Home
About
Contact
Categories
Introducing Islam
Muhammad (PBUH)
Women in Islam
Misconceptions
Scientific Miracles
Jesus (PBUH) in Islam
Comparative Religions
The Existence of God
Why I became a Muslim!
For New Muslim
Purpose of Life
About Quran & Hadith
Fatwa (Q&A)
Morals & Ethics
Doctrine & Sects
The Hereafter
Biographies & Scholars
Transactions & Worship
Major Sins & Acts of Shirk
Jurisprudence
For Children
Arabic and it's science
Languages
English
- English
Arabic
- اللغة العربية
Chinese
- 中文
Russian
- Русский
Deutsch
- Deutsch
French
- Français
Spanish
- Español
Portuguese
- Português
Greek
- Ελληνικά
Italian
- Italiano
Romanian
- Română
Japanese
- 日本語
Turkish
- Türkçe
Hindi
- हिन्दी
Thai
- ไทย
Ukrainian
- Украïнська
Urdu
- اردو
Filipino
- Tagalog
Nepali
- नेपाली
Dutch
- Nederlands
Polish
- Polski
Swedish
- Svenska
Sinhalese
- සිංහල
Bosnian
- Bosanski
Swahili
- Kiswahili
Persian
- فارسى
Albanian
- Shqip
Czech
- Čeština
Korean
- 한국어
Hebrew
- עברית
Bengali
- বাংলা ভাষা
Vietnamese
- tiếng Việt
Malay
- Bahasa Melayu
Danish
- Dansk
Finnish
- suomi
Norwegian
- norsk
Armenian
- Հայերեն
Estonian
- Eesti
Tamil
- தமிழ் மொழி
Telugu
- తెలుగు
Slovak
- Slovenčina
Macedonian
- македонски
Uzbek
- Ўзбек
Bulgarian
- български
hungarian
- magyar
Indonesian
- Indonesian
Icelandic
- íslenska
Georgian
- ქართული
Mongolian
- Mongɣol
Hausa
- Hausa
Latvian
- latviešu
Lithuanian
- lietuvių
Yoruba
- Yoruba
Malayalam - Malabar
- മലയാളം
Burmese
- myanma
Amharic
- አማርኛ
Azerbaijani
- Azərbaycanca
Kurdish
- کوردی
Somali
- Af-Soomaali
Uyghur
- ئۇيغۇر تىلى
Sindhi
- سنڌي
Pashto
- پښتو
Comorian
- Comorian
Tajik
- Тоҷикӣ
Fula
- Fulani - Peul
Flata
- Falatia
Malagasy
- Malagasy
Chechen
- Chechen
N'ko Bambara
- Bamanankan
Brahui
- Brahui
Catalan
- català
Lingala
- Lingala
Kannada
- ಕನ್ನಡ
Maranao Iranon
- Mëranaw
Luganda
- Luganda
Afaan Oromoo
- Oromoo
Tigrinya
- ትግርኛ
Kirghiz - Kyrgyz
- Кыргызча
Turkmani
- Türkmen dili
Khmer Campodian
- ភាសាខ្មែរ
Circassian
- Circassian
Chewa
- Chichewa - Nyanja
Slovenian
- Slovenščina
Avar - Awari
- МагIарул мацI
Kazakh
- Қазақ тілі
Soninke
- Soninke
Tatar
- Татарча
Maldivian
- Maldivi - divehi
Serbian
- Српски
Wolof
- Wolof
Tamazight
- Tamazight
Romani Gipsy
- Romani ćhib
Zulu
- isiZulu
Rohingya
- Ruáingga
Belarusian
- беларуская
Visayan
- Bisayan - Bisaya
Kalagan
- Kalagan
Yakan
- Yakan
Tausug
- Bahasa Sūg
Maguindanao
- Maguindanao
Cham
- Cham
Sepedi
- Sepedi - Sesotho
Samal
- Samal
Papiamento
- Papiamento
Kashmiri
- कॉशुर كأشُر kạ̄šur
Tibetan
- Tibetan
Bashkir
- Башҡорт теле
Kinyarwanda
- Kinyarwanda
Croatian
- hrvatski
Mandar
- Mandar
Afrikanns
- Afrikanns
Afar
- Qafár af
Jola
- Jóola - Diola
Kurmanji
- Kurmancî
Ossetian
- Иронау
Mauritian
- Kreol Morisien
Esperanto
- Esperanto
Igbo
- Asụsụ Igbo
Xhosa
- isiXhosa
Karachay-Balkar
- Къарачай-Малкъ
Kanuri
- Kanuri
Bassa
- Bissa - Mbene
Marathi
- Marāţhī
Gujarati
- Gujarātī
Assamese
- অসমীয়া
Nuer
- Nuer - Naadh
Dinka/Bor
- Dinka/Bor
Shilluk/Chollo
- Shilluk/Dhøg Cøllø
Akan
- Akan/Twi/Fante
Ingush
- ГІалгІай мотт
Shona
- chiShona
Maltese
- Malti
Mossi
- Mõõré
Bambara
- Bamanan
Balochi
- بلوچی
Mandinka
- Mandi'nka kango
Sotho
- Sesotho
Nzema
- Nzima
Fante dialect of Akan
- Fanti
Mouskoun
- Mouskoun
Dagbani
- Dagbanli
Lusoga
- Soga
Luhya
- Luhiya
Gonja
- Gonja
Home
Books
முஸ்லிம்கள் யாவரும் அவசியம் அறிய வேண்டியவை
Books
TVs
Radios
Articles
Fatwas
Quran
Videos
Audios
Authors
Apps
Websites
முஸ்லிம்கள் யாவரும் அவசியம் அறிய வேண்டியவை
நம்பிக்கை சம்பந்தமாக, அவசியம் தெரிந்து கொள்ள வேணடிய விடயங்களைக் கற்று அதன் படி செயற் படவும், குறிப்பாக ஆரம்ப நிலை மாணவர்கள் அதை விளங்கி பாடமிட ஏதுவாகவும் சுறுக்கமான புத்தகம் .
