இஸ்லாத்தின் அடிப்படைகளும் அதன் விளக்கமும்

1-ஷஹாதாக்களின் நிபந்தனைகள், ஷஹாதாவின் யதார்த்தமும் பொருளும், ஷஹாதாவுக்கு எதிரானவைகள், ஷஹாதாவின் நிறைவு நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளல் ஆகியவை பற்றிய விளக்கம்.
2- ஜும்ஆ தொழுகை, அதன் விதிகள், நபில் தொழுகை, மற்றும் சகாத் பற்றிய பற்றிய விபரங்கள் இதில் அடங்கியுள்ளன.

இஸ்லாத்தின் அடிப்படைகளும் அதன் விளக்கமும்
< தமிழ்-Tamil –تاميلية>
        
சவூதி மார்க்க அறிஞர் குழு
ஆசிரியர்




ஷெய்க் இஸ்மாயில் இமாம்
மொழி பெயர்த்தவர்
முஹம்மத் அமீன்
மீளாய்வு செய்தவர்
 
المختصر في شرح اركان الاسلام
(الصلاة والزكاة)
        

جمع و إعداد
مجموعة من طلبة العلم
بتقديم الشيخ / عبد الله بن جبرين




ترجمة: سيد إسماعيل إمام بن يحي مولانا
مراجعة:محمد أمين

 

 


 (பாகம்-1)
என்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்
புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் நம் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
அல்லாஹ் ஏற்றுக் கொண்ட மார்க்கம் இஸ்லாம் ஒன்றுதான், என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஏனெனில் அதுவே அல்லாஹ்வின் பிரகடனமும், அறைகூவலுமாகும். எனவே இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட எவரும் அதன் கொள்கை கோட்பாட்டையும், அனுஷட்டானங் களையும் சரிவர கடைப்பிடித்து வருதல் அவசியம். அப்பொழுது தான் அவன் உண்மை முஸ்லிமாக, பூரண விசுவாசியாகக் கருதப்படுவான். மேலும் அல்லாஹ் வாக்களித்த வெகுமானங்களையும் அவன் அடைந்து கொள்வான். அல்லாது போனால் அல்லாஹ்வின் தண்டனைகளை எதிர் கொள்ளும் அவல நிலைக்கு அவன் ஆலாகுவான்.
எனவே எல்லா முஸ்லிமும் இஸ்லாமிய ‘அகீதா’ கோட்பாடும், அனுஷட்டானங்களும் என்ன வென்பதைச் சரியாகப் புரிந்து விளங்கி அவற்றை அமுல்படுத்துவது அவர்களின் கடமை.
இஸ்லாம் மார்க்கமானது உறுதியான ஏகத்துவக் கோட்பாட்டையும், கட்டாயமான சில வழிபாடு களையும், அனுஷ்டானங்களையும் உள்ளடக்கிய ஒரு மார்க்கம். அவை ஐந்து அடிப்பகைளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  ‘அர்கானுல் இஸ்லாம்’ இஸ்லாத்தின் அடிப்படைகள் எனப்படும் அவை ரஸுல் (ஸல்) அவர்களின் ஹதீஸின்  மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பொது மக்கள் இலகுவாக புரிந்து கொள்ளும் பொருட்டு شرح اركان الاسلام  المختصر في என்ற பெயரில் மார்க்க அறிஞர் குழு வொன்று ஒரு நூலை எழுதியுள்ளனர். அதற்கு மாமேதை அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் ஜிப்ரீன் அவர்கள் அணிந்துரை வழங்கி யுள்ளார்கள். அதனை அடியேன் ‘இஸ்லாத் தின்அடிப்படைகளும் அதன் விளக்கமும்’ என மொழி பெயத்துள்ளேன். இதன் மூலம் முஸ்லிம் சமூகம் பயன் பெற அல்லாஹ் அருள் புரிவானாக.
وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه اجمعين
YMSI.Imam (Rashadi-Bangaloor)
06/12/2015
عن عبد الله بن عمربن الخطاب رضي اله عنهما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول "بني الإسلام  على خمس شهادة  أن لاإله الاالله  وأن محمدا رسول الله  وإقام الصلاة  وإيتاء الزكاة  وحج البيت  وصوم رمضان (متفق عليه)
“இஸ்லாம் ஐந்து விடயங்களின் மீது நிறுவப் பட்டுள்ளது அவையாவன; வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்தல், தொழுகையை நிலை நிறுத்தல், ஸகாத் வழங்குதல், கஃபாவை ஹஜ் செய்தல்,  ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல் என்பவையாகும்” என்று ரஸூல் (ஸல்) கூற நான் செவிமடுத்தேன் என்று  அப்துல்லாஹ்  இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புகாரி, முஸ்லிம்)
*      *    *

 

அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் ஜிப்ரீன் அவர்களின்  
அணிந்துரை
بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்றேன். மேலும் அவனுக்கு நன்றி செலுத்தி, அவனிடம் பாவ மன்னிப்பும் கோருகின்றேன். மேலும் அவன் நமக்களித்திருக்கும் அருட்கொடைகளுக்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பை, நமக்கருளுமாறும், மற்றும் அவனின் தண்டனை களை விட்டும் நம்மைப் பாதுகாக்கு மாறும் அவனிடம் நான் வேண்டுகின்றேன். மேலும் உண்மை இறைவனாகிய அவனை யன்றி வணக்கத்திற்குத்  தகுதியானவன் யாருமில்லை என்றும், அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட அவனின் தூதராகிய, முஹம்மத் (ஸல்) அவர்கள் தனக்கருளப்பட்ட தூதையும் பொறுப்பையும் உரியமுறையில் நிறைவேற்றினார்கள் என்றும் சாட்சி பகர்கின்றேன். மேலும் நேர்வழி பெற்ற அன்னாரின் குலபா உர் ராஷிதீன்களும், மற்றும் ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களாகிய அன்னாரின் தோழர்களும் அன்னார் கொண்டு வந்த ஷரீஆவைப் பொருப்பேற்று அதன் படி செயலாற்றி வந்த அவர்கள், தங்களைத் தொடர்ந்து வந்தவர்களுக்கு அதனை எத்தி வைத்தனர் என்றும் சாட்சி பகர்கின்றேன். அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் அவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், அன்னரின் தோழர்கள் யாவரின் மீதும், மற்றும் கியாமம் பரியந்தம் நல்ல காரியங்களைக் கொண்டு அவர்களைப் பின்பற்றி நடப்போரின் மீதும் உண்டாவதாக.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் தெளிவு படுத்தி, அறிஞர் குழுவொன்று எழுதிய பெறுமதி மிக்க இந்த ஏட்டை நான் வாசித்தேன். அதில் அவர்கள் இஸ்லாத்தின் ஏனைய சட்டங்கள் பற்றிப் பேசவில்லை. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளான அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் உறுதிப் படுத்துகின்ற இரண்டு ஷஹாதா, மற்றும் தெழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ்ஜு ஆகிய விடயங்களுடன் வரையரை செய்துள்ளனர். ஏனெனில் இவ்வைந்து அடிப்படைகளும் மிகவும் முக்கியமானவை என்பதாலும், இவற்றின் செயற்பாடுகள் நாவாலும், உடலாலும், பொருளாலும் வெளிப்படுத்தப் படுகின்றன என்பதாலும், கடப்பாட்டாளர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடத்த கடமையாக்கப்பட்டவர்கள்) யாவரும் இவற்றைச் செய்து வர வேண்டும் என வேண்டப் பட்டுள்ளனர் என்பதாலுமாகும். அது மாத்திரமன்றி அதனை யாவரும் அறிய வேண்டிய தேவையும், அதிகமான மக்கள் அதனை அறியாதவர்களாகவும், மற்றும் இஸ்லாமிய நாடுகள் என்று அடையாளப் படுத்திக் கொண்டுள்ள பல நாடுகள், இஸ்லாத்தின் சரியான ஞானத்தை விட்டும் தூரம் போனதன் காரணமாக அவ்வடிப்படைகளை நடைமுறைப் படுத்துவதில் பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ள நிலையில், இது பற்றி  அவர்களுக்கு வழிகாட்டுகின்றவர்களும், அவர்களை எச்சரிக்கை செய்கின்றவர்களும் காணப்படவில்லை என்பதும் இதற்கு வேறும் காரணங்களாகும். எனவே மக்கள் மத்தியில் இவ்வாறான இடையூறுகளும், குறைபாடுகளும் மற்றும் வீணான பொழுது போக்குகளின் மீதான ஈடுபாடும் காணப்படும் நிலையில், ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் இவ்வடிப்படைகளை பூரணமாக நிலை நிறுத்தி, அதனை பரிபூரணப்படுத்தத் தேவையான ஏனைய கருமங்களையும் மேற் கொண்டு வருவானாகில், இஸ்லாத்தின் ஏனைய போதனைகளையும் நடை முறைப் படுத்த, இவை அவனுக்கு துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை. அப்பொழுது இவன் இஸ்லாமிய அகீதா விடயத்தில் கவணம் செலுத்துவான். ஹலாலான முறையில் பொருள் ஈட்டுவதில் ஆர்வம் காட்டுவான். மேலும் பாவ காரியங்களை விட்டும் தூரமாகி இஸ்லாமிய ஒழுங்கு முறைகளையும், பண்புகளையும் அனுசரித்து கருமமாற்றுவான்.
முக்கியமான இந்த ஏட்டில் இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றிச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள போதிலும்,  பொது மக்களுக்கு புரியும்படி அவை தெளிவான வார்தைகள் மூலம்  எழுதப்பட்டுள்ளன. மேலும் ஒரு விடயத்தில் பல கருத்துக்கள் காணப்படும் பட்சத்தில் அந்தக் கருத்துக்கள் அனைத்தையும் முன் வைக்காமல் அதில் நமக்கு மிகவும் சரியெனத் தென்படும் ஒரு கருத்தை மாத்திரமே ஆசிரியர் குழு தெரிவு செய்து எழுதியுள்ளது. ஏனெனில் மற்றொரு கருத்தை வேரொருவர் தெரிவு செய்திருந்த போதிலும், மாறுபட்ட பல கருத்துகளையும் குறிப்பிடும் சந்தர்ப்பத்தில் அது பொது மக்களை பெரும் குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் சிக்க வைக்கும். எனவே பலதரப்பட்டக் கருத்துக்களையும் முன் வைக்காமல், ஒரு கருத்தை மாத்திரம் உண்மை யான நல்லெண்ணத்துடன் அதற்குரிய ஆதாரத் துடன் முன் வைப்பதன் மூலம் மக்கள் அதன் சட்டத்தை அறிந்து அதன்படி செயற்படுவார்கள், அதன் நன்மையையும் அடைந்து கொள்வார்கள். அத்துடன் குறித்த கருமத்தில் கவலையீனமாக இருந்தார்கள் அல்லது அதனைச் செய்யவில்லை என்ற தண்டனைக்கும் அவர்கள் இலக்காக மாட்டார்கள். எனவே மக்கள் தங்களின் காரியத்தில் தெளிவாக இருக்கும் பொருட்டு இந்த ஏட்டின் அனுகுமுறையை இஸ்லாமிய நாடுகளில் பரவச் செய்யுமாறு சான்றோரிடம் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
ஒருவருக்கு நல்ல கருமம் ஒன்றைச் செய்ய எவர் வழிகாட்டுகின்றாரோ, அவருக்கு அந்தப் புண்ணிய கருமத்தை செய்த நபருக்கு வழங்கும் கூலி போன்றும் ஒருவரை நேர் வழியின் பால் எவர் அழைக்கின்றாரோ, அவருக்கு அந்த வழியைப் பின்பற்றிய நபருக்கு வழங்கும் கூலி போன்றும் வழங்கப்படும் என்ற  அடிப்படையில் இந்த ஏட்டை எழுதியவர்களுக்கும் அதனை பரவச் செய்கின்ற வர்களுக்கும் அல்லாஹ் நற் கூலி வழங்குவானாக.
وصلى الله على محمد وآله وصحبه وسلم
அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் பின் அபதுல்லாஹ் பின் ஜிப்ரீன்
பத்வா குழு உருப்பினர்
*************************************

முன்னுரை
நிச்சயமாக புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நாம் அவனிடமே உதவியும் பாவ மன்னிப்பும் கோருகின்றோம். மேலும் நம் உள்ளத்தின் தீமைகளிலிருந்தும், மற்றும் எமது தீய செயல்களில் இருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடு கிறோம். யாருக்கு அவன் நேர்வழியைக் கொடுத்தானோ, அவனை யாராலும் வழி கெடுக்க முடியாது. மேலும் யாரை அவன் தவறான வழியில் விட்டு வைத்தானோ, அவனுக்கு யாராலும்  நேர் வழியைக் காட்டவும் இயலாது. அல்லாஹ்வை யன்றி வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லை, அவன் ஒருவன். அவனுக்கு இணை ஒருவரும் இல்லை என்று சாட்சி பகர்கின்றோம். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என்றும் சாட்சி பகர்கின்றோம். அன்னார் மீதும், அன்னாரின் கிளையார் மீதும் மற்றும் சிறப்புக்குரிய அன்னாரின் தோழர்கள் மீதும், கியாமம் பரியந்தம் நற்கருமங்கள் மூலம் அன்னவர்களைப் பின்பற்றும் யாவரின் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக.
இஸ்லாத்தின் ஐந்து  அடிப்படைகளான அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் யாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்றும் சாட்சி பகர்தல், தொழுகையை நிலை நிறுத்தல், ஸகாத் வழங்குதல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், மாண்பு மிகு அல்லாஹ்வின் இல்லத்தை நாடிச் சென்று ஹஜ்ஜு செய்தல் ஆகிய விடயங்களைப் பற்றி இந்நூல் சுருக்கமாக எடுத்து விளக்குகின்றது. இந்நூலை சுருக்கமாக எழுத விரும்பிய நாம் சட்டங்களைக் குறிப்பிடும் போது அவற்றின் ஆதாரங்களை அல் குர்ஆனிலிருந்தும் ஸுன்னாவிலிருந்தும் மற்றும் இஜ்மாவிலிருந்தும் எடுத்துக் காட்டும்  விடயத்தில் உறுதியாக இருந்தோம். எனவே அதற்குத் தேவையான அல்குர்ஆன் வசனங்களை அல்குர்ஆனின் கண்ணிய மிக்க முஸ்ஹபிலிருந்தும் ரஸுல் (ஸல் அவர்களின் மணி மொழிகளை,  ஹதீஸின் பிரசித்தமான மூலக் கிரந்தங்களிலிருந்தும் எடுத்து காட்டியுள்ளோம்.
மேலும் வாசகர்களின் வசதியையும், அவர்கள் விஷயங்களை புரிந்துக் கொள்ள துணை புரியும் வகையிலும் தலையங்களை அதிகப்படுத்து வதிலும், தேவையான குறிப்புக்களை முன் வைப்பதிலும் கவணம் செலுத்தியுள்ளோம். மேலும் அறிவ சார்ந்த ஏனைய விடயங்களை புராதன, மற்றும் புதிய மூலக் கிரந்தங்களிலிருந்து ஒன்று திரட்டி, வாசகர்களின் தரத்திற்கு ஏற்ப, இலகுவான முறையில் அவற்றை ஒழுங்கு படுத்தியுள்ளோம்.
மேலும் மேலதிகப் பயனைக் கருத்தில் கொண்டு முக்கியமான சில விடயங்களை இந்தப் பதிப்பில் சேர்துள்ளோம்.  அவையாவன
1.    இரண்டு ஷஹாதாக்களின் நிபந்தனைகள்.
2.    நோயாளி சுத்தம் செய்யும் முறை.
3.    வழமையான ஸுன்னத்துத் தொழுகைகளும், வித்ருத் தொழுகையும்
4.    நோயாளியின் தொழுகை முறை.
         இதன் மூலம் சகல முஸ்லிம்களுக்கும் பயன் கிட்ட வேண்டுமென  நாம்  அல்லாஹ்வை வேண்டுகிறோம்.
முதலாம்  அடிப்படை:
شهادة أن لااله الاالله وأن محمدا رسو ل الله
“அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்கு தகுதியான இறைவன் யாரும் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்றும் சாட்சி பகர்தல்” இவ் வார்த்தையை மொழிவதானது இஸ்லாத்தின் அடிப்படைகளில் முதல் அடிப்படை யாகும். எனினும் சில வேலை
وأن محمدا رسول الله   எனும் சொற்றொடர் குறிப்பிடப் படாது, "شهادة أن لااله الاالله"  என்ற வார்தை மாத்திரம் குறிப்பிடப் படுவதுண்டு. அபொழுது அந்த சத்தியப் பிரமாணத்தில் وأن محمدا رسول الله  எனும் வார்த்தையும் இடங்கியுள்ளது என்று அறிதல் வேண்டும், ஏனெனில் இஸ்லாம் மார்க்கம் இதனை உணர்த்துகின்றது. எனவே கலிமா ஷஹாதா வானது இவ்விரு தொகுதியையும் உள்ளடக்கியது என்பது முஸ்லிம்கள் யாவரினதும் ஏகோபித்த முடிவாகும். இவ்விடயத்தில் அவர்களிடையே எந்த முரண்பாடும் இல்லை.  எனவே மகத்தான இந்த கலிமா ஷஹாதாவுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள்  பற்றி  அடுத்து வரும் வாக்கியங்களில் அவதானிப்போம்.
முதலாவது, ஷஹாதா கலிமாவைக்  குறிக்கும் சக சொற்கள்:
“வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி யாருமில்லை” எனும் கலிமா ஷஹாதாவின் கருத்தையும் அதன் யதார்த்தத்தை யும் உணர்த்தும் வேறு சொற்களும் உள்ளன. அவையாவன:
"كلمة التوحيد – كلمة الإخلاص – كلمة الشهادة – شهادة الحق"
எனும் வார்த்தைகளாகும்.
இரண்டாவது, கலிமா ஷஹாதாவிலிருக்கும் முக்கிய அடிப்படைகள் இரண்டு.
இந்தக் கலிமாவில் இரண்டு முக்கியமான அம்சங்கள் அடங்கியுள்ளன. அவையாவன:
1. negative - இல்லை என்பதைக்  குறிக்கும், எதிர் மாறானது. இதனை  لاإله “” கடவுள் எதுவும் இல்லை எனும் வார்த்தை உணர்த்துகின்றது
2. positive -  உறுதிப் படுத்தலைக் குறிக்கும் உடன் பாடான விடயம்.  இதனை  إلاالله “” அல்லாஹ்வைத் தவிர” எனும் சொல் உணர்த்துகின்றது.
அதன்படி இந்தக் கலிமாவானது இணையில்லாத அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்கு தகுதியான வன் என்பதை உறுதிப் படுத்தும் அதே சமயம், அவனைத் தவிர்ந்த அனைத்துக் கடவுள்களும் வணங்கத் தகுதியற்றவை, எனவே அவற்றைக் கடவுள்களாக ஏற்றுக் கொள்வதையும், அவற்றை வணங்குவதையும் அது மறுக்கின்றது, நிராகரிக் கின்றது. ஷஹாதா கலிமாவில் பொதிந்துள்ள இவ்விரு அம்சங்களையும்  ஏராளமான குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. இனி அவற்றில் சிலதைக் கவணிப்போம்.
لَا إكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّـهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗوَاللَّـهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٥٦/البقرة﴾
“மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமுமில்லை. (ஏனெனில்) வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. ஆகவே எவர் ஷைத்தானை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை விசுவாசிக் கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். மேலும் அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கு அறிகின்றவன். (2:256)
இவ்வசனத்திலுள்ள العروة الوثقى- பலமான கயிறு என்ற சொல்   شهادة أن لا إله الآالله “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி யாரும் இல்லை என்பதைக் குறிக்கும், என  இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும், மற்றும் ஸஈத் இப்னு ஜுபைர், ழஹ்ஹாக், ஸுப்யான் என்போர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் الطاغوت என்பது மனிதன் தன்னிச்சையாக வணங்கும் அல்லாஹ் அல்லாத சகல கடவுள்களையும் மற்றும் அவன் பின்பற்றும் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கும். எனவே அல்லாஹ் ஒருவன் என்பதை ஏற்று ‘தாகூத்’ அனைத்தையும் மறுத்தல் அவசியம் என்ற முக்கியமான இரண்டு அடிப்படைகளையும்  இவ்வசனம் தெளிவு படுத்து கிறது.
இதனயே شهادة أن لاإله إلاالله  என்ற கலிமா  உணர்த்து கின்றது. மேலும் பின் வரும் திரு வசனமும் இதனையே மேலும் தெளிவு படுத்துகின்றது.
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّـهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ فَمِنْهُم مَّنْ هَدَى اللَّـهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ ۚ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ ﴿٣٦/االنحل)
“அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், ஷைத்தான்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்ற தூதரை ஒவ்வொரு சமுதாயத்தி னருக்கும் நிச்சயமாக நாம் அனுப்பியிருக் கின்றோம். அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும்  உண்டு. வழிகேட்டிலேயே நிலை பெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே (அத்தூதர்களை) பொய்யாக்கியவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதை நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்துப் பாருங்கள். (16/36)  
மேலும் ஹூத் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதை ஆத் கூடத்தாரிடம் கொண்டு வந்து அதன்பால் அவர்களை அழைத்தார். அப்போது அதனை அவர்கள் நிராகரித்தனர். அந்த செய்தியை அடுத்து வரும் வசனங்களில் அல்லாஹ் எடுத்துக் கூறுகின்றான். அவற்றின் மூலம் لاإله إلاالله “வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி யாருமில்லை” எனும் கலிமாவின் பொருள் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவ்வசனங்கள் பின்வருமாறு:
وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا ۗ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّـهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُ ۚ أَفَلَا تَتَّقُونَ ﴿٦٥ /الأعراف﴾
“மேலும் ஆத் மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை அனுப்பினோம். அவர்  “என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா” என்று கூறினார். 7/65
அதற்கு ஆத் கூட்டத்தார் பின் வருமாறு கூறினர்,
قَالُوا أَجِئْتَنَا لِنَعْبُدَ اللَّـهَ وَحْدَهُ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا ۖ فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِن كُنتَ مِنَ  الصَّادِقِينَ ﴿٧٠ /الأعراف﴾
“அதற்கவர்கள்  எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவைகளை நாங்கள்  விட்டு விட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்வதற் காகவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீர் வாக்களித்ததை எங்களுக்குக் கொண்டு வாரும்” என்று கூறினர். 7/70
மேலும் கலிமா ஷஹாதா உணர்த்தும் ஏகத்துவத்தைப் பிரசாரம் செய்வதற்காகத்தான், நபிமார்கள் அனுப்பப்பட்டனர் என்பதை பின்வரும் இறைவசனம்  தெளிவுபடுத்துகின்றது.
وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ ﴿٢٥﴾  
“மேலும் (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம்  “நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னையே  நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹி அறிவிக்காமல் இல்லை.” 21/25.
இவ்வாறு இறைத்தூதர்கள் ஏகத்துவத்தின் பால் பிரச்சாரம் செய்து வந்ததன் காரணமாக அவர்கள், தங்களை இரண்டு விடயங்களின் பால் அழைக்கின்றனர், என்பதை அவர்களின் சமூகம் புரிந்து கொண்டது. அவையாவன:
1.    வணங்கத் தகுதியான இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்ற ,positive உடன்பாடான விடயம், கலிமா ஷஹாதாவில் அடங்கியுள்ளது என்பது. இதனை  لِنَعْبُدَ اللَّـهَ وَحْدَهُ“நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச்  செய்வதற்காக” என்ற அவர்களின் கூற்று உணர்த்துகிறது.
2.    அல்லாஹ்வைத் தவிர்ந்த அனைத்துக் கடவுள்களும் நிராகரிக்கப்பட வேண்டியவை, என்ற negative,  எதிர்மாறான விடயம், கலிமா ஷஹாதாவில் அடங்கியுள்ளது என்பது.
இது  وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا“எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவைகளை நாங்கள் புறக்கணித்துவிட்டு” என்ற அவர்களின் கூற்றின் மூலம் மூலம் தெளிவாகின்றது.
அல்லாஹ்வை தவிர்ந்த தெய்வங்கள் யாவும் நிராகரிக்கப்படல் வேண்டும் என கலிமா ஷஹாதா வழியுறுத்தும் இரண்டாம் அம்சம் negative, எதிர் மாறான விடயத்தை அடுத்து வரும் நபி மொழி மேலும் உறுதிப்படுத்துகின்றது.   
 وفي صحيح مسلم  " من وحد الله ، وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله"
“அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் தெய்வங்களை நிராகரித்து விட்டு அல்லாஹ் ஒருவனை மாத்திரம் ஒருமைப்படுத்தி வரும் ஒருவனின் செல்வமும், இரத்தமும் மற்றவர்களால் தீண்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவனின் கணக்குகளின் பொறுப்பு அல்லாஹ்வைச் சார்ந்தது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்) மேலும் இந்த ஹதீஸ் இமாம் அஹ்மத் அவர்களின் அறிவிப்பில்  من دون الله  என்ற சொல்லுக்குப் பதிலாக من دونه  அவன் தவிர்ந்த, என்று சிறு மாற்றத்துடன் பதிவாகியுள்ளது.
மூன்றாவது - கலிமா ஷஹாதாவின் யதார்த்தமும் பொருளும்
கலிமா ஷஹாதாவின் யதார்த்தத்திலும் அதன் பொருளிலும் முக்கியமான சில கருத்துக்கள் பொதிந்துள்ளன. மேலதிக விளக்கத்தைக் கருத்திற் கொண்டு அவற்றிலுள்ள முக்கியமான கருத்துக்களை விவரிக்க விரும்புகின்றோம். அவையாவன

A.    இபாதா-  வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம்.
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறத்தக்க வழிபாடுகளும், மற்றும் பிரார்த்தனை போன்ற ஏனைய சகல வணக்க வழிபாடுகளும் இதில் அடங்கும். எனவே இபாதாக்கள்  எதனையும் அல்லாஹ்வையன்றி வேறு எவருக்கும், எதற்கும் நிறைவேற்றக் கூடாது. இதனை பல அல்குர்ஆன் வசனங்கள் வழியுறுத்துகின்றன. அவற்றில் சில பின்வருமாறு.
قُلْ إِنَّمَا أَدْعُو رَبِّي وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا ﴿٢٠/الجن﴾
“(நபியே!) நீங்கள் கூறுங்கள், நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே. அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன் 72/20  

قُل لَّوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَّابْتَغَوْا إِلَىٰ ذِي الْعَرْشِ سَبِيلًا ﴿٤٢/الإسراء﴾
(நபியே!) “நீர் கூறுவீராக. அவர்கள் சொல்வது போன்று அவனுடன் வேறு வணக்கத்துக்கு உரியவர்கள் இருந்தால், அவை அர்சுடையவனின் பக்கம் செல்லக்கூடிய வழியை தேடி இருப்பார்கள்.  17/42.
أُولَـٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا ﴿٥٧/الإسراء﴾
“இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கின்றார் களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆக முடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கின்றார்கள். நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக் கூடியதே.17/57  
وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ۚ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّـهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ ﴿٣٧/فصلت﴾    
இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே (மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால்) சூரியனுக்கும், சந்திரனுக்கும் அடிபணியாதீர்கள். இவைகளைப் படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்” 41/37.
 قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿١٦٢/الأنعام﴾
நீங்கள் கூறுங்கள், “நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவை. 6/162
 
وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّـهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ ۗ وَإِلَى اللَّـهِ عَاقِبَةُ الْأُمُورِ ﴿٢٢/لقمان﴾    
“எவர் தன்னுடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக மிக்க பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது 31/22.

B.இணையையும், இணையுடையோரையும் விட்டும்  நீங்கி  இருத்தல்     
அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் தன்னுடைய பொருப்பாளியாகவும், மற்றும் அல்லாஹ்வின் பகைவர்களைத் தங்களின் நண்பர்களாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனைப் பல திரு வசனங்கள் வழியுருத்துகின்றன. அவற்றில் சில பின்வருமாறு:   
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ ﴿٢٦﴾ إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ ﴿٢٧﴾ وَجَعَلَهَا كَلِمَةً بَاقِيَةً فِي عَقِبِهِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ  ﴿٢٨/الزخرف﴾

“மேலும், இப்ராஹீம் தன் தந்தையையும், மக்களை யும் நோக்கி, “நிச்சயமாக நான் நீங்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டேன். எவன் என்னைப் படைத்தானோ அவனைத் தவிர (வேறு யாரையும் வணங்க மாட்டேன்) நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியைக் காட்டுவான் என்று கூறினார். மேலும் அவர் இதனை தன் சந்ததிகளின் நிலையான வாக்குறுதியாக அமைத்தார்.  43/26 - 28
மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மூதாதையினரின் தவறான வழிபாடுகளை நிராகரித்து வந்தார்கள், அதனை அவர்களின் வார்த்தையிலேயே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,

أَنتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ ﴿٧٦﴾ فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ ﴿٧٧/الشعراء﴾
நீங்களும் உங்களுடைய முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கி வந்தீர்கள் என்பதை பாருங்கள்) நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே, அகிலத்தாரின் இரட்சகனை தவிர  (என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்) 26/76,77
மேலும்  அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் வணங்குவது நிராகரிக்கப்பட வேண்டும், அது மாத்திரமின்றி அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குபவர்களை தங்களின் நண்பர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதை அடுத்து வரும் திரு வசனங்கள் மேலும் தெளிவு படுத்துகின்றன.
 قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦/الكافرون﴾
“நீங்கள் கூறுங்கள், நிராகரிப்பவர்களே! நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களும் அல்லர். நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன். மேலும் நான் வணங்குபவனை நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். உங்களுடைய மார்க்கம் உங்களுக்கும் என்னுடைய மார்க்கம் எனக்கும் உரியதாகும். 109 /1-6
لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّـهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّـهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚأُولَـٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّـهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَـٰئِكَ حِزْبُ اللَّـهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّـهِ هُمُ الْمُفْلِحُونَ ﴿٢٢/المجادلة﴾
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட சமூகத்தினரை, அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் பகைத்துக் கொண்டு இருக்கிறார்களே அவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காண மாட்டீர். அவர்கள் தமது  பெற்றோர்களாயினும், அல்லது தமது ஆண் மக்களாயினும், அல்லது தமது சகோதரர்களா யினும் அல்லது தங்களின் குடும்பத்தவராயினும் சரியே, அத்தகையோர் அவர்களின் இதயங்களில் ஈமானை (அல்லாஹ்) அவன் எழுதி விட்டான்.  மேலும் தன்னிடமிருந்து (வெற்றி எனும்) ரூஹைக் கொண்டு அவர்களைப் பலப்படுத்தி இருக்கின் றான். இன்னும் அவர்களை சுவனபதிகளில் நுளைய செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக (தங்கி) விடுவார்கள். இவர்களைப் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனை பொருந்திக் கொண்டார்கள். இவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்.  அறிந்துக் கொள்வீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றியாளர்கள். 58/22.      
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ۚ أَتُرِيدُونَ أَن تَجْعَلُوا لِلَّـهِ عَلَيْكُمْ سُلْطَانًا مُّبِينًا ﴿١٤٤/النساء﴾
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் விசுவாசிகளை  அல்லாமல் நிராகரிப்போரை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு எதிராக,  அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திட நீங்கள் விரும்புகின்றீர்களா? 4/144.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَىٰ أَوْلِيَاءَ ۘبَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ ۗ إِنَّ اللَّـهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴿٥/51﴾

விசுவாசம் கொண்டோர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் ஒருவர் மற்றொரு வருக்குத் பாதுகாப்பாளராக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் பதுகாவலராக எடுத்துக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாருக்கு நேரான வழி காட்டமாட்டான். 5/51
 
C. அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் தீர்ப்பளிக்கும் மத்தியஸ்தனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.
அல்லாஹ் தன் வேதத்தின் மூலமும், தன் தூதரின் வாக்கின் மூலமும் எதனை ஹராமாகவும், ஹலாலாகவும், மற்றும் சட்டங்களாகவும் விதியாக்கினானோ, அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது கடமை. இவ்விடயத்தில் அடியார் களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனை பல ஆதாரங்கள் உறுதிபடுத்துகின்றன. இனி அவற்றைக் கவணிப்போம்.
أَفَغَيْرَ اللَّـهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا ۚ وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِّن رَّبِّكَ بِالْحَقِّ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ ﴿١١٤/الأنعام﴾

“அல்லாஹ் அல்லாதவனையான தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் தேடுவேன்? அவனே இவ் வேதத்தை விவரிக்கப் பட்டதாக உங்களுக்கு  இறக்கி (அருளி)யிருக்கின்றான் (என்று நபியே! கூறுங்கள். இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உமது இரட்சகனிடமிருந்து உண்மையைக் கொண்டே இறக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே சந்தேகப்படுபவர்களில் நீரும்(ஒருவராக) ஆகிவிட வேண்டாம். 6/114.
 

اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللَّـهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَـٰهًا وَاحِدًا ۖ لَّا إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ ﴿٣١/التوبة﴾

“இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரி களையும், சன்னியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர். இன்னும் ஒரே இறைவனையே வணங்க வேண்டுமென்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப் பட வில்லை. வணக்கத்திற்குரியவன் அவனையன்றி இல்லை. அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன். 9/31.
 أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُم مِّنَ الدِّينِ مَا لَمْ يَأْذَن بِهِ اللَّـهُ ۚ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ ۗ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٢١/الشورى﴾

மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதிக்க வில்லையோ அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக் கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா ?(கூலி கொடுப்பது மறுமை நாளில் தான் என்ற) இறைவனுடைய தீர்ப்பு பற்றிய (அல்லாஹ்வுடைய) வாக்கு இல்லாதி ருந்தால் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப் பட்டே இருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள் - அவர்களுக்கு  துன்புருத்தும் வேதனை உண்டு. 42/21
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَن يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا ﴿٦٠﴾ وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنزَلَ اللَّـهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا ﴿٦١﴾ فَكَيْفَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَاءُوكَ يَحْلِفُونَ بِاللَّـهِ إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا ﴿٦٢﴾ أُولَـٰئِكَ الَّذِينَ يَعْلَمُ اللَّـهُ مَا فِي قُلُوبِهِمْ فَأَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُل لَّهُمْ فِي أَنفُسِهِمْ قَوْلًا بَلِيغًا ﴿٦٣﴾ وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّـهِ ۚ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّـهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّـهَ تَوَّابًا رَّحِيمًا ﴿٦٤﴾ فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا﴿٦٥﴾
(நபியே!)உம் மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்களையும் நிச்சயமாக தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின்றனரோ அவர்களை நீங்கள் பார்க்க வில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டு மென்று கட்டளையிடப் பட்ட ஒரு விஷமியையே அவர்கள் தீர்ப்பு கூறுபவனாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றனர். அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகிறான்.
மேலும் (நியாயம் பெற) அல்லாஹ் அருளிய இ(வ் வேதத்தின்) பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள்”  என்று அவர்களுக்குக் கூறப் பட்டால் அந்நயவஞ்சகர்கள் உம்மை விட்டு முற்றிலும் புறக்கணித்து விடுவதையே நீர் காண்பீர்.
அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்தின்) காரணமாக அவர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் எவ்வாறு இருக்கும் (என நீர் பார்ப்பீராக). பின்னர் அவர்கள் நன்மையையும், ஒற்றுமையையும் தவிர (வேறெதையும்) நாங்கள் நாடவில்லை என்று அல்லாஹ்வை கொண்டு சத்தியம் செய்பவர்களாக உம்மிடம் வருகின்றனர்.
அவர்கள எத்தகையோரென்றால் அவர்களின் இதயங்களில் இருப்பவைகளை அல்லாஹ் அறிவான். ஆகவே நீர் அவர்களை புறக்கணித்து விடுவீராக. மேலும் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வீராக. மேலும் அவர்களது மனங்களில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுவீராக.
இன்னும் அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே யன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில்  எவரையும் அனுப்பி வைக்கவில்லை. இன்னும், நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டு அவர்களுக்காக (அல்லாஹ்வுடைய) தூதராகிய நீரும் அவர்களுக் காக பாவமன்னிப்பு கோரியிருந்தால், தவ்பாவை ஏற்று மன்னிப்பவனாக மிக்க கிருபையுடை யோனாக அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப் பார்கள். ஆனால் உமது இரட்சகன் மீது  சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள். 4/60-65
إِنَّا أَنزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ ۚ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِن كِتَابِ اللَّـهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّـهُ فَأُولَـٰئِكَ هُمُ الْكَافِرُونَ﴿٤٤/المائدة﴾
தவ்ராத்தையும் நிச்சயமாக நாம் தான் இறக்கி வைத்தோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருக்கின் றது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்களும் (யூதர்களுடைய பண்டிதர் களாகிய) ரிப்பிய்யூன்களும், அஹ்பார்களும் (குருமார்கள்) அல்லாஹ்வுடைய வேதத்தைப்  பாதுகாக்க பொறுப்பு கொடுக்கப் பட்டவர்கள் என்பதாலும், அதற்கு சாட்சிகளாக அவர்கள் இருந்தார்கள் என்பதாலும் அதனைக்  கொண்டே யூதர்களுக்குக் தீர்ப்பளித்து வந்தார்கள். எனவே  (விசுவாசம் கொணடோரே!) நீங்கள் மனிதர் களுக்கு அஞ்ச வேண்டாம். எனக்கே அஞ்சுங்கள். என் வசனங்களுக்கு பகரமாக சொற்ப கிரயத்தை யும் வாங்காதீர்கள். மேலும் எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் தாம் நிராகரிப்பவர்கள் ஆவார்கள். 5/44
நான்காவது, ஷஹாதா கலிமாவின் நிபந்தனைகள்
‘வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி எதுவும் இல்லை’ என்ற ஷஹாதா கலிமா ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.  எனவே அல் குர்ஆனையும் ஸுன்னாவையும் ஆய்வு செய்வதன் மூலம் கிடைக்கப் பெற்ற இந்நிபந்தனைகளைக் கற்பதும் அவற்றை அமுல் படுத்துவதும் முஸ்லிம்களின் மீது கடமை. அவை பின்வருமாறு.
நிபந்தனை 1 - கலிமா ஷஹாதாவை தெளிவாக அறிந்து கொள்ளல்
அறிவுக்கு எதிர் அறிவீனம்,ஆகையால் முதலில் கலிமா ஷஹாதா வழியுறுத்தும் கருத்தையும், காரியத்தையும் சரியாக அறிந்து அதனைப் புரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் இந்த உம்மத்தினரில் கலிமா ஷஹாதாவின் கருத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மக்கள் ஷிர்க்கில் மாட்டிக் கொள்வதற்கு, அவர்களின் அறியாமையே காரணமாக அமைகின்றது. இதனால் இந்தக் கலிமாவின் நோக்கத்தையும் அவர்களால் அடைய முடியவதில்லை. மேலும் இந்தக் கலிமாவானது பல தெய்வக் கொள்கைக்கு எதிரானது என்பதை முஷ்ரிகீன்கள் புரிந்து கொண்டதன் காரமாகவே அவர்கள் இதனை ஏற்க மறுத்தனர். இதனை அல்லாஹ்வின் திரு வசனங்களும், ரஸூல் (ஸல்) அவர்ளின் மணிமொழியும் தெளிவுபடுத்துகின்றன.
فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا اللَّـهُ (محمد/19)
“நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற் குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்”(47/19)
  قال رسول الله صلى الله عليه وسلم                
من مات وهو يعلم أن لا إله إلا الله دخل الجنة (رواه مسلم)
அல்லாஹ்வையன்றி வணக்கத்துக்குரிய இறைவன் யாருமில்லை என்பதை உறுதியாக அறிந்து ஏற்றுக் கொண்ட நிலையில் எவர் இறந்து போகின்றாரோ அவர் சுவர்க்கம் புகுவார் என்று ரசூல்(சல்)அவர்கள் நபின்றார்கள். (முஸ்லிம்)
ஏகத்துவத்தை நிராகரிக்கும் முஷ்ரிக்குகளும் அவர்களின் தலைவர்களும் என்ன சொல்கின்றனர் என்பதை அடுத்து வரும் வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
أجَعَلَ الْآلِهَةَ إِلَـٰهًا وَاحِدًا (ص/5)
இவர் தெய்வங்கள் அனைத்தையும் ஒரே இறைவன் தான் என்று ஆக்கி விட்டாரா? என்று நிராகரிப்பவர்கள்  கூறுகின்றனர். 5/38
மேலும் அந்த முஷ்ரிக்குகள் தங்கள் சஹாக்களிடம்,
أَنِ امْشُوا وَاصْبِرُوا عَلَىٰ آلِهَتِكُمْ ﴿٦/ص﴾

