கொண்டே உனக்கு இணை வைப்பதிலிருந்து என்னை பாதுகாப்பாயாக, மேலும் நான் அறியாமல் செய்தவைகளுக்காக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் இறைவா! நீ எனக்கு தீர்மானித்தவைகளைத் தவிர வேறு எந்த ஆபத்தும் எனக்கு ஏற்படுவதில்லை என அறிந்து கொள்ளும் மன உறுதியை தருவாயாக.
தொடரும்...