முஸ்லிம்கள் யாவரும் அவசியம் அறிய வேண்டியவை
< தமிழ் >
Author' name அஷ்ஷைக் அப்துல்லாஹ் இப்னு இப்றாஹீம் இப்னு உஸ்மான் அல் கர்ஆவீ
Translator's name Y.M.S.I.இமாம்
Reviser's nameமுஹம்மத் அமீன்
الواجبات المتحتمات المعرفة على كل مسلم ومسلمة
اسم المؤلف عبد الله بن ابراهيم بن عثمان القرعاوي
ترجمة: سيد إسماعيل إمام بن ياسين مولانا
مراجعة: محمد أمين
முஸ்லிம்கள் யாவரும் அவசியம் அறிய வேண்டியவை
என்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.
கருணையும் சாந்தியும் நமதுயிரிலும் மேலான நம் தூதர், முஹம்மது (ஸல்) அவக்களின் மீதும் அவர்களின் கிளையார், தோழர்கள் மீதும் மற்றும் கியாமம் பரியந்தம் அன்னாரின் வழிமுறைகளைப் பின்பற்றுகின்ற நல்லோர் யாவரின் மீதும் உண்டாவதாக.
இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான பல கோட்பாடுகளும் கொளகைகளும் மலிந்துள்ள இந்நாளில் தங்களின் ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதாயின், இஸ்லாத்தின் அடிப்படை களையும், ஈமானுக்குப் பாதகமான விஷயங்கள் என்னவென்பதையும் ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருப்பது கடமை. இல்லாவிட்டால் தாம் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி இருப்பதை அவர்களே அறிய மாட்டார்கள். இதன் அபாயத்திலிருந்து சகல முஸ்லிம்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.
இஸ்லாத்தின் எதிரிகளை இரண்டு கோணத்தில் பார்க்கலாம். ஒன்று இஸ்லாத்தின் பகிரங்க எதிரிகள். இவர்கள் இஸ்லாத்தை ஒழிவு மறைவின்றி அப்பட்டமாக எதிர்ப்பவர்கள். இரண்டு இஸ்லாத்தின் மறைவான எதிரிகள். முன்னவர்களை இலகுவில் இனங் காணலாம். ஆனால் இரண்டாவது பிரிவினரை இனங் காணுவது கடினம். ஏனெனில் இவர்கள் பசுத் தோல் போர்த்திய புலிகள். இஸ்லாமிய மார்கத்தை ஏற்றுள்ள, அல்லது ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறிக் கொள்கின்ற இவர்கள் தங்களின் தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக இஸ்லாத்தின் வேதத்தைத் திரிபு படுத்தபவர்கள், இஸ்லாத்தின் பெயரை வைத்துக் கொண்டே இஸ்லாத்தை அழிக்க வந்த கோடாரிக் காம்புகள், எனவே இவர்களின் ஆபத்து முன்னையவரின் ஆபத்துக்களை விடவும் பயங்கரமானவை. எனவே அவர்களின் விஷமத் தனத்தில் இருந்து எச்சரிக்கையாக இருப்பது எல்லா முஸ்லிம்களிதும் கடமயாகும். காதியானிகள், பரேலவீகள், மற்றும் தீவிர வாத ஷீஆக்கள் இந்த இரண்டாம் பிரிவில் அடங்குவர்
எவ்வாராயினும் தங்களின் ஈமானை உரிய முறையில் பாதுகாத்துக் கொள்வதாயின் ஈமானையும், இஸ்லாத்தையும் பற்றிய சரியான அறிவும் தெளிவும் அவசியம். இதனை பிள்ளைகளுக்கு சிறு பிராயத்திலேயே அறிவுருத்து வது காலத்தின் தேவையாகும். எனவே இதனைக் கருத்திற் கொண்டு, இஸ்லாத்தின் அடிப்படை களைத் தெளிவு படுத்தி குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன், ‘அஷ்ஷைக் அப்துல்லாஹ் இப்னு இப்றாஹீம் இப்னு உஸ்மான் அல் கர்ஆவீ ‘ அவர்கள் الواجبات المتحتمات المعرفة على كل مسلم ومسلمة" என்ற பெயரில் ஒரு கை நூலை எழுதியுள்ளார். அதனையே அடியேன் “முஸ்லிம்கள் யாவரும் அவசியம் அறிய வேண்டியவை” என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளேன். இதன் மூலம் இந்த சமூகம் பயன் பெற அல்லாஹ் அருள் புரிவானாக. மேலும் அதன் ஆசிரியருக்கும், அதனை மொழி பெயர்த்தோனுக்கும், அதனை வெளியிட உதவிய யாவருக்கும் ஈருலகிலும் நற்பாக்கியம் கிட்ட அல்லாஹ் அருள் புரிவானாக.
وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين
திக்குவல்லை இமாம் (ரஷாதீ-பெங்களூர்)
30\05\2015
"الواجبات المتحتمات المعرفة على كل مسلم ومسلمة " (تأليف عبد الله بن ابراهيم بن عثمان القرعاوي )
دار طيبة الخضراء، مكة المكرمة- العزيزية، شهوان للطباعة
முஸ்லிம்கள் யாவரும் அவசியம் அறிய வேண்டிவை
முன்னுரை
புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனையே நாம் புகழ்கின்றோம், அவனிடமே உதவியும் பாவ மன்னிப்பும் கோறுகின்றோம். மேலும் நம் மனதிலி ருக்கும் தீமைகளையும், நமது தீய செயல்களையும் விட்டும் நம்மைப் பாதுகாக்குமாறும் அவனிடம் காவல் தேடுகிறோம். அவன் யாருக்கு நேர் வழியைக் கொடுத்தானோ, அவரை யாராலும் வழி கெடுத்து விட முடியாது. மேலும் அவன் யாரைத் தவறான வழியில் விட்டு வைத்தானோ, அவனுக்கு யாராலும் நேர் வழியைக் கொடுத்திடவும் முடியாது.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதி யானவன் ஒருவனும் இல்லை. அவன் ஒருவன், அவனுக்கு இணை எதுவுமில்லை, என்று சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள், அவனின் அடியாரும் தூதரும் ஆவார் என்றும் சாட்சி பகர்கின்றேன்.
மனிதனை அல்லாஹ் சிருஷ்டித்ததன் நோக்கமும், அடியார்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விடயமும் யாதெனில், அல்லாஹ் தன் தெய்வீகத்திலும், அனைத்தையும் பரிபாலிப்ப திலும், தன்னுடைய திருநாமங்களிலும், பண்பு களிலும் ஏகன் என்பதையும், மற்றும் இவற்றுக்கு எதிரான பெரிய சிறிய இணை வைத்தலையும், இறை நிராகரித்தலையும் ஏற்படுத்தும் கருமங்கள் யாவை? என்பதையும், மற்றும் நம்பிக்கையுடனும், கிரியைகளுடனும் சம்மந்தப்பட்ட நயவஞ்சகத் தன்மைகள் யாவை? என்பதைத் தெரிந்து கொள்வதும், அவ்வாறே வழிகேட்டின் தலைவர்கள் யார் என்பதைத் தெரிந்து அவர்களுக்கு மாறு செய்து, அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான். மேலும் இவ்விடயமாக அவர்களிடம், அவர்களின் ஒப்புதலையும் அல்லாஹ் வாங்கியிருக்கின்றான். மேலும் இதன் நிமித்தம்தான் பல சோதனைகளும் சம்பவங்களும் நடை பெற்றன. அவாறே இவ்விடயமாகத்தான் மறுமை நாளில் ميزان தராசுகள் நிருவப்படவும், பட்டோலைகள் விரிக்கப்படவும் உள்ளன. மேலும் இதன் அடிப்படையில்தான் கீர்த்தியும், அபகீர்த்தியும் நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும் மறுமை நாளில் அல்லாஹ் தருகின்ற பிரகாசம் அல்லாத, வேறு பிரகாசம் எதுவும் இல்லாத சந்தர்ப்பத்தில் மனிதர்களுக்கு பிரகாசம் கிடைப்பதும் இதன் அடிப்படையில் தான்.
எனவே அடியார்கள் இவ்விடயங்களைத் தெரிந்து அதன்படி செயற்படாத வரையில், நல்லினக்கத்தையும், நல் வாழ்வையும், வெற்றியையும் அவர்கள் காண முடியாது.
இந்த தஃவா பணியை அஷ்ஷெய்க் அல் இமாம் அல்முஜத்தித் ஷெய்குல் இஸ்லாம் ‘முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்’ அவர்கள் ஆரம்பிக்கு முன்னர், நஜ்த் வாசிகளும் ஏனைய பிரதேச வாசிகளும் மகத்தான ஏகத்துவத்தின் அடிப்படை களையும், சகல அறிவு ஞானங்களையும் விடவும் மேலான அதன் அறிவையும் பெற்றிருக்க வில்லை.
அவ்வமயம் இந்த விடயம் பூதாகாரம் அடைந்திருந்தது. இஸ்லாமிய சமூகத்தில் ‘ஷிர்க்கு, குப்ரு எனும் இணை வைத்தலும், இறை நிராகரிப்பும் அலை மோதிக் கொண்டிருந்தன. ஸலபுஸ் ஸாலிஹீன்களான முன்னைய சான்றோர்களின் ஞான அடையாளங்கள் அழிந்து போயிருந்தன. மறுப்புக்குரிய ‘பித்அத்து’க்களும், ‘ஷிர்க்குகளும் - நவீன வழிபாடுகளும், இணை விவகாரங்களும் தலை தூக்கியிருந்தன.