நீங்கள் உங்கள் தெய்வங்களின் மீது (உறுதியாக) பொறுமையுடன் இருங்கள்” என்று கூறுகின்றனர். 38/5
நிபந்தனை 2- اليقين, உறுதியான நம்பிக்கை.
ஷஹாதா கலிமாவை மொழிகின்றவனின் உள்ளத்தில் அந்தக் கலிமா வழியுறுத்தும் கருத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கை இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் அவனின் கலிமா ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அல்லாஹ்வை தவிர்ந்த அனைத்து கடவுள் களையும் நிராகரித்து விட்டு, அல்லாஹ் ஒருவன் மாத்திரமே வணங்கத் தகுதியானவன் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதியான நபி என்றும் அவர்களுக்குப் பின் யாரும் நபியாக வர முடியாதென்றும், அவர்களுக்குப் பின்னரும் யாரேனும் நபியாக இருக்கிறார் என்று வாதிட்டால் அவன் பொய்யன் என்றும் உறுதியாக நம்பிக்கை கொள்வது அவசியம். இவ்வாறு மனப்பூர்வமான நம்பிக்கை இல்லாது, கலிமா ஷஹாதா மூலம்வெளிப்படுத்தும் பிரகடனம் பயன் தராது. கலிமா ஷஹாதாவின் இந்த நிபந்தனையை நபியவர்களின் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. காரிஜா என்பாரின் தோட்டத்தில் வைத்து நபியவர்ளை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் சந்தித்த வேளையில் நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " أشهد ألا إله إلا الله وأني رسول الله ، لا يلقى الله بهما عبد غير شاك فيهما إلا دخل الجنة " وفي رواية فمن لقيت وراء هذا الحائط يشهد أن لا إله إلا الله مستيقناً بها قلبه فبشره بالجنة
‘அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குத் தகுதியான வன் வேறு யாருமில்லை என்றும், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வீராக. இவ்விரண்டு விடயங்களிலும் சந்தேகம் கொள்ளாத நிலையில் அல்லாஹ்வை சந்திக்கும் ஒரு அடியான் சுவர்க்கத்தில் பிரவேசிக்காமல் இருப்பதில்லை.“ இன்னொரு அறிவிப்பில் “மன உறுதியுடன் வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வை யன்றி எவருமில்லை என்று சாட்சி பகரும் எவரையாவது இந்த தோட்டத்திற்கு வெளியில் நீங்கள் சந்தித்தால், அவருக்கு சுவர்க்கத்தைப் பற்றி சுப செய்தி அறிவியுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள் என்று பதிவாகியுள்ளது. (முஸ்லிம்)
மேலும் உண்மையான முஃமின்களை இவ்வாறு அல்லாஹ் போற்றுகின்றான்:
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا (الحجرات/15)
உண்மையான விசுவாசிகள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாதவர்கள் தாம். 49/15
இனி முனாபிக்குகளை அல்லாஹ் இழிந்துரைப் பதை அடுத்து வரும் வசனத்தில் கவணிப்போம்.
وَارْتَابَتْ قُلُوبُهُمْ فَهُمْ فِي رَيْبِهِمْ يَتَرَدَّدُونَ﴿٤٥/التوبة﴾  
“அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து விட்டன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்திலே யே சிக்கித் தடுமாறிக் கொண்டிருகின்றனர்”(9/45)
மேலும் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் இவ்வாவறு குறிப்பிடுகின்றார்கள்:
" الصَّبْرُ نِصْفُ الإِيمَانِ ، وَالْيَقِينُ الإِيمَانُ كُلُّهُ "  
பொறுமை ஈமானின்  பாதி, பூரண ஈமானே உறுதியான ஈமானாகும்
எனவே ஷஹாதா கலிமா வழியுறுத்தும் கருத்தின் மீது யார் உறுதியான நம்பிக்கையுடையவராக இருப்பாரோ, அவரின் உருப்புக்கள், அல்லாஹ் ஒருவனை மாத்திரம் வணங்கவும், ரஸூல் (ஸல்) அவர்களுக்குக் கீழ்படிந்து நடக்கவும் தயாராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நிபந்தனை 3 - மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளல்
ஷஹாதா கலிமாவின் கருத்தை ஏற்றுக் கொள்வது மாத்திரம் போதுமானதல்ல. அதன் கோட்பாட்டை மறுத்துரைக்காது அதன்படி வழிப்படுதல் அவசியம்ஏனெனில் கலிமா ஷஹாதாவின் கருத்தை பூரணமாக, உறுதியாக அறிந்திருந்த பலர், அகங்காரத்தின் காரணமாக அல்லது ரஸுல் (ஸல்) அவர்களின் மீது பொறாமை கொண்டதன் காரணமாக அதன் கோட்பாட்டிற்கு அடிபணிய மறுத்து வந்தனர். யூத, கிரிஸ்தவ அறிஞர்களின் நிலை இப்படிப்பட்டது தான். அவர்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன், அல்லாஹ் ஒருவன்தான் என்பதையும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதையும் நன்கு அறிந்திருந்தனர், எனினும் அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. முஷ்ரிக்கீன்களின் நிலையும் அப்படிபட்டதே. அவர்கள் கலிமா ஷஹாதாவின் கருத்தை அறிந்திருந்தனர். அவ்வாறே முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை பேசக்கூடியவர் என்பதையும் நன்கு அறிந்திருந்தனர். அப்படி இருந்தும் அவர்கள் தங்களின் பொறாமை காரணமாக  அவர்கள் நபியவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களின் இந்நிலைப்பாட்டை பின் வரும் திரு வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ ۖ (البقرة/109)   
“அவர்களின் பொறாமை கரணமாகவே, அவர்களுக்கு உண்மை தெளிவாக தெரிந்த பின்னரும் அவர்கள் இவ்வாறு விரும்புகின்றனர்” (2/109)
யூதர்கள், ரஸூல் (ஸல்) அவர்களின் மீது பொறாமை கொண்டதன் காரணமாகவே அவர்கள் அல்லாஹ்வின் தூதரை ஏற்றுக் கொள்ளாமல் இருந்ததுடன், அன்னாரின் மீது விசுவாசம் கொண்ட மக்களை காபிர்களாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தனர் என்பதையே இத் திருவசனம் தெளிவுபடுத்துகின்றது  
إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَـٰهَ إِلَّا اللَّـهُ يَسْتَكْبِرُونَ ﴿٣٥/الصافات﴾
“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை, என்று அவர் களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் பெருமையடிப்பவர்களாக  இருந்தார்கள்.” (37/35)
إِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَـٰكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللَّـهِ يَجْحَدُونَ ﴿٣٣/الأنعام﴾
“நிச்சயமாக அவர்கள் உம்மை பொய்யாக்க வில்லை, எனினும் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களை(யே பொய்யாக்கி) மறுக்கின்றனர்” (6/33)
நிபந்தனை 4 - கலிமாவின் கொள்கைகுக் வழிப்படுதல்    
வழிப்படுதல், என்பதற்கும் ஏற்றுக்கொள்ளுதல் என்பதற்கும் இடையே வித்தியாசம் உண்டு. இதன்படி வழிப்படுதல் என்பது காரியத்தை மனப்பூர்வமாக ஏற்று அதனைச் செய்வதைக் குறிக்கும். ஆனால் ஏற்றுக்கொள்ளல் என்பது குறித்த விடயத்தை மனதால் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றக் கட்டாயமில்லை. அதனை வாய் வார்த்தை மூலம்  பிரகடனப்படுத்துவது போதுமானது.  இவ்விரு வார்த்தைகளும் பொதுவாக  குறித்த கருமத்தைப் பின்பற்றப் படுதைக் குறிக்குமாயினும், வழிப்படுதல் என்பது அடிபணிதலையும், ஏற்றுக் கொள்வதையும் மற்றும் அல்லாஹ்வின் சட்டங்களைப் புறக்கணிக்காமல் இருத்தலையும் வழியுறுத்தும். இதனையே அடுத்து வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன,
أَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ (الزمر/54)
நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி அவனுக்கு முற்றிலும் கீழ் படிந்து விடுங்கள் (39/54)
وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّـهِ وَهُوَ مُحْسِنٌ  (النساء/125)
“எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்து விட்டு,  அவர் நன்மை செய்தவராக இருக்க வருகின்றாரோ, அவரை விட அழகான மார்க்கத்தை உடையவர் யார்?” (4/125)
وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّـهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ ۗ  (لقمان/22)
“எவர் நன்மை செய்கிறவராக இருக்கும் நிலையில் தன்னுடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்புகிறாரோ அவர் நிச்சயமாக மிக்க பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார் (31/22)
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا﴿٦٥/النساء﴾  
“ஆனால் உம்மது இறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் விசுவாசிகளாக  மாட்டார்கள்” (4/65)

நிபந்தனை 5 - கலிமாவின் கொள்கைய மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளல்
ஈமான் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஷஹாதா கலிமாவை பொய்யாகவன்றி அதனை உண்மையாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது அவசியம். இதனை ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் உறுதிபடுத்துகின்றது.
من قال لاإله الاالله صادقا من قلبه دخل الجنة (رواه أحمد)
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை யன்றி வேறு எவருமில்லை என்று எவர் தன் மனதிலிருந்து உண்மையாகவே கூறுவாரோ, அவர் சுவர்க்கம் பிரவேசிப்பார் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அஹ்மத்)
எனவே ஷஹாதா கலிமாவின் கருத்தை உள்ளத்தால் ஏற்றுக் கொள்ளாது, அதனை வாயால் மாத்திரம் ஒருவர் மொழிவது அவருக்குப் பாதுகாப்பைத் தராது. அதனால்தான் முனாபிக்கு களான நயவஞ்சர்களின் ஈமானை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை அடுத்து வரும் வசனங்கள் மூலம் அல்லாஹ் தெளிவு படுத்துகின்றான்.
إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّـهِ ۗ وَاللَّـهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّـهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ ﴿١/المنافقون﴾
“(நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால் “நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று நாங்கள் சாட்சி கூறுகின்றோம்” என்பதாக கூறுகின்றனர். நிச்சயமாக நீர் அவனது  தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். இன்னும் இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாக பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறகின்றான்.”(63/1)

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّـهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ  ﴿٨/البقرة﴾    
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டிருக்கின்றோம் எனக் கூறுவோர் மனிதர்களில் சிலருண்டு. அவர்கள் விசுவாசம் கொண்டவர்களல்லர்.(2/8)
நிபந்தனை 6-தூய எண்ணம் அவசியம்
ஈமானின் மற்றொரு நிபந்தனை, தூய எண்ணத்திற்கு மாற்றமான இணை வைக்கும் எண்ணம் எதுவும் உள்ளத்தில் இருத்தலாகாது. எனவே ஏகத்துவ விடயத்தில் உள்ளம் தூய்மையாக, பரிசுத்தமாக இருத்தல் அவசியம். இதனை அடுத்து வரும் திருவசனங்கள் தெளிபடுத்துகின்றன.
فَاعْبُدِ اللَّـهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ ﴿٢﴾ أَلَا لِلَّـهِ الدِّينُ الْخَالِصُ ۚ  (الزمر/2-3)
“ஆகவே முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வாருங்கள்”(39/2) “பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது”(39/3)
قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّـهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ ﴿١١/الزمر﴾
“நீங்கள் கூறுங்கள் “முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” (39/11)
قُلِ اللَّـهَ أَعْبُدُ مُخْلِصًا لَّهُ دِينِي ﴿١٤/الزمر﴾  
“முற்றிலும் என் மார்க்கத்தை (வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவனாக நான் அல்லாஹ்வையே வணங்குகிறேன்.” என்று நீர்  கூறுவீராக. (39/14)
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِمَنْ قَالَ : لا إِلهَ إِلاَّ اللهُ خَالِصَاً مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ(  رواه البخاري)
“என்னுடைய ஷபாஅத்தின் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றவர், لاإله إلاالله வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு எவருமில்லை, என்று உளத்தூய்மையுடன் கூறுகின்றவனே, என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புகாரி)  மேலும் உத்பான் என்பார் அறிவிக்கும் ஹதீஸிலும் இக்கருத்து வழி யுறுத்தப் பட்டுள்ளது. அவர்கள் அறிவிப்பதாவது
 في حديث عتبان " فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله"( رواه البخاري ومسلم(
அல்லாஹ்வின் திரு முகத்தை எதிர்பார்த்தவராக لاإله الاالله வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வை யன்றி வேறு எவருமில்லை என்று எவர் கூறுவாரோ, அவரின் மீது அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விட்டான். (புஹாரி, முஸ்லிம்)
எனவே உளத்தூய்மையை உறுதிப்படுத்துவதற்கு, இபாதத் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே மேற்கொள்ளப் படுதல் அவசியம். அதனை அல்லாஹ் அல்லாத வேறு எவருக்காகவும் மேற் கொள்ளப் படலாகாது. அவர்கள் அல்லாஹ்வின் நெருக்கமான மலக்காகவோ, முர்ஸலான நபியாகவோ இருந்த போதிலும் சரியே. அவ்வாறே ரஸூல் (ஸல்) அவர்களைப் பின்பற்றும் விடயத்தில் அதனை ஸுன்னாவின் வரையரைக் குள் சுருக்கிக் கொள்வதும், பித்அத்துக்களையும், ஷரீஆவுக்கு முரணான விடயங்களையும் விட்டு விடுவதும் அவசியம். அவ்வாறே மனிதன் ஏற்படுத்திய, ஷரீஆவுக்கு எதிரான, சட்டங்களை யும் மற்றும் மரபுகளையும் புறக்கணிப்பதும் அவசியம். ஏனெனில் எவர் இவற்றின் மீது திருப்தியடைகின்றாரோ, அல்லது அதன்படி தீர்ப்பு வழங்குகின்றாரோ அவர் பரிசுத்த எண்ணமுடைய வராக மாட்டார்
நபந்தனை 7-மனப்பூர்வமாக நேசித்தல்   
அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும், மற்றும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய காரியங்களையும் மனப்பூர்வமாக நேசிப்பது அடியானின் மீது கடமை. அவ்வாறே தங்களின் அதிகாரிகள் மீதும், தாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களின் மீதும் அன்பு செலுத்துவதும் அடியானின் மீது கடமை. எனவே இந்த அன்பும் பரிவும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதன் அடையளங்கள் அவரில் காட்சியளிக்கும். இதனால்தான் உண்மையான நல்லடியான் அல்லாஹ்வுக்கும், அவனின் தூதருக்கும் கட்டுப் பட்டு நடப்பதையும், உரிய முறையில் அல்லாஹ்வை வணங்குவதையும், அல்லாஹ்வுக்கு வழிப்படும் விடயத்தில் இன்பத்தை அனுபவிப் பதையும், தன் இறைவன் விரும்பும் சகல சொல் செயல்களின் பக்கம் அவன் விரைந்து செல்வதையும் நீங்கள் காண முடிகின்றது. மேலும் இதனால்தான் பாவ காரியங்களை விட்டும் அவன் தவிர்ந்து விலகிச் செல்வதையும், பாவிகளின் மீது அவன் கோபமடைவதையும் நீங்கள் காண்கின்றீர் கள். மேலும் பாவகாரியங்களை மனம் விரும்பிய போதிலும், தீய பழக்க வழக்கங்களில் இன்பம் இருப்பதை உள்ளம் உணர்ந்த போதிலும், நரகம் இச்சைகளாலும், ஆசைகளாலும் சூழப் பட்டுள்ளது என்பதையும், சுவர்க்கம் மனம் விரும்பாத காரியங்கள் மூலம் சூழப்பட்டுள்ளது என்பதையும் அவன் அறிந்துக் கொள்வான். அடியானிடம் இத்தகைய நிலை காணப்படுமானால் அதுதான் உண்மையான நேசமாகும். எனவேதான் “எப்போது  அல்லாஹ்வின் மீது நேசம் கொண்ட ஒரு அடியானாக நான் ஆக முடியும்?” என துன்னூன் அல்மிஸ்ரி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வுக்கு கோபமூட்டும் விடயம் ஏதும் உம்மிடமிருந்தால் அதனை நீ தவிர்த்துக் கொள்ளும் போது” என்றார்கள்.
மேலும் அல்லாஹ்வை நேசிப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒருவன் அல்லாஹ்வுக்கு உடந்தையாக இருக்காது போனால் அவனின் வாதம் பிழையானது என சில அறிஞர்கள் கூறுவர். மேலும் அடியான் அல்லாஹ்வை நேசிப்பதற்கு அடையாளமாக அவன் ரஸூல் (ஸல்) அவர்களின் ஸுன்னாவை - வழிமுறையைப் பின்பற்றுவது அவசியம் என்பதை அல்லாஹ் ஒரு நிபந்தனையாக ஆக்கியுள்ளான். இதனை அல்லஹ்வின் வாக்கு இப்படி இயம்புகின்றது,
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّـهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّـهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ(آل عمران/31)  
“(நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக. “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான்”(3/31)
நிபந்தனை 8-அல்லாஹ் அல்லாதவைகளை
வணங்குதலை மறுத்தல்     
ஈமான் ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனை களில் இதுவும் ஒன்று. இதற்கு, இந்த ஹதீஸ் ஆதாரமாக விளங்குகின்றது.
 “من قال لاإله إلاالله وكفر بما يعبد من دون  الله حرم ماله ودمه”
“எவர் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை யன்றி வேறெவருமில்லை” என்று கூறுகின்றாரோ, அவரின் பணமும், இரத்தமும் பிறர் தீண்டுவதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளது” (முஸ்லிம்).
ஐந்தாவது: கலிமா ஷஹாதாவுக்கு எதிரானவைகள்
“வணக்கத்திற்குத் தகுதியான இறைவன், அல்லஹ்வையன்றி வேறு எவரும் இல்லை” என்ற கலிமாவின் கோட்பாட்டிற்கு, அல்லாஹ்வை நிராகரித்தல், அவனுக்கு இணை வைத்தல் எனும் கருமங்கள்  எதிரானவை. ஏகத்துவத்திற்கு எதிரான இந்த காரியம் பல வடிவங்களைக் கொண்டது. அவையாவன,
முதலாவது:
படைத்தல், காத்தல், அழித்தல், உயிர் கொடுத்தல், உணவளித்தல், மற்றும் நிர்வகித்தல் போன்ற கருமங்களை அல்லாஹ் அல்லாத இன்னொரு வனும் செய்கின்றான் என்றோ அல்லது இக்காரியங்களைச் செய்ய அவனுக்கு இணையாக இன்னும் பலர் இருக்கின்றனர் என்றோ சாதிப்பது, ஏகத்துவத்திற்கு எதிரானவையாகும். பின்வரும் திருவசனங்கள் இதற்கு ஆதாரமாக விளங்குகின்றன.
قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ اللَّـهِ ۖ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍ وَمَا لَهُ مِنْهُم مِّن ظَهِيرٍ ﴿٢٢/سبأ﴾
“(நபியே!) நீர் கூறுவீராக, அல்லாஹ்வையன்றி நீங்கள் எண்ணிக் கொண்டீர்ளே, அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வாணத்திலோ பூமியிலோ அவைர்கள் ஓர் அணுவளவையும் சொந்தமாக்கி கொள்ள மாட்டார்கள். அவ்விரண்டிலும்  அவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லை. (இதில்) அவனுக்கு உதவியாளரும் அவர்களில் யாருமில்லை”(34/22)
ألْحَمْدُ لِلَّـهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ ۖ ثُمَّ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ ﴿١/الأنعام﴾
வானங்களையும் பூமியையும் படைத்து, இருள்களையும், ஒளியையும் ஆக்கியனாகி அல்லாஹவுக்கே எல்லா புகழும் உரியதாகும். இதன் பின்னரும் நிராகரிப்போர் தங்கள் இரட்சகனுக்கு இணை வைக்கின்றனர். (6/1)
قُلْ مَن رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلِ اللَّـهُ ۚ قُلْ أَفَاتَّخَذْتُم مِّن دُونِهِ أَوْلِيَاءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّا ۚ قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ ۗ أَمْ جَعَلُوا لِلَّـهِ شُرَكَاءَ خَلَقُوا كَخَلْقِهِ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ اللَّـهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ﴿١٦/الرعد﴾
“(நபியே! அவர்களிடம்) வானங்கள், பூமியின் இரட்சகன் யார்’? என்று நீர் கேட்பீராக. அல்லாஹ்தான் என்று கூறுவீராக. அப்படியிருக்க அவனையன்றி பாதுகாவலர்களாக (பொய்யான தெய்வங்களை) நீங்கள் எடுத்து கொண்டீர்களா? (அவர்களோ)  தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவர்களாக  இருக்கின்ற னர் என்று கூறுவீராக. மேலும் குருடனும் பார்வையுடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா? என்று கேட்பீராக. அல்லது அவர்கள் அல்லாஹ்வுக்கு  இணையாளர்களை ஆக்கியிருக்கின்றனரே  அவர்கள் அவன் படைத்திருப்பதைப போன்று (எதனையும்) படைத்திருக்கின்றனரா? அவ்வாரா யின் அப்படைப்பு இவர்களுக்கு (அல்லாஹ் படைத்ததற்கு) ஒப்பாகி விட்டதா? ஆகவே ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன் அல்லாஹ் தான், அவன் ஒருவனே அனைத்தையும் அடக்கி ஆளுகின்றவன், என்று கூறுவீராக.(13/16)  
இங்கு குறிப்பிடப்பட்ட விடயங்களை எல்லாம் அல்லாஹ்தான் செய்கின்றான் என்பதை அனேகமான சமூகங்கள் ஏற்றுக் கொள்கின்றன. எனவே இவை பற்றி அவர்களிடம் வினவப்படும் போது அதற்கு அல்லாஹ்தான் என்று பதில் தருகின்றனர். ஆனால் அவர்களிடம் “வணக்கத் திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை” என்று சாட்சி கூறுங்கள் என்று வேண்டப்பட்டால், அப்போது அதனை அவர்கள் மறுத்து விடுகின்றனர். அவர்களின் இந்த மனப்பாண்மையை அல்லாஹ் இவ்வாறு எடுத்தியம்புகின்றான்.
 قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ اللَّـهُ ۚ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ ﴿٣١/يونس﴾
வானத்திலிருந்தும் பூமியல் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும் பார்வைகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்ப வன் யார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளிப் படுத்துபவனும் உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துபவனும் யார்? சகல காரியங்களை யும் திட்டமிட்டு நிகழ்த்துபவனும் யார்?” என்று கேட்பீராக. அ(தற்க)வர்கள் “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் பயப்பட வேண்டாமா, என்று கேளுங்கள் (10/31)  
إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَـٰهَ إِلَّا اللَّـهُ يَسْتَكْبِرُونَ ﴿٣٥﴾ وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍ ﴿٣٦/الصافات﴾
“அல்லாஹ்வைத் தவிர வணக்கதிற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் பெருமை யடிப்பவர்களாக இருந்தனர். “நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுகின்ற வர்களா? என்று அவர்கள் கூறுகின்றனர்.” (37/35,36)
أَجَعَلَ الْآلِهَةَ إِلَـٰهًا وَاحِدًا ۖ إِنَّ هَـٰذَا لَشَيْءٌ عُجَابٌ﴿٥/ص﴾
“இவர் தெய்வங்கள் அனைத்தையும் ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே இது ஓர் ஆச்சரியமான விஷயம் தான்.” (38/5)
இரண்டாவது:
வணக்க வழிபாடுகள் எதனையும் அல்லாஹ் அல்லாதவற்றின் பால் திருப்பி விடுவது கலிமா ஷஹாதாவின் கோட்பாட்டிற்கு எதிரான மற்றுமொரு விடயமாகும். ஏனெனில் ‘இபாதா’ வழிபாடு என்பது அல்லாஹ் விரும்பும் வெளிப்படையான, மறைவான  சொல், செயல் அனைத்தையும் குறிக்கும் ஒரு பொதுப் பெயராகும். ஆகையால் இவை எதனையும் அல்லாஹ் ஒருவனுக்கல்லாமல் வேறு எவரின் பக்கமும் திருப்பக் கூடாது. பலியிடுதல், நேர்ச்சை வைத்தல், ஸஜூது செய்தல், அஞ்சி நடத்தல், எதிர்பார்த்தல், நேசம் வைத்தல், உதவி தேடல், பாதுகாவல் தேடல் எனும் காரியங்கள் இபாதாவைச் சார்ந்தவைகளே. இதனை உறுதி செய்யும் ஆதாரங்கள் ஏராளம். அவற்றில் சிலதை இங்கு கவணிப்போம்      
 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥/الفاتحة﴾
“நாங்கள் உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம்.(1/5)
 يَا أَيُّهَا النَّا سُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿٢١/البقرة﴾
“மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். நீங்கள் இறையச்சமுடைய வர்களாக ஆகலாம்” (2/21
وَاعْبُدُوا اللَّـهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّـهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا ﴿٣٦/النساء﴾
“மேலும், அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள்.  பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்.  உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், உங்களுடன் இருக்க்க்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட வர்களுக்கும் உதவி செய்யுங்கள். கர்வம் கொண்டவனாக, பெருமையாளனாக இருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.” (4/36)
وَمَنْ أَضَلُّ مِمَّن يَدْعُو مِن دُونِ اللَّـهِ مَن لَّا يَسْتَجِيبُ لَهُ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَن دُعَائِهِمْ غَافِلُونَ (5/الأحقاف)
“மறுமை நாள் வரை தனக்குப் பதில் தராத அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களை விட வழிகெட்டவர்கள் யார்?”  46/5
وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ ﴿٦/الأحقاف﴾
 “தவிர, மனிதர்கள் எழுப்பப்படும சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் தங்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் நிராகரித்துவிடும்” (46/6)
மேலும் ஜின்களின் கூற்றை அல்லாஹ் இவ்வாறு எடுத்து இயம்புகிறான்.
وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا ﴿٦﴾
“மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே பாதுகாப்புக் கோருகின்றனர். இதனால் மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை  அதிகரிக்கச் செய்து விட்டனர்.” (72/6)
  فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ﴿٢/الكوثر﴾
“நீங்கள் உங்களது இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுத்து வாருங்கள்.”(108/2)
மூன்றாவது:
கண்ணியமளிக்கும் விடயத்திலும், நேசம் வைக்கும் விடயத்திலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய சிருஷ்டிகளுக்குமிடையே சம நிலையை ஏற்படுத்து வது, அதாவது அல்லாஹ்வை நேசிப்பது போன்று அல்லது அவனை கண்ணியப்படுத்துவது போன்று அவனுடைய சிருஷ்டிகளுடன் நடந்து கொள்வதும் ஏகத்துவத்திற்கு எதிரான விடயமாகும். இதன் ஆதாரங்கள் பின்வருமாறு.
وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّـهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّـهِ ۖ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّـهِ ۗ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّـهِ جَمِيعًا وَأَنَّ اللَّـهَ شَدِيدُ الْعَذَابِ ﴿١٦٥البقرة﴾
“மேலும் அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் இருக்கின்றனர். எனினும் இறை விசுவாசிகளோ அதிகமாக அல்லாஹ்வையே நேசிப்பார்கள். அநியாயம் செய்துக் கொண்டிருந் தோர் வேதனையைக் கண்ணால் காணும் போது, நிச்சயமாக சக்தி  அனைத்தும் அல்லாஹ்க்கே இருக்கிறது,  இன்னும் வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் னடுமையானவன் என்று அறிவார்கள்.” (2/165)  
تَاللَّـهِ إِن كُنَّا لَفِي ضَلَالٍ مُّبِينٍ﴿٩٧﴾ إِذْ نُسَوِّيكُم بِرَبِّ الْعَالَمِينَ  ﴿٩٨/الشعراء﴾
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம். ஏனெனில் உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்.” (26/97,98)
மேலும் அல்லாஹ் அல்லாதவைகளின் மீது சத்தியம் செய்வதும் ஏகத்துவத்திற்கு எதிரான ஒரு செயலே. இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.
قال رسول الله صلى الله عليه وسلم من حلف بغير الله فقد كفر أو أشرك (رواه الحاكم)
“யார் அல்லாஹ் அல்லாதவையின் மீது சத்தியம் செய்கின்றாரோ, அவர் காபிராகிவிட்டார், அல்லது இணைவைத்துவிட்டார்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அல் ஹாகிம்)
நான்காவது
தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத் தருவர் அல்லது தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வர் என்ற எண்ணத்தில் மனிதர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் சிருஷ்டிகளுக்கு இடையில் தரகர்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் இந்தச் செயலும் ஏகத்துவத்திற்கு எதிரானதே. இதன் ஆதாரங்கள் பின்வருமாறு;
ألَا لِلَّـهِ الدِّينُ الْخَالِصُ ۚ وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّـهِ زُلْفَىٰ إِنَّ اللَّـهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ اللَّـهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ ﴿٣/الزمر﴾
“தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை, தங்க ளுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக் கின்றார்களோ அவர்கள் அவை எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் அவர்களுகிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் பொய்யர் களையும், நிரகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை.” (39/3)     
 وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّـهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَـٰؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّـهِ ۚ قُلْ أَتُنَبِّئُونَ اللَّـهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ ﴿١٨/يونس﴾
“அவர்கள் தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாத வற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ் விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர். நீங்கள் அவர்களிடம் “வானங்களி லோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவை களை அவனுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களோ? அவன் மிகப் பரிசுத்த மானவன். அவர்கள் இணை வைப்பவர்களைவிட மிக உயர்ந்தவன்” என்று கூறுவீராக.” (10/18)
ஐந்தாவது
அல்லாஹ்வின் சட்டமல்லாதவற்றின் மூலம் நீதியைத் தேடுதல். இதுவும் ஏகத்துவத்திற்கு எதிரான செயலே, அதன் ஆதாரங்கள் பின்வறுமாறு.
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَن يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا ﴿٦٠/النساء﴾
“உம்மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டுள்ள வற்றையும் நிச்சயமாக தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின் றனரோ அவர் களை நீங்கள் பார்க்க வில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையி டப்பட்ட ஒரு விஷமியையே அவர்கள் தீர்ப்புக் கூறுபனாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றனர். அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகின்றான்” (4/60)
وَأَنِ احْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّـهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّـهُ إِلَيْكَ ۖ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّـهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ ۗ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ ﴿٤٩﴾ أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ ۚ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّـهِ حُكْمًا لِّقَوْمٍ يُوقِنُونَ ﴿٥٠/المائدة﴾
(மேலும் நபியே!) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களுடைய மனோ இச்சையை பின் பற்றி விடாதீர். அன்றியும் உமக்கு அல்லாஹ் இறக்கி வைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள்  உம்மை திருப்பி விடாத படியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருப்பீராக.  (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் அப்போது அல்லாஹ் நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதை தான் என்பதை நீர் அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக அனிதர்களில் பெரும்பாலோர்  பாவிகளாவர்.
அறியாமை காலத்தின் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர்? உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்தர்க்கு தீர்ப்பளிப்தில் அல்லாஹ்வை விடவும மிக்க அழகானவன் யார்? (5/49,50)
சிலரிடம் ஏகத்துவத்துக்கு எதிரான இந்த ஷிர்க்கின் வகைகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக ஒன்று திரண்டும், இன்னும் சிலரிடம் அவற்றில் சிலவும் இருக்கக் காணலாம். எனவே தான் அல்லாஹ்வின் தூதர்கள் அழைப்பு விடுத்த  விடயங்களில், ‘வணக்கத்துக்கு தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்று வேறு யாரும் இல்லை” என்ற ஷஹாதா கலிமா மிகவும் மகத்துவம் பொருந்திய தாக விளங்குகிறது. ஆகையால்தான் நபிமார்கள் யாவரும் தங்களின் சமுதாயத்தவரிடம் அடிக்கடி,    
  اعْبُدُوا اللَّـهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُ  (الأعراف/59)
“நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறவன் உங்களுக்கில்லை (7/59) என்று  கூறிக் கொண்டிருந்தனர். இது போன்ற வசனங்கள் அல்குர்ஆனில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன. மேலும் முஹம்மத் (ஸல்) நபியாக அனுப்பப்பட்டபோது, அவர்கள் அழைப்பு விடுத்து வந்த மிகப் பாரிய விடயமாக இருந்ததுவும் இதுவே. நபியவர்களின் வாழ்க்கை முழுவதும் இதற்கு சாட்சி கூறும். மேலும் நபி (ஸல்) அவர்களின் மணிமொழிகள் பலவும் இதனை வழியுறுத்துகின்றன. எடுத்துக் காட்டாக பின்வரும் ஹதீஸ்களைக் குறிப்பிடலாம்.
“வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை”  முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று மனிதர்கள் சாட்சி கூறி, அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுத்து வரும் வரை நான் அவர்களுடன் போரிடும்படி ஏவப்பட்டுள்ளேன். இதனை அவர்கள் செய்தால், உரிமை விடயம் அல்லாத அவர்கள் தங்களின் செல்வத்தையும், இரத்தத்தையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொண்டனர். பின்னர் அவர்களின் விசாரணை அல்லாஹ்வைச் சார்ந்தது. (அஹ்மத்)  
மேலும் இவ்விடயத்தின்பால் அழைப்பு விடுப்ப தற்காக தூதர்களையும், கடிதங்களையும் ரஸூல் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். உதாரணமாக, ரஸூல் (ஸல்) அவர்கள், முஆத் (ரழி) அவர்களை யமன் நாட்டின் தூதுவராக அனுப்பிய போது அவரிடம் “நீங்கள் ‘அஹ்லுல் கிதாப்’ எனும் வேதக்கார சமூகத்திடம் செல்கின்றீர்கள். “வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு எதுவு மில்லை. நான் அல்லாஹ்வின் தூதர்” என்று சாட்சி கூறும்படி அவர்களை அழையுங்கள். இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டால், தினமும் ஐவேளைத் தொழுகையை அல்லாஹ் கடமையாக்கி  இருக்கின்றான் என்று அவர்களுக்கு அறிவி யுங்கள். இதனையும் அவர்கள் ஏற்றுக் கொண்டால், அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து ‘ஸதகா’ தர்ம வரியைப் பெற்று அதனை ஏழைகளுக்கு வழங்குவதை, அல்லாஹ்  அவர்களின் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்கு அறிவியுங்கள். இதனையும் அவர்கள் ஏற்றுக் கொண்டால், அவர்களின் பணத்தை கையாடும் விடயத்தில் உங்களை எச்சரிக் கின்றேன். மேலும் அநீதிக்கு இலக்கானவின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரையில்லை” என்று  கூறினார்கள். (புகாரீ)
மேலும் அடியார்களிடம் ஆரம்பத்திலும், கடைசியிலும் “வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாரும் இல்லை” என்று சாட்சி கூறும்படியே, வேண்டப்படுகின்றது. இதனை பின் வரும் ஹதீஸ்கள் வழியுறுத்துகின்றன.
1.    لقنوا موتاكم شهادة أن لاإله إلاالله (رواه مسلم)
2.    من كان آخر كلامه لاإله إلاالله دخل الجنة (رواه ابو داود)
“உங்களில் மரணத் தருவாயில் இருப்பவருக்கு
 لاإله الاالله   என்பதைச் சொல்லிக் கொடுங்கள்” (முஸ்லிம்) என்றும்
“எவருடைய இறுதி வாக்கு لاإله إلاالله வாக இருக்குமோ, அவர் சுவர்க்கத்தில் பிரவேசிக்காமல் இருப்பதில்லை” என்றும் நபியவர்கள் நவின்றார்கள். (அபூதாவூத்)
எனவே இந்த கலிமாவை நிலைநிறுத்துவதற்காக ஜிஹாதையும், நன்மையைக் கொண்டு ஏவுதல், தீமையை விட்டும் தடுத்தல் எனும் தஃவாப் பணியையும் அல்லாஹ் விதியாக்கினான். இதன் நிமித்தம்தான் மக்கள் இரண்டு பிரிவினராயினர். அவர்களில் ஒரு கூட்டத்தினர் ஈமானைப் பெற்ற சுவர்க்கவாசிகள். மறு கூட்டத்தினர், அல்லாஹ் வை நிராகரித்த நரக வாசிகள்.
எனவே உள்ளும் புறமும் இந்த கலிமாவையும், அதன் நோக்கத்தையும், கடமைகளையும் உரிய முறையில் எவர் நிறைவேற்றினாரோ அவர் இம்மையிலும் மறுமையிலும் பூரண அமைதி யையும் வழிகாட்டலையும் பெறுவார். இதனை அல்லாஹ்வின் வாக்கும், ரஸூல் (ஸல்) அவர்களின் மணி மொழியும் உறுதி செய்கின்றன.     
الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُم بِظُلْمٍ أُولَـٰئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُم مُّهْتَدُونَ ﴿٨٢/الأنعام﴾
எவர்கள் விசுவாசம் கொண்டு பின்னர் தங்களுடைய ஈமானுடன் (இணை வைத்தல் எனும்) அநீதத்தைக் கொண்டு கலந்து விட வில்லையோ அத்தகையோர் - அவர்களுக்கே அபயமுண்டு.  அவர்களே நேர் வழி பெற்றவர்கள். 6/62.
 ان الله حرم على النار من قال لاإله إلاالله يبتغي بذلك وجه الله
“எவர் அல்லாஹ்வின் திரு முகத்தை ஆசை வைத்து لاإله إلاالله என்று சொன்னாரோ, அவருக்கு நரகை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்” என்று நபியவர்கள் நவின்றார்கள். (புகாரீ, முஸ்லிம்)
எனவே இகபரத்தின் வெற்றி இதனுடனேயே தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. மேலும் திக்ருகளில் சிறந்ததும், அல்லாஹ்வை நெருங்குவதற்குரிய மகத்தான ஊடகமும் இதுவே. எனவே இந்த கலிமாவின் யதார்த்தத்தை புரிந்து அதன் நோக்கத்தின்படி செயலாற்றக் கூடியவர் களாகவும், அதனை உளத் தூய்மையுடன் மொழி கின்றவர்களாகவும் நம்மையும் நமது முஸ்லிம் சகோரர்களையும் ஆக்கியருளுமாறு அல்லாஹ் விடம் வேண்டுகிறோம். நிச்சயமாக அவன் செவிமடுப்பவனாகவும், பதில் தருபவனாகவும் இருக்கின்றான்.  
கலிமா ஷஹாதாவின் நிறைவு
முஹம்மத் ரஸூலுல்லாஹ் என்பதாகும்
வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ் வையன்றி வேறு யாரும் இல்லை” என்று குறிப்பிடும் போது, சிலவேளை அந்தக் கலிமா ஷஹாதாவின் இறதிப் பகுதியான முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதராவார் என்று சாட்சி கூறும் விடயம் குறிப்பிடப்படாமல் இருப்பினும் அதன் இறுதிப் பகுதியான முஹம்மத் ரஸூலுல்லாஹ் என்பதும் அதனுள் அடங்கும்  என முன்னர் குறிப்பிடப்பட்டது  எனவே   கலிமா ஷஹாதாவில் முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர்      இணைக்கப்பட்டுள்ளதில் அடங்கியிருக்கும் முக்கியமான சில நோக்கங்களும் கருத்துக்களும் என்னவென்பதை  அறிதல்வேண்டும்.  அவை வருமாறு.  
1-அன்னாரின் மீது அன்பை ஏற்படுத்தல்
இது ஈமானின் அடிப்படைகளில் மிகவும் மகத்தானது. எனவே ரஸூல் (ஸல்) அவர்களின் மீது அன்பு வைக்காத எவனும் விசுவாசியாக மாட்டான்.  நபியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள், “எவன் கையில் என் ஆத்மா இருக்கின்தோ, அவன் மீது ஆணையாக உங்களில் எவரும், அவனின் பிள்ளை, தந்தை. மற்றும் ஏனைய மனிதர்கள் யாவரையும்விட, நான் அவனுக்கு மிகவும் விருப்பமுடையவனாக ஆகாத வரை விசுவாசியாக மாட்டான் (புகாரீ, முஸ்லிம்)
2-நபியவர்களைப் பின்பற்றல்
ரஸுல் (ஸல்) அவர்களின் நாமம் ஷஹாதா கலிமாவில் இணைக்கப்பட்டுளதன் மற்றுமொரு நோக்கம் தான் அன்னாரின் மீது அன்பும், விசுவாசமும் உள்ளவன் அன்னாரைப் பின்பற்று வது கடமை என்தை உணர்த்துவது,  இதனை அல்லாஹ்வின் வாக்கு தெளிவு படுத்துகின்றது.  
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّـهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّـهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿٣١﴾ قُلْ أَطِيعُوا اللَّـهَ وَالرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّـهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ﴿٣٢/آل عمران﴾
“(நபியே!) நீர் கூறுவீராக “நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்களின் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், மிக்க கிருபையுடையவன்”.
“நீர் கூறுவீராக “அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். பின்னர் அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிக்க மாட்டான். (3/31,32)
எனவே ரஸூல் (ஸல்) அவர்ளுக்குக் கீழ்படியத் தேவையில்லை என்றோ, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற நபியவர்களின் வழிமுறைகள் தேவை இல்லை என்றோ எவரேனும் கருதுவராகில் அவர் காபிராகி விடுவார். இதனையே அல்லாஹ்வின் வாக்கு இவ்வாறு தெளிவு படுத்துகின்றது,
ومَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّـهِ ۚ(النساء/64)
“அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை.”(4/64)  
3-அவர் அறிவித்தவைகளை உண்மைப் படுத்தல்
கலிமாவுடன் நபியவர்களின் பெயர் இணைக் கப்பட்டுள்ள நோக்கங்களில் இதுவும் ஒன்று எனவே நபியவர்கள் கொண்டு வந்த செய்தி எதனையும் எவரேனும் மறுத்தால், அல்லது பொய் என்று கூறினால் அவர் காபிராகிவிடுவார்.அவரின் இந்த  மறுப்புக்கு, அவரின் மனோஇச்சை அல்லது ஷரீஆவின் ‘மன்ஸூக்’ மாற்றப்பட்ட ஒரு சட்டம், அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்ட தத்துவம் அல்லது அறிவு ஞானம் எதுவும் காரணமாக அமையலாம். அவ்வாறாயினும் அதுவும் அவனை காபிராக்கிவிடும். ஏனெனில் நபியவர்கள் கொண்டு வந்த அனைத்தும் உன்மையானவை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளை. இதனை அடுத்து வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.   
وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ ۙ أُولَـٰئِكَ هُمُ الْمُتَّقُونَ ﴿٣٣/الزمر﴾
“உண்மையை எடுத்து வந்தவரும், மற்றும் அதனை உண்மையென்று நம்பியவர்களுமாகிய இவர்கள் தாம் இறையச்சமுடையவர்கள்”(24/33)
فَآمِنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ وَالنُّورِ الَّذِي أَنزَلْنَا ۚ (التغابن/8)
“ஆகவே நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் இறக்கிவைத்த பிரகாசத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள்” (64/8)
“  وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ ﴿٣﴾ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ ﴿٤/النجم﴾
அவர் தன் இஷ்டப்படி எதனையும் கூறுவதில்லை. “இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப் பட்டதே யன்றி இல்லை” (53/3,4)
மேலும் ரஸூல் (ஸல்) அவர்களின் வாக்கும் இதனை தெளிவு படுத்துகின்றது.
 قال الرسول صلى الله عليه وسلم:(والذي نفسي بيده لا يسمع بي يهودي ولا نصراني ثم لا يؤمن بي إلا كان من أهل النار) (رواه مسلم(
“என்னைப் பற்றி கேள்வியுற்ற யூதனும். கிரிஸ்தவனும், அதன் பின் என் மீது விசுவாசம் கொள்ளாது போனால், அவன் நரக வாசிகளைச் சோரமல் இருப்பதில்லை.” (முஸ்லிம்)
இந்த எச்சரிக்கை யூத கிரிஸ்தவர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது, எனில் அவர்களல்லாதவர் களும் இதில் அடங்குவர் என்பது மிக மிகத் தெளிவு.
4-சகல விடயங்களிலும் அன்னாரை
 நீதிபதியாக்கிக் கொள்ளல்
கலிமாவுடன்  நபியவர்களின்  பெயர்  இணைக்கப் பட்டுள்ள   நோக்கங்களில்  இதுவும் ஒன்று. எனவே  அன்னாரின் தீர்ப்பை விட, ஏனையவர் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும் அவருடைய தீர்ப்பிற்கோ, சொல்லுக்கோ அபிப்பிராயத்திற்கோ முதலிடம் கொடுக்கக் கூடாது. அதனை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.  
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا﴿٦٥/النساء﴾
“உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள் (4/65)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّـهِ وَرَسُولِهِ ۖ (الحجرات/1)
“விசுவாசிகளே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னிலையில் நீங்கள் முந்திக் கொள்ளாதீர்கள். (49/1)
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّـهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ (الاحزاب/36)
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் முடிவெடுத்து விட்டால், அவ்விஷயத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை.” (33/36)
எனவே ஷரீஆவுக்கு எதிரான மனித சட்டங்களின் படியும், மற்றும் ஜாஹிலிய்ய அபிப்பிராயங்களின் படியும் எவர் தீர்ப்பு வழங்க முன் வருகின்றாரோ அவர் “நிச்சயமாக முஹம்மத் (ஸல் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்று சாட்சி கூறியதை முறித்து விட்டவராவார்.
5-அல்லாஹ் ஏற்படுத்திய முறையிலல்லாது வேறு
எந்த முறையிலும் அவனை வணங்கக் கூடாது
கலிமாவுடன்  நபியவர்களின்  பெயர்   இணைக்கப் பட்டுள்ள   நோக்கங்களில்  இதனை உறுதிப் படுத்துவதும் ஒன்று. எனவே அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்தித் தரும் என்ற நோக்கில் ஏற்படுத்தப் பட்ட பிழையான தடுக்கப்பட்ட சகல பித்அத்தான கருமங்களையும் விட்டு விட்டு, ரஸூல் (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்து அவர்களின் வழிமுறைகளுக்கும், வழிகாட்டலுக் கும் ஏற்ற முறையில் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளுவதன் மூலமே இது சாத்தியமாகும்.
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّـهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّـهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّـهَ كَثِيرًا ﴿٢١/الاحزاب﴾
“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு அல்லாஹ்வின் தூதரில்  நிச்சயமாக அழகிய முன் மாதிரி இருக்கிறது.” (33/21)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்,
وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا ﴿١١٥/النساء﴾
இன்னும் நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும் எவர் இத்தூதருக்கு மாறு செய்து விசுவாசிகளின் வழி அல்லாத்தை பின் பற்றுகின்றரோ அவரை நாம் அவர் திரும்பிய வழியிலேயே அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது. (4/115)
மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள்  இவ்வாறு கூறுகின்றார்கள்:
من عمل عملا ليس عليه امرنا فهو رد - وفي رواية من احدث في امرنا هذا ماليس منه فهو رد - وقال لقد تركتكم على مثل البيضاء ليلها كنهارها لايزيغ عنها إلاهالك (راه البخاري ومسلم وابن أبي عاصم)
“நமது கட்டளை இல்லாத ஒரு காரியத்தை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்,” என்றும்,  “நமது இந்த விவகாரத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் அதில் உண்டாக்கினால் அது நிராகரிக்கப்படும்” என்றும், “உங்களை நான் மிகவும் தெளிவான விடயத்தில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் அதன் பகலைப் போன்றது. எனவே நாசமடைந்தவனைத் தவிர வேறு எவரும் அதைவிட்டும் விலகி இருக்க மாட்டார்” என்றும் நபியவர்கள் கூறினார்கள், என்று  பல அறிவிப்புக்களில் பதிவாகியுள்ளது. (புகாரீ, முஸ்லிம், இப்னு அபீ ஆஸிம்)

 

 

 

 

 

الركن الثاني الصلاة :
இஸ்லாத்தின்
இரண்டாம் அடிப்படை  தொழுகை
தஹாரா- சுத்தம்
 ‘தஹாரா’ எனும் அறபுச் சொல்லின் பொருள் சுத்தம் என்பதாகும். குறிப்பாக அசுத்தம், மற்றும் அசூசிகளை விட்டும் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருத்தலை இது குறிக்கும்.  முஸ்லிம் என்பவன் சுத்தமாக இருக்க வேண்டு மென்பது, அல்லாஹ்வின் கட்டளை. எனவே அதனைப் பேணுவது அவன் மீது கடமை. இதனை அல்லாஹ்வின் வாக்கும் நபி மொழியும் தெளிவு படுத்துகின்றன.
  وثيابك فطهر (المدثر\4)
“(நபியே!) உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.” (74/4) மேலும்
وإن كنتم جنبا فاطهروا (المائدة\6)
 “(விசுவாசிகளே!) நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் உங்களைத் தூய்யையாக்கிக் கொள்ளுங்கள்” அல் குர்ஆன் சூரா மாஇதா 5;6 என்று அல்லாஹ் கூறுகிறான்.  
 الطهور شطر الإيمان “

சுத்தம் ஈமானின் பாதி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
சுத்தம் இரு வகைப்படும்
1-அகச் சுத்தம்:
    இது இணை, சந்தேகம், ஐயப்பாடு மற்றும் அவை சார்ந்த விபரீதங்கள், மற்றும் அதன் வடிவங்கள் ஆகிய அசுத்தங்களை விட்டும் உள்ளத்தைத்    தூய்மைப்படுத்துவதைக் குறிக்கும். மேலும் மனத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு அடிபணிதல், உண்மையான மனதுடன் அவனை முன்னோக்குதல், ரஸூல் (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல். பாவ காரியங்களையும், ஷரீஆவுக்கு முரணான விடயங்களையும் விட்டும் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல், மற்றும் உண்மையான முறையில் பாவ மன்னிப்புக் கோரல் எனும் காரியங்களை மேற் கொள்வதன் மூலம் இது உறுதி படுத்தப்படும்.
2புலனுடன் சம்பந்தப்பட்ட வெளிச்சுத்தம்:
இது வெளிப்படையான அசுத்தங்களையும், தொடக்குகளையும் நீக்கி சுத்தமாக இருப்பதைக் குறிக்கும்
a)    அசுத்தம் படிந்த உடல், உடை, ஸ்தானம் போன்றவற்றை சுத்தப்படுத்திக் கொள்ள, அதில் படிந்திருக்கும் அசுத்தத்தை அகற்றி விட்டு  தண்ணீர் கொண்டு அவ்விடங்களை கழுவிவிடல் வேண்டும்.
b)    தொடக்கை விட்டும் நீங்கி சுத்தமாக இருக்க வுழூஃ செய்தல், குளித்தல், தயம்மம் செய்தல் போன்ற காரியம் எதையேனும் மேற் கொள்ளல் வேண்டும்.
c)    

சுத்தம் செய்யும் முறை  
அசுத்தம் படிந்த இடத்தை இரண்டு முறைகளில் சுத்தம் செய்யலாம்:
    1-الماء المطلق என்ற பொதுவான தண்ணீரைக் கொண்டு அசுத்தம் படிந்த இடத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தல்.
‘மாஉன்’ முத்லக்’ என்பது இயற்கையான சகல தண்ணீர் வகைகளையும் உள்ளடக்கும். ஆனால் அதில் எந்தவொரு அசுத்தமான பொருளாயினும், சுத்தமான பொருளாயினும் கலந்து அதன் இயற்கை தன்மையை பங்கப்படுத்தி விடாதபடி  இருத்தல் அவசியம். அப்படியான சுத்தமான தண்ணீரே ‘மாஉன் முத்லக்’ எனப்படுகின்றது. உதாரணமாக மழை நீர், கிணற்று நீர், ஊற்று நீர், ஆற்று நீர், கரைந்த பனி நீர், கடலின் உவப்பு நீர் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
وأنزلنا من السماء ماءا طهورا (الفرقان/48)
“நாம்தான் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச் செய்கின்றோம்.”(25/48) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மேலும்,
  الماء طهور لا ينجسه شيئ ( رواه أحمد)
“தண்ணீர் தூய்மையானது. அதனை எதுவும் அசுத்தப்படுத்தாது” என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (அஹ்மத்)
2-சுத்தமான மண்:
சுத்தம் செய்து கொள்ள தண்ணீர் கிடைக்காத போது, சுத்தமான மண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பூமியின் மேற்பரப்பிலுள்ள மண், மணல், கல், மற்றும் புழுதி என்பன அடங்கும். தண்ணீர் கிடைக்காத போதும், அல்லது நோய் போன்ற இடையூரின் காரணமாகத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத போதும் சுத்தம் செய்து கொள்வதற்காக  மண்ணைப் பயன் படுத்தலாம், என்பதற்கு நபி மொழியும், அல்லாஹ்வின் வாக்கும் ஆதாரமாக விளங்குகின்றன.
"وجعلت لي الأرض طهورا ومسجدا "(رواه مسلم)  
“எனக்கு பூமி சுத்தமானதாகவும், சாஷ்டாங்கம் செய்யுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” (முஸ்லிம்)
"إن الصعيد الطيب طهور المسلم  وإن لم يجد الماء عشر سنيين فإذا وجد الماء فليمسه بشرته(رواه احمد)
“பத்து வருடங்கள் தண்ணீர் கிடைக்காமல் இருந்தாலும், சுத்தமான மண் நிச்சயமாக முஸ்லிமைத் தூய்மைப்படுத்தக் கூடியதாகும். எனினும் எப்பொழுது தண்ணீர் கிடைக்கப் பெறுகின்றதோ, அப்போது அவனின் மேனியை தண்ணீர் தொடக் கடவது” (அஹ்மத், திர்மிதீ) என்று நபியவர்கள் நவின்றார்கள்.
"فلم تجدوا ماءا فتيمموا صعيدا طيبا" (النساؤ/43)
“நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத சமயத்தில் சுத்தமான மண்ணை நாடுங்கள்” (4/43) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
தண்ணீரின் வகைகள்:
1-الماء المطلق: இது பற்றி முன்னர் குறிப்பிடப்பட்டது. இயல்பில் சுத்தமான இந்நீர் பிர பொருளை சுத்தம் செய்யும் தன்மையுடையது. மேலும் இதன் வகைகள் பற்றியும் நாம் ஏலவே அறிந்து கொண்டோம்.
2- ‘மாஉன் முஸ்தஃமல்’ உபயோகப் படுத்திய தண்ணீர் என்பது இதன் பொருள். வுழூ செய்கின்றவனின் அல்லது நீராடுகின்றவனின் உடலிலிருந்து பிரிந்து செல்லும் தண்ணீரை இது குறிக்கும். இந்நீரின் அடிப்படையைப் பொருத்த வரை மாஉன் முத்தலகைப் போன்று இதுவும் சுத்தமானதே. ரஸூல் (ஸல்) அவர்கள் தன் கரத்தில் படிந்திருந்த மேலதிகத் தண்ணீரைக் கொண்டு தங்களின் தலையை மஸ்ஹு செய்து இருக்கின்றார்கள், என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே   நபியவர்களின் இச்செயல் இந்நீர் சுத்தமானது என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.
3-சோப் போன்ற ஏதேனும் சுத்தமான பொருள் கலந்த நீர்.
இந்நீரின் பொதுத் தன்மை நீங்காமல் இருக்கும் வரையில், அது சுயத்தில் சுத்தமாக இருப்பதுடன் பிற பொருளையும் சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்ததாக இருக்கும். ஆனால் அதன் இயற்கைத் தன்மை நீங்கி பொதுவாக தண்ணீர் எனும் பெயரை அது இழந்து விடுமானால். அது இயல்பில் சுத்தமாக இருந்த போதிலும், அது பிற பொருளை சுத்தம் செய்யாது.
4-அசுத்தம் தீண்டிய நீர்: இது இரு வகைப்படும்.
I.    தண்ணீரில் படிந்த அசுத்தம் நீரின் சுவையில் அல்லது வாடையில் அதன் நிரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுமானால் அந்த நீர் அசுத்தமடைந்து விடும். எனவே அது கொண்டு சுத்தம் செய்யலாகாது என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
II.    அசுத்தமான பொருளின் மூலம் எந்தவொரு மாற்றத்திற்கும் உற்படாத தண்ணீர்,  
தண்ணீர் குறைந்த அளவையுடையதாயினும், அதிக அளவை யுடையதாயினும் அதில் படிந்த அசுத்தம், அதன் பொதுத் தன்மையில் மாற்றம் எதனையும் ஏற்படுத்தாத வரையில்  அந்த நீர் சுத்தமானதே, மேலும் அது பிற பொருளையும் சுத்தம் செய்ய தக்கதாகும். ஏனெனில் “எந்தப் பொருளும் தண்ணீரை அசுத்தமடையச் செய்யாது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். அதாவது அசுத்தமான ஒரு பொருள், தண்ணீரை தொட்ட ஒரே காரணத்துக்காக, தண்ணீர் அசுத்தமடைந்து விடாது, என்பதே இந்நபி மொழியின் கருத்தாகும்.      
அசுத்தத்தின் வகைகள்
نجاسة எனும் அறபுச் சொல்லின் பொருள் அசுத்தம் என்பதாகும். மனிதனின் முன் பின் பாதையினூடாக வெளியேறும் சிறு நீர், மதீ, வதீ, மலம், புசிக்க அனுமதிக்கப்படாத மிருகங்களின் கழிவுகள். மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தத் தக்க அதிகப்படியான இரத்தம், சீழ், வாந்தி என்பனவும், மற்றும் சகல வகையான பிணமும், அதன் பாகங்களும் அசுத்தமானவையாகும். ஆனால் அவற்றின் தோல் பதனிடப்பட்டால் அது சுத்தமாகி விடும். ஏனெனில்,
"أيما إهاب دبغ فقد طهر" (رواه مسلم)
“பதனிடப்பட்ட தோல் எதுவாயினும் அது சுத்தமானதே” என நபியவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
மலசலம் கழித்தலின் ஒழுங்கு
மலசல உபாதைகளை நிறைவேற்றுவதற்கும் சில ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. அது பற்றிய சுருக்கமான விளக்கத்தை கீழே காணலாம்..
1-    மனிதர்களின் கண்களுக்குத் தூரமாக மறைவான ஒரு வெற்றிடத்தைத் தெரிவு செய்து கொள்ளல் வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்க நாடினால், தங்களை யாரும் காண முடியாத இடத்திற்குச் செல்வார்கள். என பதிவாகியுள்ளது (அபூ தாவூத், திர்மிதீ)
2-    அல்லாஹ்வின் திரு நாமம் உள்ள எந்தவொரு பொருளையும் எடுத்துச் செல்லலாகாது. எனினும் அதனை விட்டுச் சென்றால் அது தொலைந்து போகும் என்ற அச்சம் இருந்தால், அல்லாஹ்வின் திருநாமம் உள்ள அப் பொருளை உடன் எடுத்துச் செல்வதில் தவறில்லை.
3-    மல சல உபாதையை நிறைவேற்றும் போது கதைத்தலாகாது.
4-    கிப்லாவுக்கு கௌரவமளிக்கும் பொருட்டு, மலசலம் கழிக்கும் போது கிப்லா திசையை முன்னோக்கவோ, பின்னோக்கவோ கூடாது. ஏனெனில் “மலசலம் கழிக்கும் போது நீங்கள் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம். அதனைப் பின்னோக்கவும் வேண்டாம்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (புகாரீ)
5-    மனிதர்களுக்கு நிழல் தரும் இடங்களிலும், அவர்களின் பாதைகளிலும், அவர்களுக்கு கனி தரும் மரங்களிருக்கும் இடங்களிலும், மற்றும் தண்ணீர் பெறும் இடங்களிலும் மலசலம் கழித்தலாகாது. இது சாபத்தைத் தேடித் தரும் காரியமாகும். எனவேதான் இதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு நபியவர்கள் கூறினார்கள். “சபிக்கும் படியான இரண்டு காரியங்களையும் விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறிய போது, சபிக்கும் படியான அவ்விரு கருமங்களும் யாவை? என தோழர்கள் வினவினர். அதற்கு நபியவர்கள், “மனிதர்களின் பாதையிலும், அவர்களுக்கு நிழல் தரும் இடங்களிலும் மலம் கழித்தலாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
6-    மலசல கூடத்தில் பிரவேசிக்கும் போது இடது காலையும், வெளியே வரும் போது வலது காலையும் முன் வைத்தல் வேண்டும். ஆனால் பள்ளிவாசலில் பிரவேசிக்கும் போது இதற்கு மாறாக நடந்து கொள்வதானது, தூய்மையான இடங்களை அசுத்தமான இடங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகும்
7-    மலசல கூடத்தில் பிரவேசிக்க முன்,
بسم الله اللهم إني أعوذبك من الخبث والخبائث (رواه البخاري ومسلم)   

“அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வே! ஆண், பெண் ஷைத்தான்களின் தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” என்ற துஆவை ஓதிக் கொள்ளல் வேண்டும். ஏனெனில்,

ستر ما بين الجن وعورات بني آدم اذا دخل أحدهم الخلاء أن يقول بسم الله (رواه أحمد)

“ஜின்களுக்கும் மனிதனின் மறைவிடங்களுக்கும் இடையே திரையாக அமைவது, அவர்கள் மலசல கூடத்தில் நுழையும் போது, பிஸ்மில்லாஹ் என்று சொல்வதாகும்” என நபியவர்கள் குறிப்பிட்டார்கள். (அஹ்மத்)
8-    ஔரத்தை மறைத்துக் கொள்ள வேண்டு மென்பது  ஷரீஆவின் உத்தரவு, என்றபடியால் நிலத்தின் பக்கம் நெருங்கு முன் ஆடையை உயர்த்தலாகாது.   
9-    மலசல உபாதையை நிறைவேற்றிய பின், அங்கிருந்து வெளியேறும் போது غفرانك “உனது மன்னிப்பை வேண்டுகிறேன்” என்று கூறல் வேண்டும்.(முஸ்லிம்)
மலசல சுத்தத்தின் போது கவணிக்க வேண்டிய ஒழுங்குகள்
1-    மலசல மார்க்கத்தை, எலும்பு, விட்டை போன்றவற்றால் சுத்தம் செய்யக் கூடாது. “நீங்கள் மலசலத்தை, விட்டையாலும், எழும்பாலும் சுத்தம் செய்யாதீர்கள் ஏனெனில் அது உங்களின் சகோதர ஜின்களின் ஆகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
2-    பயன் தரும் பொருட்களையும் மற்றும் உணவு போன்ற கண்ணியம் பொருந்திய பொருட்களையும் கொண்டு மலசல பாதையை சுத்தம் செய்யக் கூடாது.
3-    வலது கரத்தால் மலசலத்தை சுத்தம் செய்யலாகாது. மேலும் அவ்வமயம் மர்ம ஸ்தானத்தை வலது கையால் தொடவும் துடைக்கவும் கூடாது. ஏனெனில் ரஸூல்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்,
لايمس أحدكم ذكره بيمينه وهو يبول ولا يتمسح من الخلاء بيمينه (رواه البخاري ومسلم)
“சிறுநீர் கழிக்கும் போது எவரும் தன்னுடைய மர்ம ஸ்தானத்தை வலது கையால் தொட வேண்டாம். மேலும் மலசலம் கழித்த பின் அவ்விடத்தை வலது கையால் துடைக்கவும் வேண்டாம்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
4-    மலசல பாதையை கற்களைக் கொண்டு சுத்தம் செய்யும் போது  மூன்று கற்களைக் கொண்டு, ஒற்றைபடையில் நிறைவு செய்தல் வேண்டும். ஆனால் மூன்று கற்கள் கொண்டு ஸ்தானத்தை தூய்மைப் படுத்த இயலாது போனால் ஐந்து கற்களைக் கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். இவ்வாறு தேவைக்கேற்ப கற்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். “மலசலம் கழிக்கும் போது நாம் கிப்லாவை முன்னோக்குவதையும், வலது கரத்தால் சுத்தம் செய்வதையும், மூன்று கற்களைவிட குறைந்த கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதையும், மற்றும் விட்டையைக் கொண்டு  அல்லது எலும்பைக் கொண்டு சுத்தம் செய்வதையும் விட்டும் ரஸூல் (ஸல்) அவர்கள் எங்களைத் தடுத்தார்கள்” என்று ஸல்மான் (ரழி) அவர்கள்  அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்) இக்கூற்று இதற்கு ஆதாரமாக விளங்குகிறது.  
5-    தண்ணீரையும், கல்லையும் சேர்த்து சுத்தம் செய்யும் பட்சத்தில் முதலில் கல்லைக் கொண்டும், பின்னர் தண்ணீரைக் கொண்டும் சுத்தம் செய்தல் வேண்டும். இவையிரண்டில் ஏதாகிலும் ஒன்றைக் கொண்டு சுத்தம் செய்தாலும் அது போதுமானதே. எனினும் தண்ணீரே மிகவும் நன்றாக சுத்தம் செய்யத் தக்கது.
வுழூஃ
 தொழுகைக்கு வுழூ அவசியம் என்ற  சட்டம் அல்குர்ஆன், ஸுன்னா, மற்றும் இஜ்மா ஆகிய மூன்று அடிப்படைகளின் மூலமும் உறுதி செய்யப் பட்டுள்ளது. இனி அவற்றைக் கவணிப்போம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ( مائدة\6)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு தாயாரானால் உங்கள் முகங்களையும், உங்கள் கைகளை முழங்கைகள் வரையிலும் உங்கள் கால்களை இரண்டு கணுக்கால்கள் வரையிலும் கழுவிக் கொள்ளுங்கள்.  அன்றி உங்கள் தலையை மஸ்ஹு செய்தும் கொள்ளுங்கள் (5/6)
لآيقبل الله صلاة احدكم إذا أحدث حتى يتوضأ (رواه البخاري ومسلم)
“உங்களில் தொடக்கு ஏற்பட்டவர் வுழு செய்து கொள்ளும் வரையில் அவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
வுழூ கட்டாயம் என்ற சட்டத்தை, ரஸுல் (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்று வரையிலும் சகல முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே இவ்விடயம் மார்க்கத்தில் கட்டாயம் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகிவிட்டது.
வுழூவின் சிறப்பு
ஏராளமான ஹதீஸ்கள் மூலம் வுழூவின் சிறப்புப் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றில் சிலதைக் இங்கு குறிப்பிடுகின்றோம்.
قال رسول الله  صلى الله عليه وسلم  ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات.؟ قالوا بلى يارسول الله, قال إسباغ الوضوء على المكاره, وكثرة الخطا إلى المساجد, وانتظار الصلاة بعد الصلاة,فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط (رواه مسلم)
“அல்லாஹ் தவறுகளை அழித்து, அந்தஸ்தை உயர்த்தக்கூடிய காரியத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா என்று ரஸூல் (ஸல்) கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ! ஆம்  என்றனர் அதற்கு  . அன்னார் வெறுப்பான சமயத்திலும் வுழூவை பரிபூரணமாக செய்துக் கொள்ளல். பள்ளிவாயலுக்கு அதிகமாகச் செல்லுதல், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்தல். இதுதான் அல்லாஹ்வின் பாதையில் அறப் போர், இதுதான் அல்லாஹ்வின் பாதையில் அறப் போர், இதுதான் அல்லாஹ்வின் பாதையில் அறப் போர்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء، فإذا غسل يديه خرج من يديه كل خطيئة كان بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء، فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقياً من الذنوب. رواه مسلم .   
“முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் வுழூ செய்யும் சமயம், அவன் தன்னுடைய முகத்தைக் கழுவியதும், தண்ணீருடன் அல்லது இறுதியான தண்ணீர் சொட்டுடன் அவன் தனது இரண்டு கண்களாலும் பார்த்த பாவ காரியம் அவனுடைய முகத்திலிருந்து வெளியேறிவிடும், மேலும் அவன் தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவியதும், தண்ணீருடன் அல்லது இறுதிச் சொட்டு தண்ணீருடன்,  அவன் தன்னுடைய இரு கரங்களாலும் தொட்ட பாவ காரியம் அவனுடைய இரு கரங்களிலிருந்தும் வெளியாகிவிடும், மேலும் தன்னுடைய இரண்டு கால்களையும் அவன் கழுவியதும் தண்ணீருடன் அல்லது இறுதித் தண்ணீர் சொட்டுடன், அவன் தனது பாவங்களிலிருந்து நீங்கி தூய்மையடையும் வரையில், அவன் தன் இரு கால்களாலும் நடந்து சென்ற பாவகாரியம் அவனுடைய இரண்டு காலையும் விட்டும் வெளியேறிவிடும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

வுழூவின் பர்ழுகள்
I.    நிய்யத்- மனதால் எண்ணுதல்: இதன் கருத்தாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, அவனின் திருப்தியை எதிர் பார்த்தவனாக வுழூவின் கருமத்தைச் செய்கிறேன் என்று மனதில் நினைத்தலாகும். இதற்கு
 إنما الأعمال بالنيات
“செயல்கள் யாவும் எண்ணத்தை பொருத்ததே” என்ற நபி மொழி ஆதாரமாக விளங்குகிறது.(புகாரி, முஸ்லிம்

II.    முகத்தை ஒரு தடவை கழுவுதல். முகத்தின் எல்லை மேல் நெற்றியிலிருந்து கீழ் நாடி வரையிலும், ஒரு காதின் மொட்டிலிருந்து மறு காதின் மொட்டு வரையிலாகும். ஆதாரம்,
فاغسلوا وجوهكم
“உங்கள் முகத்தைக் கழுவுங்கள்” (5/6)

III.    இரு கைகளையும் முழங்கை வரையில் கழுவுதல். ஆதாரம்
وأيديكم إلى المرافق
“உங்கள் கரங்களை முழங்கை வரையில் கழுவுங்கள்”(5/6)
IV.    தலையை மஸ்ஹு செய்தல். இதன் எல்லை நெற்றியின் கடைசியிலிருந்து பிடரி வரையிலாகும். ஆதாரம்
وامسحوا برءوسكم
உங்கள் தலையை மஸ்ஹு செய்யுங்கள் (5/6)

V.    இரு கால்களையும் கணுக்கால் வரையில் கழுவுதல். ஆதாரம்,
وأرجلكم إلى الكعبين
“உங்களின் கால்களை கணுக்கால் வரையில் கழுவுங்கள்.(5/6)

VI.    வரிசை கிரமமாகச் செய்தல்.
வுழுஃ பற்றிய திரு வசனத்தில், வரிசைக் கிரமமாகக் குறிப்பிட்டுள்ளபடியால், வுழூவை வரிசை கிரமமாகச் செய்தல் வேணடும். அதாவது முதலில் முகத்தையும் பின்னர் இரண்டு கைகளையும் கழுவுதல். அதன் பின்  தண்ணீரைத் தொட்டு தலையைத் தடவுதல். இறுதியாகக் கால்களைக் கழுவுதல்.
VII.    மேற் குறிப்பிட்ட காரியங்களை இடையறாது தெடர்ச்சியாகச் செய்தல். ஏனெனில் வழிபாட்டை தொடங்கிய பின் அதனை  இடையில் முறித்தல், துண்டித்தல் என்பது தடுக்கப்பட்ட செயலாகும்
.ولاتبطلوا أعمالكم
 “உங்களின் செயல்களை நீங்கள் வீணாக்கி விடாதீர்கள்.” என்று அல்லாஹ் கூறுகின்றான். (47/33) எனினும் சிறு இடைவெளி ஏற்படுவதால் பாதகமில்லை. அது மன்னிக்கத் தக்கதாகும்.
   வுழூவின் ஸுன்னத்துக்கள்
1.    வுழூவை ஆரம்பிக்கும் போது ‘பிஸ்மில்லாஹ், என்று கூறுதல். ஏனெனில்
لاوضوء لمن لم يذكر إسم الله عليه
2.    “வுழூவின் போது பிஸ்மி சொல்லாதவனுக்கு வுழூஃ இல்லை” என்று நபியவர்கள் நவின்றார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
3.    பல் துளக்குதல். ஏனெனில்
 لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء
 “என் சமூகத்தவர் மீது நான் சிரமம் தருகின்றேன், என்றில்லாதிருந்தால் எல்லா வுழூவின் போதும் மிஸ்வாக் செய்து கொள்ள வேண்டும் என நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
4.    இரண்டு மணிக்கட்டுகளையும் மூன்று தடவை கழுவுதல்.
உஸ்மான் இப்னு அப்பான் (ரழி) அவர்கள் வுழூ செய்யும் போது தனது மணிக்கட்டின் மீது மூன்று தடவைகள் தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். மேலும் வுழூ செய்து முடிந்ததும் “நபியவர்கள் இவ்வாறு வுழூ செய்ய நான் கண்டேன்” என்று, அவர்கள் கூறினார்கள், என பதிவாகியுள்ளது. (புகாரி, முஸ்லிம்)
5.    வாய் கொப்புளித்தல். ஏனெனில் إذا توضأت فمضمض “ நீங்கள் வுழூ  செய்யும் போது வாயைக் கொப்புளியுங்கள்
ரஸூல் (ஸல்)   அவர்கள் கூறினார்கள்.
6.    தண்ணீரை  நாசியில் உரிஞ்சி சீரி  விடல்.
وبالغ في الأستنشاق إلا أن تكون صائما
நீங்கள் நோன்பாளியாக இல்லையெனில் தாரளமாக தண்ணீரை உரிஞ்சுக் கொள்ளுங்கள்”. என்று ரஸூல் (ஸல்) அவர்கள்   நவின்றார்கள்  .(அஹ்மத், அபூ தாவூத்)
6-    தாடியை கோதுதல். நபி (ஸல்) அவர்கள் வுழூ செய்யும் போது தங்களின் தாடியை கோதி விடுவார்கள். எனவேதான் தாடியைக் கோதுதல் அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்களுக்கு ஒரு ஆச்சரியமான காரியமாகத் தென்பட்ட போதிலும், அவர்கள் தங்களின் தாடியைக் கோதி வந்தார்கள் என்பதை அவர்களின் கூற்று தெளிவு படுத்துகிறது. “தாடியைக் கோதி விடுவது எனக்குத் தடையாக அமையவில்லை. ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் தாடியைக் கோதுவதை நான் பார்த்திருக்கின்றேன்” என்று அம்மார் (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.(அஹ்மத், திர்மிதீ) .   .   
7-    கை, கால் விரல்களை கோதுதல். இதுவும் நபிவழியே. நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்
إذا توضأت فخلل أصابع يديك ورجليك (رواه الترمذي)

 நீங்கள் வுழூஃ செய்யும் போது உங்களின் இரு கை கால் விரல்களையும் கோதி விடுங்கள் (திர்மிதீ)
8-    காதின் உட்புரத்தையும் வெளிப் புரத்தையும் மஸ்ஹு செய்தல்ஏனெனில் இதுவும் நபி  வழியே.
9-    உருப்புக்களை மும்மூன்று தடவைகள் கழுவுதல். ஒரு முறை கழுவுவதே பர்ழாயினும் மூன்று தடவைகள் கழுவுவது ஸுன்னத்தான செயலாகும்.
10-    வுழூவின் செயலை வலது புரத்தால் ஆரம்பம் செய்தல். முதலில். வலது புரத்தைக் கழுவுதல் வேண்டும்
إذا لبستم وإذا توضأتم فابدءوا بأيامنكم (رواه أحمد وأبوداود)
நீங்கள் அணியும் போதும் வுழூ செய்யும் போதும் உங்களின் வலது பக்கத்தால் ஆரம்பம்   செய்யுங்கள் என்று நபியவர்கள் நவின்றார்கள். (அபு தாவூத், அஹ்மத்)
كان رسو ل الله  صلى الله عيله وسلم يحب التيامن في تنعله وترجله وطهوره وفي شأنه كله (بخاري ومسلم)
“ரஸூல் (ஸல்)  அவர்கள்,  தாங்கள் பாதணி அணியும் போதும், தலை முடி சீவும் போதும், மற்றும் வுழு செய்யும் போதும் இன்னும் தங்களின் ஏனைய காரியங்களைச் செய்யும் போதும் வலது பாகத்தை விரும்பக் கூடியவராக இருந்தார்கள்.” என்று ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிடு கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்.)

11-    முக அழகையும். கை கால்களின் அழகையும் அதிகரிக்கச் செய்தல்.
ஹதீஸில்  غُرة ,تَحجيل எனும் சொற்கள் இடம் பெற்றுள்ளன. குதிரைக்கு அதிக அழகைத் தரும் அதன் முத்திலுள்ள வெண்மை غرة என்றும், அதன் கால்களில் இருக்கும் வெண்ணிறம் تحجيل என்றும் குறிப்பிடப்படுகின்றன.  எனவே யார் நல்ல முறையில் பூரணமாக வுழூ செய்து கொள்கின்றாரோ, அவரின் முகமும், கை கால்களும் இவ்வாறு நாளை மறுமை நாளில்  பிரகாசிக்கும். எனவே முகத்தின் எல்லைக்கு அப்பாலும் மேலதிகப் பிரகாசத்தைத் தரும் வகையில்  غرةவை வெண்மையை முகத்தின் எல்லைக்கு அப்பாலும், கை கால்களின்  تحجيل வெண்மையை - முகத்தின் எல்லைக்கு அப்பாலும் சற்று நீட்டிக்கொள்ள விரும்புவோர், வுழூ செய்யும் போது முகத்தையும், கை கால்களையும்  அதன் எல்லையுடன் நிறுத்திக் கொள்ளாது அதற்கு அப்பாலும் சற்று அதிகமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். எனவே இதனைத் தூண்டும் வகையில் ரஸூல் (ஸல்) அவர்கள்,
إن أمتي يأتون يوم القيمة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل (متفق عليه)
“நாளை மறுமை நாளில் என்னுடைய சமூகத்தினர் வுழூவின் அடையளமாக, அவர்களின் முகமும் கை கால்களும்  வெண்மையாக இருக்க வருவார்கள். எனவே தனது வெண்மைய நீட்டிக் கொள்ள இயலுமானவர் அதனைச் செய்வாராக” என்று கூறினார்கள்’ (புகாரி, முஸ்லிம்)

12-    வுழூஃ செய்து முடிந்ததும் பின் வரும் துஆவை ஓதல்:
: أَشْهدُ أَنْ لا إِله إِلاَّ اللَّه وحْدَه لا شَريكَ لهُ، وأَشْهدُ أَنَّ مُحمَّدًا عبْدُهُ وَرسُولُه ، « اللَّهُمَّ اجْعلْني من التَّوَّابِينَ واجْعلْني مِنَ المُتَطَهِّرِينَ  إِلاَّ فُتِحَت لَهُ أَبْوابُ الجنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّها شاءَ ( رواه مسلم والترمذي).
 
இந்த துஆ, உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் பதிவியாகியுள்ளது.
عنْ عُمَر بْنِ الخَطَّابِ رضي اللَّه عَنْهُ عنِ النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : « ما مِنْكُمْ مِنْ أَحدٍ يتوضَّأُ فَيُبْلِغُ أَو فَيُسْبِغُ الوُضُوءَ ثُمَّ قَالَ : أَشْهدُ أَنْ لا إِله إِلاَّ اللَّه وحْدَه لا شَريكَ لهُ، وأَشْهدُ أَنَّ مُحمَّدًا عبْدُهُ وَرسُولُه ، إِلاَّ فُتِحَت لَهُ أَبْوابُ الجنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّها شاءَ » رواه مسلم
وزاد الترمذي : « اللَّهُمَّ اجْعلْني من التَّوَّابِينَ واجْعلْني مِنَ المُتَطَهِّرِينَ » .
உமர் (ரழி) அவர்கள் அறிப்பதாவது, உங்களில் பரிபூரணமாக வுழூ செய்து கொண்ட ஒருவர், அதன் பின்,
 : أَشْهدُ أَنْ لا إِله إِلاَّ اللَّه وحْدَه لا شَريكَ لهُ، وأَشْهدُ أَنَّ مُحمَّدًا عبْدُهُ وَرسُولُه
“வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி எவருமில்லை, அவன் ஒருவன், அவனுக்கு இணை ஒன்றுமில்லை, என்று கூறுவாரோ, அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாயல்களும் திறக்கப்படும். எனவே அவர் அதில், தான் விரும்பும் எந்த வாயலின் ஊடாகவும் பிரவேசிக்கலாம்” என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று, குறிப்பிட்டுள்ளார்கள். (முஸ்லிம்) மேலும் திர்மிதியின் அறிவிப்பில்,
اللَّهُمَّ اجْعلْني من التَّوَّابِينَ واجْعلْني مِنَ المُتَطَهِّرِين
“அல்லாஹ்வே! என்னை அதிகமதிகம் பாவ மண்ணிப்புக் கோருவோரினதும், பரிசுத்தமான வர்களினதும் கூட்டத்தில் ஆக்கியருள்வாயாக” எனும் சொல் மேலதிகமாகப பதிவாகியுள்ளது.
வுழூவின் மக்றூஹுகள்.
1.    வுழூவின் ஸுன்னத்தான காரியங்களை அதிகமாகச் செய்வது, அல்லது அதில் எதையேனும்  செய்யாமல் விட்டு விடுவது.
இவ்வாறு செய்வதன்  காரணமாக வுழூவில் குறைபாடுகள் ஏற்படவும், அதன் நிமித்தம் கூலி குறைந்து விடவும்  வாய்ப்புண்டு.
2.    அசுத்தமான இடத்தில் வுழூ செய்தல்.
ஏனெனில் அவ்விடத்தலுள்ள அசுத்தம் தம் மீது படரும் என்ற அச்சம் அங்கு காணப்படுகின்றது.
3.    தண்ணீரை விரயம் செய்தல். நபி (ஸல்) அவர்களோ ஒரு அள்ளுத் தண்ணீரைக் கொண்டு வுழூ செய்திருக்கின்றார்கள், என்று முஸ்லிமில் பதிவாகியுள்ளது. எனவே விரயம் என்பது பொதுவாக சகல விடயங்களிலிலும் தடை செய்யப்பட்டுள்ளது, என்பது கவணத்திற் கொள்ள வேண்டியதாகும்.
4.    மூன்று தடவைகளுக்கு அதிகமாக கழுவுதல். ஏனெனில், ‘ரஸூல் (ஸல்) அவர்கள் வுழூவின் போது மும்மூன்று தடவைகள் கழுவினார்கள். பின்னர் “இதுதான் வுழூ, யார் இதை விடவும் அதிகமாக்கிக் கொண்டாரோ, அவர் தீமை செய்து விட்டார். எல்லை மீறி விட்டார், அநீதி இழைத்து விடார், என்று கூறினார்கள்” என ஒரு நபித் தோழர் அறிவித்துள்ளார். (அஹமத், நஸாஈ)
5.    முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவுதல். இது வுழூவின் ஒழுக்கத்திற்கு எதிரான செயல். மேலும் தனது கண்ணியத்திற்குரிய ஒருவரின் இழப்பின் மீது கவலை கொண்ட ஒருவன் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்ளும் செயலுக்கும் இது ஒப்பாகும்.
வுழூஃ செய்யும் முறை:
பின் வருமாறு வுழூ செய்யவும்:
அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கூறி, வுழூவை மனதால் நினைத்து தன்னுடைய இரண்டு மணிக்கட்டின் மீது தண்ணீரை ஊற்றி மணிக்கட்டுகளைக் மூன்று தடவைகள் கழுவிக் கொள்ளவும். பின்னர் இயலுமானால் ஒரு மணிக்கட்டுத் தண்ணீரை, வாயைக் கொப்பளிக்கவும், நாசிக்குச் செலுத்தவும் பயன் படுத்தவும். இப்படிச் செய்வதே சிறந்தது. ஆனால் அப்படிச் செய்வது சிரமமெனில், இரண்டு கருமங்களையும் மூன்று தடவைகள் வெவ்வேறாகச் செய்யவும். பின்னர் முகத்தைக் கழுவவும். முகத்தின் எல்லை நீளத்தில் தலை முடி முளைக்கும் ஸ்தானத்திலிருந்து தாடையின் முடிவு வரையிலாகும். மேலும் அகலத்தில் ஒரு காது மொட்டு முதல் அடுத்த காதின் மொட்டு வரையிலாகும். பின்னர் கட்டாயம் கழுவ வேண்டிய இடங்களை உள்ளடக்கக் கூடியவாறு, வலது கை விரல்களைக் குடைந்து அதன் முழங்கை வரையில் மூன்று தடவைகள் கழுவவும். பின்னர் அவ்வாறே இடது கையையும் கழுவவும். பின்னர் தண்ணீரைத் தொட்டு தலையின் முன் பாகத்திலிருந்து தொடங்கி பிடரி வரையில் கையைத் கொண்டு செல்லவும், பின்னர் மீண்டும் பிடரியிலிருந்து தலையின் முன் பக்கத்திற்கு அதனைக் கொண்டு வரவும். இவ்வாறு ஒரு தடவை தலையைத் தண்ணீரால் தடவி மஸ்ஹு செய்து கொள்ளவும். பின்னர் கையிலிருக்கும் ஈரத்தைக் கொண்டு இரண்டு காதின் உள்ளேயும், அதன் புரத்தையும் மஸ்ஹு செய்யவும். கையில் ஈரம் இல்லையெனில் புதிய தண்ணீர் கொண்டு காதை மஸ்ஹு செய்து கொள்ளவும். பின்னர் வலது காலை கரண்டையுடன் மூன்று தடவைகள் கழுவவும். பின்னர் இவ்வாறு இடது காலையும் கழுவவும். பின்னர்,
: أَشْهدُ أَنْ لا إِله إِلاَّ اللَّه وحْدَه لا شَريكَ لهُ، وأَشْهدُ أَنَّ مُحمَّدًا عبْدُهُ وَرسُولُه ، « اللَّهُمَّ اجْعلْني من التَّوَّابِينَ واجْعلْني مِنَ المُتَطَهِّرِينَ :.
என்ற துஆவை ஓதவும்.
வுழூவை முறிக்கும் கருமங்கள்:
1- முன் பின் வழியாக சிறு நீர், மலம், அல்லது மதீ, வதீ மற்றும் ஓசையில்லாமலோ, ஓசையுடனோ பின் வழியால் வெளியாகும் காற்று போன்ற எதுவும் அற்பமாகவோ அதிகமாகவோ வெளியேறிய போதிலும் வுழூ முறிந்து விடும். மேலும் இறுதியாகக் குறிப்பிட்ட காற்று ஹதீஸில் ‘ஹதஸ்’ தொடக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் வருமாறு,
لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ  رواه البخاري)
“உங்களில் எவருக்கேனும் தொடக்கு ஏற்பட்டால் அவர் வுழூ செய்து கொள்ளும் வரையில் அவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
2- ஆழ்ந்த நித்திரை. சமனம் கட்டி நிலத்துடன் சேர்ந்து இருக்காத நிலையில், சுய உணர்வில்லாத ஆழ்ந்த நித்திரை வுழூவை முறிக்கும். ஏனெனில்,
العين وٍكاء السه فمن نام فليتوضأ (رواه ابو داود وابن ماجة)
“பின் துவாரத்தைக் கட்டிவைக்கும் நாடா கண்ணாகும். எனவே எவர் தூங்கினாரோ, அவர் வுழூ செய்து கொள்ளட்டும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூ தாவுத், இப்னு மாஜா) அதாவது பாத்திரத்திலிருக்கும் பொருள் கொட்டி விடாமல் அதன் மூடி அல்லது நாடா பாதுகாப்பாக இருப்பது போன்று, தனக்குக் காற்றுப் போகமால் கண்கள் கவணித்துக் கொள்ளும், என்பதாகும்
3- திரையின்றி உள்ளங் கையாலும் விரலாலும் மர்ம ஸ்தானத்தைத் தொடுதல்.
من مس ذكره فليتوضأ (رواه أبوداود والترمذي)
“எவர் தனது மர்மஸ்தானத்தைத் தொடுகின்றாரோ அவர் வழூ செய்து கொள்ளவும்” (அபூ தாவுத், திர்மிதீ) என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
4- புத்தி நீங்குதல், மறைதல், மற்றும் உணர்வு இல்லாமல் போகுதல். இவை பைத்தியம், மயக்கம், போதை, அல்லது மருந்து எதனையுமோ, போதைப் பொருள் எதனையுமோ உட்கொள்வதன் காரணமாக ஏற்படுமாயினும் சரியே, மேலும் இவற்றைச் சொற்ப அளவு உட்கொண்ட போதிலும், சமனம் கட்டி தரையிலிருந்து அதனை உட்கொண்ட போதிலும் வுழூ முறிந்து விடும். ஏனெனில் தூக்கத்தைப் பார்க்கிலும் இதன் காரணமாக அறிவு மங்கிவிடும் என்பது மிகவும் துலாம்பரம். ஆகையால் இவ்வாறான சமயத்தில். வுழூவை முறிக்கும் காற்றுப் புறப்படுதல் போன்ற காரியம் எதுவும் நிகழ்ந்தனவா என்பதை ஒரு முஸ்லிம் அறிய மாட்டான். ஆகையால் புத்தி நீங்கி இருந்தவன் வுழூ செய்து கொள்ள வேண்டு மென்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.   
5- இச்சையுடன் பெண்ணைத் தொடுதல். இச்யெல், இச்சையை நிறைவு செய்து கொண்டது போன்றதே.  எனவே  பெண்ணை இச்சையுடன் தொட்டாலும் வுழூ முறிந்து விடும். மர்ம ஸ்தானத்தைத் தொட்டவன் வுழூ  செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டளை இதற்கு ஆதாரமாக விளங்குகின்றது. ஏனெனில் மர்ம ஸ்தானத்தைத் தொடுவதன் காரணமாக இச்சை தூண்டப்படுகின்ற படியால், அது வுழூ முறிவுக்குக் காரணமாக அமைகின்றது. அவ்வாறே பெண்ணை இச்சையுடன் தொடுவதாலும் இச்சை தூண்டப்படுகின்றது. ஆகையால் இதுவும் வுழூ முறிவுக்கும் காரணமாக அமைகின்றது. மேலும் “ஒரு ஆண் தன் மனைவியை முத்தமிடுவதும், அவளின் மேனியைத் தொடுவதுமானது, குர்ஆன் கூறும் பெண்ணைத் தீண்டும் காரியத்தைச் சார்ந்ததே. ஆகையால் தன் மனைவியை முத்தமிட்டவன் அல்லது அவளின் மேனியைத் தொட்டவன் மீது வுழூ கடமையாகும்” என்பது அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களின் கூற்று. (முஅத்தா) இக்கூற்று, இந்தக் கருத்தை  மேலும் ஆதரிக்கின்றது.
6-‘ரித்தத்’- இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் விலகுதல். இதிலிருந்து நம்மனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக. இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேற்றக் கூடிய காரியம் எதுவாயினும், அதனை ஒரு முஸ்லிம் வார்தையாலோ, கோட்பாட்டினால. சந்தேகத்தின் அடிப்படையிலோ கொண்டு வந்த போதிலும் அது, அவனை இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியே தள்ளி விடும். எனவே இக்கருமத்தை செய்தவனின் வுழூ முறிந்து விடும். மேலும் அவன் செய்து வந்த சகல வழிபாடுகளும் அழிந்து விடும். எனவே அவன் இஸ்லாதின் பால் திரும்பியதும் வுழூ செய்து கொள்ளாமல் தொழக் கூடாது.
وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ (المائدة/5)
“எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரிக்கின்றானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்து விடும்” (5/5)
لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ   (الزمر/65)
“நீங்கள் இணை வைத்தால், உங்களுடைய செயல்கள் அனைத்தும் நிச்சயமாக அழிந்து விடும்” (39/65) என்று அல்லாஹ் குறிப்பிடு கின்றான்.  
7-ஒட்டக மாமிசம் சாப்பிடுதல்.
நபித் தோழர் ஒருவர் “ஆட்டிரைச்சி சாப்பிட்டமைக்காக நாம் வுழூ எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என ரஸூல் (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபியவர்கள் “நீங்கள் விரும்பினால் வுழூ எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் வுழூ எடுத்துக் கொள்ளாமல் இருங்கள்” என்று கூறினார்கள். அப்பொழுது அந்தத் தோழர் ஒட்டகை மாமிசத்துக்காக நாம் வுழூ எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்றார். அதற்கு நபியவர்கள், “ஆம் ஒட்கை மாமிசத்துக்காக நீங்கள் வுழூ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஒட்டகை மாமிசத்தின் விடயத்தில் பெரும் பாண்மையினரின் கருத்து இதற்கு மாறாக இருந்த போதிலும்,  இந்தக் கொள்கையே மிகவும் உறுதியானது என்று நவவீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஸஹாபாக்களினதும். தாபிஈன்களினதும், மற்றும் அவர்களை அடுத்து வந்த சமூகத்தினரதும் அதிகப்படியான அறிஞர் பெருமக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக நேர்வழி பெற்ற நாற் பெரும் கலீபாக்கள் என்போர் ஒட்டக மாமிசத்தைப் புசித்தமைக்காக வுழூ செய்து கொள்ள வேண்டுமென்ற கருத்தை உடையவர் களாக இருக்கவில்லை, என்பதும் தற்போது குறிப்பிட்ட ஹதீஸ் கூறும் சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்பது அவர்களின் நிலைப்பாடாகும் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.  
கட்டாயம் வுழூஃ தேவைப்படும் கருமங்கள்:
மூன்று கருமங்களைச் செய்ய வுழூ அவசியம் தேவை. அவையாவன:
1-பொதுவாக எந்தத் தொழுகையாக இருந்த போதிலும், அது ஸுன்னத்தான, பர்ழான. மற்றும் ஜனாஸாத் தொழுகையாக இருந்த போதிலும் அதற்காக முதலில் வுழூ எடுத்துக் கொள்வது அவசியம். இதனை அல்லாஹ்வின் வாக்கு உறுதி செய்கிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ (5/6)
 “நம்பிக்கையாளர்களே!  நீங்கள் தொழுகைக்கு தயாரானால் உங்கள் முகங்களையும், உங்கள் கைகளை முழங்கைகள் வரையிலும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் தலையை மஸ்ஹு செய்து, உங்கள் இரு பாதங்களையும் கணுக்கால் வரையிலும் கழுவிக் கொள்ளுங்கள்.(5/6)
என்று அல்லாஹ் கட்டளை யிடுகின்றான். மேலும்
لا يَقْبَلُ اللَّهُ صَلاةٌ بِغَيْرِ طُهُورٍ , وَلا صَدَقَةٍ مِنْ غُلُولٍ   (رواه مسلم)