இவ்வாரான சந்தர்ப்பத்தில்தான், “ எல்லா நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இம்மார்க்கத்தில் ஒரு சீர்திருத்தவாதியை அல்லாஹ் அனுப்பி வைப்பான்” என்ற நபிமொழிக்கு அமைய, அந்த இருள்களை அகற்றவும், பித்அத்துக்களினதும், வழிகேடுகளிதும் திரைகளை நீக்கவும், மற்றும் ஐயங்களையும் மௌட்டீகங்களையும் களையவும் தக்கவாறு அஷ் ஷைக் முஹம்து இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களை, அந்த ஸ்தானத்தில் அல்லாஹ் நிலை நிறுத்தினான். அல்லாஹ், அன்னாரின் மீளும் தலத்தை நலமாக்கி அவருக்கு கூலியை இரட்டிப்பாக்கியும் கொடுப்பனாக.
இரவு பகலாக, மறைவிலும் வெளியிலும் அவர் அல்லாஹ்வின் ஏகத்துத்தின் பால் மக்களை அழைக்கலானார். அவ்வமயம் அவர் யாருடைய பக்கமும் சாரவோ, யாருக்கும் இரக்கம் காட்டவோ இல்லை. அன்னாரின் இந்தப் போக்கு பலருக்குப் பாரமாக இருந்தது. இதனால் அகங்காரம் கொண்ட அவர்கள், அன்னாரின் காரியத்திற்குத் தடையாக இருந்தனர். எனினும் அவர்களின் கெடுபிடிகள் எதுவும் ‘தஃவா’ பணியை விட்டும் அன்னாரைத் தடுக்க முடியவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அன்னாருக்குப் பல உதவியாளர்களை அல்லாஹ் பெற்றுக் கொடுத்தான். அவர்கள் அன்னாரின் கொடிகளை ஏந்தி, தவறான வழியில் இருப்பவர்களை ஊடறுத்துச் சென்றனர். அதனால் எல்லா இடங்களிலும் அவரின் பிரச்சாரம் பரவியது.
நபிமார்களுக்கடையில் வேற்றுமை காணாது, அவர்கள் மத்தியில் ஒற்றுமை காணும் விதத்திலும், அவர்களுக்கிடையில் வித்தியாசம் காணும் முஷ்ரிக்கீன் களுக்கு பதில் தரும் விதத்திலும் பல நூல்களை, ஷெய்க் அவர்கள் எழுதினார்கள். كتاب التوحيد"” என்ற நூலும், ஷெய்க் அவர்கள் அந்த வரிசையில் கோர்வை செய்த ஒன்றுதான். இது, இவ்விடயத்தில் தனித்துவமான ஒரு நூலாகும். அன்னாருக்கு முன்னரும் பின்னரும் இது போன்ற ஒரு நூலை யாரும் எழுதியதில்லை. மேலும் இத்துறையில், ‘الأصول الثلاثة، كشف الشبهات’ என்ற பெயரில் மேலும் இரண்டு புத்தகங்களை அவர் வெளியிட்டார். இவை தவிர பயனுள்ள வேறு பல நூல்களையும் அவர்எழுதினார்.
ஏகத்துவ விவகாரம் மிகவும் பாரியதும் முக்கியம் வாய்ந்ததுமாகும். எனவே நம்பிக்கை சம்பந்தமாக, அவசியம் தெரிந்து கொள்ள வேணடிய விடயங்களைக் கற்று அதன் படி செயற் படவும், குறிப்பாக ஆரம்ப நிலை மாணவர்கள் அதை விளங்கி பாடமிட ஏதுவாகவும் சுறுக்கமான புத்தகம் ஒன்றை எழுது மாறு எனது சகோதரர்கள் சிலர் என்னிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த கருமத்தை எனக்கு அல்லாஹ் இலகுவாக்கித் தந்தான். மேலும் அதற்குத் தேவையான விஷயதானங்களை முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களினதும், அன்னாரின் பேரப் பிள்ளை களினதும், மற்றும் வேறு சில ஆக்கங்களிலிருந்தும் திரட்டும் படியான எண்ணத்தையும் என் உள்ளத்தில் அவன் ஏற்படுத்தினான். எனவே இந்த காரியத்தையும் மற்றும் வேறு பல விடயங்களையும் செய்ய எனக்கு உதவிய அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் உரித்தாகுக. எனது இந்த புத்தகத்திற்கு,
الواجبات المتحتمات المعرفة على كل مسلم و مسلمة‘
“அனைத்து முஸ்லிம்களும் அவசியம் அறிய வேண்டயவை” என்று பெயரிட்டேன். இந்த காரியத்தை அல்லாஹ்வுக்கென்ற தூய எண்ணம் கொண்டதாக ஆக்கியருளுமாறும், இதன் மூலம் எனக்கும், இதனை வாசிப்போருக்கும், மற்றும் இதனைக் கேட்போருக்கும், இரு உலகிலும் பயன் பெறத்தக்கதாக ஆக்கியருளு மாறும் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். நிச்சயமாக சகல விடயத்திலும் ஆதிக்கமும் வல்லமையும் உள்ளவன் அவன் ஒருவனே.