“வுழூ இல்லாத தொழுகையையும், மோசமான தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்” (முஸ்லிம்) என்ற ரஸூல் (ஸல்) அவர்களின் கூற்றும் இங்கு கவணிக்கத் தக்கதாகும்.
2-அல்லாஹ்வின் இல்லத்தை தவாபு செய்யும் போது, வுழூ அவசியம். இதனை அடுத்து வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.
الطواف بالبيت صلاة إلا أن الله تعالى أباح فيه الكلام (رواه الترمذي)
“அல்லாஹ்வின் இல்லத்தை தவாபு செய்வது ஒரு தொழுகையாகும். எனினும் இதன் போது கதைப்பதை அல்லாஹ் அனுமதித்துள்ளான்.” (திர்மிதீ) தொழுகைக்கு வுழூ எப்படி அவசியமோ, அவ்வாறு தவாபு. செய்வதற்கும் வுழூ அவசியம் என்பது இதன் கருத்தாகும்.
3-முஸ்ஹபை தொடுதல்:
    அல்குர்ஆன் முஸ்ஹபை வுழூவின்றி தொடக் கூடாது, என்பது நான்கு இமாம்களினதும், எனைய அறிஞர்களினதும் ஏகோபித்த முடிவாகும். எனவே முஸ்ஹபை தொடுகின்றவர் வுழுவுடன் இருப்பது கடமை.  இதற்கு,
لايمس القرآن إلا طاهر (رواه الدار قطني)   
“சுத்தமாக இருப்பவரல்லாது வேறு எவரும் அல்குர்ஆனைத் தொட வேண்டாம்” (தார் குத்னீ) என்ற நபி மொழி ஆதாரமாக விளங்குகின்றது. ஆனால் தொடக்குள்ள ஒருவர் வுழூவின்றி, முஸ்ஹபைத் தொடாமல் அல்குர்ஆனை ஓதலாம் என்ற விடயத்தில் அனைவரும் ஒருமித்தக் கருத்தையுடையவர்களாகவே உள்ளனர். அவ்வாறே தொடக்குள்ளவர், உறையில் இருக்கும் முஸ்ஹபை தொடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.    
மன்னிப்பளிக்கப்பட்டவனின் வுழூ:
தன்னுடைய கால நேரத்தில் பெரும் பாலான சந்தர்ப்பத்தில் வுழூவை முறிக்கும் காரணியான  தொடக்கிற்கு இலக்காகும் நபரே இங்கு மன்னிப்பளிக்கப்பட்டவர் எனக் குறிப்பிடப்படு கின்றார். உதாரனமாக அடிக்கடி சிறுநீர் உபாதைக்கு இலக்காகிய அல்லது அடிக்கடி காற்று வெளியேறுகின்றவனை, அல்லது மாதவிடாய் காலத்திலும், பிரசவ காலத்திலும் அல்லாமல் மேலதிகமாக இரத்தப் போக்கு உபாதைக்கு ஆளாகும் பெண்ணை உதாரணமாகக் குறிப்பிடலாம். எனவே இவர்களும் இவர்களைப் போன்றவர்களும் தம்மால் இயன்றவரை சிகிச்சை செய்து கொள்வதுடன், ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூ செய்து கொள்வது சிறந்ததாகும். மேலும் அவர்களிடம் இந்த குறைபாடு இருக்கும் வரையில் இவ்வாறு அவர்கள் நிறைவேற்றி வரும் அவர்களின் தொழுகையும் சரியான தென்றே கருதப்படும். இதற்கு “நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூ செய்து கொள்ளுங்கள்” (அபூ தாவுத்) என்று கடுமையான இரத்தப் போக்கிற்கு இலக்கான பாதிமா பின்த் ஜஹ்ஷ் என்பாருக்கு ரஸூல் (ஸல்) அவர்கள்  பிறப்பித்த கட்டளை ஆதாரமாக விளங்குகின்றது. எனவே இதுவல்லாத ஏனைய குறைபாடுள்ளவர்களின் நிலையைய இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
நோயாளி சுத்தம் செய்து கொள்ளும் முறை:
1- சிறு தொடக்குள்ள நோயாளி முடியுமாயின் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்து அதன் மூலம் வுழூ செய்து கொள்வது கடமை.  
2-தண்ணீரைப் பயன்படுத்த இயலாமல், அல்லது தண்ணீரைப் பயன்படுத்துவதன் காரணமாக நோய் அதிகரிக்கும், அல்லது குணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற அச்சம் இருந்தால் தயம்மம் செய்து கொள்ள வேண்டும்.
3-தயம்மம் செய்யும் முறை:
    இரண்டு கைகளையும் சுத்தமான நிலத்தில் ஒரு தடவை அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு கைகளாலும் முகத்தையும், இரண்டு மணிக்கட்டுகளையும் தடவிக் கொள்ள வேண்டும். தன்னால் சுயமாக தயம்மம் செய்து கொள்ள இயலாதவராக இருந்தால், வுழூ செய்து கொள்ள இயலாதவருக்கு இன்னொருவர் வுழூ செய்து விடுவதுப்போல, அவருக்கு இன்னொருவர் தயம்மம் செய்து விடலாம். அதற்கவர் சுத்தமான நிலத்தின் மீது தனது இரு கரங்ளையும் அடித்து, அதனைக் கொண்டு நோயாளியின் முகத்தையும், இரண்டு மணிக்கட்டுகளையும் தடவி விடவேண்டும்.
4-சுவரிலோ அல்லது வேறு ஏதாகிலுமோ புழுதி படிந்திருந்தால் அதன் மீது தயம்மம் செய்து கொள்வது ஆகும். ஆனால்  மண்ணல்லாது, எண்ணெய் சாந்து போன்றவற்றால் முலாம் அடிக்கப்பட்ட சுவராக இருந்தால், அதன் மீது புழுதி எதுவும் இல்லையெனில், அந்தச் சுவரில் தயம்மம் செய்யலாகாது.
5- புழுதி படிந்த சுவரோ, அல்லது புழுதி படிந்த வேறு ஏதாகிலுமோ கிடைக்காத போது புழுதியை ஒரு கைக் குட்டையின் மீது அல்லது ஒரு பாத்திரத்தின் மீது வைத்து அதன் மீது தயம்மம் செய்து கொள்வதில் தவறில்லை.
6-ஒரு தொழுகைக்காக தயம்மம் செய்து கொண்ட பின்னர், அடுத்த தொழுகையின் நேரம் வரும் வரையில் தயம்மம் முறிந்து விடாமல் தூய நிலை தொடர்ந்து இருக்குமானால் மீண்டும் தயம்மம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அதே தயம்மத்தைக் கொண்டு அடுத்த தொழுகையையும் தொழுது கொள்ளலாம். ஏனெனில் முந்திய தயம்மமை முறிக்கும் காரியம் ஏதும் ஏற்படாது, தூய்மையும் தொடர்ந்து இருக்கின்றபடியால், இன்னொரு தடவை தயம்மம் செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை. எனினும் ஒவ்வொரு தொழுகைக்காகவும் தனித் தனியாக தயம்மம் செய்து கொள்வது விரும்பத் தக்கதாகும்.    
7-நோயாளியின் மேனியில் அசுத்தம் படிந்திருந்தால் அதனை சுத்தம் செய்து கொள்வது நோயாளியின் கடமையாகும். ஆனால் அதனை அவரால் சுத்தம் செய்து கொள்ள இயலவில்லை எனில், அவர் அதே நிலையில் தொழுது கொள்ள வேண்டும். அப்பொழுது அவரின் அந்தத் தொழுகை சரியானதே. ஆகையால் அத்தொழுகையை அவர் மீண்டும் தொழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
8-தன்னுடைய ஆடையில் அசுத்தம் படிந்திருந்தால் அதனை சுத்தப்படுத்திக் கொள்வது, அல்லது அதனைக் கலைந்து இன்னொரு சுத்தமான ஆடையை அணிந்து கொள்வது நோயாளியின் மீது கடமையாகும். அதனை அவரால் செய்ய இயலாது போனால், அவர் தான் இருக்கும் அதே நிலையில் தொழுதுக் கொள்ள வேண்டும். அப்போது அவரின் அத்தொழுகை சரியானதே. ஆகையால் அத்தொழுகையை அவர் திரும்பத் தொழ வேண்டியதில்லை.
9-சுத்தமான ஒரு பொருளின் மீது தொழுவது நோயாளியின் மீது கடமையாகும். எனவே விரிப்பின் மீது அசுத்தம் இருந்தால், அதனை அவர் கழுவி விடவேண்டும். அல்லது சுத்தமான வேரொரு விரிப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது அதன் மீது சுத்தமான பொருள் எதையேனும் விரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இதனை அவரால் செய்ய இயலாது போனால் அவர் தான் இருக்கும் நிலையிலேயே தொழுது கொள்ள வேண்டும். அப்பொழுது அவரின் தொழுகை சரியானதே. ஆகையால் அத் தொழுகையை அவர் திரும்பவும் தொழ வேண்டும் என்ற கட்டாயமில்லை.

குளித்தல்:
    பெரும் தொடக்கின் காரணமாக நிறைவேற்றத் தடையாக இருந்த வணக்க வழிபாடுகளை ஆகுமாக்கிக் கொள்ளும் பொருட்டு அந்தத் தொடக்கை நீக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் உடம்பின் எல்லா இடங்களிலும் தண்ணீரைக் கொட்டிக் கொள்வதே குளித்தலின் நோக்கமாகும்.
குளிப்பின் விதி:
பெரும் தொடக்கை நீக்குவதற்காக குளித்தல் கடமை என்பது  அல்குர்ஆனின் விதியாகும்.
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا ۚ (المائدة\6)
“நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.(5/6)
وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا ۚ(النساء\43)
“மேலும் நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையில் தொழுகைக்குச் செல்லாதீர்கள் (4/43) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். மேலும்,
إذا تجاوز الختان الختان فقد وجب الغسل (رواه مسلم)
“ஒரு கதனாவின் ஸ்தானம் இன்னொரு கதனாவின் ஸ்தானத்தைத் தாண்டிவிட்டால், குளித்தல் கடமையாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) இது ஆண் பெண் கூடலின் பின் குளித்தல் கடமை என்பதை எடுத்துக் காட்டுகிறது.  
குளித்தலை கடமையாக்கும் விடயங்கள்:
மூன்று காரியங்களுக்காக குளித்தல் கடமை:
•    முழுக்கு உண்டாகுதல். ஆணிடமிருந்தோ, பெண்ண்ணிட மிருந்தோ விழித்திருக்கும் போது அல்லது நித்திரையில் இருக்கும் போது  இந்திரியம் வெளியேறுதலும், மற்றும் இந்திரியம் வெளியேறாது போனாலும் ஆண் பெண்ணின் புணர்ச்சியும் இதில் அடங்கும்.
“நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். (5/6) என்ற இறை வசனமும்,
إذا التقى الختانان فقد وجب الغسل
“இரண்டு கதனாவின் தானங்களும் சந்தித்துக் கொண்டால் குளித்தல் கடமையாகும்” என்ற நபி மொழியும் இதன் ஆதரங்களாகும்.
•    மாதவிடாய் நின்று விடல்: மாத விடாயின் காலம் முடிவுற்றதும் குளித்தல் கடமையாகும். இதற்கு அல்லாஹ்வின் வாக்கும், ரஸுல் (ஸல்) அவர்களின் கட்டளையும் ஆதாரங்களாகும்.
فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّـهُ ۚ.(البقرة222)
“மாதவிடாய் காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் சுத்தமாகி விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்” (2/222) என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும்
فإذا أقبلت الحيضة فدعي الصلاة وإذا أدبرت فاغتسلي وصلي (رواه البخاري)
“உங்களை மாதவிடாய் எதிர் கொண்டால் நீங்கள் தொழுகையை விட்டு விடுங்கள். அது திரும்பி விட்டதும் நீங்கள் குளித்து விட்டுத் தொழுங்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள், பாதிமா பின்த் அபூ ஹுபைஷ் (ரழி) அவர்களிடம் கூறினார்கள். (புகாரி). மேலும்  ‘நிபாஸ்’ எனும் பிரசவ தீட்டும் மாதவிடாய் போன்றதே, என்பது ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவாகும்.  
•    மரணம்:
யாருக்கேனும் மரணம் சம்பவித்தால், அவரைக் குளிப்பட்டுவது கடமை. ஏனெனில் அன்னல் நபி (ஸல்) அவர்களின் மகளார் ஸைனப் (ரழி) அவர்கள் வபாத்தான போது அவர்களைக் குளிப்பாட்டும்படி ரஸுல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள், என புகாரி, முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
•    காபிர் இஸ்லாம் மாரக்கத்தை ஏற்றுக் கொள்ளல்:
காபிர் எவரேனும் இஸ்லாம் மார்க்கத்தில் பிரவேசிப்பாராகில், அவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவுடன் குளிப்பது அவரின் மீது கடமை. ஏனெனில் கைஸ் இப்னு ஆஸிம் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட போது அவரைக் குளிக்கும்படி ரஸூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஸமாமா அல் ஹனபீ என்பாரின் விடயமும் அப்படியானதே. (அபூதாவுத், அஹ்மத்)
குளித்தல் விரும்பத் தகுந்த விடயங்கள்:
  பின் வரும் கருமங்களுக்காக குளித்தல் விரும்பத் தக்கதாகும்:
1.    ஜும்ஆவுக்காக குளிப்பது: இது விரும்பத் தக்கதாகும். ஏனெனில்,
غسل الجمعة واجب على كل محتلم (متفق عليه)
“ஜும்ஆவுக்காகக் குளித்தல், வயது வந்த யாவரின் மீதும் கடமை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி. முஸ்லிம்)

2.    மையித்தைக் குளிப்பாட்டியவர் குளித்தல்:
من غسل ميتا فليغتسل ومن حمله فليتوضأ (رواه أبو داود)
“மையித்தைக் குளிப்பாட்டியவர் குளித்துக் கொள்ளட்டும், அதனை சுமந்து சென்றவர் வுழூஃ செய்து கொள்ளட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். ஆகையால் மையித்தைக் குளிப்பாட்டியவர் குளித்துக் கொள்வது விரும்பத் தகுந்த ஒரு செயலாகும்.

3.    இரு பெரு நாள் தினத்தில் குளித்தல்:
இரண்டு பெருநாள் தினத்திலும் குளிப்பதை அறிஞர் பெருமக்கள் விரும்பத் தகுந்த காரியமாகக் கண்டுள்ளனர். எனினும் இவ்விடயமாக ஸஹீஹான ஹதீஸ் எதுவும் வரவில்லை. மேலும் பெருநாள் தினங்களில் குளித்தல் சம்மந்தமாக வந்துள்ள ஹதீஸ்கள் யாவும் ழஈபானவை, என ‘அல் பத்ருல் முனீர்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குளிப்பின் கடமைகள்:
1)    நிய்யத்- எண்ணுதல்: பெரும் தொடக்கு ஏற்பட்டவர் அதிலிலிருந்து நீங்கி தூய்மையடையும் பொருட்டு குளிக்கும் வேளையில், முதலில் அதனை விட்டும் நீங்கிக் கொள்கின்றேன் என்று மனதால் நினைத்தல் வேண்டும். ஏனெனில் “செயல் யாவும் எண்ணத்தைப் பொருத்தேயாகும். ஒவ்வொரு வருக்கும் அவரவர் நினைத்ததே அநுகூலமாகும்” என ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்ள். (புகாரி, முஸ்லிம்)
 
2)    உடலில் தேய்க்க இயலுமான இடங்களைத் தேய்த்து உடலெங்கிலும் தண்ணீரை ஊற்றி விடவேண்டும். தேயக்க இயலாத இடங்களில் தண்ணீர் படும்படியாகத் தண்ணீரைக் வழிந்து ஓடவிடல் வேண்டும்.
3)    முடியைக் கோதி விடல்: பொதுவாக தலையிலும் உடலின் ஏனைய பாகத்திலுமிருக்கும் முடிகளை கோதி விடுதல் வேண்டும்.
குளிப்பின் ஸுன்னத்துகள்:
1)    பிஸ்மி சொல்லுதல்: பொதுவாக எல்லா நல்ல காரியத்தையும் ஆரம்பம் செய்யும் போதும் பிஸ்மி சொல்ல வேண்டும் என்பது மார்க்கமாகக் கருதப்படுகிறது. எனவே குளிக்கும் போதும் முதலில் பிஸ்மி சொல்லுதல் ஸுன்னத்தாகும்.

2)    முதலில் இரண்டு மணிக்கட்டுகளையும் மூன்று தடவைகள் கழுவ வேண்டும்.

3)    மர்மஸ்தானத்தை முதலில் கழுவி அசுத்தங்களை அகற்றிக் கொள்ளல் வேண்டும்.

4)    குளியலை தொடங்கு முன்னர், தொழுகைக்கு வுழூ செய்வது போன்று பூரணமாக வுழூ செய்து கொள்ள வேண்டும். எனினும் குளிக்கின்றவர் குளித்து முடியும் வரையில் தன்னுடைய இரண்டு கால்களையும் கழுவுவதைப் பிற்படுத்திக் கொள்ளலாம். இதற்கு “ரஸுல் (ஸல்) அவர்கள் முழுக்கை விட்டும் நீங்குவதற்காக குளிக்கும் போது முதலில் தனது இரண்டு கைகளையும் கழுவிக் கொள்வார்கள். பின்னர் தனது வலது கையால் இடது கையில் தண்ணீரை ஊற்றி தன்னுடைய மறைவிடத்தைக் கழுவிக் கொள்வாரகள். பின்னர் தொழுகைக்கு வுழூ செய்வது போன்று வுழூ செய்து கொள்வார்கள்” என்று ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ள செய்தி அடிப்படையாக விளங்குகிறது. (புகாரி, முஸ்லிம்)
குளியலின் போது விரும்பத் தகாதவை:
1)    தண்ணீரை விரயம் செய்தல்: ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு சேர் தண்ணீரில் குளித்துள்ளார்கள். ஒரு சேர் என்பது நான்கு அள்ளு கொள்ளளவு கொண்ட ஒரு அளவையாகும். எனவே குளிக்கும் போது தண்ணீரை விரயம் செய்யலாகாது.

2)    அசுத்தம் படரலாம் எனும் அச்சமுள்ள அசுத்தமான இடத்தில் குளித்தல்.
3)    சுவர் போன்றவற்றால் திரையிடப்படாத, மறைக்கப் படாத இடத்தில் குளித்தல். ஏனெனில்,
إن الله عز وجل حيي ستير يحب الحياء والستر فإذا اغتسل أحدكم فليستتر (ابوداود)
“அல்லாஹ் நாணமுடையவன், மறைந்திருப்பவன். அவன் நாணத்தையும், மறைவாக இருப்பதையும் விரும்புகிறான். ஆகையால் உங்களில் எவரும் குளிப்பாராகில் அவர் மறைந்து கொள்ளவும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்)

4)    ஓட்டமில்லாத தேங்கிய நீரில் குளித்தல். ஏனெனில்,
لايغتسل أحدكم في الماء الدائم وهو جنب (مسلم)
“உங்களில் முழுக்குள்ளவர் தேங்கிய நீரில் குளிக்க வேண்டாம்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.(முஸ்லிம்)
குளிக்கும் முறை:
குளிப்பை ஆரம்பிக்கும் போது முழுக்கை நீக்கிக் கொள்கின்றேன், என்ற எண்ணத்துடன் முதலில் பிஸ்மியை சொல்லிக் கொள்ள வேண்டும் பின்னர் முன் பின் வழிகளையும் அவற்றைச் சூழவுள்ள இடங்களையும்  கழுவி சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் பரிபூரணமாக வுழு செய்து கொள்ள வேண்டும். ஆனால் குளித்து முடிந்த பின்னர் இறுதியாக இரண்டு கால்களைக் கழுவிக் கொள்ளலாம். பின்னர் தலையில் தண்ணீரை  ஊற்றிக் கொள்ள வேண்டும் அப்போது  முடியின் வேரை கோதி விட வேண்டும். பின்னர் காதுகளையும் சேர்த்து தலையை மூன்று தடவை கழுவிக்கொள்ள வேண்டும். பின் தனது வலது பாதத்தின் மேலிருந்து அடி வரையில் தண்ணீரை ஊற்றி கழுவி விட வேண்டும், அவ்வாறு இடது பாதத்தையும் செய்து கொள்ள வேண்டும். மேலும் தொப்புழ்கமுக்கட்டு போன்ற மறைவான  இடங்களை கவணித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில்
كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يغتسل من الجنابة يبدأ فيغسل يديه ثم يفرغ بيمينه على شماله فيغسل فرجه ثم يتوضأ وضوءه للصلاة ثم يشرب شعره الماء ثم يحثي على رأسه ثلاث حثيات ثم يفيض الماء على سائر جسده ثم يغسل رجليه (رواه البخاري)
“ரஸூல் (ஸல்) அவர்கள் முழுக்கை விட்டும் நீங்க, குளித்துக் கொள்ள நினைத்தால் முதலில் இரண்டு கைகளையும் கழுவிக் கொள்வார்கள். பின்னர் வலது கையால் இடது கையில் தண்ணீரை ஊற்றி தன்னுடைய மறைவிடத்தைக் கழுவிக் கொள்வார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூ செய்து கொள்வது போன்று வுழூ செய்து கொள்வார்கள். பின்னர் தலையில் மூன்று அள்ளு தண்ணீர் ஊற்றுவார்கள். அதனைத் தொடர்ந்து உடலின் ஏனைய பகுதிகளிலும் தண்ணீரை ஓடவிடுவார்கள். இறுதியாக இரண்டு கால்களையும் கழுவிக் கொள்வார்கள்” என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)
முழுக்குடையவர் மீது ஹராமானவை:
1-தொழுகை: பொதுவாக பர்ழான, ஸுன்னத்தான எந்த்தத் தொழுகையாக இருந்தாலும் முழுக்குடைய நிலையில் தொழுவது கூடாது. ஏனெனில், அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا (النساء/43)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். மேலும் நீங்கள் முழுக்காயிருந்தால், குளிக்கும் வரையிலும்,” (4/43)
2-அல்குர்ஆனைத் தொடுதல்: ஏனெனில் பரிசுத்தமாக இருப்பவரல்லாது வேறு எவரும் அல்குரஆனைத் தொட வேண்டாம்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள  தார் குத்னி
3- சிறப்பு மிகு கஃபாவை தவாபு செய்தல் . முழுக்குடையவர் கஃபாவை தவாப் செய்யக் கூடாது, என்பது முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது.
4-அல்குர்ஆனை பாராயணம் செய்தல்: இதுவும் முழுக்குடையவர் மீது தடை செய்யப் பட்டதாகும். ஏனெனில்,
كان رسول الله صلى الله عليه وسلم يقرءنا القرآن على كل حال مالم يكن جنبا (رواه احمد)
“ரஸூல் (ஸல்) அவர்கள் முழுக்குடையவராக இருக்கும் சந்தர்ப்பத்தைத் தவிர ஏனைய எல்லா நிலையிலும் எங்களிடம் அல்குர்ஆனை ஓதுவார்கள்” என்று அலி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
5- பள்ளிவாயலில் தங்குதல்: எந்தவொரு முழுக்குடையவரும் பள்ளிவாசலில் தங்கலாகாது. எனினும் ஏதேனும் தேவையின் நிமித்தம் பள்ளிவாயலுக்குள் நடந்தோ அல்லது  கடந்து செல்லவோ வேண்டிய நிர்பந்தமுள்ள முழுக்குடையவருக்கு மாத்திரம் பள்ளிக்குள் செல்ல விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து வரும் திரு வசனம் ஆதாரமாக விளங்குகின்றது.
وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا (النساء/43)
“மேலும் நீங்கள் முழுக்காயிருந்தால், குளிக்கும் வரையிலும், ஆயினும் பிரயாணத்தில் இருந்தாலே அன்றி” (4/43)

தொழுகை
தொழுகையின் சட்டம்:
தொழுகை விசுவாசமுள்ள எல்லா ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் விதிக்கப்பட்ட ஒரு கடமையாகும். அதனை நிலை நிறுத்தும்படி, தனது பல வேத வாக்குகளின் மூலம்  அல்லாஹ் எம்மை  பணித்துள்ளான்.  
 فَأَقِيمُوا الصَّلَاةَ ۚ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا ﴿١٠٣/النساء﴾
“நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள், நிச்சயமாக தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும் (4/103)
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ (البقرة/238)
“அனைத்துத் தொழுகையையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்.” (2/238) என்று அல்லாஹ் கட்டளை யிடுகின்றான். மேலும் தொழுகையை இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைகளில் இரண்டாவது அடிப்படையாக ரஸூல் (ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள். இதனை அடுத்து வரும் நபி மொழி தெளிவு படுத்துகின்றது.
بني الإسلام على خمس : شهادة أن لا إله إلا الله ، وأن محمدا رسول الله ، وإقام الصلاة ، وإيتاء الزكاة ، وحج البيت ، وصوم رمضان ) رواه البخاريومسلم  )
 “வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு எவருமில்லை, என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார், என்றும் சாட்சி பகர்தல், தொழுகையை நிலை நிறுத்தல், ஸகாத் வரியை வழங்குதல், அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ்ஜு செய்தல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், எனும் ஐந்து விடயங்களின் மீது இஸ்லாம் மார்க்கம் நிறுவப்பட்டுள்ளது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி/முஸ்லிம்) எனவே தொழுகையை விட்டவன் காபிராவான், மேலும் ஷரீஆவின் விதியின் படி அவன் கொலை செய்யப்பட வேண்டியவன். எனவே தொழுகை விடயத்தில் கவணயீனமாக இருப்பவன் கெட்டவன், தீயவன் என்பதில் ஐயமில்லை.
தொழுகையின் சிறப்பு:
தொழுகையின் சிறப்பு மகத்தானது. அதன் கூலியும் பாரியது. மேலும் அதன் சிறப்புப் பற்றிய ஹதீஸ்கள் ஏராளம். எனினும் பின் வரும் சில ஹதீஸ்களைக் குறிப்பிடுவது போதுமானதாகும்.
1- செயல்களில் சிறந்தது எது? என ரஸூல் (ஸல்) அவர்களிடம்  வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் " الصلاة لوقتها” “உரிய நேரத்தில் தொழுதல்” என்று கூறினார்கள்
2-
عن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله صلى الله عليه وسلم - قال: ((أرأيتم لو أن نهرًا بباب أحدكم يغتسل منه كل يوم خمس مرات، هل يبقى من درنه شيء؟))، قالوا: لا يبقى من درنه شيء، قال: ((فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا))؛ متفق عليه
ரஸூல் (ஸல்) அவர்கள், தோழர்களிடம் “உங்களின் ஒருவரின் வாசலில் ஒரு நதி ஓடிக் கொண்டிருக் கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதில் அவர் தினமும் ஐந்து தடவைகள் குளித்து வருவாராகில் அவருடைய அழுக்கு எதுவும் எஞ்சி இருக்குமா?” என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், “அவருயை அழுக்கு எதுவும் எஞ்சியிருக்காது” என்று கூறினர். அப்பொழுது நபியவர்கள் “அதுதான் தொழுகைக்கு உதாரணம். அதன் மூலம் தவறுகளை அல்லாஹ் அழித்து விடுவான்.” என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

 

3-
ما من امرئ مسلم تحضره صلاة مكتوبة فيحسن وضوءها وخشوعها وركوعها إلا كانت كفارة لما
قبلها من الذنوب ما لم يؤت كبيرة وذلك الدهر كله) رواه مسلم (
“தொழுகையின் நேரம் வந்ததும் நல்ல முறையில் வுழூ செய்து, நல்ல முறையில் உள்ளச்சத்துடன் அதன் ருகூஃவையும் செய்து வந்த எந்த வொரு முஸ்லிம் நபராலும் பெரும் பாவம் எதுவும் நிகழாத வரையில், அவரின் முன்னைய பாவங்களுக்கு அது பிராயச் சித்தமாக அமையாமல் இருக்காது. இது அவரின் வாழ் நாள் பூராவுக்கும் உரியது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்)
4- மேலும்
رأس الأمر الإسلام، وعموده الصلاة، وذروة سنامه الجهاد في سبيل الله (رواه أحمد)  
“எல்லா விடயங்களுக்கும் தலை இஸ்லாம். அதன் தூண் தொழுகை. அதன் உச்சம் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

தொழுகையை விடுவது பற்றிய எச்சரிக்கை:
 فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا﴿٥٩﴾
“இவர்களுடைய பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றர்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள். தொழுகையை வீணாக்கினார்கள். மனோ இச்சையை பின் பற்றினார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே சந்திப்பார்கள்” (19/59)
 فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾
“தொழுகையாளிகளுக்கும் கேடுதான். அவர்களோ தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கின்றனர்.” (107/4,5) என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும்
 بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة؛ رواه مسلم.
“மனிதனுக்கும் இணை மற்றும் இறை நிராகரிப்புக்கும் இடையே இருப்பது தொழுகையாகும்” (முஸ்லிம்)
العهد الذي بيننا وبينهم الصلاة، فمن تركها فقد كفر (رواه احمد)
 “நமக்கும் அவர்களுக்குமிடையே உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். எனவே அதனை விட்டவன் காபிராவான்” (அஹ்மத்)
من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة ويأتي يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف  (رواه أحمد)
“யார் அதனை (தொழுகையை) பேணி வந்தாரோ அது நாளை மறுமை நாளில் அவருக்குப் பிரகாச மாகவும், அத்தாட்சியாகவும், ஈடேற்றமாகவும் இருக்கும். எவர் அதனைப் பேணி வரவில்லையோ அவருக்கு அது பிரகாசமாகவும் இருக்காது, அத்தாட்சியாகவும் இருக்காது, ஈடேற்றமாகவும் இருக்காது. மேலும் அவர் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், ஹமான், உபையி இப்னு கலப் என்போருடன் வருவார்”  என்று தொழாதவர்களை ரஸூல் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அஹ்மத்)
தொழுகையின் நிபந்தனைகள்:  
தொழுகையை ஆரம்பம் செய்யு முன் கவணத்தில் கொள்ள வேண்டிய சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவற்றை சரியாகப் பேணாது போனால் தொழுகை நிறைவேறாது. மேலும் எட்டாவது நிபந்தனையான ‘நிய்யத்’ இன்னொரு வகையில் தொழுகையின் பர்ழுகளில் ஒன்றாகவும் கருதப்படுகின்ற படியால் அதனை தக்பீர் தஹ்ரீமாவின் போது கொண்டு வருதல் சிறந்தது. அந்த நிபந்தனைகள் வருமாறு:
1-முஸ்லிமாக இருத்தல். ஏனெனில் காபிரின் தொழுகையும் அவனின் ஏனைய நல்லமல்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதனை அல்லாஹ்வின் வாக்கு தெளிவு படுத்துகின்றது.
مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَن يَعْمُرُوا مَسَاجِدَ اللَّـهِ شَاهِدِينَ عَلَىٰ أَنفُسِهِم بِالْكُفْرِ ۚ أُولَـٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ وَفِي النَّارِ هُمْ خَالِدُونَ ﴿١٧/ التوبة﴾.
“இணைவைத்து வணங்கும் இவர்கள் தாங்கள் நிராகரிப்பவர்கள்தாம் என்று கூறிக்கொண்டிருக்கும் வரையில் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து விட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கிவிடுவார்கள்” (9/17)  
2-சுய புத்தி உள்ளவராக இருத்தல். எனவே பைத்தியம் பிடித்தவன் மீது தொழுகை கடமையாகாது. ரஸூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ، وعن الصبي حتى يبلغ، وعن المجنون حتى يعقل" (ابو داود)
“மூவரின் விடயத்தில் எழுதகோல் உயர்த்தப்பட்டு விட்டது, நித்திரை கொண்டவன் விழிக்கும் வரையிலும், சிறுவன் பருவ வயதை அடையும் வரையிலும், பைத்தியம் பிடித்தவன் அவனின் பைத்தியம் தெளியும் வரையிலும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவுத்)
3- பருவ வயதை எட்டியிருத்தல். சிறுவன் பருவ வயதை அடையும் வரையில் அவன் மீது தொழுகை கடமையாகாது, என்பது முன் குறிப்பிட்ட ஹதீஸ் மூலம் தெளிவாயிற்று. எனினும் அவன் தொழுவது  விரும்பத்தக்க செயல் என்றபடியால், அவனின் ஏழு வயது முதல் அவனைத் தொழுது வருமாறு ஏவி வரவேண்டும். ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டார்கள்:
مروا الصبي بالصلاة إذا بلغ سبع سنين وإذا بلغ عشر سنين فاضربوه عليها (رواه أبو داود)
“பிள்ளை ஏழு வயதை அடைந்தால் தொழும்படியாக அவனை ஏவுங்கள். அவன் பத்து வயதை அடைந்தால் அதற்காக அவனைஅடியுங்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவுத்)
4- சிறு தொடக்கு, பெருந் தொடக்குகளை  விட்டும் நீங்கி சுத்தமாக இருத்தல்.
வுழூ இல்லாத நிலை சிறு தொடக்கு என்றும், முழுக்குண்டாகி குளிக்காத நிலை பெருந் தொடக்கு என்றும் கூறப்படும். எனவே வுழூ இல்லாதவர் வுழூ செய்து கொள்ள வேண்டுமென்பதும், பெருந் தொடக்குண்டானவர் குளித்துக் கொள்ள வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் கட்டளை.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا ۚ (المائدة\6)
 “நம்பிக்கையாளர்களே!  நீங்கள் தொழுகைக்குச் தயாரானால் உங்கள் முகங்களையும், உங்கள் கைகளை முழங்கைகள் வரையிலும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் தலையை மஸ்ஹு செய்து, உங்கள் இரு பாதங்களையும் கணுக்கால் வரையிலும் கழுவிக் கொள்ளுங்கள்“ நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். (5/6) என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும்,
لايقبل الله صلاة بغير طهور (رواه مسلم)
“வுழூ இல்லாத தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (முஸ்லிம்)
5- உடையும், ஆடையும், ஸ்தானமும் சுத்தமாக இருத்தல்.
‘முஸ்தஹாழா’ விடம் - மாதவிடாய் காலத்திலும் அதிக காலம் இரத்தப்போக்குக்கு இலக்கான பெண்ணிடம் ரஸுல் (ஸல்) அவர்கள் “உங்களின் இரத்தத்தை கழுவிக் கொண்டு தொழுங்கள்” என்று கூறினார்கள். இது உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கும், “உங்களின் ஆடையைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்” என்ற இறை கட்டளை உடை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கும் உரிய ஆதாரங்களாகும். மேலும் தொழும் ஸ்தானம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாக விளங்குகிறது.
“நாட்டுப் புரத்து அரபி யொருவர் பள்ளியில் எழுந்து நின்று சிறுநீர் கழிக்கலானார். அப்பொழுது ஜனங்கள் அவரிடம் சென்று அவரை அடிக்க முற்பட்டனர். அப்பொழுது ரஸூல் (ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள், அவரின் சிறுநீரின் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள், நீங்கள் இலகுவாக நடந்து கொள்ளும்படி அனுப்பப் பட்டுள்ளீர்களேயன்றி கஷ்டம் கொடுக்கின்ற வர்களாக அல்ல” என்று கூறினார்கள், என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி) இந்த சம்பவம் தொழும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
6-தொழுகையின் நேரம் பிரவேசித்தல்.
தொழுகைக்குரிய நேரம் வருவதற்கு முன் தொழுகை கடமையாகாது. மேலும் நேரம் வருமுன்னர் தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. ஏனெனில்
 إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا ﴿١٠٣/النساء﴾
நிச்சயமாக தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும் (4/103) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்பது இதன் கருத்தாகும். மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுகையின் நேரத்தை ரஸூல் (ஸல்) அவர்களுக்குக் கற்றுத் தரும் போது, அதன் ஆரம்ப நேரத்திலும், இறுதி நேரத்திலும் தொழுகையை முன்னின்று தொழுது காட்டினார்கள். பின்னர் இவை இரண்டிற்கும் இடைப்பட்டதே அதன் நேரம், என்று கூறினார்கள்.(திர்மிதீ)  

7-அவ்ரத்தை - உடலில் கட்டாயம் மறைக்க வேண்டிய இடங்களை மறைத்தல்.
 يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ  (الأعراف/31)
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்” (7/31) என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே ஆடைகளில் அழகானது அவ்ரத்தை மறைக்கும் ஆடையே என்பது தெளிவு. மேலும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு, அவ்ரத்தை மறைப்பது ஒரு நிபந்னை, என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். எனவே தன் அவ்ரத்தை மறைத்துக் கொள்ள இயலுமானவன், நிர்வாணமாகத் தொழுதால் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
8-தொழுகையை எண்ணி நிய்யத் வைத்தல். ஏனெனில் “செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொருத்தே, ஒவ்வொருவருக்கும் அவரவர் நினைத்ததே அநுகூலமாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
9-கிப்லாவை முன்னோக்குதல். இதனை அடுத்து வரும் திருவசனம் வழியுருத்துகின்றது.
 قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ ۗ (البقرة/144)
“உம்முடைய முகம் அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால் நீங்கள் விரும்பும் கிப்லாவின் பக்கமே நாம் உங்களை நிச்சயமாக திருப்புகின்றோம். எனவே நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புவீராக. நீங்கள் எங்கிருந்த போதிலும் அதன் பக்கமே உங்களுடைய முகத்தை திருப்புவீராக” (2/144) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

 

 

 

 

 

 


இஸ்லாத்தின் அடிப்படைகள்
பாகம் மூன்று
தொழுகையின் பர்ளுகள்:
I.    தொழுகைக்கென சில கடமைகளும் அடிப்படைகளும் இருக்கின்றன. அதில் ஏதேனும் தவறும் பட்சத்தில் தொழுகை பாழாகி விடும். அதன் விளக்கம் வருமாறு:
II.    நிய்யத் - எண்ணம்:
III.    இதன் கருத்தாவது குறித்த தொழுகையை நிறைவேற்றுகிறேன் என்று மனதால் உறுதி பூணுதலாகும்.  ஏனெனில் “செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொருத்தேயாம்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள்  நவின்றுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்). எனவே தக்பீர் தஹ்ரீமாவுடன் இரு கைகளையும் உயர்த்தும் போதே இந்த நிய்யத்தை மனதில் கொண்டு வர வேண்டும். எனினும் நிய்யத்தானது அதைவிட சற்று முந்திவிடுவதனால் பாதகமில்லை.
IV.    தக்பீரத்துல் இஹ்ராம்:
தொழுகையை ஆரம்பம் செய்யும் போது  முதலாவது உச்சரிக்கும் தக்பீரே “தக்பீர் தஹ்ரீமா” எனப்படும். இந்தத் தக்பீரைச் சொல்லும் போது “அல்லாஹு அக்பர்” எனும் வாசகத்தை மொழிதல் அவசியம். ஏனெனில்,
مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم) ابو داود-والترمذي)
V.    “தொழுகையின் திறவுகோல் வுழூஃ. அதன் துவக்கம் தக்பீர் தஹ்ரீமா, அதன் முடிவு ஸலாம் கூறுதல்” என ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.(அபூ தாவூத், நஸாஈ)
VI.    நின்று தொழுதல். எனவே  நின்று தொழ திரணியுள்ளவர், பர்ளு தொழுகையை நின்று தெழுதல் வேண்டும். ஏனெனில்,

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّـهِ قَانِتِينَ﴿٢٣٨البقرة﴾   

அனைத்து தொழுகையையும் நடுத் தொழுகை யையும் பேணித்தொழுது கொள்ளுங்கள். அல்லாவுக்கு மிக்க அச்சத்தோடு பயந்து நில்லுங்கள். (2/238) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மேலும்,
قال رسول الله صلى الله عليه وسلم : " صل قائما ، فإن لم تستطع فقاعدا ، فإن لم تستطع فعلى جنب " . رواه البخاري .
நீங்கள் நின்று தொழுங்கள். உங்களிடம் திராணி இல்லையெனில் உட்கார்ந்து தொழுங்கள். அதற்கும் திராணி இல்லையெனில் ஒரு பக்கமாகச் சாய்ந்து தொழுங்கள்ன்று இம்ரான் இப்னு ஹஸீன் அவர்களிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)
VII.    பர்ழான, ஸுன்னத்தான அனைத்து தொழுகை யிலும் அதன்  எல்லா ரக்ஆத்துக்களிலும் ஸூரதுல் பாதிஹாவை ஓதுவது அவசியம்.

"لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب" (البخاري)
ஸூரதுல்  பாதிஹா ஓதாதவனின் தொழுகை, தொழுகை அல்ல  என்று  ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
றுகூஃ செய்தல் இதுவும் கடமைகளில் ஒன்று என்பது பின்வரும் வசனத்தில் அடங்கியுள்ளது
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ۩ ﴿٧٧﴾
விசுவாசம் கொணடோரே! நீங்கள் (குனிந்து) ருகுஉ செய்யுங்கள். இன்னும் (சிரம் பணிந்து) ஸுஜூதும் செய்யுங்கள். இன்னும் உங்கள் இரட்சகனை  வணங்குங்கள். மேலும் நீங்கள் வெற்றியடைவதற்காக நன்மையை செய்யுங்கள். (22/77)
VIII.    றுகூவிலிருந்து எழுந்திருத்தல்:
தொழுகையில் பிழை செய்த ஒருவரிடம், ரஸூல் (ஸல்) அவர்கள்  “நீங்கள் றுகூவிலிருந்து எழுந்து, சீராக நிலையில் நில்லுங்கள்” என்று  கூறினார்கள். நபியவர்களின் இந்த வாக்கு றுகூவிலிருந்து எழுந்திருப்பது கடமை என்பதற்கு தக்க ஆதாரமாகும். (புகாரி, முஸ்லிம்)
IX.    றுகூவிலிருந்து எழுந்து நேராக நிற்றல்:
இதற்கு தற்போது குறிப்பிட்ட நபி மொழியும்,
لاينظر الله عز وجل إلى صلاة عبد لا يقيم فيها صلبه بين ركوعها و سجودها “  (رواه أحمد)
“றுகூவுக்கும், ஸுஜூதுக்கும் இடையில்  தன்னுடைய முதுகெலும்பை நேராக வைத்துக் கொள்ளாத அடியானின் தொழுகையை அல்லாஹ் கவணத்தில் எடுத்துக் கொள்ளமாட்டான்” என்ற நபி மொழியும் ஆதாரமாக விளங்குகின்றன.  
X.    ஸுஜூது செய்தல்:
இதுவும் ஒரு கடமை என்பதற்கு ஏற்கெனவே குறிப்பிட்ட இறை வசனமும், “நீங்கள் அமைதியாக ஸுஜூதை நிறைவேற்றுங்கள்” என்ற நபி மொழியும் ஆதாரமாக விளங்குகின்றது. (புஹாரி)
XI.    ஸுஜூதிலிருந்து எழும்புதல்:
இதற்கு “நீங்கள் ஸுஜூதிலிருந்து எழுந்து அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழி ஆதாரமாக விளங்குகின்றது. ”(புகாரி)
XII.    இரு ஸுஜூதுகளுக்கும் இடையே அமருதல்:         
இதற்கு “றுகூவுக்கும், ஸுஜூதுக்கும் இடையில்  தன்னுடைய முதுகெலும்பை நேராக வைத்துக் கொள்ளாத அடியானின் தொழுகையை அல்லாஹ் கவணத்தில் எடுத்துக் கொள்ள மாட்டான்” என்ற நபி மொழி ஆதாரமாக விளங்குகிறது. (அஹ்மத்)
XIII.    றுகூஃ, ஸுஜூத், அமருதல், மற்றும் நிற்கும் நிலை  ஆகிய எல்லா சந்தர்ப்பங்களிலும் அமைதியாகத் தரித்திருத்தல் வேண்டும். இதுவும் தொழுகையின் கடமைகளில் ஒன்றே. ஏனெனில் இவ்வாறான எல்லா சந்தர்ப்பத்திலும் அமைதியாக இருக்குமாறு நபியவர்கள் கட்டளை யிட்டார்கள். எனவே இத்தகைய சந்தர்ப்பங்களில் அமைதியாக இருத்தலுக்குரிய கால எல்லையானது இச் சந்தர்ப்பத்தில் தொழுகையாளியின் உருப்புக்கள் நிலை கொண்ட பின்னர் سبحان ربي العظيم எனும் வார்த்தையை ஒரு தடவை சொல்வதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் காலமாகும். எனினும் இதைவிடவும் அதிக நேரம் தாமதிப்பது ஸுன்னத்தான செயலாகும்.
XIV.    இறுதி அத்தஹிய்யாத்தில் அமருதலும், அத்தஹிய்யாத்த் ஓதலும்:

1.    இதனை பின் வரும் ஹதீஸ்கள் வழியுறுத்துகின்றன.

عن عبد الله بن مسعود رضي الله عنه قال : ( كنا نقول قبل أن يفرض علينا التشهد : السلام على الله من عباده ، السلام على جبرائيل وميكائيل ، فقال رسول الله صلى الله عليه وسلم لاتقولوا هكذا فإن الله عز وجل هوالسلام ولكن قولوا: التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا، وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمداً عبده ورسوله" (رواه النسائي والدار قطني والبيهقي)
நம் மீது ‘தஷஹ்ஹுத்’  கடமையாக்கப்படு முன்,  நாம் அத்தஹிய்ய்யாத்தின் போது’  “அல்லாஹ்வின் மீது அவனின் அடியார்களின் ஸலாம் உண்டாவதாக. மேலும் ஜிப்ரீல் மீதும், மீகாஈல் மீதும் ஸலாம் உணடாவதாக” என்று  கூறி வந்தோம். பின்னர் நபியவர்கள் நம்மிடம், நீங்கள் இவ்வாறு சொல்லாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாம் ஆவான். ஆகையால் நீங்கள்
التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا، وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمداً عبده ورسوله"
“அனைத்துப் பாராட்டுக்களும், தொழுகைகளும், நல்ல வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். மேலும் அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் பரகத்தும் உங்கள் மீது உண்டாவதாக. மேலும் நம்மீதும், மற்றும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தி  உண்டாவதாக. வணக்கத் திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி எவரும் இல்லை என்று சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார் என்றும் சாட்சி பகர்கின்றேன், என்று சொல்லுங்கள்” எனக் கூறினார்கள். (நஸாஈ, தாரகுத்னீ, பைஹகீ)
மேலும்,  நபியவர்கள்
உங்களில் ஒருவர் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து கொண்டதும்
 التحيات لله  والصلوات والطيبات
 என்று கூறவும் என நவின்றார்கள். (அபூதாவூத், நஸாஈ)
IV - ஸலாம் கூறல்.
இதன் ஆதாரம் “தொழுகையின் திரவுகோல் வுழூஃ. அதன் துவர்க்கம் தக்பீர் தஹ்ரீமா, அதன் முடிவு ஸலாம் கூறுதல்” எனும் நபி மொழியாகும். (அபூ தாவூத், நஸாஈ
IVI- எல்லா கடமைகளையும் ஒழுங்கு முறைப்படி வரிசை கிரமமாகச் செய்தல்.
 எனவே தக்பீர் தஹ்ரீமாவுக்கு முன்னர் ஸூரதுல் பாதிஹா ஓதவோ, றுகூவுக்கு முன்னர் ஸஜூத் செய்யவோ கூடாது. ஏனெனில்,
صلوا كما رأيتموني أصلي (رواه البخاري)
“நான் எப்படித் தொழ நீங்கள் கண்டீர்களோ அப்படியே நீங்கள் தொழுங்கள்” (புகாரி) என்பது நபியவர்களின் கட்டளை.  எனவே நபியவர்கள் காட்டித் தந்த ஒழுங்கு முறைக்கு மாறாக தொழுகையின் பர்ழு எதனையும் முற்படுத்தியே பிற்படுத்தியோ செய்தால் தொழுகை வீனாகி விடும்.
தொழுகையின் வாஜிபுகள்
    தொழுகையில் கட்டாயமாக செய்ய வேண்டிய கருமங்கள் தொழுகையின் வாஜிபுகள் எனப்படும். இவற்றில் எதையேனும் வேண்டுமென்று விட்டு விட்டால் தொழுகை முறிந்துவிடும். ஆனால் மறதியாக அவை விடுபட்டால் தொழுகை முறிந்து விடாது. எனினும் அதற்காக ‘ஸஜதா ஸஹ்வு’ செய்து கொள்ள வேண்டும். அந்தக் கருமங்களின் விளக்கம் வருமாறு.
1)    றுகூவிலிருந்து எழுந்திருக்கும் சந்தர்ப்பத்தைத் தவிர ஏனைய எழும்புதல், குணிதல், எழுந்து நிற்றல், அமருதல் போன்ற எல்லா கடமைகளிலிருந்தும் இன்னொரு நிலைக்கு மாறும் போதும் தக்பீர் சொல்லுதல்.
 ஏனெனில் “குணிதல், எழும்புதல், மற்றும் எழுந்து நிற்றல் அமருதல் ஆகிய சகல சந்தர்ப்பங்களிலும் ரஸூல் (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்வதை நான் பார்த்திருக்கின்றேன்.” என்று இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் குநிப்பிட்டுள்ளார்கள். (அஹ்மத், திர்முதீ, நஸாஈ)
2)     றுகூவில் سبحان ربي العظيم   என்று ஒரு தடவை கூறுதல்.
“ரஸூல் (ஸல்) அவர்கள் றுகூவில்  سبحان ربي العظيم, என்றும்  ஸுஜூதில்  سبحان ربي الأعلى என்றும் சொல்வார்கள்” என்று ஹுதைபா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.(அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ)
3)    ஸஜூதில்  سبحان ربي الأعلى என்று ஒரு தடவை கூறுதல். இதற்கு முன் குறிப்பிட்ட ஹதீஸே ஆதாரமாகும்.
4)    றுகூவிலிருந்து எழும்பும் போது, இமாமும் மஃமூமும் سمع الله لمن حمدة என்றும் எழுந்து நின்ற நிலையில்   ربنا ولك الحمدஎன்றும் கூறல், ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள் றுகூவிலிருந்து எழும்பும் போது ,  سمع الله لمن حمدة  என்றும், எழுந்து நின்ற நிலையில்ربنا ولك الحمد  என்றும் சொல்வார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக கின்றார்கள். மேலும் இமாமும்  ربنا ولك الحمد என்று மஃமூமும் சொல்ல வேண்டுமென்பதற்கு,
إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا ولك  الحمد  (البخاري)
“இமாம் سمع الله لمن حمده என்று கூறியதும் நீங்கள்  اللهم ربنا ولك  الحمد என்று, கூறுங்கள்” எனும் ரஸூல் (ஸல்) அவர்களின் மற்றுமொறு வாக்கும் ஆதாரமாகும்.(புகாரி, முஸ்லிம்)
5)    اللهم اغفرلي وارحمني وعافني واهدني وارزقني “ அல்லாஹ்வே! எனக்கு மன்னிப்பளித்து எனக்கு அருள் புரிவாயாக. மேலும் எனக்கு நல்லாரோக்கியத்தையும்,நேரான வழியையும் தந்து எனக்கு ஆகாரமும் தந்தருள் வாயாக. என்று அல்லது رب اغقرلي رب اغفرلي என் இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, என் இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப் பாயாக என்ற துஆவை இரண்டு ஸுஜூதுகளுக்கம் மிடையில் ஓதல் வேண்டும். ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர் இதனை ஓதி வந்துள்ளார்கள் என்று இப்னு மாஜா, ஹாகிம் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
6)    முதலாம் அத்தஹியத்தில் அமர்ந்து அத்தஹிய்யாத் ஓதல்,
ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள் ரிபாஆ பின் ராபிஃ என்பாரிடம் “நீங்கள் தொழுகைக்காக நின்று கொண்டதும் அல்லாஹ்வை மேன்மைப் படுத்தி அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்னர் அல்குர்ஆனில் இருந்து உங்களால் இயன்றதை ஓதுங்கள். பின்னர் தொழுகையின் நடுவில் நீங்கள் அமரும் போது உங்களின் இடது காலை விரித்து பூரண அமைதியுடன் அமர்ந்தவாறு அத்தஹிய்யாத்தை ஓதிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

தொழுகையின் ஸுன்னத்துக்கள்   
தொழுகையில் செய்ய வேண்டிய சில ஸுன்னத்தான கருமங்கள் இருக்கின்றன. அவற்றைப் பேணி வருவதன் மூலம் மேலதிக நன்மைகளை அடையலாம். அவையாவன:
(1) கீழே குறிப்பிடப்படும் சந்தர்ப்பங்களில் இரண்டு புயங்களுக்கும் நேராக அல்லது இரண்டு காதுகளுக்கும் நேராக இரு கைகளையும் உயர்த்துதல்.   
I.    தக்பீர் தஹ்ரீமாவின் போது.
II.    றுகூவுக்குச் செல்லும் போது.
III.    றுகூவிருந்து எழும் போது
IV.    இரண்டாம் ரகஆவிலிருந்து மூன்றாம் ரகஆவுக்கு எழும் போது.
இதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆதாரமாக விளங்குகின்றது. “ ரஸூல் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக எழுந்திருந்தால் தங்களின் இரண்டு புயங்களுக்கும் நேராக தங்களின் இரு கைகளும் ஆகிவிடும் வரையில் தங்களின் இரு கைகளையும் உயர்த்தி தக்பீர் சொல்லுவார்கள். பின்னர் றுகூஃ செய்யும் வேளையில் அவ்வாறே இரு கைகளையும் உயர்த்துவார்கள். மேலும் றுகூவிலிருந்து எழுந்திருக்கும் போதும் இரு கைகளையும் அவ்வாறு உயர்த்துவார்கள்” என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்) மேலும் இரண்டாம் ரகஆவிலிருந்து மூன்றாம் ரகஆவுக்கு எழும் சந்தர்ப்பத்தில் தங்களின் இரு கைளையும் உயர்த்திக் கொள்ளும் இப்னு உமர் (ரழி) அவர்கள் இதுவும் ரஸூல் (ஸல்) அவர்களின் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(2) வலது கையை இடது கைக்கு மேல் வைத்து நெஞ்சுக்கு மேல் வைத்துக் கொள்ளல். அல்லது தொப்புழுக்கு மேலால் நெஞ்சுக்கு கீழ் வைத்துக் கொள்ளல். ஏனெனில் “தொழுகையில் தங்களின் இடது கை மீது வலது கையை வைத்துக் கொள்ளுமாறு மக்களுக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது” என்று ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி) மேலும்,
عن وائل بي حجر رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم فوضع يده اليمنى على يده اليسرى على صدره (رواه ابن خزيمة)
“நான் ரஸூல் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்பொழுது அவர்கள் தங்களின் வலது கரத்தைத் தங்களின் இடது கரத்தின் மீது வைத்து நெஞ்சுக்கு மேல் வைத்துக் கொண்டார்கள்.” என்று வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார் கள். (இப்னு குஸைமா)
(3) வஜ்ஜஹ்த் அல்லது
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولاإله غيرك (رواه مسلم)
“அல்லாஹ்வே! உன்னைத் துதிக்கின்றேன், உன்னை போற்றுகிறேன். உன் நாமம் பரகத் பொருந்தியதாகும். மேலும் உன் மகத்துவமும் கண்ணியமும் மிகவும் மேலானது. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் உன்னையன்றி வேறு எவரும் மில்லை”  என்று தொழுகையின் ஆரம்பத்தில் ஓதும் துவக்க துஆவை ஓதல். (முஸ்லிம்)  
(4) எல்லா ரகஆத்தின் துவக்கத்திலும் அல் குர்ஆனை ஓதும் போது அஊது, பிஸ்மில்லாவை மறைவாக ஓதிக் கொள்ளல். ஏனெனில்,
فإذا قرأت الفرآن فاستعذ بالله من الشيطن الرجيم (النحل/98)
“நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் விரட்டப்பட்ட ஷைத்தான விட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக்கொள்ளுங்கள். என்று அல்லாஹ் கூறுகிறான்.(16/98)
(5)ஆமீன் கூறல்:
ஸூரதுல் பாதிஹா ஓதிய பின்  இமாமும் மஃமூமும் மற்றும் தனியாக தொழுகின்ற நபரும் ஆமீன் கூறுவது ஒரு ஸுன்னத்தான செயலாகும். ஏனெனில்,
إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه (رواه البخاري)
“இமாம் غير المغضوب عليهم ولا الضالين  என்று கூறினால், “நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள் ஏனெனில் எவனுடைய அந்த வாசகம் மலக்குகளின் அந்த வாசகத்துடன் ஒன்று படுமோ, அப்போது அவனுடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என எஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (புகாரி) மேலும் “நபிகளார்  غير المغضوب عليهم ولا الضالين என்பதை ஓதியதும் தங்களின் சப்தத்தை உயர்த்தி  ஆமீன் என்று கூறுவார்கள்.” என இப்னு குஸைமா அவர்கள் அறிவித்துளார்கள்.
(6) ஸுப்ஹூத் தொழுகையின் இரண்டு ரக்ஆக்களிலும், மற்றும் ழுஹர், அஸர், மஃரிப், இஷாத் தொழுகைகளின் முதல் இரண்டு ரக்ஆக்களிலும் ஸூரா அல்பாதிஹாவை ஓதிய பின் ஒரு ஸூராவின் அளவு அல்லது அல் குர்ஆனின் ஏதேனும் ஓரிரு வசனங்களை ஓதல்.
ஏனெனில் “ரஸூல் (ஸல்) அவர்கள் ழுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்ஆக்களிலும் ஸூரதுல் பாதிஹாவையும் இன்னும் இரண்டு ஸூராக்களையும் ஓதி வந்தார்கள். மேலும் அதன் இறுதி இரண்டு ரக்ஆக்களிலும் ஸுரா பாத்திஹவை ஓதி வந்தார்கள், என்றும் சில வேளை தான் ஓதும் ஸூராவை மற்றவர்கள் கேட்கும்படியாக அன்னார் ஓதுவார்கள்” என்றும் புகாரி, மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
(7) சப்தத்தை வெளிப்படுத்த வேண்டிய தொழுகையில் ஸூராக்களை வெளிப்படுத்தியும், சப்தத்தை மறைக்க வேண்டிய தொழுகையில் ஸூராக்களை மறைத்தும் ஓதல். இதன்படி மஃரிப் இஷாத் தொழுகைகளின் முதல் இரண்டு ரக்ஆக்களிலும், மற்றும் ஸுப்ஹுத் தொழுகையின் இரண்டு ரக்ஆக்களிலும்  கிராஅத்தை வெளிப்படுத்தியும், இதனைத் தவிர்ந்த ஏனைய தெழுகைகளில் கிராஅத்தை மறைத்தும் ஓதல் வேண்டும். இது பர்ழான தொழுகை விடயத்திலாகும். இதனை ரஸூல் (அவர்களின்) சொல்லும், செயலும் உறுதி செய்கின்றன. ஆனால் நபிலான தொழுகையைப் பொருத்த வரை பகல் நேரத் தொழுகையாயின் அதில் கிராஅத்தை மறைத்தும், இரவு நேரத் தொழுகையாயின் கிராஅத்தை வெளிப்படுத்தியும் ஓதல் வேண்டும். எனினும் சப்தத்தை வெளிப்படுத்தி ஓதுவதன் மூலம் மற்றவர்களுக்கு துன்பம் உண்டாகலாம் என்ற அச்சம் ஏற்படுமாயின் அப்பொழுது கிராஅத்தை மறைத்து ஓதுவது விரும்பத் தக்கதாகும்.
(8) ஸுப்ஹுத் தொழுகையில் கிராஅத்தை நீட்டியும், ழுஹர், அஸர், இஷாத் தொழுகைகளில் நடுத்தரமாகவும், மஃரிபு தொழுகையில் சுருக்கமாகவும் ஓதல். ஏனெனில்,
“மதீனாவின் இமாம்களில் ரஸூல் (ஸல்) அவர்களின் தொழுகை போன்று தொழுத ஒரு மனிதரைத் தவிர வேறு எவரையும் நான் கண்டதில்லை. அவருக்குப் பின்னால் நான் தொழுதிருக்கின்றேன். அப்பொழுதவர் ழுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்ஆத்களிலும் கிராஅத்தை நீட்டியும், அதன் இறுதி இரண்டு ரக்ஆத்துக்களிலும் கிராஅத்தை சுருக்கியும் ஓதினார். மேலும் அஸர் தொழுகையில் கிராஅத்தை சுருக்கிக் கொண்டார். மேலும் மஃரிப் தெழுகையில் அதன் முதல் இரண்டு ரகஆக்களிலும் ‘கிஸார் முபஸ்ஸலையும்’, இஷாவின் முதல் இரண்டு ரக்ஆவிலும் “வஸதுல் முபஸ்ஸலையும் ஓதி வந்தார். மேலும் காலையில் ‘திவாலுல் முபஸ்ஸலை’ ஓதி வந்தார்கள்” என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாக ஸுலைமான் இப்னு யஸார் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
 
ق ஸூராவிலிருந்து ஸூரா عم يتساءلون வரையில் طوال المفصل என்றும்,   عم விலிருந்து الضحى வரையில் وسط المفصل என்றும், الضحى முதல் அந்நாஸ் வரையில்  قصار المفصل என்றும் குறிப்பிடப்படுகின்றது.
(9) தொழுகையில் அமரும் முறை
இறுதி தஷஹ்ஹுத் இருப்பைத் தவிர்ந்த ஏனைய எல்லா இருப்புக்களிலும், இப்திராஷ் முறைப்படி ரஸூல் (ஸல்) அமர்வார்கள் என்று பதிவாகி யுள்ளது. எனவே இரண்டு தஷஹ்ஹுதுள்ள தொழுகையில் அதன் இரண்டாம் தஷஹ்ஹுதில் ‘தவர்ருக் முறைப்படி அமருதல் வேண்டும். “ரஸூல் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஸஹாபாக்களின் சபையில் அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ அவர்கள் வர்ணணை செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறு கூறினார்கள் “நபியவர்கள் இரண்டாம் ரக்ஆவில் அமரும் போது தங்களின் இடது காலின் மீது அமர்ந்து மறு காலை நட்டிக் கொண்டவராக தங்களின் பின்தட்டின் மீது அமர்ந்து கொள்வார்கள்” என்று விபரித்தார்கள். (புகாரி)
இப்திராஷ் மற்றும் தவர்ருக் யாது என்பது வாசகனுக்கு இதனூடாகத் தெளிவாகும்.
எனவே இப்திராஷ் என்பது வலது காலை நட்டி, இடது காலின் உள்பாகத்தின் மீது அமர்ந்து கொள்ளும் இருப்பையும், தவர்ருக் என்பது வலது காலை நட்டி  இடது காலின் உள் பாகத்தை தொடையின் கீழால் வைத்து பின்தட்டை நிலத்தின் மேல் வைத்து அமரும் இருப்பையும்  குறிக்கும்.
ரஸூல் (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் அமர்ந்து கொண்டால் தங்களின் இடது கையை தங்களின் இடது முழங் காலின் மீதும், வலது கையைத் தங்களின் வலது முழங் கால் மீதும் வைத்துக் கொண்டு தங்களின் சுட்டு விரலால் சாடை செய்வார்கள். அப்போது அன்னாரின் பார்வை அவர்களின் சுட்டு விரலை விட்டும் அகலாதிருக்கும். (அபூ தாவூத்)
(10) ஸுஜூதில் இருக்கும் போது துஆ கேட்டல்.
 وعن ابن عباس رضي الله عنهما ، قال ، قال رسول الله صلى الله عليه وسلم : ألا إني نهيت أن أقرأ القرآن راكعا أو ساجدا ، فأما الركوع فعظموا فيه الرب وأما السجود فاجتهدوا في الدعاء ، فقمن أن يستجاب لكم " ، رواه مسلم .
“றுகூவிலும், ஸஜூதிலும் குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன். எனவே நீங்கள் றுகூவில் அல்லாஹ்வை கண்ணியப் படுத்துங்கள். ஸுஜூதிலோ பிரார்த்தனை செய்வதில் முயற்சி செய்யுங்கள். அது உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட பொருத்தமாக இருக்கும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (முஸ்லிம்)
(11) கடைசி தஷஹ்ஹுதுக்குப் பிறகு ரஸூல் (ஸல்) அவர்களின் மீது ஸலாவாத்து கூறல். அதாவது “التحيات முதல்   وأن محمدا عبده ورسوله வரை ஓதிய பின்,
" اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد . اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم  في العالمين إنك حميد مجيد "
எனும் ஸலவாத்தை ஓதல் வேண்டும்.
(12) இறுதி அத்தஹிய்யாத்தில் ரஸூல் (ஸல்) அவர்களின் மீது ஸலாவாத்து ஓதிய பின் ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸில் கூறப்பட்டுள்ள துஆவை ஓதல் வேண்டும்..
إذا فرغ أحدكم من صلاته فليدع بأربع ، ثم ليدع بعد بما شاء : اللهم إني أعوذ بك من عذاب جهنم ، و عذابالقبر ، و فتنة المحيا و الممات ، و فتنة المسيح الدجال
 “உங்களில் ஒருவர் தனது தொழுகையை நிறைவு செய்யும் போது, அல்லாஹ்வே! நரக வேதனையி லிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்க்கை யினதும் மரணத்தினதும் வேதனையிலிருந்தும் மற்றும் தஜ்ஜாலின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று இந்த நான்கு விடயங்களிலிருந்தும் பாதுகாப்பு வேண்டி அவர் பிரார்த்தனை செய்து கொள்வாராக. பின்னர் அவர் தனக்கு வேண்டியதைப் பற்றிப் பிரார்த்தனை செய்து கொள்ளட்டும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (பைஹகீ)
(13) தொழுகின்றவர் தன்னுடைய இடது பக்கமாக இரண்டாம் ஸலாம் கூறல். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கன்னம் தெளிவாகத் தெரியும் வண்ணம் தங்களின் வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் ஸலாம் கூறுவார்கள் என்ற விடயம் முஸ்லிமில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
(14) தொழுகையின் முடிவில் ஸலாம் கூறிய பின், ஹதீஸில் வந்துள்ள அத்கார்களையும், துஆக்களை யும் ஓதுதல். தொழுகையாளி இவற்றை ஓதுவது விரும்பத் தகுந்த செயலாகும். எனவே அது பற்றிய சில ஹதீஸ்களையும் அதில் வந்துள்ள  துஆக்கள் சிலவற்றையும் கீழே தருகின்றோம்.    
عن ثوبان رضي الله عنه قال : كان رسول الله صلى الله عليه وسلم اذا انصرف من صلاته استغفر ثلاثاُ وقال : (اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام (رواه مسلم)
“ரஸூல் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருந்து திரும்பியதும் மூன்று தடவை இஸ்திஃபார் செய்வார்கள். பின்னர்
.(اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام
  “அல்லாஹ்வே! நீயே சாந்தி. உன்னிடமிருந்தே சாந்தி உண்டாகின்றது. கீர்த்தியும் கண்ணியமும் உடையவனே! நீ மிகவும் அருள் மிக்கவன்.” என்று கூறுவார்கள், என ஸௌபான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
عن معاذ بن جبل ـ رضي الله عنه ـ أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ أخذ بيده وقال: يامعاذ! والله إني لأحبك، أوصيك يا معاذ لا تدَعَنَّ في دبر كل صلاة تقول: اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك) رواه أبو داود، (.
ஒரு நாள் ரஸூல் (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொண்டு “முஆதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் உங்களை நேசிக்கின்றேன். முஆதே! ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும்
اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك
“அல்லாஹ்வே! உன்னை நினைவு படுத்தவும், உனக்கு நன்றி செலுத்தவும், சிறந்த முறையில் உன்னை அடிபணியவும் எனக்கு நீ உதவி புரிவாயாக, என்று கூறுவதை நீங்கள் விட்டு விட வேண்டாம் என்று நான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவிக்க்கின்றார்கள்.(அபூ தாவூத்)
عن المغيرة بن شعبة رضي الله عنه أن رسول ااه صلى الله عليه وسلم كان يقول دبركل صلاة مكتوبة: لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. أخرجه البخاري ومسلم.
 
ரஸுல் (ஸல்) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும்,
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد.
“வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி எவருமில்லை. அவன் ஒருவன், அவனுக்கு இணை எவருமில்லை. ஆட்சி அனைத்தும் அவனுக்கே சொந்தம். மேலும் புகழ் யாவும் அவனுக்கே சொந்தம். அவன் எல்லா பொருளின் மீதும் வல்லமை உள்ளவன். அல்லாஹ்வே! நீ கொடுத்ததை எவராலும் தடுத்துவிட முடியாது. மேலும் நீ தடுத்ததை எவராலும் கொடுத்திடவும் முடியாது. செல்வந்தனின் செல்வம் மறுமையில் அவனுக்குப் பயனளிக்காது, ஏனெனில் செல்வம் உன்னிட மிருந்தே வருகின்றன” என்று கூறுவார்கள் என முகீரா இப்னு ஷுஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
عن أبي هريرةرضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "من سبح الله في دبر كل صلاة ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين وحمد الله ثلاثا وثلاثين وقال تمام المائة لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وان كانت مثل  زبد البحر”  
“எல்லா தொழுகைக்குப் பின்னரும் எவர் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்து லில்லாஹ், 33 தடவை அல்லாஹு அக்பர் என்று மொத்தமாக 99 தடவைகள் கூறிய பின் நூறினை நிறைவு செய்யும்படியாக,
لا اله الا الله وحده لا شريك له, له الملك وله الحمد وهو على كل شيء قدير
“வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி எவருமில்லை. அவன் ஒருவன், அவனுக்கு இணை எதுவுமில்லை. ஆட்சி அனைத்தும் அவனுக்கே சொந்தம். மேலும் புகழ் யாவும் அவனுக்கே சொந்தம். மேலும் சகல பொருளின் மீதும் அவன் வல்லமையுள்ளவன்” என்று கூறுவாரோ, அவருடைய தவறுகள் யாவும் மன்னிக்கப்பட்டுவிடும். அவை கடலின் நுரை அளவு இருந்த போதிலும் சரியே” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
عن أبي أمامة أن النبي صلى الله عليه وسلم قال : من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت  ( رواه النسائي)
“எவர் எல்லா பர்ழான தொழுகைக்குப் பின்னரும் ஆயதுல் குர்ஸீயை ஓதி வருகின்றாரோ, அவருக்கு மரணம் சம்பவிக்காமல் இருப்பதைத் தவிர வேறு எதுவும் அவர் சுவர்க்கத்தில் பிரவேசிக்க தடையாக இருக்காது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ)
ஆசான் சிறாருக்கு எழுதக் கற்றுக்கொடுப்பது போன்று,   ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அடுத்து வரும் வாசகங்களை தனது பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் இந்த வாசகங்களைக் கொண்டு  எல்லாத் தொழகைக்கும் பிறகு  ரஸுல் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடி வந்தார்கள், என்றும் கூறினார்கள்.  அந்த வாசகங்களும் அதன் பொருளும் வருமாறு:  
اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنَ البُخْلِ، وَأَعوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأعُوذُ بِكَ أنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ (رواه البخاري)
அல்லாஹ்வே! கஞ்சத் தனத்தை விட்டும்,.  கோழைத் தனத்தை விட்டும், இழிவான முதிய வயது வரையில் நான் தள்ளப்படுவதை விட்டும், உலக சோதனைகளை விட்டும், மற்றும் கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” (புகாரி)
தொழுகையில் அனுமதிக்கப்பட்ட சில காரியங்கள்     
1)    இமாம் தொழுகையில் ஓதிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஏதேனும் வசனத்தில் மறதி ஏற்பட்டால் அதனை அவருக்கு  மஃமூம் ஆரம்பித்துக் கொடுக்கலாம்.  ஏனெனில் ஒரு முறை ரஸூல் (ஸல்) அவர்கள் தொழுகையில் ஓதிக் கொண்டிருந்த போது அவர்களக்கு அதில் தடுமாற்றம் ஏற்பட்டது. . எனவே தொழுகை முடிந்ததும்ரஸூல் (ஸல்) அவர்கள் எனது தந்தையிடம் நீங்கள் எம்முடன் இருந்தீர்களா? என்றுவினவினார்கள் . அதற்கு அவர் ஆம் என்றார் அதற்கு நபியவர்கள் அதனை எனக்குத் துவக்கித்  தருவதை விட்டும் உங்களைத் தடுத்தது எது? எனக் கேட்டார். என்று இப்னு உமர் (ரழி) அவரகள் அறிவிக்கின்றார்கள் (அபூ தாவூத்)

2)    கை தட்டுதல் அல்லது சுப்ஹானல்லாஹ என்று கூறல்
இமாமுக்கு மறதி ஏற்பட்டால் அல்லது  குருடனக்கு அறிவுருத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் இவ்வாறு இது போன்ற ஏதேனும் பிரச்சினை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அது பற்றி அவர்களுக்கு அறிவுருத்தும் பொருட்டு ஸுப்ஹானல்லாஹ் என்று கூறவதும் கை தட்டுவதும் ஆகும்  ஏனெனில்,

من نابه شيء في صلاته فليسبح فإنما التصفيق للنساء   (متفق عليه)
ஒருவருக்கு அவருடைய தொழுகையில் ஏதேனும் சம்பவித்தால் அவர் ஸுப்ஹானல்லாஹ் என்று கூறட்டும். ஆனால் அப்பொழுது கை  கொட்டுவதே பெண்களுக்குரியது,, என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
(3)பாம்பு, தேள் என்பவற்றை கொல்லுதல்.
اقتلوا الأسودين في الصلاة الحية والعقرب (رواه أحمد وابو داوود)