இதனை ஆக்கியோன்,
அல்லாஹ்வின் மன்னிப்பின் பால் தேவையுள்ள,
அப்துல்லாஹ் பின் இப்றாஹீம் பின் உஸ்மான் அல் கர்ஆவீ
(அல் கஸீம் _ அல் புரைதா)
********* ************* *************
சகல முஸ்லிம்களும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைகள் மூன்று
அவையாவன - தங்களின் இரட்சகன் யார்?
மார்க்கம் என்ன?
நபி முஹம்மது (ஸல்) என்பவர் யார்? என்பவையாகும்.
இந்த மூன்று அடிப்படைகளையும் பற்றிச் சரியாக அறிந்து கொள்வது எல்லா முஸ்லிம் ஆண், பெண் இரு பாலார் மீதும் கடமையாகும்.
எனவே உங்களின் இரட்சகன் யார்? என்று உங்களிடம் யாரேனும் வினவினால், “என்னைப் போஷித்து வரும் அல்லாஹ்தான் என்னடைய இரட்சகன், சர்வலோக சிருஷ்டிகளின் இரட்சகனும் அவனேதான், எனது வணக்கத்துக்கு உரியவனும் அவன் ஒருவன் தான். எனவே அவனைத் தவிர வணக்கத்துக்குத் தகுதியான இறைவன் வேறு எவனும் இல்லை” என்று கூறுங்கள்.
மேலும் உங்களின் மார்க்கம் யாது? என்று வினவினால், “ஏக அல்லாஹ்வுக்கும் அவனின் கட்டளைக்கும் அடிபணிவதையும், இணையையும் மற்றும் இணையைச் சார்ந்தவர்களையும் விட்டும் விலகி இருப்பதையும் வழியுறுத்தும் ‘இஸ்லாம்’ தான் எனது மார்க்கம்”என்று கூறுங்கள்.
அவ்வாறே உங்களின் நபி யார்? என்று வினவினால், “அல்லாஹ்வின் தோழர் இப்றாஹீம் (அலை) அவர்களின் புதல்வன், இஸ்மாஈல் அவர்களின் சந்ததிகளான அரபு இனத்தின் குறைஷ் குலத்தைச் சேர்ந்த முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் என்றும், இந்த நபியின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. ஏகத்துவத்தின் பால் அழைப்பு விடுத்து, ஷீர்க்கை- இணையைப் பற்றி எச்சரிக்கை செய்வதற்காகவும் அன்னாரை அல்லாஹ் நபியாக அனுப்பினான்.” என்று கூறுங்கள்.
الدين எனும் மார்க்கம் இரண்டு அடிப்படைகளைக் கொண்டதாகும்:
1. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன், அவனுக்கு இணை எதுவுமில்லை என்பதை ஏற்றுக் கொள்வதுடன், அதன் பால் மற்றவர்களைத் தூண்டுவதும், அந்த விடயத்தில் நட்பை பேணுவதும், மேலும் இந்த விடயத்தை ஏற்றுக் கொள்ளாதவன் இறைக் கொள்கையை நிராகரித்த காபிர் என நம்புவதுமாகும்.
2. அல்லாஹ்வின் இபாதத்தில் இணை கற்பித்தலை கண்டித்தல்,மேலும் அந்த விடயத்தில் கண்டிப்பாக இருத்தல். அவ்வாறே சிர்க்கான வழிபாடுகளை எதிர்ப்பதுடன் சிர்க்கான காரியத்தைச் செய்கின்றவனை காபிர் எனக் காணுதல். இவ்விரண்டு விடயங்களும் மார்க்கத்தின் முக்கியமான இரண்டு அடிப்படைகளாகும்.
************ ************ **************
لاإله الا اله الاالله “வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன்” இல்லை என்ற இந்தக் கலிமாவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அது பின் வரும் நிபந்தனைகளின் படி அமைந்திருத்தல் வேண்டும்.
1. கலிமாவில் பொதிந்துள்ள எதிர்மறையானதும், ஊர்ஜிதப் படுத்தக் கூடியதுமான இரண்டு அம்சங்களின் கருத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளல்.
2. சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு அதன் பொருளை அறிந்து கொள்ளல்.
3. உளத்தூய்மையுடன் அதனை ஏற்றுக் கொள்ளல்.
4. நயவஞ்சகத் தன்மைக்கு இடமில்லாதவாறு உண்மையாகவே அதனை ஏற்றுக் கொள்ளல்.
5. கலிமா வழியுறுத்தும் கருத்தை மகிழ்ச்சியுடனும் முழு மனதுடனும் ஏற்றுக் கொள்ளல்.
6. கலிமாவின் உரிமைகளைப் பேணி, அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்படிதல். வேறு வார்த்தையில் சொல்வதாயின், அல்லாஹ் வின் திருப்தி ஒன்றையே குறிக்கோலாகக் கொண்டு தூய எண்ணத்துடன் இபாதத்துக் களை நிறைவேற்றுதல்.
7. எந்த வொரு மறுப்பும் இல்லாமல் அதனை ஏற்றுக் கொள்ளுதல்.