நீங்தள் தொழுகையில் இருக்கும் போது பாம்பையும், தேளையும் கொன்று விடுங்கள்.  என்று ரஸூல (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், அபூ தாவூத் )
(4) தன் முன்னால் கடந்து செல்பவனைத் தடுத்தல். ஏனெனில்
 إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليدفعه فإن أبى فليقاتله، فإنما هو شيطان(متفق عليه)
மனிதர்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்ளும் படியான ஒரு பொருளின் பக்கத்தில் ஒருவர் தொழும் போது அவரை இன்னொருவர் கடந்து  செல்ல முயன்றால் அவரை அந்த தொழுகையாளி தடுத்து விடவும் ஆளால் அதனையும் அவர் மீறினால் அவரை எதிர்த்து போரிடவும்.ஏனெனில் அவன் ஒரு ஷைத்தான் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
(5) தன்னுடன் பேசியவருக்கு அல்லது தனக்கு ஸலாம் சொன்னவருக்கு சாடை செய்வதன் மூலம் பதிலளித்தல். ஏனெனில்
عن جابر رضي الله عنه قال ارسلني رسول الله صلى الله عليه وسلم وهو منطلق الى بني المصطلق فأتيته وهو يصلي على بعيره فكلمته فقال لي بيده هكذا ثم كلمته هكذا وانا اسمعه يقرأ يؤمئ برأسه  فلما فرغ قال ما فعلت في الذي أرسلتك له؟ فإنه لم يمنعني أن أكلمك إلا أني كنت أصلي (رواه مسلم)  
ரஸூல் (ஸல்) அவர்கள் பனூ முஸ்தலக்கிற்கு சென்று கொண்டிருக்கும் போது என்னை ஓரிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர் நான் அன்னாரிடம் வந்த போது, அன்னார் தங்களின் ஒட்டகை மீது தொழுது கொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் அவர்களுடன் கதைத்தேன். அதற்கு என்னை அமர்ந்து கொள்ளும்படி தங்களின் கரத்தால் அன்னார்  சாடை செய்தார்கள். மீண்டும் இப்படி அவர்களுடன் நான் பேசினேன். அப்போது தங்களின் தலையால் சாடை செய்த அன்னார், ஓதிக் கொண்டிருந்ததை நான் செவி மடுத்தேன் பின்னர் அன்னார் தொழுது முடிந்ததும், உங்களை என்ன விடயமாக நான் அனுப்பி வைத்தேனோ அது சம்மந்தமாக என்ன செய்தீர்கள்? என்றார். பின்னர் நான் தொழுகையில் ஈடுபட்டிருந்ததுதான் உங்களுடன் நான் பேச தடையாக இருந்தது என்று  ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் )ரழி( அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(முஸ்லிம்)
(6) குழந்தையை சுமத்தலும் முஸல்லாவில் வைத்தலும்:
عن ابي قتادة الأنصاري رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يؤم الناس وأمامة بنت ابي العاص وهي ابنة زينب بنت النبي صلى الله عليه وسلم علر عاتقه فإذا ركع وضعها واذا رفع من السجود أعادها (رواه مسلم)
அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுகை நடாத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அபுல் ஆஸ் அவர்களின் மகள் உமாமா அவரோ, ரஸூலுல்லாஹ்வின் புதல்வி ஸைனபின் புத்திரி, அன்னாரின் புயத்தின் மீது அமர்திருந்தார். எனவே ரஸூல் (ஸல்) அவர்கன் ருகூஃ செய்யும் போது அவரை கீழே வைப்பதையும் ஸுஜூதிலிருந்து எழும்பியதும் திரும்பவும் அவரை எடுத்துக் கொள்வதையும் நான் கண்டேன். (முஸ்லிம்)
(7) தேவைக்காக சிறு தூரம் நடத்தல்:
عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي في البيت والباب عليه مغلق فجئت فاستفتحت فمشى ففتح لي ثم رجع الى مصلاه ووصفت أن الباب في القبلة (رواه احمد وابو داود)
"ரஸூல் (ஸல்) அவர்கள் வீட்டில் தொழுது கொண்டிருந்தார்கள். வீட்டுக் கதவு மூடியிருந்தது. அங்கு வந்த நான் கதவை திறக்கும்படிக் கேட்டேன். அப்போது நபியவர்கள் நடந்து வந்து எனக்குக் கதவைத் திறந்து தந்தார்கள். பின்னர் மீண்டும் தங்களின் முஸல்லாவுக்குச் சென்றார்கள்” என்று கூறிய ஆயிஷா (ரழி) அவர்கள், கதவு கிப்லா திசையிலிருந்தது, என விவரித்தார்கள். (அஹ்மத், அபூ தாவுத்)
(8) மஃமூமை முன் பக்கமாக அல்லது பின் பக்கமாக இழுத்து வரிசையை சீர் செய்தல், அல்லது இடது பக்கத்திலிருக்கும் மஃமூமை வலது பக்கமாகத் திருப்புதல், மேலும் தேவையைப் பொருத்து உடையை சரி செய்தல், கனைத்தல், கையால் உடம்பை சொரிதல், கொட்டாவி விடுதல், வாய் மீது கை வைத்தல் போன்ற இலகுவான காரியங்களைச் செய்தல்.
عن ابن عباس رضي الله عنهما قال بت عند خالتي ميمونة فقام النبي صلى الله عليه وسلم يصلي من الليل فقمت اصلي معه فقمت عن يساره فأخذ برأسي فأقامني عن يمينه (متفق عليه)
“எனது சிறிய தாய் மைமூனாவின் வீட்டில் நான் தங்கி இருந்தேன். நபியவர்கள் அன்றிரவு எழுந்து தொழுதார்கள். அப்பொழுது அவர்களுடன் தொழுவதற்காக நானும் எழுந்து அவர்களின் இடப்பக்கமாக நின்று கொண்டேன். அப்பொழுது நபியவர்கள் எனது தலையைப் பிடித்து அவர்களின் வலது பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)  
தொழுகையில் மக்றூஹான காரியம்
(1)வானத்தின் பக்கம் பார்வையை உயர்த்தல்: ஏனெனில்
مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلَاتِهِمْ لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ  (رواه البخاري ومسلم)
“தொழுகையில் இருக்கும் போது வானத்தின் பால் தங்களின் பார்வையை உயர்த்தும் சமூகத்தின் நிலை என்ன? அதனை அவர்கள் கட்டாயம் விட்டு விடவேண்டும். அல்லது அவர்களின் பார்வை பறிக்கப்பட வேண்டும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (புகாரி, முஸ்லிம்)
(2) இடுப்பில் கை வைத்தல். ஏனெனில் தொழுகையில் இருக்கும் போது இடுப்பில் கை வைப்பதை ரஸூல் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள், என புகாரி, முஸ்லிமில் பதிவாகி யுள்ளது.
(3) தேவையின்றி தலையை அல்லது பார்வையைத் திருப்புதல். ஏனெனில்
عن عائشة -رضي الله عنها- قالت: سألت رسول الله -صلى الله عليه وسلم- عن الالتفات في الصلاة؟ فقال:هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد  (رواه  البخاري وابو داود)
தொழுகையில் மனிதர் திரும்பிப் பாப்பதைப் பற்றி நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வினவினேன் அதற்கு நபியவர்கள் “அது அடியானின் தொழுகையை ஷைத்தான் திருடும் காரியமாகும்” என்று கூறினார்கள், என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூ தாவுத்)
(4) வீணான கருமத்திலும், தொழுகையை விட்டும் திசை திருப்பும் விடயத்திலும், உள்ளச்சத்தைப் போக்கும் காரியத்திலும் ஈடுடல். ஏனெனில்
أسكنوا في الصلاة (رواه مسلم) தொழுகையில் அசையாமல் இருங்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்)
(5) தொங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய தாடியால் அல்லது தான் உடுத்திருக்கும் சட்டைக் கையால் அல்லது ஆடையால் ஸுஜூது செய்யும் ஸ்தானத்தை தடுத்தல்.
أمرت أن أسجد على سبعة أعظم، ولا أكف شعراً ولا ثوباً)متفق عليه)
“ஏழு உருப்புக்களையும் கொண்டு ஸுஜூது செய்யும்படியும், அவற்றை முடியாலும், உடையாலும் தடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது”  என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)   
(6) ஸுஜூது செய்யுமிடத்திலுள்ள கூலாங் கற்களை  அகற்றுவதற்காக அவ்விடத்தை ஒரு தடவைக்கு மேல் துடைத்து விடுவதும், அதிலுள்ள மண்ணை சமப்படுத்தலும்.
عن معيفيب قال ذكر النبي صلى الله عليه وسلم المسح في المسجد  قال إن كنت لابد فاعلا فواحدة (رواه مسلم)
    “ஸுஜூது செய்யுமிடத்தை துடைத்து விடுவது பற்றி நபியவர்கள் குறப்பிட்ட போது. “உங்களுக்கு அப்படி அவசியம் செய்ய வேண்டியிருந்தால்  ஒரு தடவைதான்” என்று கூறினார்கள், என்று முஐகீப் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்). மேலும் ஸுஜூது செய்யும் ஸ்தானத்திலிருக்கும் மண்ணை சமப்படுத்திய ஒரு மனிதனின் விடயத்திலும் நபியவர்கள் அவ்வாறு கூறினார்கள், என முஐகீப் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகரி, முஸ்லிம்)     
(7) நிலத்தில் படும்படி ஆடையை தொங்க விடுதலும், வாயை துணியால் மறைப்பதும்.
عن ابي هريرة رضي الله عنه قال نهى  رسول الله صلى الله عليه و سلم عن السدل في الصلاة  وان يغطي الرجل فاه  (رواه ابو داود  والترمذي)
“தொழுகையில் ஆடையை தொங்க விடுவதையும், ஆண்கள் தங்களின் வாயை மூடிக் கொள்வதையும் ரஸூ (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (அபூ தாவுத், திர்மிதீ)  
(அதாவது தலைப்பாகையால் வாயை சுற்றி மறைத்துக் கொள்வது அரபுகளின் ஒரு பாரம்பரியம். தொழும் போது அவ்வாறு  வாயை மூடிக் கொள்வதை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டனர். என்று இதற்கு இப்னுல் அஸீர் அவர்கள் விளக்கம் தந்துள்ளார்கள்)   
(8) உணவு வைக்கப்பட்டுள்ள நிலையில் தொழுதல்.
لاصلاة بحضرة الطعام (رواه مسلم)
“உணவு வைக்கப்பட்டுள்ள நிலையில் தொழுகையில்லை) என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)  
(9) மல சலத்தை அடக்கிக்கொண்டும், மனதை ஈர்க்கும் படியான வேறு விடயத்தில் கவணம் செலுத்திய வாறும் தொழுதல்.
“உணவு வைக்கப்பட்டுள்ள நிலையிலும், மல சலத்தை தடுத்துக்கொண்ட நிலையிலும் தொழுகை யில்லை” என்று ரஸூல் (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)   
 (10) நித்திரை மேலிடும் போது தொழுதல்.
إذا نعس أحدكم  وهو يصلي فليرقد حتى يذهب عنه النوم فإن أحدكم إذا صلى وهو ناعس لا يدري لعله يذهب يستغفر فيسب نفسه          ( متفق عليه )
“ஒருவர் தொழும் போது அவருக்குத் தூக்கம் மேலிட்டால், அவர் தன்னுடைய தூக்கம் களையும் வரையில் நித்திரை செய்து கொள்ளட்டும். ஏனெனில் உங்களில் ஒருவர் தூக்கம் மேலிட்ட நிலையில் தொழுவாராகில், அவர் தனக்காக பாவ மண்ணிப்புக் கோறுகின்றாரா, அல்லது தன்னையே திட்டிக் கொள்கின்றாரா  என்பதைக்கூட அவர் சில வேளை அறிய மாட்டார். எண்று ரஸூல் (ஸல்) கூறினர்கள். (புகாரீ, முஸ்லிம்)  
தொழுகையை முறிப்பவை
    பின் வரும் காரியங்களில் எதையேனும் செய்தால் தொழுகை முறிந்து விடும்:
(1)    வேண்டுமென்று உண்ணலும் அருந்தலும். இதன் காரணமாக தொழுகை முறியும் என்பது உலமாக்களின் ஒன்றுபட்ட கருத்தாகும்.  ஏனெனில்.
إن في الصلاة  لشغلا
“ நிச்சயமாக தொழுகையில் அதற்குரிய வேலை உண்டு” என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)   
(2)    வேண்டுமென்று தொழுகையுடன் சம்பந்த மில்லாத விடயம் பற்றி பேசுதல். ஏனெனில் 1“நாங்கள் தொழும் போது கதைத்து வந்தோம். நம்மில் தொழும் ஒருவர் பக்கத்திலுள்ள தன் தோழருடன் கதைப்பார். ஆனால்
وَقُومُوا لِلَّـهِ قَانِتِينَ ﴿٢٣٨﴾ (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள்” எனும் திரு வசனம் அருளப்பட்டதும்    தொழுகையில் பேசுவதிலிருந்து நாம்  தடுக்கப் பட்டோம்” என்று ஸைத் இப்னு அர்கம் (ரழி) அறிவிக்கின்றார்கள்
    எனவே இமாமுக்கு ஒரு வசனத்தை ஆரம்பித்துக் கொடுத்தல், அல்லது தொழுகை பூர்த்தியடையும் முன்னர் மறதியாக இமாம் ஸலாம் கொடுத்த பின் தொழுகை பூர்த்தியடைந்ததா என்று அவர் விசாரிப்பதும், இல்லை என்று அதற்கு மஃமூம் பதில் தருவதும் போன்று தொழுகையில் ஏற்படும் தவறை சீர் செய்யுமுகமாகப் பேசுவதில் தவறில்லை. ஏனெனில் இப்படி ஒரு சம்பவம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது. நபியவர்கள் மறதியாக ஸலாம் கொடுத்த போது ‘துல் யதைன்’ எனும் நபித் தோழர், நபிகளாரிடம் “தாங்கள் மறந்து விட்டீர்களா, அல்லது தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? என்றார். அப்போது நபியவர்கள் ‘துல்யதைன்’  சொல்வது உண்மை தானா?” என்றார்கள். அதற்குத் தோழர்கள் ஆம் என்றனர். பின்னர் நபியவர்கள் இறுதி இரண்டு ரக்ஆத்களையும் தொழுது விட்டு இரண்டு ஸஜதாக்கள் செய்தார்கள். (புகாரி’ முஸ்லிம்)
(3)    தொழுகையின் கடமை அல்லது அதன் நிபந்தனை எதனையும் விட்டு விடுதல். அப்போழுது அந்தத் தொழுகையை மீண்டும் தொழுதல் அவசியம். ஏனெனில் இவ்வாறு தொழுகையில் தவறு செய்த ஒருவரிடம்,
إرجع فصل فإنك لم تصل (متفق عليه)
“நீங்கள் மறுபடியும் தொழுங்கள். ஏனெனில் நீங்கள் தொழவில்லை” என்று நபியவர்கள் கூறினார்கள்.  (புகாரி, முஸ்லிம்) ரஸூல் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறக் காரணம், தொழுகையின் கடமை ஒவ்வொன்றையும் நிறைவேற்றும் போது சற்று அமைதியாக  தாமதித்திருக்க வேண்டிய طمأنينة மற்றும் ருகூவை அடுத்த إعتدال  எனும் ‘இடை’ நிலை ஆகிய இரு கடமையையும் செய்யாமல் அம்மனிதர் தவிர்ந்து கொண்டதனாலாகும்.
(4)    தொழுகையுடன் சம்பந்தமில்லாத சைகை மூலம் ஸலாத்திற்கு பதில் சொல்லல், உடையை சரிபடுத்திக் கொள்ளல், கையால் உடம்பை சொரிதல் போன்ற கருமங்களை அதிகமாகச் செய்தல். ஆனால் இவற்றை சிறிதளவு செய்வதன் காரணமாக தொழுகை முறியாது.
(5)    சப்தமிட்டுச் சிரித்தல். இது தொழுகையை முறித்துவிடும் என்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவாகும். ஆனால் புண்முறுவல் விடயத்தில் பெரும் பாண்மை உலமாக்களின் முடிவு அது தொழுகையை முறிக்காது என்பதே.
(6)    பர்ழு தொழுகைகளை வரிசைப்படி செய்யா திருத்தல். உதாரணமாக மஃரிபுத் தொழுகையைத் தொழாது இஷாத் தொழுகையைத் தொழல். ஏனெனில், பர்ழுத் தொழகைகள் வரிசை முறைப்படி கிரமமாகக் கடமை யாக்கப்பட்டுள்ள படியால், பர்ழுத் தொழுகைகளுக் கிடையில் அந்த ஒழுங்கு முறைகளைப் பேணுவது கடமை. ஆகையால் மஃரிபுத் தொழுகையைத் தொழாது இஷாத் தொழுதால், அந்த இஷாத் தொழுகை பாத்திலாகி விடும்.
(7)    கடும் மறதி. உதாரணமாக தொழுகையின் ரக்ஆத்துக்களை அதே அளவு அதிகரித்தல். எனவே ஒருவன் இஷாத் தொழுகையை எட்டு ரக்ஆத்துக்களாகக் கூட்டித் தொழுவதானது, தொழுகையின் உயிரான உள்ளச்சம் அவனிடம் இல்லை என்பதற்குப் பலமான ஆதாரமாகும். ஆகையால் இத்தகைய மறதி தொழுகையை பாத்திலாக்கி விடும்.
ஸஜதா ஸஹ்வு
தொழுகையில் மறதியாக நிகழ்ந்த இடையூருக்குப் பரிகாரமாகச் செய்யும் இரண்டு  ஸுஜூத்களும் ஸஜதா ஸஹ்வு எனப்படும்.
ஸுஜூத் ஸஹ்வுக்கான காரணிகள் மூன்று:
    (1) கருமத்தில் அதிகரிப்புச் செய்தல்  .
    (2) கருமத்தில் குறைசெய்தல்.
    (3) கருமத்தில் சந்தேகம் உண்டாதல்.
(1)கருமத்தில் அதிகரிப்புச் செய்தல்  .
    எவரேனும் தொழும் போது மறதியாக ருகூஃ ஸுஜூத் போன்ற கருமங்களை மேலதிகமாகச் செய்தால் அவர் தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் கொடுத்த பின் இரண்டு ஸஜதா செய்வது அவரின் மீது கடமை.
عن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى الظهر خمسا فقيل له أزيد في الصلاة فقال وما ذاك ؟ قالوا صليت خمسا فسجد سجدتين بعدما سلم وفي رواية فثنى رجليه واستقبل القبلة فسجد سجدتين ثم سلم. (متفق عليه)
“நபியவர்கள் ழுஹரை ஐந்து ரக்அத்தாகத் தொழுதார்கள். அப்பொழுது தொழுகையில் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளதா? என்று அன்னாரிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது நபியவர்கள் அது என்ன? என்று கேட்டார்கள். அப்பொழுது தாங்கள் ஐந்து ரகத்துகள் தொழுதீர்கள் என்று தோழர்கள் கூறினார்கள். ரஸூல் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தபின் இரண்டு ஸுஜூத் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள்   அறிவிக்கிறார்கள்.   இன்னொரு அறிவிப்பில் ரஸூலுல்லாஹ் தங்களின் இரு கால்களையும் மடித்து கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸுஜூதுகள் செய்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள்”. என்று பதிவாகி யுள்ளது.(புகாரி, முஸ்லிம்)
    ஒருவன் தொழுகை பூர்த்தியடையுமுன் இடையில் ஸலாம் கொடுப்பதானது ஒரு அதிகப்படியான செயலாகும்.எனவே இதனை  மறதியாகச் செய்தவனுக்குச் சொற்ப நேரத்தில் அது  ஞாபகத்திற்கு வந்தால், அவன் தன்னுடைய தொழுகையை நிறைவு செய்து, ஸலாம் கொடுப்பான். . அதன் பின் மறதிக்காக இரண்டு ஸுஜூதுகள் செய்துவிட்டு மீண்டும் ஸலாம் கொடுப்பான் இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது
    “ஒரு முறை நபியவர்கள் ழுஹர் அல்லது அஸர் தொழுகையை தொழ வைத்தார்கள். இரண்டாம் ரகஅத்தில் ஸலாம் கொடுத்து விட்டு  அவசரமாக பள்ளிவாயலின் ஒரு வாயிலாக வெளியேறினார்கள் . அப்பொழுது தொழுகை சுறுக்கப்பட்டு விட்டது என்று மக்கள் கூறலாயினர். நபியவர்களோ எழுந்து ஒரு மரக்கட்டை மீது சாய்ந்து கொண்டார்கள். அப்பொழுது அன்னார் கோபத்துடன் இருப்பது போல் தெரிந்தது. அச்சமயம் ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே தாங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது  தொழுகை சுறுக்கப் பட்டதா? என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் நான் மறக்கவுமில்லை, தொழுகை சுறுக்கப் படவுமில்லை என்றார்கள். அப்பொழுது அம்மனிதர், அப்படியல்ல. தாங்கள் மறந்து விட்டீர்கள் என்றார். ரஸூல் (ஸல்) அவர்கள், இவர் கூறுவது உண்மைதானா என்று தோழர்களிடம் கேட்டார்கள். அவர்கள் ஆம் என்று கூறினர்.  எனவே நபியவர்கள் முன்னால் வந்து தொழுகையின் எஞ்சிய பகுதியை தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜதா செய்து விட்டு ஸலாம் கொடுத்தர்கள் என்று  அபூ ஹுரைரா  (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)    
(2) கருமத்தில் குறைசெய்தல்.
தொழுகையின் வாஜிபுகளில் ஒன்றை மறதியாக விட்டவன், அதற்காக  ஸலாம் கொடுக்கு முன் ஸஜதா ஸஹ்வு செய்தல் வேண்டும். உதாரணமாக நடு அத்தஹிய்யாத் ஓத மறந்தவனுக்கு, அப்பொழுதே நினைவுக்கு   வரவில்லை என்றால், அல்லது  மூன்றாம் ரகஅத்துக்காக எழுந்து நின்ற பின்னர் அது அவன் நினைவுக்கு வந்தால், அவன் நடு அத்தஹிய்யாத்துக்காக திரும்பி வரக்கூடாது. ஆனால் ஸலாம் கொடுக்க முன், ஜதா ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் “ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு முறை தங்களுக்கு ழுஹர் தொழுகை தொழ வைத்தார்கள். அப்பொழுது அன்னார் இரண்டாம் ரக்அத்தில் அமர்ந்து கொள்ளாமல் எழுந்து நின்றார்கள். எனவே அன்னாருடன் ஜனங்களும் எழுந்து நின்றனர். பின்னர் நபியவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் கொடுக்கும் வரை அவர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அன்னார் ஸலாம் கூறவில்லை. அதற்கு முன்  அத்தஹிய்யாத்தில் இருந்த வாறு தக்பீர் கூறி விட்டு, இரண்டு தடவை ஸஜூது செய்தார்கள்,  அதன் பின் ஸலாம் கொடுத்தார்கள்” என்று புஹைனா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
(3)கருமத்தில் சந்தேகம் உண்டாதல்.
இரண்டு கருமங்களில் எது நிகழ்ந்தது என்பதைத் தீர்மாணிப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். அதுவே சந்தேகம் எனப்படுகிறது. எனவே அதிகம், குறைவு எனும் விடயத்திலும் சந்தேகம் நிகழும். உதாரணமாக தான் தொழுதது மூன்று ரக்ஆத்துக் களா, அல்லது நான்கு ரக்ஆத்துக்களா? என்ற விடயத்தில்  தொழுது கொண்டிருப்பவனுக்கு சந்தேகம் ஏற்படலாம். இந்த சந்தேகம் இரண்டு வகையில் ஏற்படலாம்.  
(அ) அதிகம் அல்லது குறைவு எனும் இரண்டு விடயங்களில் ஏதேனும் ஒன்றின் மீது அவனின் ஊகம் மேலோங்கியிருத்தல். அப்பொழுதவன் தன்னுடைய மேலோங்கிய ஊகத்தின் பிரகாரம் காரியத்தை செய்து முடித்து, ஸலாம் கொடுத்த பின் அவன் ஸஜதா ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும்.
(ஆ), அதிகம், குறைவு எனும் இரு விடயங்களில் எதன் மீதும் அவனின் ஊகம் சார்பில்லாதிருத்தல். அப்பொழுதவன் குறைந்த எண்ணிக்கை மீது உறுதி கொண்டு அதன்படி  தொழுகையைப் பூர்த்தி செய்து கொள்வான். மேலும் ஸலாம் கொடுக்கு முன்  இரண்டு ஸுஜூதுகளுடன் ஸஜதா ஸஹ்வும் செய்து கொள்வான். ஏனெனில் “ஒருவன் தொழும் போது தான் தொழுதது மூன்றா அல்லது நான்கா? என்று அறிய முடியாதவாறு அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், அவன் சந்தேகத்தைப் புரம் தள்ளி விட்டு உறுதியான ஒன்றின் மீது (குறைந்த எண்ணிக்கை மீது)  அதனைக் நிறுவிக் கொள்வான். பின்னர் ஸலாம் கொடுக்கு முன் இரண்டு ஸஜதாக்களும் செய்து கொள்வான். அப்பொழுது அவன் தொழுதது ஐந்தாக இருப்பின்  அவை அவனுடைய தொழுகையை ஒரு இரட்டைத் தொழுகையாக ஆக்கி விடும். அவ்வாறின்றி அவன் தொழுதது நான்கு ரக்ஆத்துக்களைப் பூர்த்தி செய்யும்படியாக இருந்தால் அவ்விரு ஸுஜூது களும் சைத்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் படியாக அமையும்:” என ரஸூல் (ஸல்) கூறினார்கள், என்று அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
    முன் கூறியதின் சாராம்சம்:
சில சமயம் ஸலாம் கொடுக்கு முன்னரும், இன்னும் சில சமயம் ஸலாம் கொடுத்த பின்னரும் ஸஜதா ஸஹ்வு செய்தல் வேண்டும் என்பதும், மேலும் இரண்டு சமயங்களில் ஸலாம் கொடுத்த பின்னரும், இன்னும் இரண்டு சமயங்களில் ஸலாம் கொடுக்கு முன்னரும் ஸஜதா ஸஹ்வு செய்ய வேண்டுமென்பது தெனிவாகின்றது. எனவே ஸலாம் கொடுத்த பின் ஸஜதா ஸஹ்வு செய்ய வேண்டிய இரண்டு சந்தர்ப்பங்களுமாவன:  
I.    அதிக விடயத்தில் சந்தேகம் வரும் போது,
II.    சந்தேகம் ஏற்பட்ட இரு விட.யங்ளில் எவையேனும் ஒன்றின் மீது சார்பு மேலிடும் போது.   
ஸலாம் கொடுக்கு முன் ஸஜதா ஸஹ்வு செய்ய வேண்டிய இரண்டு சந்தர்ப்பங்களுமாவன:  
I.    குறைந்த விடயத்தில் சந்தேகம் வரும் போது.
II.    சந்தேகம் ஏற்பட்ட இரு விட.யங்ளில் எவையேனும் ஒன்றின் மீது சார்பு மேலிடும் போது.   
ஸஜதா ஸஹ்வு பற்றிய சில மேலதிக விளக்கம்
I.    தொழுது கொண்டிருப்பவன்  கைவிட்ட பர்ழான கடமை ‘தக்பீர் தஹ்ரீமா’  எனில், அதனை அவன் வேண்டு மென்றோ அல்லது மறதியாகவோ விட்டு விட்ட போதிலும் அவனின்  தொழுகை செல்லுபடியாகாது. ஏனெனில் தக்பீர் தஹ்ரீமா இன்றி தொழுகை உருப்பெறாது. ஆனால் தஹ்ரீமா அல்லாத ஒரு கடமையை அவன் வேண்டுமென்று விட்டு விட்டால் அவனின் தொழுகை முறிந்து விடும். எனினும் அதனை அவன் மறதியாக விட்ட நிலையில் அடுத்த ரக்அத்தின் தானத்தை அவன் அடைந்தால், அவனின் முந்திய ரகஅத் செயலிழந்து, அடுத்துள்ள ரகஅத் அதன் இடத்தைப் பெறும்.  ஆனால் அடுத்த ரக்அத்தின் தானத்தை இன்னும் அவன் அடைய வில்லை யெனில், அவன் முந்திய ரக்அத்திற்குத் திரும்பி வருவதும், முன்னர் விட்டு விட்ட கடமையையும், அதனைத் தொடர்ந்துள்ள கருமங்களையும் செய்வது அவன் மீது கடமை. இவ்விரு நிலையிலும் ஸலாம் கொடுத்த பின்னரோ, அல்லது அதற்கு முன்னரோ ஸஜதா செய்வது அவன் மீது கடமை.
II.    ஸலாம் கொடுத்த பின்னர் ,ஸஜதா ஸஹ்வு, செயதால், இன்னொரு முறை ஸலாம் கொடுப்பது கடமை.
III.    தொழுகையின் வாஜிபுகளில் ஏதேனும் ஒன்றை வேண்டு மென்று ஒருவன் விட்டு விட்டால் அவனதுன் தொழுகை முறிந்து விடும் ஆனால் அவன் அதனை மறதியாக விட்டு விட்டால், அவன் இருக்கும் தானத்தை விட்டும் நகரு முன், அது அவனுக்கு ஞாபகம் வந்தால், அவன் அந்த வாஜிபான காரியத்தைச் செய்ய வேண்டும். அதுவல்லாது வேறு எதுவும் அவன் மீது கடமையாகாது. ஆனால் அதன் தானத்தை அவன் விட்டுப்  பிரிந்து  அடுத்த கடமையை அவன் அடையு முன் அவனுக்கு அது ஞாபகம் வந்தால், அவன் தன்னுடைய முந்திய நிலைக்குத் திரும்பி வந்து அதனைச் சரி செய்து கொள்ள வேண்டும். பின்னர்  தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் கொடுத்து விட்டு, ஸஜதா ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து அவன் ஸலாம் கொடுப்பான். ஆனால் அடுத்த கடமைக்கு சென்ற பின்  அது அவனுக்கு ஞாபகம் வந்தால், அதற்காக அவன் திரும்பி வரக்கூடாது. அதன் பொறுப்பு அவனை விட்டும் நீங்கி விடும். ஆகையால் அவன் தன் தொழுகையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேன்டும். பின்னர் நடு அத்தஹிய்யாத் விடயத்தில் முன்னர் குபிப்பிட்டது போல ஸலாம் கொடுக்க முன் ஸஜதா ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும்.  
தொழும் முறை
I.    தொழுகையின் நேரம் பிரவேசித்ததன் பின் ஒரு முஸ்லிம் தொழுகையை நிறைவேற்றத் ஆயத்தமாவார்.அப்பொழுதவர் வுழூவுடனும், அவ்ரத்தை மறைத்துக் கொண்ட நிலையிலும்  தன்னுடைய முழு மேனியையும் கிப்லாவை முன்னோக்கியவாறு நின்று கொள்வார்,
II.    பின்னர் தான் தொழ விரும்பும் தொழுகையை வாயால் மொழியாது,  மனதால் நினைத்துக் கொள்வார்.
III.    பின்னர் இரு கைகளையும் இரண்டு புயங்களுக்கும் நேரே உயர்த்தியவாறு தக்பீர் இஹ்ராமுக்காக அல்லாஹு அக்பர் என்று கூறுவார்.
IV.    தன்னுடைய வலது கரத்தை இடது கரத்தின் மீது நெஞ்சுக்கு மேல், அல்லது நெஞ்சுக்குக் கீழே தொப்புழுக்குக் மேலால் வைத்துக் கொள்வார்.
V.    பின்னர் தொழுகையின் ஆரம்பத்தில் ஒதவேண்டிய துஆவை ஓதிக் கொள்வார். அதைத் தொடர்ந்து அஊது பிஸ்மியுடன் ஸூரா பாதிஹாவை  ஓதுவார்.   ولا الضالين    என்பதை அடைந்ததும் ஆமீன் என்று சொல்வார். பின்னர் ஒரு ஸூரா, அல்லது குர்ஆனிலிருந்து தனக்கு வசதியான ஏதேனும் வசனங்களை ஓதுவார்.
VI.    பின்னர் இரு கைகளையும் இரண்டு புயங்களுக்கு நேராக உயர்த்தி  அல்லாஹு அக்பர் என்று கூறிய வாறு ருகூஃ செய்வார்.  அப்பொழுது இரண்டு முழங் காலையும் உள்ளங் கைகளால் நன்றாகப் பிடித்துக் கொண்டு, முதுகை நீட்டியவாறு வைத்துக் கொள்வார், அப்பொழுது  தலையை உயர்த்தாமலும் பணிக்காமலும் இருப்பதும், முழங் கால்கள் மீது விரல்களை விரித்து வைத்துக் கொள்வதும் அவசியம்.   
 
VII.    ருகூவில் سبحان ربي العظيم என்று மூன்று தடவைகள் அல்லது அதைவிட அதிமாகக் கூறுவார்.

VIII.    பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் இரு கைகளையும் புயத்துக்கு நேராக உயர்த்தி سمع الله لمن حمده என்று கூறுவார். மேலும் இஃதிதால் எனும் நடு நிலையில் சீராக நின்றதும்,
    ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه
என்று கூறுவார்.
(9)  பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜூது செய்வார். ஸுஜூதின் போது ஏழு உருப்புக்களும் நிலத்தில் படுதல் அவசியம். அவையாவன: நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங் கைகள், இரண்டு முழங் கால்கள், இரண்டு பாதங்களின் ஓரம் என்பன. இச்சந்தர்ப்பத்தில் மூக்கும், நெற்றியும் நிலத்தில் படும் அதே சமயம் இரண்டு கை சந்துகளும் விலாவை விட்டும் தூரமாக இருப்பதும், இரண்டு முன் கைகளையும் நிலத்தில் விரிக்காமல் இருப்பதும், விரல்களின் நுனிகளை கிப்லாவை நோக்கியவாறு வைத்துக் கொள்வதும் அவசியம்.

(10) ஸுஜூதில் سبحان ربي الأى  என்று மூன்ற தடவைகள் கூறுவார்.

(11) பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்தி  இடது காலை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்வார். அவ்வமயம் வலது காலை நட்டி அதனை செங்குத்தாக வைத்துக் கொண்டு رب اغفرلي وارحمني وعافني واهدني وارزقني என் இரட்சகனே! என்னை மன்னித்து எனக்கு அருள் புரிவாயாக. மேலும் எனக்கு நல்லாரோக்கியத்தை தந்து, நேரிய வழியையும், ஆகாரத்தையும் தந்தருள் வாயாக, என்று இரைஞ்ச  வேண்டும்.
(12) பின்னர் முன் குறிப்பிட்டது போன்று ஸுஜூது செய்வார். அதனை அடுத்து தக்பீர் கூறியவாறு இரண்டாவது ரக்அத்துக்காக எழுந்திருப்பார். அதில் தொழுகையின் துவக்கத்தில் ஓதும் துஆ நீங்கலாக முதலாம் ரக்அத்தில் மேற் கொண்ட சகல கருமங்களையும் செய்வார். மேலும் அந்தத் தொழுகை ஸபுஹுத் தொழுகை போன்று இரண்டு ரகஆத் தொழுகையாயின், அத்தஹிய்யாத் ஓதி, ரஸூல் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறிய பின் வலது பக்கம் திரும்பி “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்றும், பின்னர் இடது பக்கம் திரும்பி மறுபடியும் அவ்வாறு கூறி ஸலாம் சொல்வார்.
 (13) இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையல்ல வெனில் அதன் முதலாம் அத்தஹிய்யாத்தில்,
أشهد أن لاإله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
என்பதுடன் நிறுத்திக் கொண்டு, கைகளை புயங்களுக்கு நேராக உயர்த்தி தக்பீர் கூறியபடி எழுந்து நின்று கொள்வார். அதன் பின் முன்னர் கூறிய முறைப்படி தொழுகையின் எஞ்சிய பகுதிதை  தொழுது முடிப்பார். ஆனால் ஓதலை ஸூரா பாதிஹாவுடன் சுறுக்கிக் கொள்ள வேணடும்.

(14) பின்னர் வலது பாதத்தை நிற்பாட்டி, வலது கெண்டைக் காலின் கீழால் இடது பாதத்தை வெளியே எடுத்து, பூமியின் மீது பின்தட்டை அழுத்தியபடி அமர்ந்து கொள் வார். மேலும் தொடைகள் மீது இரு கைகளையும் வைத்தவாறு அத்தஹிய் யாத்தும், நபிகளார் மீது ஸலவாத்தும் ஓதுவார். அதனைத் தொடர்ந்து நரகத்தி னதும், கப்ரினதும் வேதனைகளையும், மற்றும் வாழ்க்கையினதும், மரணத்தினதும்,  தஜ்ஜாலினதும், பித்னாக்களையும் விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும்.

(15) பின்னர் முதலில் வலது பக்கமாகவும், அதை அடுத்து இடது பக்கமாகவும் திரும்பி சப்தமிட்டு ஸலாம் சொல்ல வேண்டும்.

 


கூட்டுத் தொழுகை
கூட்டுத் தொழுகையின் சட்டம்:

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ أَعْمَى ، فَقَالَ : إِنَّهُ لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِي إِلَى الْمَسْجِدِ فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ أَنْ يُرَخِّصَ لَهُ أَنْ يُصَلِّيَ فِي بَيْتِهِ ، فَرَخَّصَ لَهُ فَلَمَّا وَلَّى دَعَاهُ ، فَقَالَ : " هَلْ تَسْمَعُ النِّدَاءَ ؟ " فَقَالَ : نَعَمْ ، قَالَ : " فَأَجِبْ
“ரஸூல் (ஸல்) அவர்களிடம் ஒரு அந்தகர் வந்தார். அவர் நபிகளாரிடம், தன்னைப் பள்ளிவாயலுக்கு அழைத்து வர யாரும் இல்லாத படியால், தனக்கு தன் வீட்டில் தொழ அனுமதி தருமாறு வேண்டினார். எனவே அவருக்கு நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள். பின்னர்  அம்மனிதர் திரும்பிச் செல்லுகையில், அவரை நபியவர்கள் அழைத்து, அதான் ஓசை உங்களுக்குக் கேட்கின்றதா? என்றார்கள். அதற்கு அம்மனிதர் ஆம் என்றதும் அப்படியாயின் அதற்கு நீங்கள் பதிலளியுங்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(2) عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم { أثقل الصلاة على المنافقين : صلاة العشاء ، وصلاة الفجر . ولو يعلمون ما فيها لأتوهما ولو حبوا . ولقد هممت أن آمر بالصلاة فتقام ، ثم آمر رجلا فيصلي بالناس ، ثم أنطلق معي برجال معهم حزم من حطب إلى قوم لا يشهدون الصلاة ، فأحرق عليهم بيوتهم بالنار (متفق عليه)
“முனாபிக்குகளுக்கு மிகவும் பாரமான தொழுகை இஷாவின் தொழுகையும், பஜ்ர் தொழுகையு மாகும். அதன் நன்மையை அவர்கள் அறிவார்களாயின், அவ்விரண்டையும் அடைய அவர்கள் தவழ்ந்தாயினும் வருவார்கள்.   தொழுகைக்காக இகாமத் சொல்லும்படியும், பின்னர் ஒருவரை தொழ வைக்கும்படி கட்டளை யிடவும், பின்னர் விரகு கட்டுகள் சகிதம் நான் சில ஆண்களுடன் தொழுகைக்கு சமூகமளிக்காத கூட்டத்தினரின் வீடுகளுக்குச் சென்று அவற்றை நெருப்பால் எரித்து விட வேண்டு மெனவும் சில வேளை நினைக்கின்றேன்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).
    
(3)قَالَ أَبُو الدَّرْدَاءِ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " مَا مِنْ ثَلاثَةٍ فِي قَرْيَةٍ وَلا بَدْوٍ لا تُقَامُ فِيهِمُ الصَّلاةُ إِلا اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ , فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ "
“கூட்டுத் தொழுகை நிலை நிறுத்தப்படாத, மூன்று பேருள்ள, ஒரு கிராமத்திலும், பாலை வனத்திலும்,  அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம்  செலுத்தாமல் இருப்பதில்லை. ஆகையால் நீங்கள் ஜமாஅத்துடன் இருங்கள். ஏனெனில் மந்தையை விட்டும் விலகியிருக்கும் ஆட்டைத்தான் ஓநாய் பிடிக்கும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன், என்று அபூ தர்தாஃ (ரழி) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூ தாவுத்).
(4)عن ابن عباس رضي الله عنهما، أن النبي صلى الله عليه وسلم قال:   من سمع النداء فلم يأت فلا صلاة له إلا من عذر
“மன்னிப்பளிக்கப்பட்டவனைத் தவிர, அதான் ஒசையைக் கேட்டும் பள்ளிவாயலுக்கு வராதவனின்  தொழுகை, தொழுகையல்ல” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூ தாவுத், இப்னு மாஜா)
وعن ابن مسعود رضي الله عنه قال من سره أن يلقي الله تعالى غدا مسلما فليحافظ على هؤلاء الصلوات حيث ينادي بهن فإن الله شرع لنبيكم صلى الله عليه وسلم سنن الهدى وإنهن من سنن الهدى ولو أنكم صليتم في بيوتكم كما يصلي هذا المتخلف في بيته لتركتم سنة نبيكم ولو تركتم سنة نبيكم لضللتم ولقد رأيتنا وما يتخلف عنها إلا منافق معلوم النفاق ولقد كان  الرجل يؤتى به يهادي بين الرجلين حتى يقام في الصف رواه مسلم وفي رواية له قال إن رسول الله صلى الله عليه وسلم علمنا سنن الهدى وإن من سنن الهدى الصلاة في المسجد الذي يؤذن فيه (رواه مسلم)
“நாளைய தினம் தானொரு முஸ்லிம் என்ற நிலையில் அல்லாஹ்வின் தரிசனத்தைப் பெற்று சந்தோசமடைய விரும்புகின்றவர், இந்த தொழுகைகளுக்காக எங்கு அழைப்பு விடுக்கப் படுகின்றதோ அதனை அவர் பேணி வரவும். ஏனெனில் நேரிய வழியை அடையும் பாதைகளை உங்களின் நபிக்கு அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். எனவே நீங்கள் இதனைப் புறக்கணித்து விட்டு, தங்களின் வீடுகளில் தொழுகின்றவனைப் போன்று நீங்களும் உங்களின் வீடுகளில் தொழுது வந்தால், நீங்கள் நபியின் வழியைத் தவற விட்டவர்களாவீர்கள். நபியின் வழியை நீங்கள் தவற விட்டாலோ, நீங்கள் வழிகெட்டு விட்டீர்கள். மேலும்  நம்மில் முனாபிக் என்று அறியப்பட்டவரல்லாது வேறு எவரும் இதனைப் புறக்கணிக்கவில்லை என்பதையும், மேலும் பள்ளி வாயலுக்கு வர இயலாத ஒருவர்,  இருவரின் உதவியுடன் தொழுகைக்காக ஸப்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டதையும் நான் கண்டுள்ளேன்.” என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள். இன்னு மொறு அறிவிப்பில் “ரஸூல் (ஸல்) அவர்கள் நேரான வழிகளை நமக்குக் கற்றுத் தந்தார்கள். அதான் கேட்கும் பள்ளியில் தொழுவதும் நேர்வழிகளில் ஒன்றே, என்று  நபியவர்கள் கூறினார்கள் என பதிவாகியுள்ளது. (முஸ்லிம்)   
அதன் சிறப்பு
கூட்டுத் தொழுகையின் சிறப்பு மகத்தானது. அதன் கூலியும் பாரியது. இதனை பல ஹதீஸ்கள் உறுதி படுத்துகின்றன. அவற்றில் சில வருமாறு:
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال:  " صلاة الجماعة تفضل صلاة الفذ بسبع وعشرين درجة "
“தனியாகத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறப்பு வாய்ந்தது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة تزيد على صلاته في بيته وصلاته في سوقه بضعا وعشرين درجة وذلك أن أحدهم إذا توضأ فأحسن الوضوء ثم أتى المسجد لا ينهزه إلا الصلاة لا يريد إلا الصلاة فلم يخط خطوة إلا رفع له بها درجة وحط عنه بها خطيئة حتى يدخل المسجد فإذا دخل المسجد كان في الصلاة ما كانت الصلاة هي تحبسه والملائكة يصلون على أحدكم ما دام في مجلسه الذي صلى فيه يقولون اللهم ارحمه اللهم اغفر له اللهم تب عليه ما لم يؤذ فيه ما لم يحدث فيه (متفق عليه)
“ஒருவன் தன் வீட்டிலும், கடையிலும் தொழுவதைப் பார்க்கிலும் ஜமாஅத்தாக தொழுவது, இருபத்தைந்து மடங்கு அந்தஸ்து கூடியது. அதாவது ஒருவர் நல்ல முறையில் வழூ செய்து தொழுகை ஒன்றையே நாடியவராக பள்ளிவாயலுக்கு எழுந்து வருவராகில், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்காகவும் அவரின் ஒரு அந்தஸ்து உயர்த்தப்படும். மேலும் அதன் நிமித்தம் அவரின் ஒரு பாவம் அழிக்கப்படும். அவர் பள்ளிக்குள் பிரவேசித்து தொழுகையில் இருக்கும் போதும், வுழூ முறியாமல் தான் தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் காலம் முழுவதிலும், மலக்குகள் அவர் மீது ஸலாம் கூறி அல்லாஹ்வே! அவரின் மீது அருள் புரிவாயாக. அல்லாஹ்வே!  அவரை மன்னித்தருள்வாயாக. என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள், என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள், என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார் கள் (புகாரி, முஸ்லிம்).
இமாமுடன் இன்னொருவர் இருந்தால்
ஜமாஅத் உண்டாகிவிடும்.  
இமாமுடன் இன்னொருவர் இருந்தால், அவர் சிறுவனாகவோ, பெண்ணாகவோ இருந்த போதிலும் ஜமாஅத் உருவாகிவிடும். மேலும் கூட்டுத் தொழுகையில் மக்கள் தொகை அதிகரிப்பதை அல்லாஹ் மிகவும் விரும்புகிறான்.
“ஒருவர் தனித்துத் தொழுவதைப் பார்க்கிலும் அவர் இன்னொருவருடன் சேர்ந்து  தொழுவது மிகத் தூய்மையானது. மேலும் அவர் இரண்டு பேருடன் தொழுவது அவர் ஒருவருடன் தொழுவதைப் பார்க்கிலும் மிகத்தூய்மையானது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று உபை இப்னு கஃபு (ரழி) அவர்கள் அறிவிக்கின்ரார்கள். (அஹ்மத், அபூ தாவுத்)
பெண்கள் பள்ளிக்கு வருதல்
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதும், அவர்கள் ஜமஅத் தொழுகையில் கலந்து கொள்வதும் ஆகும். எனினும் இச்சையைத் தூண்டவும், மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தவும் கூடிய அழங்காரம், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அதற்கு ஒரு நிபந்தனை. ஏனெனில் நபியவர்கள்,
لا تمنعوا إماءالله مساجدالله وليخرجن تفلات (رواه احمد وابو داود)
“அல்லாஹ்வின் அடியார்களை, அல்லாஹ்வின் பள்ளிவாயல்களை விட்டும் தடுக்காதீர்கள். அவர்கள் வாசம் பூசிக் கொள்ளாமல் புறப்படட்டும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனினும் பெண்கள் தம் வீடுகளில் தொழுவதே சிறந்தது. இது பற்றி நபியர்கள் கூறும் போது:
لاتمنعوا نساءكم المساجد وبيوتهن خير لهن (رواه أحمد وابو داود)
“உங்களின் பெண்களை பள்ளவாசலை விட்டும் தடுக்காதீர்கள். எனினும் அவர்களின் இல்லங்களே அவர்களுக்குச் சிறந்தது” என்று கூறினார்கள். (அஹ்மத், அபூ தாவுத்)
ஜும்ஆ தொழுகை
அதன் சட்டம்:
இரண்டு ரக்ஆதுகளைக் கொண்ட ஜும்ஆ தொழுகை ஆண்கள் மீதான ஒரு கடமை.  இது கட்டாயக் கடமை என்பதற்கான ஆதாரம் வருமாறு:
(1)    அல்குர்ஆனின் கட்டளை:
“நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமை யன்று ஜுமுஆ தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே
(2)    நபிகளாரின் கூற்று:
அடிமை, பெண், சிறுவன், நோயாளி ஆகிய நான்கு பேர்கள் நீங்களாகக் ஜும்ஆ தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவது உங்களுக்கு மிக நன்று. (62/9)ஏனைய அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.“(அபூ தாவுத்)

(3) இஜ்மாஃ:
 ஜும்ஆ தொழுகை கடமை என்பது இஜ்மாவின் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இத்தொழுகை கடமை என்பதில்   உலமாக்க ளிடையே கருத்து முரண்பாடு எதுவும் இல்லை. அது கடமை என்பதே அனைவரினதும் ஏகோபித்த முடிவாகும்.
ஜும்ஆவின் சிறப்பு:
ஜும்ஆ தினம் ஒரு அருள் மிக்க மகத்தான நாளாகும். மேலும் இத்தினம் நாட்களுக்கெல்லாம் தலைமை நாளாகவும், நாட்களில் சிறந்த நாளாகவும் திகழ்கிறது. இத்தினம் பற்றி நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:.
قالَ رَسُولُ اللَّهِ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ ، وَفِيهِ أُهْبِطَ ، وَفِيهِ تِيبَ عَلَيْهِ ، وَفِيهِ مَاتَ ، وَفِيهِ تَقُومُ السَّاعَةُ ، وَفِيهِ سَاعَةٌ لا يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ , عَزَّ وَجَلَّ , شَيْئًا إِلا أَعْطَاهُ إِيَّاهُ  "(ابو داود)
“நாட்களில் சிறந்தது ஜும்ஆவின் தினம். ஆதம் (அலை) சிருஷ்டக்கப்பட்டதும், அவர் பூமிக்கு இறக்கப்பட்டதும், அவரின் குற்றம் மன்னிக்கப் பட்டதும், அவர் வபாத்தானதும் அன்றுதான். மேலும் கியாமத் நாள் தோன்றுவதும் அன்று தான். அத்தினத்தில் ஒரு நேரம் உண்டு. அதில் ஒரு முஸ்லிம் அடியான் தொழுது அல்லாஹ்விடம் இரைஞ்சும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டால், அவன் வேண்டியதை அவனுக்கு  அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை.” (அபூ தாவுத், திர்மிதீ).
ஜும்ஆ தினத்தின் ஒழுங்குகளும், விரும்பத் தகுந்த கருமங்களும்:  
(1)    பல் துலக்கி, குளித்து, நறுமணம் பூசி, அழங்கரித்துக் கொள்ளல். ஏனெனில்,  
 غسل الجمعة واجب على كل محتلم (متفق عليه)                   
“ஜும்ஆ தினத்தில் குளிப்பது பருவ வயதை அடைந்த அனைவர் மீதும் கடமை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறிணார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலும் நபியவர்கள்:
 "  ما على أحدكم إن وجد سعة أن يتخذ ثوبين ليوم الجمعة سوى ثوبي مهنته " . رواه ابن ماجه .
“உங்களில் வசதி பெற்ற ஒருவர், ஜும்ஆ தினத்திற்காக தனது தொழில் ஆடைகள் (வழமையான ஆடைகள்) இரண்டையும் தவிர்ந்த இன்னும் இரண்டு உடைகளை வைத்துக்கொள்ள வேண்டு மென்ற கட்டாயமில்லை.  (அபூ தாவுத், இப்னு மாஜா) என்றும்
حق كل مسلم السواك وغسل يوم الجمعة وأن يمس من طيب أهله إن كان (رواه البزار)
“பல் துலக்கலும், ஜும்ஆ தினத்தில் குளித்தலும், தன் வீட்டில் வாசனைத் திரவியம் இருந்தால் அதனைப் பூசிக்கொள்வதும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரிய உரிமை” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(2)    ஜும்ஆ தொழுகைக்காக, அதன் நேரம் பிரவேசிக்குமுன் நேர காலத்துடன் பள்ளிக்குச் செல்லல். இதனை அடுத்து வரும் ஹதீஸ் வற்புருத்துகின்றது.
عَنْ أَبِي هُرَيْرَةَ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ : " مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ في الساعة الأولى فَكَأَّنَمَا قَرَّبَ بَدَنَةً , وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَّنَمَا قَرَّبَ بَقَرَةً , وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا , وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَّنَمَا قَرَّبَ دَجَاجَةً , وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً , فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ " . (متفق عليه)
“ஜும்ஆ தினத்தில் யார் துடக்கின் குளியைக் குளித்து விட்டு முதலாவது நேரத்தில் புறப்பட்டுச் சென்றாரோ. அவர் ஒட்டகம் ஒன்றை தர்மம் செய்தவர் போன்றும், எவர் இரண்டாவது நேரத்தில் புறப்பட்டுச்  சென்றாரோ, அவர் பசு வொன்றை தர்மம் செய்தவர் போன்றும், எவர் மூன்றாவது நேரத்தில் புறப்பட்டுச் சென்றாரோ அவர்  ஆடொன்றை தர்மம் செய்தவர் போன்றும், எவர் நான்காவது நேரத்தில் புறப்பட்டுச் சென்றாரோ அவர் கோழியொன்றை தர்மம் செய்தவர் போன்றும், எவர் ஐந்தாவது நேரத்தில் புறப்பட்டுச் சென்றாரோ அவர் முட்டையொன்றை தர்மம் செய்தவர் போன்றுமாவார். ஆனால் இமாம் வெளியே  வந்ததும், உபதேசத்தைக் கேட்தற்காக மலக்குகள் வந்து விடுவார்கள்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
(3)    பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்கு முன் நப்ல் தொழுவோர் இமாம் வருகை தரு முன் அதனை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையை மாத்திரம் இமாம் குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் போதும் சுருக்கமாகத் தொழலாம். இதனை நபியவர்களின் ஹதீஸ் உறுதி படுத்துகிறது.
“ஒரு மனிதன் ஜும்ஆ தினத்தில் குளித்து இயன்ற வரை தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு, தன்னிடமுள்ள எண்ணெயையும் தேய்த்துக் கொண்ட பின் அல்லது தன் இல்லத்திலிருக்கும் வாசனையைப் பூசிக் கொண்ட பின், பள்ளி வாயலுக்குச் சென்று இருவருக்கு மத்தியில் பிரித்து விடாதவாறு, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தொழுகையை தொழுத பின், இமாம் பேசுவதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தால், அவன் பெரும் பாவங்கள் செய்யாமல் இருக்கும் வரை, இந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரையிலான அவனின் தவறுகள் மன்னிக்கப் படும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி)
إذا جاء أحدكم يوم الجمعة والإمام يخطب فليركع ركعتين وليتجوز فيهما‏‏ (رواه أحمد ومسلم وأبو داود)‏
“உங்களில் எவரேனும் ஜும்ஆ தினத்தில் இமாம் குத்பா பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது வந்தால், அவர் இரண்டு ரக்ஆத்துக்களை தொழுது கொள்ளவும். மேலும் அந்த இரண்டுடன் அவர் போதுமாக்கிக் கொள்ளவும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
(4)    அமர்ந்து கொண்டிருப்போரின் கழுத்தை மிதித்துக் கொண்டு செல்வதும். அவர்களுக்கு மத்தியில் விரிசலை ஏற்படுத்துவதும் விரும்பத் தகாதவைகளாகும். ஏனெனில் மனிதரின் கழுத்தை மிதித்துக்கொண்டு செல்லும் ஒருவரைக்கண்ட நபியவர்கள்,
إجلس آذيت وآنيت
“உட்காரும். தாமதித்து வந்து தொல்லை கொடுக்கின்றாய்” என்று கூறினார்கள். (அபூ தாவுத்).
(5)    கதைத்தல், மற்றும் தேவையற்ற காரியங்களில் ஈடுபடாதிருத்தல். ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
إذا قلت لصاحبك يوم الجمعة والإمام يخطب أنصت فقد لغوت (متفق عليه)
“ஜும்ஆ தினத்தில் இமாம் குத்பா பிரசங்கம் நிகழ்த்திக் தொண்டிருக்கும் போது நீ உன் தோழனிடம் மெளணமாக இருந்துக் கொள் என்று கூறினால் உனது ஜும்ஆவை நீ வீனாக்கி விட்டாய்”
(6)    ஜும்ஆ தினத்தில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஹராம். ஏனெனில்:
“நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்காக, நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (62:9)
(7)    ஜும்ஆ தினத்திலும் அதன் இரவிலும், அதாவது வியாழன் பின்னேரத்திலும் ரஸூலுல்லாஹ்வின் மீது அதிகமதிகம் ஸலவாத்து ஓதல். ஏனெனில்,
أكثروا الصلاة علي في يوم الجمعة فإنه ليس يصلي علي أحد يوم الجمعة إلا عرضت علي صلاته (رواه الحاكم والبيهقي)
“ஜும்ஆ தினத்திலும், ஜும்ஆவின் இரவிலும் என் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுங்கள். ஏனெனில் எவர் வெள்ளிக் கிழமையன்று என் மீது ஸலவாத்து சொல்கின்றாரோ அவரின் ஸலவாத்து என்னிடம் காட்டப்படாமல் இருப்பதில்லை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் ஹாகிம், அல் பைஹகீ).
(8)    ஸூரதுல் கஹ்ப் ஓதுதல். இதனை வெள்ளிக்கிழமை தோரும் ஓதி வருவது விரும்பத் தக்க ஒரு செயலாகும். ஏனெனில்,
من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور مابين الجمعتين (رواه الحاكم والبيهقي)
“எவர் வெள்ளிக்கழமைகளில் ஸூரா ,அல் கஹ்ப், ஓதி வருவருகின்றாரோ, அது அவ்விரு ஜும்வுக்கும் மத்தியில் அவருக்குப் பிரகாசம் தரும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், (அல் ஹாகிம், அல் பைஹகீ)
(9)    பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரத்தை அடையும் பொருட்டு பிராத்தனை யில் கடுமையாக ஈடுபடல். ஏனெனில்,
“ஜும்ஆ தினத்தில் நிச்சயமாக ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது. அந்நேரத்தில் ஒரு அடியான் தொழுகையில் இருந்தவாறு அல்லாஹ்விடம் ஒரு நல்ல விடயத்தைக் கேட்டால் அதனை அவனுக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
இந்த நேரமானது ஜும்ஆ தினத்தின் இறுதிப் பகுதிலேயே அமைந்துள்ளது. இதனை அடுத்து வரும் நபி மொழி தெளிவு படுத்துகின்றது:
فعن جابر بن عبد الله عن رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنه قال: " يوم الجمعة ثِنْتا عَشْرَةَ ساعةً، منها ساعة لا يوجد عبد مسلم يسأل الله عز وجل فيها شيئاً؛ إلا أتاه الله عز وجل، فالتمسوها آخرَ ساعة بعد العصر ".(رواه أبو داود والنسائي)
“ஜும்ஆ தினத்தின் பண்ணிரெண்டு மணி நேரத்தில் ஒரு நேரம் இருக்கிறது. அந் நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியான் அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதனை அவனுக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அதனை அஸருக்குப் பின்னாலுள்ள கடைசி நேரத்தில் தேடிக்கொள்ளுங்கள் ” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், நஸாஈ).
மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
عن أبي هريرية رضي الله عنه قالَ قال رَسُولُ اللَّهِ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ ، وَفِيهِ أُهْبِطَ ، وَفِيهِ تِيبَ عَلَيْهِ ، وَفِيهِ مَاتَ ، وَفِيهِ تَقُومُ السَّاعَةُ ، ومامن دابة إلا وهي مسيخة يوم الجمعة من حين تصبح حتى تطلع الشمس شفقا من الساعة إلا الجن والإنس وَفِيهِ سَاعَةٌ لا يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ  حاجة إِلا أَعْطَاهُ إِيَّاهُا  "(ابو داود)
“நாட்களில் சிறந்தது ஜும்ஆ தினமாகும். ஆதம் (அலை) சிருஷ்டக்கப்பட்டதும், அவர் பூமிக்கு இறக்கப்பட்டதும், அவரின் குற்றம் மன்னிக்கப் பட்டதும், அவர் வபாத்தானதும் அன்று தான். மேலும் கியாமத் நாள் தோன்றுவதும் அன்று தான். மேலும் ஜின்னையும், மனிதனையும் தவிர ஏனைய உயிரினங்கள் யாவும் கியாமத் தினத்திற்குப் பயந்து ஒரு வெள்ளிக்கிழமை நாளில் அதி காலை முதல் சூரிய உதயம் வரையில் கியாமத் நாளை எதிர்பார்த்த வண்ணம் இருக்கும். மேலும்  வெள்ளிக்கிழமை தினத்தில் ஒரு நேரம் உண்டு. அந்நேரம் ஒரு முஸ்லிம் அடியானுக்கு கிடைக்கப் பெற்று, அப்பொழுது அவன் தொழுத வண்ணம் அல்லாஹ்விடம் தனது தேவை எதனையும் கேட்டால், அவன் வேண்டி யதை அவனுக்கு  அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை.” என்று ரஸூலுல்ல்ஹ் கூறிணார்கள், என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  (அபூ தாவுத், திர்மிதீ).
மேலும் கஃப் (ரழி)) அவர்கள் இந்நேரம் பற்றிக் குறிப்பிடும் போது அது வருடத்தில் ஒரு நாள் என்றார்கள். அதற்கு நான் அப்படியல்ல. எல்லா ஜும்ஆ தினத்திலும் என்றேன். பின்னர் தெளராத்தை ஓதிய கஃபு (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள், என்றார். பின்னர் நான் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அவர்களைச் சந்தித்து கஃபுடனான எனது சந்திப்புப் பற்றி அவரிடம் கூறினேன். அப்பொழுதவர், அந்த நேரம் எது வென்று நீங்கள் அறிவீர்களா? என்றார். அதற்கு அதனை எனக்கு அறியத்தாருங்கள், என்றேன். அதற்கு அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அவர்கள், அது ஒவ்வொரு ஜும்ஆ தினத்தினதும் கடைசி நேரம். என்றார்கள். அதற்கு நான், “ஒரு முஸ்லிம் அடியான் தொழுது கொண்டிருக்கும் போது அந்த நேரத்தை அடையப் பெற்றால்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிடும் நேரமோ தொழும் நேரம் அல்லவே. அப்படியிருக்க, அது ஜும்ஆ தினத்தின் இறுதி நேரமாக இருப்பது எப்படி? என்றேன். அதற்கு அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அவர்கள், “ஒருவன், ஒரு தொழுகைக்காகக் காத்திருந்து, அந்த தொழுகையைத் தொழும் வரையில் அவன் தொழுகையிலேயே இருக்கின்றான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறவில்லையா? என்றார்கள். அதற்கு நான் ஆம், என்றேன். அப்பொழுதவர், அதுதான் அந்த நேரம் என்றார்கள், என அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகின்றார் கள். (அபூ தாவுத், திர்மிதீ)
மேலும் இந்நேரமானது இமாம் மிம்பரில் அமர்ந்ததற்கும்,  தொழுகை முடிவடைவதற்கும் இடைப்பட்ட நேரம் என்றும் கூறப்பட்டுள்ளது
இஸ்லாத்தின் அடிப்படைகள் (தொடர்) 4ம் பாகம்
“இஸ்லாத்தின் அடிப்படைகள்” என்ற தலைப்பில் இஸ்லாத்தின் முதலாவது அடிப்படையான ஏகத்துவம் பற்றி முதலாம் பகுதியிலும், இரண்டாம் பகுதியில் இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை.யான தொழுகையை நிறைவேற்று முன்னர் கவணத்தில் கொள்ள வேண்டிய சுத்தம் பற்றிய சட்டங்கள் மற்றும் வேறு சில  அடிப்படைகள் பற்றியும் மூன்றாம் பகுதியில் தொழுகையின் பர்ழுகள் முதல் ஜும்ஆ தொழுகையுடன் தொடர்புள்ள சில முக்கிய விடயங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
 இவ்விதழ், ஜும்ஆ தொழுகை, மற்றும் மற்றும் ஸுன்னத்துத் தொழுகைகள் பற்றிய விவரங்களை யும், ஸகாத்து தொடர்பான சில விடயங்களையும் தாங்கி வருகின்றது. இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் ஏனைய விடயங்கள் பற்றி விவரிக்கப்படும்   
(மொழி பெயர்த்தோன்)    