********** *********** *************
*கலிமாவானது அதற்குரிய நிபந்தனைகளின் படி அமையப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதற்கான ஆதாரம்:
فَاعْلَمْ أَنَّهُ لآاِلَهَ إلاَّهُوَ (محمد،19)
“நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேரொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.(47:19)
وَلاَ يَمْلِكٌ الَّذِيْنِ يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ إلاَّ مَنْ شَهِد بِالْحَقِّ وَهُمْ يَعْلَمُوْنَ (الزخرف:86)
மேலும் எவர்கள் உண்மையை அறிந்து, அதனைப் பகிரங்கமாகவும் கூறினார்களோ, அவர்களை அன்றி அல்லாஹ் அல்லாத எவைகளை இவர்கள் அழைக்கின் றார்களோ, அவைகள் அவனிடத்தில் பரிந்து பேச சக்தி பெறாது.(43:86)
இந்த வசனத்தில் الحق - உண்மை என்ற சொல் لاإله إلاالله என்ற கலிமாவை குறிக்கின்றது. எனவே அதனை ஏற்றுக் கொள்கின்றவர் அதன் கருத்து என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம் என்பது இதிலிருந்து புலனாகிறது.
مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لآإلَه إلاَّالله دَخَلَ الْجَنَّة
“எவர் வணக்கத்திற்குஉரிய இறைவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக அறிந்த நிலையில் மரணிப்பாரோ அவர் சுவர்க்கம் செல்வார்.” என்று ரஸூல் (ஸல்) கூறினார்கள் என உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஸஹீஹான இந்த ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
மேலும் கலிமாவை, ஐயத்திற்கு இடமின்றி உறுதியாக ஏற்றுக் கொள்ளல் வேண்டும் என்பது அதன் மற்றுமொரு நிபந்னையாகும்,அதன் ஆதாரம் வருமாறு:
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُوْلَئِكَ هُمُ الصَّادِقُونَ
(الحجرات/15)
நம்பிக்கையாளர்கள் எவர்கள் என்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இத்தகையவர்கள் தாம் உண்மை யானவர்கள்.(49:15)
ஒரு முஃமின் உண்மையில், விசுவாசம் உள்ளவனாக இருப்பதற்கு ஈமானின் விடயத்தில் அவன் சந்தேகம் கொள்ளாமல் உறுதியுடன் இருப்பதுவும் ஒரு நிபந்தனை என்பதை, இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான்.
மேலும் நபியவர்களின் இந்தக கூற்றைக் கவணியுங்கள்.
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشهد أن لآ إله الاالله وأنِّي رسول الله لايَلْقَى اللَّهَ بِهِمَا عَبْدٌ غَيْرَ شَاكٍّ فِيْهِمَا الاَّ دَخَلَ الْجَنَّة وفي رواية لاَيَلْقَى اللَّهَ بِهِمَا عَبْدٌ غَيْرَ شَاكٍّ فِيْهِمَا فَيُحْجَبَ عَنِ الْجَنَّةِ (رواه مسلم)
“அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் யாருமில்லை, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நானே என்று நான் சாட்சி பகர்கின்றேன். இவ்விரண்டு விடயங்களின் மீதும் சந்தேகம் கொள்ளாமல் அவை இரண்டுடனும் அல்லாஹ்வை சந்திக்கும் ஒரு அடியான் சுவர்க்கம் பிரவேசிக்காமல் இருப்பதில்லை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள். இன்னொரு அறிவிப்பில் “இவ்விரண்டு விடயங்களின் மீதும் சந்தேகம் கொள்ளாமல் அவை இரண்டுடனும் அல்லாஹ்வை சந்திக்கும் ஒரு அடியான் சுவர்க்கத்தை விட்டும் தடுக்கப் பட மாட்டான்” என்று நபியவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம், முஸ்லிம்)
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு நீண்ட ஹதீஸில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
مَنْ لَقِيْتَ مِنْ وَرَاءِ هَذَا الْحَائِطِ يَشْهَدُ أنْ لآ إلهَ إلاَّاللهَ مُسْنَيْقِنًا بِهَا قَلْبُهُ فَبَشِّرْهُ بِالْجَنَّةِ (رواه البخاري)
“இந்த சுவருக்குப் பின்னால் உறுதியான மனதுடன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் யாரும் இல்லை என்று சாட்சி பகரும் யாரையேனும் நீங்கள் சந்தித்தால் அவருக்கு சுவர்க்கத்தைக் கொண்டு சுப செய்தி சொல்லுங்கள்” என்று நபியவர்கள் என்னிடம் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
மேலும் உளத் தூய்மையுடன் கலிமாவை சொல்ல வேண்டும் என்பதற்குரிய ஆதாரம் வருமாறு:
أَلاَ للَّهِ الدِّيْنُ الْخَالصُ (الزمر/3)
“பரிபூரணமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது”(39:3)
وَمَا أُمِرُوا إلاَّلِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ حُنَفَاءَ (البينة/5)
“அல்லாஹ்வின் கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி அல்லாஹ் ஒருவனையே வணங்கி வருமாறே அன்றி அவர்களுக்கு ஏவப்பட வில்லை.(98:5)
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي مَنْ قَالَ لاإلَه إلااللَّهُ خَالِصًا مِنْ قَلْبِهِ أوْ نَفْسِهِ (رواه البخاري)