 

ஜும்ஆத் தொழ கடமைப்பட்டோர்:
ஜும்ஆ தொழுகை, சுதந்திரமுள்ள சகல முஸ்லிம்  ஆண் கடப்பாட்டாளர் (கடமையாக்கப் பட்டவர்) மீதும் கடமையாகும். ஏனெனில்,
“அடிமை, பெண், சிருவன், நோயாளி ஆகிய நான்கு பேர்கள் நீங்கலாக ஜும்ஆ தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவது ஏனைய அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவுத்). எனினும் பிரயாணியின் மீது ஜும்ஆ கடமையாகாது. ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவும், ஜிஹாதுக்காகவும் பிரயாணம் செய்த சந்தர்ப்பங்களில் ஜும்ஆ தொழுதார்கள் என்பதற்கான தகவல் எதுவும் காணப்படவில்லை. மேலும் பயணக் கோலத்திலிருந்த ஒரு மனிதரை அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் பார்த்த போது, அம்மனிதன், “இன்று ஜும்ஆ தினமாக இல்லாதிருந்தால் நான் இன்று (பயணத்தில்) புறப்பட்டிருப்பேன்” என்று கூறினார். அப்பொழுது உமர் (ரழி) அவர்கள், “நீங்கள் புறப்படுங்கள். ஏனெனில் ஜும்ஆ தினமானது நிச்சயமாகப் பயணதைத் தடுக்காது” என்று கூறினார்கள். (முஸ்னத் ஷாபிஈ)      

ஜும்ஆ நிறைவேற நிபந்தனைகள்:
ஜும்ஆ நிறைவேற சில நிபந்தனைகள் உள்ளன அவையாவன:
1.    ஜும்ஆத் தொழுகையானது, ஒரு கிராமத்திலோ அல்லது, நகரத்திலோதான் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. ஏனெனில் இத்தொழுகை ரஸூல் (ஸல்) அவர்களின் காலத்தில் பட்டணங்களிலும், கிராமங்களிலுமே நிறைவேற்றப்பட்டு வந்தது. மேலும் இத்தொழுகையை பாலைவணத்தில் நிலை நிறுத்தும்படி ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளை பிரப்பிக்கவுமில்லை. அத்துடன் நாம் குறிப்பிட்டது போல, நபியவர்கள் பிரயாணத்தில் இருக்கும் போது ஜும்ஆ தொழுதார்கள் என்பதற்கான தகவல்களும் தெரிவிக்கப்பட வில்லை.
2.    ஜும்ஆவில் இரண்டு ‘குத்பா’ பேருரைகள் உள்ளடக்கப்படல் வேண்டும். ஏனெனில் இது நபியவர்களின் வழமையான நடவடிக்கையாக இருந்து வந்துள்ளது. மேலும் குத்பா பிரசங்கம் அல்லாஹ்வை நினைப்பதையும், அதனை முஸ்லிம் பிரஜைகளுக்கு நினைவூட்டு வதையும், மற்றும் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ள படியால் குத்பாப் பேருரை பயன் மிக்கது, என்பது தெளிவு.
ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றும் முறை:
    உச்சியிலிருந்து சூரியன் சாய்ந்த பின்னர், இமாம் மிம்பரில் ஏறி நின்று மக்களிடம் ஸலாம் கூறி அமர்ந்து கொள்வார். அதனையடுத்து முஅத்தின் பகற் பொழுதின் அதான் சொல்லி அழைப்பு விடுப்பார். அதான் ஒலி ஓய்ந்ததும், கதீப் எழுந்து நின்று பிரசங்கம் நிகழ்த்துவார். முதலில் அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்ந்து, அவனின் அடியாரும் தூதருமான முஹம்மது (ஸல்) அவர்களின் மீது  ஸலவாத்தும் ஸலாமும் உரைத்து, பின்னர் தனது நல்லுபதேசத்தைத் தொடருவார். அவ்வமயம் தன் ஒலியை உயர்த்தி மக்களுக்கு அறிவுருத்தும்     அவர் அல்லாஹ்வின தும், அவனின் தூதரினதும் கட்டளையை எடுத்து நடக்குமாரும், அவர்கள் இருவரும் தடை செய்தவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாரும் உபதேசம் செய்வார். மேலும் நல்ல காரியங்களைப் பற்றி ஆர்வமூட்டிக் கொண்டும், தீய காரியங்களைப் பற்றி அச்சமூட்டிக் கொண்டுமிருப்பார். அதே சமயம் அல்லாஹ்வின் தண்டனைகள் பற்றியும், அவனின் வாக்குறுதிகள் பற்றியும் மக்களுக்கு நினைவூட்டு வார். இவ்வாறு முதலாவது பிரசங்கத்தை நிறைவு செய்து, சற்று நேரம் அமர்ந்து கொள்வார். பின்னர் மீண்டும் எழுந்து பிரசங்கத்தை ஆரம்பம் செய்வார். அப்பொழுது முன்னர் குறிப்பிட்டது போல அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, அதே பாணியில் பிரசங்கத்தைத் தொடருவார். அவர் பிரசங்கம் நிகழ்த்தும் போது, அவரின் தொணி படைத் தளபதியின் குரல் போன்று கம்பீரமாக இருக்கும். இவ்வாறு பிரசங்கத்தைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு மிம்பரிலிருந்து இறங்குவார். பின்னர் முஅத்தின் இகாமத் சொன்னதும் தொழுகையை நடாத்துவார். இரண்டு ரக்ஆத்துக்களிலும் கிராஅத்தை வெளிப்படுத்தி ஓதுவார். அவ்வமயம் முதல் ரக்ஆத்தில் ஸூரா பாதிஹாவுக்குப் பின் سورة الأعلى வும், இரண்டாம் ரகஆத்தில் سورة الغاشية வும், அல்லது முதல் ரக்ஆத்தில் سورة الجمعة வும், இரண்டாம் ரகஆத்தில் سورة المنافقين னும் ஓதுவது சிறந்தது.    எனினும் இதுவல்லாத வேறு வசனங்கள் எதனையும் ஒதுவதில்  தவறில்லை.                            
ஜும்ஆவுக்கு முன்னும் பின்னும் ஸுன்னத்து தொழுதல்:
    இமாம் மிம்பரில் ஏறும் வரையில், ஜும்ஆவுக்கு முன் தன்னால் இயன்ற வரை நபிலான தொழுகைகளை தொழுது கொள்வது ஸுன்னத்தாகும். இமாம் மிம்பரில் ஏறிய பின்னர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை நீங்களாக வேறு தொழுகை எதுவும் தொழ அனுமதியில்லை. இமாம் குத்பா ஓதும் போது ‘தஹிய்யதுல் மஸ்ஜித்’ தொழுவோர், அதனை சுருக்கமாகத் தொழுது கொள்ள வேண்டும். இது பற்றி ஏற்கெனவே ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஜும்ஆவுக்குப் பின் நான்கு அல்லது இரண்டு ரக்ஆத்துக்கள் தொழுவது ஸுன்னத்தாகும். ஏனெனில்,                  
مَن كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا (رواه مسلم )

“உங்களில் ஜும்ஆவுக்குப் பின்னர் தொழுவோர், நான்கு ரக்ஆத்துக்கள் தொழுது கொள்ளட்டும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்ள். (முஸ்லிம். மேலும்,

عن ابن عمر رضي الله عنهما " أن النبي صلى الله عليه وسلم كان يصلي يوم الجمعة ركعتين في بيته " (متفق عليه)
 
“ரஸூல் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் தங்கள் வீட்டில் இரண்டு ரக்ஆத்துக்கள் தொழுவார்கள்” என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரீ, முஸ்லிம்)
எனவே சில உலமாக்கள் வேறுபட்ட இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு ஜும்ஆவுக்குப் பிறகு பள்ளிவாயலில் நபில் தொழ விரும்புவோர், நான்கு ரக்ஆத்துக்களும், வீட்டில் தொழ விரும்புவோர் இரண்டு ரக்ஆத்துக்களும் தொழுது கொள்ள வேண்டும் என்கின்றனர்.
றாதிபான ஸுன்னத்துத் தொழுகைகள்

வழமையாகத் தொழப்படும் ஸுன்னத்தான தொழுகைகள், ‘றாதிபான ஸுன்னத்துத் தொழுகை கள்’ எனப்படுகின்றன. நபில் தொழுகையில் பல தத்துவங்களும், ரகசியங்களும் பொதிந்துள்ளன. அதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கப்பட்டு அந்தஸ்துகள் உயர்த்தப்படு கின்றன. மேலும் தொழுகையில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் இடையூறுகளுக்கு அது நிவாரணமாகவும் அமைகிறது. அது மாத்திரமின்றி வேறு எந்த இபாதாவுக்குமில்லாத மகத்தான சிறப்பும், உயர் அந்தஸ்தும் தொழுகைக்குண்டு. இது போன்ற பல நன்மைகளை அடைந்து கொள்ளும் பொருட்டே ஸுன்னத்துத்தான மற்றும் நப்ல் தொழுகைள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

"  عن ربيعة بن كعب الأسلمي رضي الله عنه قال: كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته فقال لي: "  سل؟ ". فقلت: أسألك مرافقتك في الجنة، قال: " أو غير ذلك" قلت: هو ذاك. قال: " فأعني على نفسك بكثرة السجود(رواه مسلم)
“நான் ரஸூல் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்த போது,  அவர்களின் வுழூ செய்யும் தண்ணீர் பாத்திரத்தையும், மற்றும் அவர்களுக்குத் தேவையான பொருளையும் கொண்டு வந்து கொடுத்தேன். அப்பொழுது நபியவர்கள் என்னிடம் “உமக்கு வேண்டியதைக் கேள்” என்றார்கள். அப்பொழுது நான் “தாங்களுடன் சுவர்க்கத்தில் ஒன்றாக இருப்பதை, தங்களிடம் வேண்டுகிறேன்” என்றேன். அதற்கு நபியவர்கள் “இது தவிர வேறு ஏதும்?” என்றார்கள். அதற்கு நான் “அதுதான்” என்றேன். அப்பொழுது நபியவர்கள் “அப்படியாயின் நீங்கள் ஸுஜூதை அதிகப்படுத்தி எனக்கு ஒத்துழையுங்கள்” என்று கூறினார்கள்; என ரஸூல் (ஸல்) அவர்களின் சேவகர் றபீஆ இப்னு கஃப் அல்அஸ்லமீ அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)   
عن أبي هريرة رضي الله عنه قال  قال صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر فإن انتقص من فريضته شيء قال الرب عز وجل انظروا هل لعبدي من تطوع فيُكَمَّلَ بها ما انتقص من الفريضة ثم يكون سائر عمله على ذلك (رواه أبو داود والترمذي)

“நாளை மறுமை நாளில் அடியானின் செயல்களில்,  முதலில் அவனின் தொழுகை குறித்தே, அவனிடம் விசாரிக்கப்படும். எனவே அது சீராக இருந்தால். அவன் வெற்றி பெற்றான், ஜெயமடைந்தான். ஆனால் அது கெட்டுவிட்டாலோ, அவன் தோழ்வியும் நஷ்டமும் அடைந்தான். எனினும் அவனின் பர்ழுகளில் குறைபாடேதும் இருந்தாலோ, “எனது அடியானின் பர்ழுகளில் ஏற்பட்டிருக்கும் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அவனிடம் நபிலான கருமங்கள் ஏதேனும் இருக்கின்றதா? என்று பாருங்கள். அவனின் ஏனைய கருமங்களிலும் அப்படியே ஆகட்டும்” என்று, அல்லாஹ் மலக்குகளிடம் கூறுவான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூஹுரைரா (நழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவுத், திர்மிதீ)
நபில் தொழுகையின் வகைகள்
நபில் தொழுகை ,تطوع مطلق வரையரைக் கப்படாத பொதுவான நபில் என்றும்,   تطوع مقيد வரையரைக்கட்பட்ட குறிப்பிடத்தக்க நபில் என்றும் இரு வகைப்படும். இதில் ,تطوع مطلق என்பது விருப்பமான ஏதேனும் ஒரு தொழுகையை நினைத்துத் தொழுவதைக் குறிக்கும். மேலும் تطوع مقيد வரையரைக்கப்பட்ட நபில் என்பது, பர்ழான தொழுகையைத் தொடர்ந்து நிறைவேற்றப்படுகின்ற ஸுன்னத்தான தொழுகைகளைக் குறிக்கும். இவை ‘றாதிபான’ ஸுன்னத்துத் தொழுகைகள் என்றும் கூறப்படும். இதில் பஜ்ர், ழுஹர், அஸர், மஃரிப், மற்றும் இஷா தொழுகைகளின் ஸுன்னத்துக்கள் அடங்கும். இது பற்றி அடுத்து வரும் வரிகளில் கவனிப்போம்.

பர்ழுடன் சேர்ந்த றாதிபான ஸுன்னத்துக்களின் சிறப்பு:
عن أم حبيبة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من عبد مسلم يصلى لله تعالى كل يوم اثنتي عشرة ركعة تطوعا غير الفريضة إلا بنى الله له بيتا في الجنة )رواه مسلم(
“பர்ழுத் தொழுகையல்லாமல் தினமும் அல்லாஹ் வுக்காக மேலும் பண்ணிரெண்டு ரக்ஆத்துக்கள் ஸுன்னத் தொழுது வரும் எந்த வொரு முஸ்லிம் அடியானானுக்கும் அல்லாஹ் சுவனபதியில் ஒரு வீடு கட்டிக் கொடுக்காமல் இருக்கமாட்டான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன், என்று உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)


‘ராதிபான’ ஸுன்னத்துக்களின் அதிக பட்ச, குறைந்த பட்ச ரக்ஆத்து  விவரம்:
    
عن أم حبيبة قالت: قال رسول الله صلى الله عليه وسلم "من صلى في يوم وليلة ثنتي عشرة ركعة بني له بيت في الجنة، أربعا قبل الظهر وركعتين بعدها، وركعتين بعد المغرب، وركعتين بعد العشاء، وركعتين قبل صلاة الفجر" رواه الترمذي في سننه
 “எவர் பகலிலும் இரவிலுமாக பண்ணிரெண்டு ரக்ஆத்துக்கள் தொழுது வந்தாரோ, அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டிக் கொடுக்கப்படும்” அவையாவன: ழுஹருக்கு முன் நான்கு ரகஆத்தும், அதன் பின் இரண்டு ரக்ஆத்தும், மஃரிபுக்கு பின் இரண்டு ரக்ஆத்தும், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்ஆத்தும், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்ஆத்துக்களுமாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என உம்முஹபீபா (ரழி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதீ)
முஸ்லிமில் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணிரெண்டு ரகஆக்களும் இவ்வறிவிப்பில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
عن عبد الله بن عمر رضي الله عنهما قال: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ‏.  (متفق عليه)
“நான் ரஸூல் (ஸல்) அவர்களுடன் ழுஹருக்கு முன் இரண்டு ரக்ஆத்தும், ழுஹருக்குப் பின் இரண்டு ரக்ஆத்தும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்ஆத்தும், மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்ஆத்தும், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்ஆத்தும் தொழுதேன்” என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின் றார்கள், (புகாரி, முஸ்லிம்)
    (அதானுக்கும், இகாமத்துக்கும்மிடையே ஸுன்னத்துத் தொழுகை உண்டென்பதை அடுத்து வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது. மேலும் ஹதீஸில் இகாமத் என்பதற்கும் அதான் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு கவனிக்கத் தக்கதாகும்.)
 
وعن عبد الله بن مغفل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين كل أذانين صلاة بين كل أذانين صلاة بين كل أذانين صلاة وقال في الثالثة لمن شاء متفق عليه
“எல்லா இரண்டு அதான்களுக்கும் மிடையே ஒரு தொழுகை உண்டு. எல்லா இரண்டு அதான்களுக்கும் மிடையே ஒரு தொழுகை உண்டு. எல்லா இரண்டு அதான்களுக்கும் மிடையே ஒரு தொழுகை உண்டு,” என்று கூறிய நபியவர்கள். மூன்றாம் தடவை கூறும் போது “அது விரும்பியோருக்கு” என்று, கூறினார்கள். என அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புகாரி, முஸ்லிம்)  
عن أم حبيبة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على أربع ركعات قبل الظهر وأربع بعدها حرمه الله على النار  رواه أبو داود
    “ழுஹருக்கு முன் நான்கு ரகஆத்களையும், அதன் பின் நான்கு ரக்ஆத்களையும் யார் பேணி வந்தாரோ, அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என உம்மு ஹபீபா (ரழி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(அபூதாவுத்)
عن ابن عمر " أن النبي صلى الله عليه وسلم قال " رحم الله امرءاً صلى قبل العصر أربعاً " رواه أبوداود والترمذي
    “அஸருக்கு முன் நான்கு ரகஆத்துக்கள் தொழுத மனிதனுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(அபூதாவுத், திர்மிதீ)
தொழுகை ரகஆத் அட்டவணை
தொழுகை    முந்திய ஸுன்னத்    பர்ழ்    பிந்திய ஸுன்னத்
ஸுப்ஹு    2    2    -
ழுஹர்    4    4    2
அஸர்        4    -
மஃரிபு    -    3    2
இஷா        4    2
    
குறிப்பு: இவ்வட்டவணையில் குறிப்பிட்டுள்ள முந்திய, பிந்திய ஸுன்னத்துத் தொழுகைகள், இது தொடர்பாக வந்துள்ள ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து எடுக்கப்பட்டவை யாகும்.

வித்ருத் தொழுகை

முன்குறிப்பிட்ட றாதிபான ஸுன்னத்துக்கள், கண்டிப்பாக நிறைவேற்றப்பட  வேண்டியவை. இவை தவிர கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய வேறு சில ஸுன்னத்தான தொழுகைகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் வித்றுத் தொழுகை. இத்தொழுகையை எச்சந்தர்ப்பத்திலும் தவற விடுவது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல. ஏனெனில் இஷாத் தொழுகைக்குப் பின், இரவின் நபில் தொழுகைகளில் இறுதியாக, ரஸூல் (ஸல்) ஒரு ரகஅத் நபில் தொழுவார்கள். ‘இதுவே வித்று’ எனப்படுகிறது. மேலும்,
قال رسول الله صلى الله عليه وسلم: صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى  (رواه البخاري)
“இரவுத் தொழுகை இவ்விரண்டாகும். எனினும் ஸுபுஹு  வரை இருந்தால், வித்று தவறிவிடும் என்ற அச்சம் உங்களில் யாருக்கேனும் ஏற்பட்டால், அவர் ஒரு ரகஅத் தொழுது கொள்ளவும். அது அவர் முன் தொழுத தொழுகைகளுக்கு வித்ராகிவிடும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)
வித்ருக்கு முந்திய ஸுன்னத்துக்கள்:
வித்றுத் தொழுகைக்கு முன் இரண்டு ரகஆத்துக்களோ, அல்லது அதிகப்படியாக இவ்விரண்டு ரகஆத்துக்களாக பத்து ரகஆத்துக்கள் வரையிலோ தொழுவது ஸுன்னத்தும். நபி வழியுமாகும்.
“ரஸூல் (ஸல்) அவர்கள் பதின்மூன்று ரக்ஆத்துக்கள் வித்று தொழுது வந்தார்கள்” எனும் விடயம் பற்றி இஸ்ஹாக் இப்னு இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் விளக்கம் தரும் போது, ரஸூல் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் வித்ருடன் சேர்த்து எல்லாமாகப் பதின்மூன்று ரகஆத்துக்கள் தொழது வந்தார்கள் என்றும் அதனுள் வித்ரின் ஒரு ரகஅத்தும் அடங்கும், இதனை அடிப்படையாக  வைத்தே இரவுத் தொழுகை, வித்ரு எனப்பட்டது. என்று கூறுகிறார்கள்.
இப்பதின்மூன்று ரகஆத்துக்களையும் தனித்தனி ஸலாமுடன் இரண்டு இரண்டு ரகஆத்துக்களாகத் தொழுது விட்டு, பின்னர் ஈற்றில் தனியாக ஒரு ரகஅத்தை நிறைவு செய்து அத்தஹிய்யாத்தும் ஓதி ஸலாம் கொடுக்கலாம். மேலும் எல்லா ரகஆத்துக்களையும் ஒன்றாக சேர்த்து, இறுதி ரகஅத்துக்கு முந்திய ரகஅத்தில் ஒரு அத்தஹிய்யாத்து ஒதிய பின், இறுதி ரகஅத்துக்காக மறுபடியும் எழுந்து அதனை நிறைவேற்றிய பின், அதிலும் அத்தஹிய்யாத் ஒதிய பின்னர் ஸலாம் கொடுக்கலாம். இவ்வாறு இந்தப் பதின்மூன்று ரகஆத்துக்களையும் மொத்தமாக  இரண்டு அத்தஹிய்யாத்துக்களைக் கொண்டு நிறைவைற்றுவதும் அனுமதிக்கப் பட்டுள்ளது. இது மாத்திரமின்றி எல்லா ரகஆத்துக்க ளையும் ஒன்றாகச் சேர்த்து தொழுது விட்டு கடைசி ரகஅத்தில் மாத்திரம் ஒரே அத்தஹிய்யாத்துடன் ஸலாம் கொடுக்கும் முறையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்படி பலவாறு ரஸூல் (ஸல்) தொழுதிருக்கின்றார்கள் என்ற படியால் இதுவெல்லாம் அனுமதிக்கப்பட்ட முறைகளே. ஆயினும் ஒவ்வொரு இரண்டு ரகஆத்துக்களுக்கும் பின்னர் ஸலாம் கொடுக்கும் முறையே சிறந்தது. குறிப்பாக இயலாத வர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும், மற்றும் இவர்களைப் போன்ற பலவீனர்களுக்கும் இவ்வாறு ஸலாம் கொடுக்கும் முறையை கடைப்பிடிக்கலாம்.
வித்ரின் நேரம்
இதன் நேரம் இஷாத் தொழுகைக்கு பின் பஜ்ருக்கு சற்று முன் வரையிலாகும். இதனை கடைசி இரவில் தொழுது கொள்ள இயலுமான வருக்கு அதுவே சிறந்தது. ஆனால் அச்சமயத்தில் கண்விழிக்க இயலாதென்று அச்சப்படுவோர் நித்திரைக்குச் செல்லு முன் இதனைத் தொழுவது நல்லது.  
நோயாளியின் தொழுகை முறை
1.    நின்று தொழ இயலுமானவர், ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டோ. அல்லது சுவர், தூண், தடி போன்ற ஏதேனும் ஒன்றின் மீது சார்ந்து கொண்டோ நின்று தொழுவது அவர் மீது கடமை.

2.    நின்று தொழ இயலாதவர் அமர்ந்து தொழ வேண்டும். அவ்வமயம் நிலையின் சந்தர்ப்பத்திலும், றுகூவின் சந்தர்ப்பத்திலும்  சமனம் கட்டியவாறு அமர்ந்து கொள்வதும், ஸஜூதின் சந்தர்ப்பத்தில் காலை மடித்து முதல் அத்தஹிய்யாத்தில் இருப்பது போன்று ‘இப்திறாஷ்’ முறைப்படி அமர்ந்து கொள்வதும் சிறந்தது.
3.    அமர்ந்து தொழ இயலாதவர் கிப்லாவுக்கு முகம் காட்டியவாறு விலாப் பக்கமாகச் சாய்ந்து தொழ வேண்டும். இதில் இடது புரத்தைப் பார்க்கிலும் வழது புரம் சிறந்தது. கிப்லாவின் பக்கம் முகம் காட்ட இயலாத போது அவர் எத்திசையில் இருக்கின்றாரோ அத்திசையிலே தொழ வேண்டும். எனினும் மீண்டும் அத்தொழுகையை மீட்டித் தொழ வேண்டிய தில்லை.
4.    விலாப் பக்கமாகச் சாய்ந்து தொழ முடியாது போனால் இரண்டு காலையும் கிப்லாவின் பக்கம் நீட்டியவாறு மல்லாந்து தொழ வேண்டும். அவ்வமயம் கிப்லாவை முனோக்குவதற்கு ஏதுவாக தலையைச் சற்று உயர்த்திக் கொள்வது சிறந்தது. தனது காலை கிப்லவின் பக்கமாக நீட்ட முடியவில்லையெனில், அது இருக்கும் திசையிலே தொழுது கொள்ள வேண்டும். அத்தொழுகையை மீட்டித் தொழ வேண்டிய தில்லை.
5.    றுகூஃவும், ஸுஜூதும் செய்ய இயலுமான நோயாளியின் மீது அதனைச் செய்வது கடமை. இயலவில்லை யெனில் தலையால் சைகை செய்து அவ்விரண்டையும் நிறை வேற்ற வேண்டும். மேலும் றுகூவைப் பார்க்கிலும் ஸுஜூதுக்காக தலையை அதிகமாகத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். ஸுஜூது செய்ய இயலவில்லை யாயினும், றுகூஃ செய்ய முடியுமெனில், றுகூவின் சந்தர்ப்பத்தில் றுகூஃ செய்து கொள்ள வேண்டும். ஸுஜூதுக்காக சைகை செய்து கொள்ள வேண்டும். மேலும் ஸுஜூது செய்து கொள்ள இயலுமாயினும், றுகூஃ செய்து கொள்ள இயலவில்லையெனில் றுகூவை சைகை மூலம் நிறைவு செய்து விட்டு, ஸுஜூதின் சந்தர்ப்பத்தில் உரிய முறையில் ஸுஜூத் செய்து கொள்ள வேண்டும்.
6)  றுகூவின் போதும் ஸுஜூதின் போதும் தலையால் சைகை செய்ய இயலவில்லை யெனில் தனது கண் மூலம் சைகை செய்து கொள்ள வேண்டும். மேலும் றுகூவை விடவும் ஸுஜூதுக்காகப் பார்வையை சற்று அதிகமாக மூடிக் கொள்ள வேண்டும். சில நோயாளிகள் தங்களின் விரலைக் கொண்டு சைகை செய்கின்றனர். அது சரியான முறையல்ல. இதற்காக குர்ஆன் ஸுன்னாவிலும், அறிஞர்களின் கூற்றுக்களிலும் எந்த வொரு அடிப்படையையும் நாம் காணவில்லை.
7.    தலையாலும் கண்ணாலும் கூட சைகை செய்ய இயலவில்லை யெனில் மனதால் தொழுது கொள்ள வேண்டும். அவ்வமயம் றுகூஃ, ஸுஜூத், எழுந்திருத்தல். அமர்ந்து கொள்ளல் ஆகிய சகல செயலையும் மனதால் எண்ணிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் எண்ணியதே அனுகூலமாகும்.
8.    முன்னர் குறிப்பிட்ட பிரகாரம், தன் சக்திக்குட்பட்ட வரை எல்லா தொழுகையையும் உரிய நேரத்தில் தொழுது கொள்வது நோயாளியின் மீதும் கடமை. ஆகையால் அதன் நேரத்தைப் பிற்படுத்துவது ஆகாது. எனினும் சிரமத்துடன் வுழூ செய்து கொள்ளும் நோயாளி, பிரயாணியைப் போன்று ஜம்உ செய்து தொழுது கொள்ளலாம். அது அவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
9.    எல்லாத் தொழுகையையம் உரிய நேரத்தில் நிறைவேற்றிக் கொள்வதில்  நோயாளிக்கு சிரமம் என்றிருந்தால், அவர் தனக்கு வசதி போல் ழுஹரையும் அஸரையும், மேலும் மஃரிபையும் இஷாவையும் முற்படுத்தியோ, பிற்படுத்தியோ சேர்த்து தொழலாம். ஆனால் பஜ்றுத் தொழுகை மாத்திரம், அதனை அதற்கு முந்திய தொழுகையுடன் முற் படுத்தியோ, அதற்குப் பின்னுள்ள தொழுகையுடன் பிற்படுத்தியோ சேர்த்துத் தொழுவதற்கு அனுமதியில்லை. ஏனெனில் அதன் நேரம் தனது முன்னைய நேரத்துடனோ, அடுத்துள்ள நேரத்துடனோ ஒட்டிக் கொள்ளாமல் தனியாக விலகி நிற்கிறது.
أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا (الإسراء/78)
“சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் தொழுகையைத் தொழுது வாருங்கள். பஜ்ருத் தொழுகையையும் தொழுது வாருங்கள். நிச்சயமாக பஜ்ர் தொழகையானது (மலக்குகள்) கலந்து கொள்ளும் ஒரு தொழுகையாகும்.(17/78)           

 

 

 

மூன்றாம் அடிப்படை - ஸகாத்
இதன் அகராதிப் பொருள்,
சுத்தம், சிறப்பு, வளர்ச்சி, அதிகம், அபிவிருத்தி என்பன.
மரபுக் கருத்து:
உரிய நிபந்தனைகளின்படி செல்வம் குறிப்பிடத் தக்க அளவை அடைந்ததும், அதில் இருந்து உரியவர்களுக்கு வழங்கும் பொருட்டு அவர்களின் பங்கினைப் வேறுபடுத்தி எடுப்பது ‘ஸகாத்’ எனப்படும்.
அதன் சட்டம்:
    தன் செல்வம் உரிய நிபந்தனைகளுக்கமைய குறிப்பிடத்தக்க அளவினை அடைந்ததும் அதிலிருந்து ஸகாத் வழங்குது சகல முஸ்லிம் பிரஜைகள் மீதும் கடமை. இது இஸ்லாத்தின் அடிப்படைகளில் மூன்றாவது அடிப்படையாகும். என்பத்திரண்டு  வசனங்களில் தொழுகையுடன் சேர்த்து ஸகாத் குறிப்ப்படப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு கடமை என்பதை அல் குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ என்பவை உறுதி செய்துள்ளன. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا  (التوبة/103)
“அவர்களின் பொருள்களிலிருந்து ஸகாத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு, அவர்களைத் தூய்மைப்படுத்தி வையுங்கள்” (9/103)
 وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ۚ (البقرة/110)
“மேலும் நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும், ஸகாத் கொடுத்தும் வாருங்கள்” (2/110)
ஸகாத் கடமை என்பதை வழியுருத்தும் சில ஸுன்னா ஆதாரங்கள்:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " بُنِيَ الإِسْلامُ عَلَى خَمْسٍ : شَهَادَةِ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، وَإِقَامِ الصَّلاةِ ، وَإِيتَاءِ الزَّكَاةِ ، وَصَوْمِ شَهْرِ رَمَضَانَ ، وَحَجِّ الْبَيْتِ " (متفق عليه)
“இஸ்லாம் மார்க்கம் வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி யாரும் இல்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்று சாட்சி பகருதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ரமழான் மாதம் நோன்பு நோற்றல், அல்லாஹ்வின் இல்லத்தை நாடிச் செல்லல் ஆகிய ஐந்து விடயங்களின் மீது நிறுவப்பட்டள்ளது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரீ, முஸ்லிம்)
      ரஸூல் (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை யமன் நாட்டின் ஆளுனராக நியமணம் செய்து அனுப்பும் போது அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:    
“ إنك تأتي قوما من أهل الكتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله فإن هم أطاعوا لذلك فأعلمهم أن الله افترض عليهم خمس صلوات في كل يوم وليلة فإن هم أطاعوا لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد في فقرائهم فإن هم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب”
“நீங்கள் அஹ்லுல் கிதாபைச் சேர்ந்த ஒரு சமூகத்திடம் செல்கிறீர்கள். ‘நீங்கள் அவர்களை வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ் வையன்றி எவருமில்லை, என்றும் நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகரும்படி அழையுங்கள். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டால், தினமும் இரவிலும் பகலிலும் ஐந்து நேரத் தொழுகையை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்கு அறிவியுங்கள். அதனையும் அவர்கள் ஏற்றுக் கொண்டால், அல்லாஹ் அவர்களின் மீது தர்மம் வழங்குவதைக் கடமையாக்கியுள்ளான் என்றும், அதனை அவர்களின் செல்வந்தர்களிட மிருந்து அறவிட்டு அதனை அவர்களின் ஏழைகளுக்கு வழங்கும்படி பணித்துள்ளான் என்றும் அவர்களுக்கு அறிவியுங்கள். இதனையும் அவர்கள் ஏற்றுக் கொண்டால், அவர்களின் பெறுமதி மிக்க பொருள் களை கையாடுவதையிட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன். மேலும் அநீதிக்குள்ளான வனின் சாபத்துக்குப் பயப்படுங்கள். ஏனெனில் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தவொரு திரையும் மில்லை” என்று கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)  
அதனை செலுத்த மறுப்பவனுக்கெதிரான சட்ட நடவடிக்கை:     
    ஸகாத்தைச் செலுத்த மறுப்பவனும், அதுவொரு கடமை என்பதை நிராகரிப்பவனும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிய காபிராகக் கருதப்படுவான். எனவே அவன் அதனை நிராகரித்த குற்றத்திற்காக காபிர் என்ற முறையில் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படும். எனினும், அது கடமைதான் என்பதை ஒருவன் மறுத்துரைக்காத போதிலும், கஞ்சத்தனத்தின் காரணமாக ஸகாத்தை செலுத்தாமல் தடுத்துக் கொண்டால், அவனின் அந்த செயல் அவனை இஸ்லாத்தை விட்டும் வெளியே தள்ளாது. எனினும் அதன் காரணமாக அவன் பாவியாகி விடுவான். மேலும் அவனிடமிருந்து பெற வேண்டிய ஸகாத் பலவந்தமாகக் கைப்பற்றப்படும். அத்துடன் அவனுக்கு தண்டனையும் வழங்கப்படும். மேலும் ஸகாத் செலுத்த மறுப்பவன் போருக்கு வந்தால் அவன் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து ஸகாத்தை செலுத்தும் வரையில் அவனை எதிர்த்துப் போரிடல் வேண்டும், என்பதை  அல்குர்ஆனும் ஸுன்னாவும் உறுதி செய்கின்றன. இது பற்றிய அல்லாஹ்வின் கூற்று வருமாறு:
فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ  (التوبة/11)
“அவர்கள் மன்னிப்புக்கோரி தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வந்தால், உங்கள் மார்க்க சகோதரர்களே.(9/11)
عن ابن عمر رضي الله عنهما ، ان رسول الله صلى الله عليه وسلـم قـال : أمرت أن أقاتل الناس حتى يـشـهــدوا أن لا إلــه إلا الله وأن محمدا رسول الله ، ويـقـيـمـوا الصلاة ، ويؤتوا الزكاة ؛ فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام ، وحسابهم على الله تعالى (متفق عليه)
“மக்கள், வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி எவரும் இல்லை என்றும் நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்ந்து, தொழுகையையும் நிலை நிறுத்தி, ஸகாத்தையும் செலுத்தி வரும் வரையில் அவர்களுடன் போரிடுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன். இதனை அவர்கள் செய்து விட்டால், அவர்கள் என்னிடமிருந்து தங்களின் இரத்தத்தையும் பொருளையும் பாதுகாத்துக் கொண்டனர். ஆனால் இஸ்லாமிய உரிமைக்காக வன்றி, மேலும் அவர்களின் விசாரணை அல்லாஹ்வைச் சார்ந்தது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (புகாரீ, முஸ்லிம்) மேலும் ஸகாத்தை தர மறுப்புத் தெரிவித்த சமூகத்தாருடன் போரிட்ட கலீபா அபூபக்ர் ஸித்தீக் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஆட்டுக் குட்டியையேனும் தர மறுத்தாலும் அவர்களுடன் நான் யுத்தம் புரிவேன்” என்று கூறினார்கள்.
அதன் சட்டத்திலுள்ள மதி நுட்பம்:  
எண்ணிலடங்காத மேலான நலன்களுக்கா கவும், உயர் நோக்கங்களக்காகவுமே ஸகாத் விதியாக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு:
செல்வத்தை தூய்மைப்படுத்தல், அதனை அபிவிருத்தி செய்தல், மேலும் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதன் நிமித்தமும், அவனின் கட்டளைக்கு அடிபணிவதன் நிமித்தமும் அனுகூலமாகும் இறையருள் மூலம் செல்வத்தைப் பாதுகாத்தல்.
உலோபித்தனம், கஞ்சத்தனம், மற்றும் பேராசைகளின் அசுத்தங்களை விட்டும் மனித உள்ளத்தைப் பாதுகாத்தல்.
ஏழைகளுக்கு உதவுதல், உதவிகள் எட்டாத வர்களினதும், துன்பப்பட்டவர்களினதும், கதியற்ற வர்களினதும் தேவைகளை நிறைவு செய்தல்.
சிதருண்ட உள்ளங்களை ஈமானின் அடிப்படையிலும் இஸ்லாத்தின் அடிப்படையிலும் ஒன்று சேர்த்து, உள்ளத்திலிருக்கும் சந்தேகங்க ளையும் மற்றும் ஈமானின் பலவீனத்தையும் நீக்கி உறுதியான ஈமானையும், பூரண நம்பிக்கயையும் ஏற்டுத்துதல்.
மனித வாழ்வும், அதன் சந்தோஷமும் தங்கியுள்ள பொது நலன்களை நிலை நிறுத்தல்.
ஸகாத்தைச் செலுத்தும்படி ஆர்வமூட்டல்:
 ஸகாத்தினை வழங்கி வருவதனை ஆர்வமூட்டியும், அதன் மூலம் அனுகூலமாகும் பாரிய கூலியையும். நன்மையையும் தெளிவு படுத்தியும் எராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் வந்துள்ளன. அவற்றில் சில வருமாறு:
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّـهَ وَرَسُولَهُ ۚأُولَـٰئِكَ سَيَرْحَمُهُمُ اللَّـهُ ۗ إِنَّ اللَّـهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿٧١﴾  (التوبة/71)
“நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் நன்மை செய்யும்படித் தூண்டியும் பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்த வனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (9/71)   
 قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ ﴿١﴾ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ﴿٢﴾وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ﴿٣﴾ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ﴿٤﴾ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ ﴿٥﴾ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ﴿٦﴾ فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَـٰئِكَ هُمُ الْعَادُونَ ﴿٧﴾ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ ﴿٨﴾ وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ ﴿٩﴾ أُولَـٰئِكَ هُمُ الْوَارِثُونَ ﴿١٠﴾ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿١١﴾ (المؤمنون/1-11)
 “நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் என்றால் மிக்க உளச்சத்தோடு  தொழுவார்கள். அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி யிருப்பார்கள். அவர்கள் ஸகாத்து கொடுத்தும் வருவார்கள். அவர்கள் தங்களின் மர்ம ஸ்தானத்தைப் பாதுகாத்துக் கொள்வார்கள். எனினும்  அவர்கள் தங்களின் மனைவிகளிடமும், அல்லது தங்களின் அடிமைப் பெண்களிடமும் தவிர. ஆகவே இவ்விஷயத்தில் அவர்கள் நிந்திக்கப்படமாட்டார்கள். இதற்குப் புறம்பாக எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி விடுவார்கள். அன்றி அவர்கள் அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணிக்கொள்வார்கள். அவர்கள் தங்கள் தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது வருவார்கள். இத்தகையவர்தாம் உண்மையான வாரிசுகள். ஆகவே இவர்கள் பிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரமாகக் கொண்டு அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (23/1-11)
இனி அடுத்து வரும் ஹதீஸ்களைக் கவனிப்போம்:       
  عن أبي أيوب الأنصاري رضي الله عنه أن رجلا قال يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة فقال النبي صلى الله عليه وسلم تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحم (متفق عليه)
“அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யும் ஒரு காரியத்தை எனக்கு அறியத்தாருங்கள்” என்று ஒரு மனிதர் கூறினார். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ்வை வணங்கி வருவீராக, அவனுக்கு எதனையும் இணையாக்காதீர். மேலும் தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுத்து, பந்துக்களுடன் சேர்ந்தும் நடப்பீராக” என்று கூறினார்கள், என அபூ ஐயூப் அல்அன்ஸாரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்ரார்கள். (புகாரீ, முஸ்லிம்)               
قال رسول الله صلى الله عليه وسلم ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ وَأَنَّهُ لَاإِلَهَ إِلَّا اللَّهُ،وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ     (أبوداود)
“வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு எவரும் இல்லை என்பதை ஏற்று, அவன் ஒருவனை மாத்திரம் வணங்கி, மனத்திருப்பதியோடு தன்னுடைய பொருளிலிருந்து ஸகாத்தும் கொடுத்து வருகின்ற, இம்மூன்று கருமங்களையும் யார் செய்து வந்தாரோ, அவர் ஈமனின் சுவையை அனுபவிப்பார்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்)
 