“யார் வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று தூய எண்ணத்துடன் கூறுகின்றாரோ, அவர்தான் மனிதருள் என்னுடைய ஷபாஅத்துக்கு மிகவும் அருகதை உடையவர்” என்று நபியவர்கள் கூறினார்கள், என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கன்றார்கள். (ஆதாரம்\புகாரீ)
عَن عُتبانَ بْنِ مالِكٍ رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إنَّ اللهَ حَرَّمَ عَلى النَّارِ مَنْ قَال لاإلهَ الاَّاللهُ يَبْتَغِيْ بِذلِكَ وَجْهَ اللهِ عَزّ وجَلَّ
“யார் அல்லாஹ்வின் திரு முகத்தை எதிர்பார்த்த வண்ணம் لاإله الاالله அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குத் தகுதியான இறைவன் யாருமில்லை என்று கூறுவாரோ நிச்சயமாக அல்லாஹ், அவரின் மீது நரகத்தை ஹராமாக்கி விட்டான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என உத்பான் இப்னு மாலிக் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்\முஸ்லிம்)
مَنْ قَالَ لاإلَهَ الاَّاللهُ وحْدَهُ لاَشَرِيْكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الْحَمْدُ وهو على كلِّ شَيْئٍ قَدِيْرٌ مُخْلِصًا بِها قَلْبُهُ،يُصَدِّقُ بِهَا لِسَانُهُ ،إلاَّفَتَقَ اللَّهُ لَهَا السَّمَاءَ فَتْقًا حَتَّى يَنْظُرَ إلَى قَائِلِها مِنْ أهْلِ الأرَرْضِ ، وَحَقَّ لِعَبْدٍ نَظَرَاللهُ اِلَيْهِ أنْ يُعْطِيَهُ سَؤَالَهُ (رواه البخاري)
“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் எவனும் இல்லை, அவன் ஒருவன், அவனுக்கு இணை எதுவுமில்லை, ஆட்சியும் சர்வ புகழும் அவனுக்கே சொந்தம், அவன் சகல பொருட்களின் மீதும் வல்லமை உள்ளவன், எனும் இந்த வாசகங்களை தன் வாயால் உளத்தூய்மையுடன் யாரேனும் சொல்வராகில், இந்தப் பூமியில் இருந்து அப்படிக் கூறியவரை பார்ப்பதற்காக அல்லாஹ் வானத்தைப் பிளக்கச் செய்வான். எந்த அடியானின் பால் அல்லாஹ் நோட்டமிட்டானோ, அந்த அடியான் அல்லாஹ்விடம் வேண்டியதை அவனிடம் பெற்றுக் கொள்ளும் உரிமை அந்த அடியானுக்குண்டு” என்று நபியவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் புகாரீ).
கலிமாவை உண்மையாக மொழிய வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் வருமாரு:
الم .اَحَسِبَ النَّاسُ اَنْ يُتْرَكُوا يَقُوْلُوا آمّنَّا وَهُم لايُفْتَنُونَ . وَلَقَدْ فَتَنَّاالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِيْنَ صَدَقُواوَلَيَعْلَمَنَّ الْكَذِبِيْنَ (العنكبوت/1,2,3)
அலிப் லாம் மீம்.
மனிதர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறியதன் காரணமாக அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொன்டு இருக்கின்றனரா?
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் அறிவான். பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் அறிவான்.(29:1,2,3)
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ
فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضاً وَلَهُم عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
(البقرة/8,9,10)
“மனிதரில் சிலர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் எனக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர்.
அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்ட வர்களையும் வஞ்சிக்கக் கருதுகின்றனர். ஆனால் அவர்கள் தங்களையே யன்றி வஞ்சிக்க முடியாது. இதனை அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
அவர்களுடைய உள்ளங்களில் வஞ்சகம் எனும் நோய் இருக்கிறது. அவர்களுக்கு அந்நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்குண்டு”.(2: 8,9,10)
مَا مِنْ اَحَدٍ يَشْهَدُ اَنْ لااَلَهَ اِلاَّاللهُ وَاَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ صِدْقًا مِنْ قَلْبِهِ اِلاَّ حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ (متفق عليه)
“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் யாரும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள், அவனின் அடியாரும் தூதரும் ஆவார், என்று உண்மையான மனதுடன் யாரேனும் அத்தாட்சிப்படுத்து வாராகில் அல்லாஹ் அவருக்கு நரகை ஹராமாக்கி விடுவான்” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மேலும் கலிமாவை பிரியத்துடன் ஏற்றுக் கொள்வது அவசியம் என்பதை வழியுறுத்தும் ஆதாரங்கள் வருமாறு:
وَمِنَ الناس مَنْ يَتَّخِذُ مِنْ دُوْنِ اللهِ اَنْدادًا يُحِبُّوْنَهُمْ كَحُبِّ اللهِ وَالَّذِيْنَ آمنُوا اَشَدُّ حُبًّا للهِ(البقرة/165)