 عن أبي كبشة الأنماري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول :  ثلاث أقسم عليهن  وأحدثكم حديثا فاحفظوه – قال    
ما نقص مال عبد من صدقة ولا ظلم عبد مظلمة صبر عليها إلا زاده الله عزا ولا فتح عبد باب مسألة إلا فتح الله عليه باب فقر(رواه أحمد والترمذي)
“நான் மூன்று விடயங்களை சத்தியமிட்டுக் கூறுகின்றேன் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவையாவன: தர்மம் செய்த அடியானின் செல்வம் குறைந்து விடாது. அநீதிக்குள்ளாகி பொறுமையாக இருந்த அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகப்படுத்துவான். யாசகத்தின் வாயலைத் திறந்த அடியானின் மீது வறுமையின் வாயலை அல்லாஹ் திறந்து விடுவான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ கபஷா அல்அண்மாரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், திர்மிதீ)  
ஸகாத்  மறுப்புக்கு எச்சரிக்கை :
    அல்குர்ஆனும், ஹதீஸும் ஸகாத் தர மறுக்கின்றவனை கடுமையாக எச்சரிக்கை செய்கின்றன. மேலும் அவனுக்கு பெரிய நஷ்டமும், வேதனை மிகுந்த தண்டனை உண்டென்ற தகவலையும் தருகின்றன. அவற்றில் சில வருமாறு:  
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ (/التوبة34)
“நம்பிக்கையாளர்களே! பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் பலர் மக்களின் பொருள்களை தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, தங்கம் வெள்ளியை யும் சேகரித்து வைத்துக் கொண்டு அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதி ருக்கின்றனரோ அவர்களுக்கும் நீங்கள் துன்புறுத்தும் வேதனயை நற்செய்தியாகக் கூறுங்கள். (9/34)
    يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنْفُسِكُمْ فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ (35/التوبة)
“அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றக் கொண்டு அவர்களின் நெற்றிகளிலும் அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு “உங்களுக்காக நீங்கள் சேகரித்திருந்தவை இவைகள்தான், ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்” என்று கூறப்படும் நாளை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்(9/35)    
 وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ (آل عمران/180)
“எவர்கள் அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத் தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். (3/180)
عن أبي ذر قال إنتهيت إلى النبي صلى الله عليه وسلم وهو جالس في ظل الكعبة فلما رآني قال " هم الأخسرون ورب الكعبة" قال فجئت فلم أتقار أن قمت فقلت يارسول الله  فداك أبي وأمي من هم ؟ قال " هم الأكثرون أموالا إلا من قال هكذا وهكذا وهكذا (من بين يديه ومن خلفه وعن يمينه وعن شماله) وقليل ماهم , محب إبل ولابقر ولاغنم لايؤدي زكاتها إلا جاءت يوم القيمة أعظم ماكانت وأسمنه تنطحه بقرونها وتطؤه بأظلافها , كلما نفدت أخراها عادت عليه أولاها حتى يقضى بين الناس (متفق عليه)
“ரஸூல் (ஸல்) அவர்கள் கஃபாவின் நிழலில் அமர்ந்திருக்கும் போது நான் அவர்களைச் சென்றடைந்தேன். அப்பொழுது என்னைக் கண்ட அன்னார் “அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் நஷ்டமடைந்துவிட்டனர். என்றார்கள்.” பின்னர் நான் வந்து விட்டேன். எனினும் என்னால் இருப்புக் கொள்ளமுடியவில்லை. எனவே நான் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தையும், தாயும் தாங்களுக்கு அரப்பணம், அவர்கள் யார்? என்றேன்.” அதற்கு நபியவர்கள் “அவர்கள்தான் அதிகப் பணம் படைத்தவர்கள். ஆனால் தனக்கு எதிரிலும், புதிரிலும், தனக்கு வலதிலும், இடதிலும் இவ்வாறு, இவ்வாறு, இவ்வாறு செலவு செய்தவர்களைத் தவிர. ஆனால் இவர்கள் சொற்பமானவர்கள்” என்று கூறினார்கள். மேலும் ஆடு, மாடு ஒட்டகங்களின் மீது மோகம் கொண்டவன் அதன் ஸகாத்தை நிறைவேற்ற வில்லை யெனில், கியாமத் நாளில் அவை தாம் முன்னிருந்ததை விடவும் பெரியவையாக, கொழுத்தவையாக வந்து, தனது கொம்புகளால் அவனைக் குத்தும், மேலும் தமது குளம்புகளால் அவனை மிதிக்கும். இறுதியாக வரும் ஒரு, பிராணி இவ்வாறு செய்து முடிக்க, முதலில் அவனைத் தாக்கிய பிராணி மீண்டும் அவனை தாக்கத் தொடங்கும். மக்கள் மத்தியில் தீர்ப்பு வழங்கி முடியும் வரையில் இப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரீ, முஸ்லிம்)      
قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيمة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيمة ثم يأخذ بلهزمتيه (يعني شدفيه) ثم يقول أنا مالك, أنا كنزك ثم تلا “وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ  
“எவனுக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்திருந்தும் அவன் அதன் ஸகாத்தை நிறைவேற்றவில்லையோ, அது மறுமை நாளில் ஒரு வழுவழுப்பான பாம்பு போன்று அவனுக்குக் காட்சி தரும், அதன் கண்களுக்கு மேல் இரண்டு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது அவன் கழுத்தில் மாட்டப்பட்ட பின்னர் அது அவனுடைய தாடை எழும்புகளைப் பிடித்துக் கொண்டு “நான்தான் உன்னுடைய செல்வம், நான்தான் உன்னுடைய பொக்கிஷம்” என்று கூறும். எனக் கூறிய நபியவர்கள் பின்னர்,
  “وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ
“எவர்கள் அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். (3/180) என்ற திரு வசனத்தை ஓதினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்களின் அடுத்து வரும் வாக்கு இவ்வாறு கூறுகின்றது:
 قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب كنز لا يؤدي زكاته إلا أحمي عليه في نار جهنم فيجعل صفائح فيكوى بها جنباه وجبينه حتى يحكم الله بين عباده في يوم كان مقداره خمسين ألف سنة ثم يرى سبيله إما إلى الجنة وإما إلى النا ر (رواه مسلم)
“பொக்கிஷத்திற்குரிய ஸகாத்தை நிறை வேற்றாத  அதன் உரிமையாள னுக்கு நரகில் சூடு போடப்படும். மேலும்  ஐம்பதாயிரம் வருட அளவையுடைய ஒரு நாளில் அல்லாஹ் தன் அடியார்கள் மத்தியில் தீர்ப்பு வழங்கும் வரையில் அவனின் இரண்டு விலாக்களிலும், அவனின் நெற்றியிலும் இரும்புப் பலகையால் சூடு போடப்படும். அதன் பின்  சுவர்க்கத்தில், அல்லது நரகத்தில் தனக்குரிய இடத்தை  அவன் காண்பான். (முஸ்லிம்)
   يا معشر المهاجرين، خمسٌ إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن: لم تظهر الفاحشة في قوم قطُّ حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم الذين مضوا، ولم يُنقصوا المكيال والميزان إلا أُخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم، ولم يمنعوا زكاة أموالهم إلا مُنعوا القطر من السماء، ولولا البهائم لم يُمطروا، ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوًّا من غيرهم فأخذوا بعض ما في أيديهم، وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم) رواه ابن ماجه في سننه.
“முஹாஜிரீன்களே! ஐந்து விடயங்களை நீங்கள் அடைந்து கொள்வதை விட்டும், அல்லாஹ் விடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். அந்த ஐந்து விடயங்களைக் கொண்டு நீங்கள்  சோதிக்கப்படும் போது, அதாவது ஒரு சமூகத்தில் மானக்கேடான கருமங்கள் பகிரங்கமாக நடைபெருகின்ற போது, அவர்கள் மத்தியில் வாந்தி பேதியும், சென்று போன முன்னோர்களிடம் ஏற்படாத நோய்களும் பரவும். அவர்கள் அளவை நிறுவையில் குறைபாடு செய்யும் போது அவர்கள் வறுமையாலும், உணவு பற்றாக் குறையாலும்,  பீடிக்கப்படுவர். மேலும்  அநீதியான ஆட்சிக்கும் உள்ளாக்கப்படுவர். அவர்கள் தங்களின் செல்வத்திலிருந்து ஸகாத் செலுத்த மறுக்கின்ற போது அவர்களுக்கு மழை நீர் தடுக்கப்படும். மேலும் கால் நடைகள் இல்லாதிருந்தால் அவர்களுக்கு மழையே பொழியாது. அவர்கள் அல்லாஹ் வினதும், அவனின் ரஸூலினதும் ஒப்பந்தத்தை முறிக்கும் போது, அல்லாஹ் அவர்களின் மீது மற்ற சமூகத்திலிருந்து  பகைவர்களை சாட்டிவிடுவான். அப்பொழுதவர்கள் அன்னவர்களின் கையிலிருப்ப வற்றை எடுத்துக் கொள்வார்கள். மேலும் அவர்களின் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தின் பிரகாரம் தீர்ப்பு வழங்காமலும், அல்லாஹ் அருளியவற்றைத் தேந்தெடுக்காமலும் இருக்கும் போது அவர்களிடம் அல்லாஹ் வறுமையை ஏற்படுத்தி விடுவான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (இப்னுமாஜா)    
யார் மீது ஸகாத் கடமை?
பின் வரும் நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் மீது ஸகாத் கடமையாகும்:
1.    முஸ்லிமாக இருத்தல்
2.    சுதந்தரமுடையவனாக இருத்தல்
3.    மனிதனின் அத்தியவசியத் தேவைகளான உணவு, உடை, உரைவிடம், வாகணம், தொழில் உபகரணம் போன்ற தேவைதளுக்குப் போக, செல்வம் அதன் நிஸாப்பை - குறிப்பிடத்தக்க அளவை அடைந்திருத்தல்.
4.    பயிர்களும், கனி வகைளும் நீங்களாக, நிஸாபை எட்டிய ஏனைய பொருள் ஒரு வருட காலத்தை அடைதல். இவற்றுக்கு ஒரு வருடம் என்ற நிபந்தனை இல்லை. ஏனெனில்,
وءاتوا حقه يوم حصاده (الأنعام/141)
“அவற்றை அருவடை செய்யும் போது அவனுடைய  (அல்லாஹ்வுடைய) பாகத்தை கொடுத்துவிடுங்கள்“ (6/141) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
5.    மனிதருக்குக் கொடுக்க வேண்டிய கடனை அடைக்கத் தேவையான பணத்தை விடவும் நிஸாபில் அதிகப் பணம் இருத்தல்.
ஸகாத் கடமையாகும் பொருட்களின் வகை:
1.    இரண்டு நாணயங்கள்: அதில் தங்கம், வெள்ளியும், அவ்விரண்டின் இடத்தைப் பெரும் வியாபாரப் பொருட்கள், கனி வளங்கள், புதையல், நாணயத்திற்குப் பதிலான நாணயத் தாள்கள் என்பன அடங்கும். இதற்கு அல்லாஹ்வின் வாக்கும், ரஸூல் (ஸல்) அவர்களின் மணி மொழியும் ஆதாரமாக விளங்குகின்றன. அவை வருமாறு:
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ (34)
2.    “தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் நீங்கள் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுங்கள் (9/34)
قال رسول الله صلى الله عليه وسلم ليس فيما دون خمس أواق صدقة. (متفق عليه)
3.    “ஐந்து ‘ஊகியா’வுக்கு குறைவானதில் ஸகாத் கடமையில்லை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்) (ஒரு ஊகியா 201 கிராமுக்கு சமமாகும்.)
 قال رسول الله صلى الله عليه وسلم العجماء جرحها جبار, والبئر جبار, والمعدن جبار, وفي الركاز الخمس (متفق عليه)
4.    “கால் நடை மூலம் உண்டான சேதத்திற்கு நஷ்ட ஈடில்லை. கிணற்றின் மூலம் ஏற்பட்ட சேதத்திற்கும் நஷ்ட ஈடில்லை. சுரங்கம் மூலம் ஏற்பட்ட சேதத்திற்கும் நஷ்ட ஈடில்லை. மேலும் புதையலில் ஐந்தில் ஒன்று ஸகாத் கடமையாகும். என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
5.    (கால் நடை தன் எஜமானை விட்டும் தப்பிச் சென்று யாருக்கேனும் ஊறு விளைவித்தால், அதற்கு நஷ்ட ஈடு வழங்குவது அதன் உரிமையாளன் மீது கடமையில்லை. மேலும் ஒருவன் தனது நிலத்தில் அல்லது ஒரு தரிசு நிலத்தில் ஒரு கிணற்றைத் தோண்டி வைக்க அதில் விழுந்து யாரேனும் இறந்து போனால், அதற்கு நஷ்ட ஈடு வழங்கும் பொறுப்பும் அதன் உரிமையாளன் மீதில்லை. அவ்வாறே சுரங்கத்தில் யாரேனும் விழுந்தாலோ, அல்லது சுரங்கத்தில் வேலை செய்யும் வேலையாட்கள் யாரும் இறந்து போனாலோ அதற்கு நஷ்ட ஈடு வழங்கும் பொறுப்பும், அதன் உரிமையாளன் மீதில்லை, என்பதையும், புதையலில் ஐந்தில் ஒரு பாகத்தை ஸகாத்தாக செலுத்த வேண்டும் என்பதையும் இந் நபி மொழி உணர்த்துகின்றது)  

6.    கால் நடைகள், அதாவது ஆடு, மாடு, ஒட்டகம்:    
7.    இவற்றுக்காக ஸகாத் கொடுப்பது கடமை என்பதை ரஸூல் (ஸல்) அவர்களின் வாக்கு உறுதி செய்கின்றது.
ما من صاحب  إبل ولابقر ولاغنم لايؤدي زكاتها إلا جاءت يوم القيمة أعظم ماكانت وأسمنه تنطحه بقرونها وتطؤه بأظلافها , كلما نفدت أخراها عادت عليه أولاها حتى يقضى بين الناس (متفق عليه)
ஆடு, மாடு மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளன் அதன் ஸகாத்தை நிறைவேற்ற வில்லை யெனில், கியாமத் நாளில் அவை தாம் முன்னிருந்ததை விடவும் பெரியவையாக, கொழுத்தவையாக வந்து, தமது கொம்புகளால் அவனைக் குத்தும், மேலும் தமது குளம்புகளால் அவனை மிதிக்கும். இறுதியாக ஒரு பிராணி வந்து, இவ்வாறு செய்து முடிக்க, முதலில் தாக்கிய பிராணி மீண்டும் அவனை தாக்கத் தொடங்கும். மக்கள் மத்தியில் தீர்ப்பு வழங்கி முடியும் வரையில் இப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
3    கனி, தானியம் ஆகியவற்றின் ஸகாத்:
 களஞ்சியப்படுத்த இயலுமான கோதுமை, கடலை, பருப்பு, சோளம் போன்ற உணவு வகைகள் தானியத்தில் அடங்கும். மேலும் கனி வகையில், பேரீத்தம் பழம், ஸைத்தூன், உளர்ந்த திராட்சைப் பழம் ஆகியன அடங்கும். இதன் ஆதாரம் வருமாறு:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ (البقرة/267)
“நம்பிக்காயாளர்களே! நீங்கள் சம்பாதித்த வைகளிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமி.லிருந்து வெளியாக்கியவைகளில் இருந்தும் (தர்மமாக) செலவு செய்யுங்கள்.” (2/267)
وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ (الأنعام/141)
“அவற்றை அறுவடை செய்யும் போது அதிலிருந்து அவனுடைய பாகத்தைக் கொடுத்து விடுங்கள்” (6/141)
மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
 "فيما سقت السماء والعيون أو كان عثريا  العشر وفيما سقي بالنضح نصف العشر" (متفق عليه)
“வானமும், பூமியும் புகட்டியதில் பத்தில் ஒரு பாகமும், நீர் பாய்ச்சியதில் இருபதில் ஒரு பாகமும் ஸகாத் கடமையாகும்” (புகாரீ, முஸ்லிம்)
"ليس فيما دون خمسة أوسق صدقة" (متفق عليه)
“ஐந்து வஸக்கைவிட குறைந்ததில் ஸகாத் கடமையில்லை” (புகாரீ, முஸ்லிம்)
ஸகாத் கடமையில்லாத பொருட்கள்:
1.    ஷரீஆ ஆதாரத்தின் மூலம் ஸகாத் கடமை என்று உறுதிப் படுத்தப்படாத கனியிலும், தானியத்திலும் ஸகாத் கடமையில்லை. எனினும்,
   يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ (البقرة/267)    
2.    “நம்பிக்காயாளர்களே! நீங்கள் சம்பாதித்த வைகளிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியி லிருந்து வெளியாக்கியவைகளில இருந்தும் (தர்மமாக) செலவு செய்யுங்கள்.” (2/267) என்ற அல்லாஹ்வின் வாக்கின் மூலம் விவசாய உற்பத்திப் பொருளிலிருந்து தர்மம் செய்யும்படி பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ள படியால், இத்தகைய கனி, மற்றும் தானியத்திலிருந்து ஏழைகளுக்கும், அண்டை அயலாருக்கும் ஏதேனும் தர்மமாக வழங்குவது விரும்பத் தகுந்த செயலாகும்.
3.    அடிமை, குதிரை, கோவேறு கழுதை, கழுதை ஆகியவற்றுக்காக ஸகாத் செலுத்த வேண்டிய தில்லை. ஏனெனில்,
ليس على العبد في فرسه وغلامه صدقة
 “அடியான் தன்னுடைய ஒட்டகத்திற்காகவும், அடிமைக்காகவும் ஸகாத் செலுத்துவது அவன் மீது கடமையில்லை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள், (புகாரீ, முஸ்லிம்) மேலும் நபியவர்கள் கோவேறு கழுதைக்காகவும், கழுதைக் காகவும் ஸகாத் அறவிட்டார்கள் என்ற தகவல்களும் கிடைக்கவில்லை.
4.    நிஸாபை எட்டாத பொருளில் ஸகாத் கடமை இல்லை. எனினும் அதிலிருந்து ஸுன்னத்தான தர்மம் வழங்குவது விரும்பத் தக்கதாகும். ஏனெனில்,
ليس فيما دون خمسة أوسق صدقة , وليس فيما دون خمس أواق من الورق صدقة, وليس فيما دون ذود من الإبل صدقة (متفق عليه)
“ஐந்து வஸக்கிற்கு குறைவானதில் ஸகாத் இல்லை. ஐந்து ஊகிய்யாவுக்கு குறைந்த வெள்ளியில் ஸதகா இல்லை. ஐந்து ஒட்டகத்திற்கு குறைவானதில் ஸகாத் இல்லை. என்று  ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்) (ஒரு வஸக் = 60 சேர், ஒரு சேர் = 4 அள்ளு, ஓர் ஊகிய்யா=1 2/1 ராத்தல் )
4.     வியாபாரத்துக்காகவன்றி சுய தேவைக்காக பயன்படுத்தும் விரிப்பு, வீடு, தொழிற்சாலை, வாகணம் போன்ற பொருட்களில் ஸகாத் கடமையில்லை.
5.     மாணிக்கம், முத்து போன்ற மாணிக்க வகையில், அதனையே ஸகாத்தாக கொடுப்பது கடமையில்லை. எனினும் ஏனைய வர்த்தகப் பொருள் போன்று இதன் பெறுமதியை மதிப்பீடு செய்து அதன் பிரகாரம் ஸகாத் வழங்குவது கடமை.
6.    பெண்கள் பாவிக்கும் ஆபரணத்திற்கு ஸகாத் இல்லை. எனினும் அதனை அவர்கள் அழகுக்காக மட்டுமல்லாது, தேவை ஏற்படும் போது அதனை விற்கும் நோக்கில் சேமிப்புப் பொருளாக அதனை சேமித்து வைத்தால், அந்த ஆபரணத்திற்கு ஸகாத் வழஙகுவது கடமை. இது இப்படி இருக்க பொதுவாக பெண்கள் தங்களின்  எல்லா ஆபரணத்திற்காகவும் ஸகாத் செலுத்துவது மிகவும் பேணிப்பான தாகும். ஏனெனில் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் இதனை வழியுறுத்து கின்றது, அவர்கள் அறிவிப்பதாவது:
عن عائشة رضي الله عنها قالت دخل رسول الله صلى الله عليه وسلم فرأى في يدي فتخات من ورق فقال ما هذا ياعائشة فقلت صنعتهن أتزين لك يارسول الله؟ قال أتؤدين زكاتهن ؟ قلت لا, أو ماشاءالله. قال حسبك من النار (أبوداود والدارقطني)
ஒரு முறை ரஸூலுல்லாஹ் என்னிடம் வந்த போது என் கையில் வெள்ளி மோதிரங்கள் இருப்பதைக் கண்டார்கள். அப்பொழுது அன்னார், ஆயிஷாவே இதுவென்ன? என்றார்கள். அதற்கு நான் இவை நான் செய்தவை. உங்களுக்கு அழகாக தோள்றுகின்றனவா? என்றேன். அப்பொவுது நபியவர்கள், நீங்கள் அதன் ஸகாத்தை செலுத்துகின்றீர்களா? என்றார்கள். நான் இல்லை என்றேன். அப்பொழுது அன்னார், நரகிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள் (அபூ தாவுத், தாரகுத்னீ)
ஸகாத் கடமையான, பொருட்களின் நிஸாபும், அதன் மீதான ஸகாத்தின் அளவும்:
    இரு வகை நாணயமும், அவற்றுக்கு ஈடானவையும்:
1.    தங்கத்தின் நிஸாப் இருபது தீனாராகும். எனவே இதைவிட குறைந்த தங்கத்திற்கு ஸகாத் கடமையில்லை. மேலும் இதன் மீது ஒரு வருட சுழட்சி இருத்தல் வேண்டும், என்பது மற்றுமொரு நிபந்தனையாகும். இந்நிபந்தனைக்குட்பட்ட தங்கத்தில் நாட்பதில் ஒரு பாகத்தை ஸகாத்தாக செலுத்துவது கடமை. இதன்படி ஒவ்வொரு இருபது தீனாருக்காகவும் அரை தீனார் ஸகாத் செலுத்தப்படல் வேண்டும். மேலும் இதற்கு மேலாக அதிகரித்துச் செல்லும் தொகை சிறியதாயினும், பெரியதாயினும் அதனை உரிய முறையில் கணக்கிட்டு அதன் ஸகாத்தைச் செலுத்துவது கடமை.
2.    வெள்ளி: இதன் நிஸாப் ஐந்து ஊகிய்யாவாகும். ஒரு ஊகிய்யாவின் எடை நாற்பது திர்ஹமாகும்.இதன்படி ஐந்து ,ஊகிய்யா இருநூறு திர்ஹமுக்குச் சமனாகும். மேலும் இதன் மீது ஒரு வருட சுழட்சி இருத்தல் வேண்டும். இந்நிபந்தனைக்குட்பட்ட வெள்ளியில், தங்கத்தைப் போன்று நாற்பதில் ஒரு பாகத்தை ஸகாத்தாக செலுத்துவது கடமை. எனவே இருநூறு திர்ஹம் வெள்ளிக்கு ஐந்து திர்ஹம் ஸகாத் செலுத்தப்படல் வேண்டும். அதற்கு மேலாக அதிகரித்துச் செல்லும் தொகையை கணக்கிட்டு அதற்குரிய ஸகாத்தை செலுத்துவது கடமை.
3.    இரண்டு நாணயத்தையும் ஒன்று சேர்த்துக் கணக்கிடல்:
    ஒருவனிடம் தங்கமும், வெள்ளியும் இருந்த போதிலும், அவை தன் ,நிஸாபை எட்டவில்லையெனில் இவ்விரு நாணயத்தையும் ஒன்றாக சேர்த்துப் பார்க்க வேண்டும். அப்போது அவை ,நிஸாபை, எட்டிவிட்டால், அதனதன் கணக்கின் பிரகாரம் அவற்றின் ஸகாத்தை  செலுத்துவது கடமை. அவ்வமயம் இரண்டு நாணயத்துக்குமாக ஏதேனும் ஒரு நாணயத்தை ஸகாத்தாக வழங்கலாம். எனவே எவர் மீது ஒரு தீனார் செலுத்த வேண்டும் என்ற கடமை ஏற்பட்டுள்ளதோ அவர் அதற்குப் பதிலாக பத்து திர்ஹம் வெள்ளி நாணயம் வழங்கலாம். இதற்கு எதிர்  மாறான விடயத்திலும் இம்முறையைப் பின்பற்றலாம்.
4.     நாணயத் தாள்:
    ஒருவனின் நாணயத் தாள்கள், தங்கம் வெள்ளியின் நிஸாபின் ஏதாகிலும் ஒன்றின் நிஸாபை அடைந்து, அதன் மீது ஒரு வருட சுழற்சியும் ஏற்பட்டிருந்தால், அதிலிருந்து நாற்பதில் ஒரு பாகத்தை ஸகாத்தாக செலுத்துவது கடமை. இது நூற்றில் இரண்டரை (2.5%) வீதத்திற்குச் சமனாகும். மேலும் வர்த்தகப் பொருளின் நிஸாப், தங்கம் வெள்ளிக்குரிய நிஸாபின் அடிப்படை யிலேயே கணிக்கப்படும். எனவே தங்கம், வெள்ளி நாணயத்தில் தான் விரும்பிய ஏதாகிலும் ஒரு நிஸாபின் பிரகாரம், வியாபாரி  வர்த்தகப் பொருளுக்குரிய நிஸாபை கணித்துக் கொள்ளலாம்.
5.    திருப்பிப்பெற வேண்டிய கடன்:
தன்னிடமிருந்து கடன் பெற்றுக் கொண்ட ஒருவனிடமிருந்து, விரும்பிய போது தன் கடனை அறவிட இயலுமான ஒருவன் தன்னுடைய ஏனைய பணத்துடனோ, அல்லது வர்த்தகப் பொருளுடனோ அந்தக் கடனைச் சேர்த்து கணக்கெடுப்பது அவன் மீது கடமை. மேலும் அதன் மீது ஒரு வருட சுழற்சி எற்பட்டதும் அதன் ஸகாத்தை செலுத்திவிட வேண்டும். எனினும் அவனுக்கு வரவேண்டிய கடனைத் தவிர வேறு பணம் ஏதும் அவனிடம் இல்லாத நிலையில், அந்தக் கடன் தொகை ,நிஸாபை அடைந்து விட்டாலோ, அதன் ஸகாத்தை செலுத்துவது அவன் மீது கடமை. ஆனால் கடன் வாங்கியவன் வசதியற்றவனாக இருக்க, கடன் கொடுத்தவன் தான் விரும்பும் போது அக்கடனை மீளப் பெற இயலாதவனாக இருந்தால், அதனைப் அவர் எப்பொழுது மீளப் பெற்றுக் கொள்வாரோ, அப்பொழுது அதன்  ஒரு வருட ஸகாத்தை வழங்குவது அவர் மீது கடமை. இக்கடன் மீது பல வருடங்கள் கழிந்த போதிலும் ஒரு வருடத்தின் ஸகாத்தை செலுத்துவதே அவர் வீது கடமை.   
1.    ركاز  -புதையல்:
    ركاز என்பதற்கு, புதையல், மறைந்திருக்கும் பொருள், மெதுவான ஒலி ஆகிய பல கருத்துக்கள் உள்ளன. அடுத்து வரும் திரு வசனம் இக்கருத்தை  புலப்படுத்துகின்றது.
وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِنْ أَحَدٍ أَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا(مريم/98)
“இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தின ரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களில் ஒருவரையேனும் நீங்கள் காண்கின்றீர்களா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தையேனும் நீங்கள் கேட்கின்றீர்களா? (19/98)
 பண்டைய காலத்தில், அல்லது ஜாஹிலிய்யாக் காலத்தில் நிலத்துக்கடியில் புதைத்து வைத்த பொருள் புதையல் எனப்படும். எனவே ஒருவனின் நிலத்தில், அல்லது வீட்டில் இத்தகைய புதையல் எதுவும்  புதைக்கப்பட்டிருந்து அது அவனுக்குக் கிடைத்தால், அதில் ஐந்தில் ஒரு பாகத்தை ஸகாத்தாக வழங்குவது கடமை. இது வசதி இல்லாதோருக்காகவும், ஏழைகளுக்காகவும், மற்றும் நலன் புரி திட்டங்களின் தேவைகளுக்கா கவும் செலவிடப்படும். ஏனெனில்,
العجماء جرحها جبار, والبئر جبار, والمعدن جبار, وفي الركاز الخمس (متفق عليه)
“கால் நடை மூலம் உண்டான சேதத்திற்கு நஷ்ட ஈடில்லை. கிணற்றின் மூலம் ஏற்பட்ட சேதத்திற்கும் நஷ்ட ஈடில்லை. சுரங்கம் மூலம் ஏற்பட்ட சேதத்திற்கும் நஷ்ட ஈடில்லை. மேலும் புதையலில் ஐந்தில் ஒன்று ஸகாத் கடமையாகும். என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
7.    சுரங்கப் பொருள்:   
சுரங்கத்திலிருந்து கிடைத்த பொருள் தங்கம் அல்லது வெள்ளியாக இருப்பின். அது நிஸாபை எட்டியிருந்தால் அப்பொழுதே அதன் ஸகாத்தை செலுத்தி விடவேண்டும். ஏனெனில் அதற்கு ஒரு வருட சுழற்சி நிபந்தனை இல்லை. அறுவடை செய்தவுடன் விவசாயப் பொருளின் ஸகாத்தை செலுத்துவது கடமை என்பது போல், சுரங்கத்தி லிருந்து தங்கம், வெள்ளியை எடுத்தவுடனே அதன் ஸகாத்தை செலுத்துவது கடமை. மேலும் அதன் நிஸாப் சாதாரன தங்க, வெள்ளியின் நிஸாபேயாகும். எனினும் சாதாரன தங்கம், வெள்ளி போன்று நாற்பதில் ஒரு பாகத்தை ஸகாத்தாக செலுத்த வேண்டுமா? அல்லது புதையலைப் போன்று ஐந்தில் ஒரு பாகத்தை ஸகாத்தாக செலுத்த வேண்டுமா? என்பதில் அறிஞர்களுக் கிடையே ஒற்றைக் கருத்தில்லை. சுரங்கத்தில் கிடைத்த தங்கம், வெள்ளியை புதையலுடன் ஒப்பீடு செய்தோர், அதன் ஸகாத் ஐந்தில் ஒரு பாகம் என்றும், அதனை தங்க, வெள்ளி நாணயத்துடன் ஒப்பீடு செய்தோர் அதன் ஸகாத் நாற்பதில் ஒரு பாகம், அதாவது இரண்டரை வீதம் என்றும் கூறுவர். இப்படி நாற்பதில் ஒரு பாகத்தினை ஸகாத்தாக செலுத்த வேண்டு மென்போர், “ஐந்து ,ஊகிய்யா,வுக்கு குறைந்ததில் ஸகாத் கடமையில்லை” என்று, தங்க, வெள்ளி நாணயத்தின் ஸகாத் பற்றிக் குறிப்பிடும் ஹதீஸின் பொதுவான கருத்தை ஆதாரமாகக் கொள்கின்றனர். ஏனெனில் ஐந்து ,ஊகிய்யா எனும் பொதுச் சொல் சுரங்கத்தில் கிடைக்கும் தங்கத்தையும், அதுவல்லாத தங்கத்தையும் உள்ளடக்கும் என்பது அவர்களின் வாதம். எவ்வாறாயினும் இவ்விடயத்தில் நெகிழ்வுத் தன்மை காணப் படுகிறது. எனவே சகல புகழும் அருளும் எல்லாஹ்வுக்கே சொந்தம்  

8.    இலாபமாக கிடைத்த பொருள்:
 வர்த்தகத்தின் மூலம் கிடைத்த இலாபத்திலும், மிருகத்தின் உற்பத்தியான அதன் குட்டி போன்றவற்றிலும் ஸகாத் கொடுப்பது கடமை. அதற்கு ஒரு வருடம் நிறைவு  பெற்றிருத்தல் வேண்டுமென்பது நிபந்தனையல்ல. எனவே அதனை அதன் மூலத்துடன் சேர்த்து கணக்கிட்டு அதன் ஸகாத்தையும் கொடுத்துவிட வேண்டும். எனவே ஒருவனின் வர்த்தகப் பொருள், அல்லது மிருகம் அதன் நிஸாபை அடைந்துவிட்ட நிலையில், வருடத்தின் இடையில் வர்த்தகப் பொருளிலிருந்து இலாபமும், மிருகத்திலிருந்து குட்டிகளும் கிடைக்கப் பெற்றால், அதனை அதன் அசலுடன் சேர்த்து அதன் ஸகாத்தையும் செலுத்துவது கடமை.
வியாபாரத்தின் மூலம் கிடைத்த இலாபமும், மிருகத்தின் உற்பத்தியான அதன் குட்டிகளும் அல்லாத வேறு மார்க்கத்தின் மூலம் கிடைத்த வருமானம் ஆயின் அது தன் நிஸாபை எட்டியிருந்தால், அதன் மீது ஒரு வருடம் பூர்த்தியடையும் வரை அவன் எதிர்பார்த்திருந்து, பின்னர் அதன் ஸகாத்தை செலுத்துவான். எனவே ஒருவனுக்கு நன்கொடை மூலம் அல்லது வராஸத்தின் மூலம் பணம் ஏதும் கிடைத்தால் அதன் மீது ஒரு வருடம் நிறைவு பெறாத வரை அதன்  ஸகாத்தை செலுத்துவது கடமையாகாது.
கால் நடைகள், அவையாவன:
1.     ஒட்டகம்:
ஒட்டகம் தன் நிஸாபை எட்டியிருந்தால் மாத்திரமே அதன் ஸகாத்தை செலுத்துவது கடமை. அதன் நிஸாப் ஐந்து, ஒட்டகங்களாகும். ஏனெனில்
وليس فيما دون ذود من الإبل صدقة (متفق عليه)
“.ஐந்து ஒட்டகத்திற்கு குறைவானதில் ஸகாத் இல்லை. என்று  ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
மேலும் அதன் மீது ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டு மென்பதும், அது பொது மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்தவையாக இருக்க வேண்டும் என்பதும் அதன் ஏனைய நிபந்தனைகளாகும்.
எனவே இந்நிபந்தனைகளின் பிரகாரம் ஐந்து ஒட்டகங்களைப் பெற்றவன், ஒரு வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருடத்தில் பிரவேசம் செய்துள்ள ஒரு செம்மரி ஆட்டை அல்லது ஒரு வெள்ளாட்டை (சாதாரண ஆட்டை) ஸகாத்தாக செலுத்த வேண்டும். மேலும் பத்து ஒட்டகத்திற்கு இரண்டு ஆடுகளையும், பதினைந்து ஒட்டகத்திற்கு மூன்று ஆடுகளையும்.  இருபது ஒட்டகத்திற்கு நான்கு ஆடுகளையும் ஸகாத்தாக செலுத்த வேண்டும்.
இருபத்தைந்து ஒட்டகம் உடையவன் ஒரு வருடம் பூரணமடைந்து இரண்டாம் வருடத்தில் பிரவேசம் செய்துள்ள ஒரு பெண் ஒட்டகத்தை வழங்க வேண்டும். பெண் ஒட்டகம் இல்லையெனில் இரண்டு வருடம் நிறைவு பெற்று மூன்றாம் வருடத்தில் பிரவேசித்துளள் ஒரு ஆண் ஒட்டகத்தை வழங்க வேண்டும்.
நாற்பத்தாறு ஒட்டகங்ளுக்காக மூன்று வருடங்கள் நிறைவு பெற்று நான்காம் வருடத்தில் பிரவேசம் செய்துள்ள ஒரு பெண் ஒட்டகத்தை வழங்க வேண்டும்.
அறுபத்தொரு ஒட்டகத்திற்காக நான்கு வருடம் நிறைவு பெற்று, ஐந்து வருடத்தில் பிரவேசம் செய்துள்ள ஒரு பெண் ஒட்டகத்தை வழங்க வேண்டும்.
எழுபத்தாறு ஒட்டகத்திற்காக, இரண்டு வருடத்தை நிறைவு செய்து மூனறாம் வருடத்தில் பிரவேசம் செய்துள்ள இரண்டு பெண் ஒட்டகத்தை வழங்க வேண்டும்.  
தொண்ணூற்றியொரு ஒட்டகத்திலிருந்து நூற்றி இருபது வரை, மூன்று வருடத்தை நிறைவு செய்து நான்காம் வருடத்தில் பிரவேசம் செய்துள்ள இரண்டு பெண் ஒட்டகத்தை வழங்க வேண்டும்.
நூற்றி இருபது ஒட்டகங்களைத் தாண்டும் போது ஒவ்வொரு நாற்பதுக்கும் இரண்டு வருடம் நிறைவு பெற்று மூன்றாம் வருடத்தில் பிரவேசம் செய்துள்ள ஒரு பெண் ஒட்டகம் என்ற அடிப்படையிலும், ஒவ்வொரு ஐம்பதுக்கும் மூன்று வருடம் நிறைவு செய்து நான்காம் வருடத்தில் பிரவேசித்துள்ள ஒது பெண் ஒட்டகம் என்ற அடிப்படையிலும் வழங்க வேண்டும்.
ஓரு விளக்கம்:
    குறிப்பிட்ட வயதையுடைய பிராணி கிடைக்காத போது தன்னிடமுள்ள அதை விடவும் வயது குறைந்த பிராணியை கொடுக்கலாம். மேலும் இதனால் ஏற்பட்டுள்ள குறைபாட்டிற்கு மாற்றீடாக மேலதிகமாக இருபது தீனார், அல்லது இரண்டு ஆடுகளை வழங்க வேண்டும். ஆனால் முன்னர் குறிப்பிட்டது போன்று ஒரு வருடம் நிறைவு பெற்று இரண்டாம் வருடத்தில் பிரவேசித்த பெண் ஒட்டகத்திற்குப் பதிலாக, இரண்டு வருடம் நிறைவு பெற்று மூன்று வருடத்தில் பிரவேசித்த ஆண் ஒட்டகத்தை வழங்குவது போதுமானது. இதற்காக மேலதிகமாக எதுவும் அவசியமில்லை.
2.    மாடு:
இதன் நிபந்தனையும் ஒட்டகத்தைப் போன்று, அது தன் நிஸாபை எட்டியிருப்பதுடன், அது ஒரு வருடத்தை நிறைவு செய்தும், பொது மேய்ப்பு நிலத்தில் மேய்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
மாட்டின் நிஸாப் முப்பது மாடுகளாகும். இந்த அளவை மாடு  எட்டிவிட்டால், அதில் ஒரு வயதை அடைந்த ஒரு மாடு அல்லது பசுவை ஸகாத்தாக செலுத்த வேண்டும்.
நாற்பது மாடுகளுக்காக இரண்டு வயதை அடைந்த ஒரு பசுவும், அறுபது மாடுகளுக்காக ஒரு வயதை அடைந்த இரண்டு மாடு அல்லது இரண்டு பசுக்கள் வழங்க வேண்டும்.
இதைவிட அதிகமான மாடுகளுக்கு ஒவ்வொரு நாற்பது மாட்டுக்கும் இரண்டு வருடம் உடைய ஒரு பசுவும், ஒவ்வொரு முப்பது மாட்டுக்கும் ஒரு மாடும் வழங்க வேண்டும். மேலும் எணபது மாடுகளுக்கு இரண்டு வருடம் உடைய இரண்டு பசுவும், தொன்னூறு மாடுகளுக்கு ஒரு வருடம் உடைய மூன்று மாடுகளும், நூறு மாடுகளுக்கு இரண்டு வருடம் உடைய ஒரு பசுவும், அத்துடன் ஒரு வருடம் உடைய இரண்டு பசுக்களும் என்ற அடிப்படையில் இவ்வாறு மாட்டுக்குரிய ஸகாத்தை செலுத்த வேண்டும். இதனை முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உறுதி செய்கிறது.:
أن معاذا قال: بعثني رسول الله   أصدق أهل اليمن، فأمرني أن آخذ من البقر من كل ثلاثين تبيعا. ومن كل أربعين مسنة (أحمد , وأبوداود)
 “யமன் வாசிகளிடமிருந்து ஸகாத்தை அறவிடுவதற்காக என்னை ரஸூல் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள், அப்பொழுது ஒவ்வொரு முப்பது மாட்டிலிருந்தும், ஒரு வயதுடைய ஒரு மாட்டையும், ஒவ்வொரு நாற்பது மாட்டிலிருந்தும் இரண்டு வயதுடைய ஒரு மாட்டையும் எடுத்துக்கொள்ளுமாறு நபியவர்கள் என்னைப் பணித்தார்கள்” என்று முஆத் (ரழி) அறிவிக்கின்றார்கள் (அஹ்மத், அபூதாவுத்)
3.    ஆடு    
இதில் செம்மரி ஆடும், வெள்ளாடும் அடங்கும். முன்னர் குறிப்பிட்டது போன்று, இதன் மீதான ஸகாத் கடமையாவதற்கு, இது தன் நிஸாபை எட்டியிருப்பதும், ஒரு வருடத்தை நிறைவு செய்தும், பொது மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து வந்ததாகவும் இருக்க வேண்டும். இதன் நிஸாப் நாற்பது ஆடுகள். எனவே நாற்பது ஆடுகளுள்ளவன், ஒரு வருடம் பூர்த்தியாகி இரண்டாம் வருடத்தில் பிரவேசித்திருக்கும் ஒரு பெண் ஆட்டை ஸகாத்தாக செலுத்த வேண்டும். நூற்றி இருபத்தொரு ஆட்டுக்கு இரண்டு ஆடுகளும், நூற்றியொரு ஆட்டிற்கும், அதற்கு மேலுள்ள ஆடுகளுக்கும் மூன்று ஆடுகளும் கொடுக்க வேண்டும். மேலும் முன்னூறைத் தாண்டும் போது ஒவ்வொரு நூறு ஆட்டுக்கும் ஒரு ஆடு என்ற அடிப்படையில் ஸகாத்தை செலுத்த வேண்டும். இதனை அபூ பகர் (ரழி) அவர்களின் ஹதீஸ் உறுதி செய்கின்றது.
“மேய்ந்து வளர்ந்த நாற்பது ஆடுகளிருந்தால் ஒரு ஆடும், முன்னூறைத் தாண்டி விட்டால் ஒவ்வொரு நூறுக்கும் ஒவ்வொரு ஆடும் வழங்க வேண்டுமென்று” அறிவித்துள்ளார்கள். (அஹ்மத், அபூதாவுத்)
 தானியமும், கனியும்
    தானியம் நன்றாக உலர்ந்து உரமடைந்த பின் அதன் ஸகாத்தை செலுத்துவது கடமை. மேலும் கனி வகைகள் நன்றாகக் கனிந்து உண்ணுவதற்குரிய பக்குவத்தை அடைந்ததும் அதன் ஸகாத்தை செலுத்துவது கடமை. எல்லா வகை கனிகளின் பக்குவ நிலையும் தெரிந்த விடயமே. உதாரணமாக ஈத்தம் பழம் சிவப்பாக அல்லது மஞ்சலாக மாற்றமடை வதையும், திராட்சை இனிப்பாக மாற்றமடை வதையும் குறிப்பிடலாம். இவற்றின் ஸகாத்தை செலுத்துவது கடமை என்பதன் ஆதாரம், அடுத்து வரும் திருவசனமாகும்.
وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ (الأنعام/141)
அவற்றை அறுவடை செய்யும் போது அதிலிருந்து அவனுடைய பாகத்தைக் கொடுத்து விடுங்கள்” (6/141)
தானியத்தினதும், கனிகளினதும் நிஸாப் ஐந்து வஸக்குகளாகும். ஒரு வஸக் அறுபது சேர் கொள்ளளவு கொண்டது. மேலும் ஒரு சேர் நான்கு அள்ளுகளைக் கொண்டது. ஈத்தம் பழம், உளர்ந்த திராட்சை, கோதுமை, அரிசி ஆகியவற்றின் நிஸாப், ரஸூல் (ஸல்) அவர்களின் சேரின்படி முன்னூறு சேராகும். இது நடுத்தர மனிதனின் இரண்டு கைகளால் நிறைவாக அள்ளி எடுக்கும் நான்கு அள்ளுகளுக்குச் சமனானது. ஊற்று நீர், மழை நீர் போன்ற வற்றிலிருந்து சிரமமின்றி நீர் பாய்ச்சப்பட்ட தானியம், மற்றும் கனி வகையில் பத்தில் ஒரு பாகத்தை ஸகாத்தாக செலுத்துவது கடமை. அதாவது ஐந்து வஸக்கிற்கு அரை வஸக்கை செலுத்த வேண்டும். நீர் பாய்ச்சும் சாதனம் போன்ற வற்றின் மூலம் சிரமத்துடன் நீர் பாய்ச்சப்பட்டவை எனில் அதில் இருபதில் ஒரு பாகத்தைச் செலுத்துவது கடமை. அதாவது ஐந்து வஸக்கிற்கு கால் வஸக் என்ற அடிப்படையில் செலுத்த வேண்டும். இதைவிட அதிகப்படியுள்ளதற்கு, அது சொற்பமோ, அதிகமோ அதன் கணிப்பின் பிரகாரம் அதன் ஸகாத்தை செலுத்த வேண்டும். ஏனெனில்,

قال رسول الله صلى الله عليه وسلم فيما سقت السماء والأنهار والعيون أو كان عثريا العشر, وفيما سقي بالسواني أو النضح نصف العشر
“(இயற்கையாக) வானம், ஆறு, கிணறு மற்றும் மழை என்பவை மூலம் நீர் புகட்டியதில் பத்தில் ஒரு பாகமும், மிருகம், மற்றும் நீர்பாய்ச்சும் சாதனங்கள் மூலம் (சிரமத்தின் மூலம்) நீர் புகட்டியதில்  இருபதில் ஒரு பாகமும் ஸகாத் செலுத்தப்பட வேண்டும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.