“மனிதர்களில் பலர் அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல் அவற்றை நேசிப்பவர்களும் இருக்கின்றனர். எனினும் இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே அதிகமாக நேசிப்பார்கள்.(2:165)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلاَ يَخَافُونَ لَوْمَةَ لائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاء وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (المائدة/54)
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்களின் மார்க்கத்திலிருந்து மாறிவிட்டால், வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்ட வர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். நிராகரிப்பவர்களிடம் கண்டிப் புடையவர்களாக இருப்பார்கள் அல்லாஹ்வின் பாதையில் போரும் புரிவார்கள். மேலும் பழிப்பவர்களின் பழிப்பை அவர்கள் அஞ்சவும் மாட்டார்கள்.(5:54)
عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثَلاَثٌ مَنْ كُنَّ فِيْهَ وَجَد حلاَوَةَ الإيْمَانِ أنْ يَكُوْنَ اللهُ وَرَسُوْلُهُ اَحَبَّ اِلَيْهِ مِمَّا سِواهُ وَاَنْ يُحِبَّ الْمَرْءَ لايُحِبُّهُ اِلاَّ للَّهِ وَاَنْ يَكْرَهَ اَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ اِذْ اَنْقَذَهُ اللَّهُ مِنْهُ كَمَا يَكْرَهُ اَنْ يُقْذَفَ فِي النَّارِ (رواه البخاري)
"யாரிடம் மூன்று விடயங்கள் இருக்கின்றனவோ, அவர் ஈமானின் இன்பத்தை அடைந்து கொள்வார். அவையாவன: அல்லாஹ்வும் அவனின் ரஸூலும் அல்லாத வற்றை விடவும், அவர்கள் இருவரையும் அவர் மிகவும் நேசிப்பார். அவர் ஒருவரை நேசிப்பாராகில், அல்லாஹ்வுக்காகவே அன்றி வேறு எதற்காகவும் அவரை நேசிக்க மாட்டார். மேலும் நெருப்பில் தான் வீசப்படுவதை அவர் எவ்வாறு வெறுப்பாரோ, அது போன்று ‘குப்ரி’ல் இருந்து தன்னை அல்லாஹ் காப்பாற்றிய பின்னர் மீண்டும் குப்ரின் பால் திரும்புவதை அவர் விரும்ப மாட்டார்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்-புகாரீ)
கலிமாவில் அடங்கியிருக்கும் விடயங் களுக்குக் கட்டுப்படுவது அவசியம், என்பதற்கான ஆதாரம்:
وَاَنِيْبُوا اِلَى رَبِّكُمْ وَاَسْلِمُوا (الزمر/54)
“ஆகவே உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடங்கள்”(39:54)
وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الأُمُورِ (لقمان/22) “எவர் தன்னுடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி, நன்மையும் செய்து கொண்டிருக் கின்றாறோ அவர் நிச்சயமாக பலமானதொரு கயிற்றைப் பிடித்துக்கொண்டார்.(31:22) இங்கு العروةاللوثقى- பலமான கயிரு என்பது لآاله الاالله என்ற கலிமாவையே குறிக்கின்றது.
فلاَ وَرَبِّكَ لاَيُؤْمَنُوْنَ حَتَّى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لاَيَجِدُوْا فِيْ اَنْفُسِهِمْ حَرَجًا مَمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا ىَسْلِيْمًا (النساء:65)
உங்கள் இறைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக நியமித்து நீங்கள் செய்யும் தீர்ர்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள் நம்பிக்கையாளர்களாக மாட்டார்கள்.(4:65)
இனி நபியவர்களின் இந்த ஹதீஸைக் கவணியுங்கள்.
لاَيُؤْمِنُ اَحَدُكُمْ حَتَّى يَكُوْنَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ
“ நான் கொண்டு வந்துள்ள விடயத்தைத் தழுவியதாகத் தன்னுடைய ஆசையை ஆக்கிக் கொள்ளாத வரை’ உங்களில் எவரும் விசுவாசியாக மாட்டார்”
கலிமாவைப் பூரணமாக ஏற்றுக் கொள்ளுதல் என்பது, நபியவர்கள் கொண்டு வந்த விடயங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதில்தான் தங்கியுள்ளது, என்பதை இந்நபி மொழி தெளிவு படுத்துகிறது. மேலும் இதற்கான ஆதாரங்களை இனி கவணிப்போம்.
كَذَلِكَ مَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلاَّ قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِم مُّقْتَدُونَ. (الزخرف:23)
இவ்வாறே உங்களுக்கு முன்னரும் நாம் நம்முடைய தூதரை எவ்வூராரிடம் அனுப்பிவைத்தோமோ, அங்குள்ள தலைவர்களும் “நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் இருக்கக் கண்டோம். எனவே அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே செல்வோம்” என்று கூறாமல் இருக்கவில்லை.(43:23)
قَالَ أَوَلَوْ جِئْتُكُم بِأَهْدَى مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ آبَاءَكُمْ قَالُوا إِنَّا بِمَا أُرْسِلْتُم بِهِ كَافِرُونَ (الزخرف :24)
அதற்கு அத்தூதர்கள் “உங்கள் மூதாதைகள் இருந்ததை விட நான் நேரான வழியைக் கொண்டு வந்திருந்த போதிலுமா? என்று கேட்டார்கள்.” .அதற்கவர்கள் “நீங்கள் கொண்டு வந்ததையும் நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறினார்கள்.(43:24)
فَانْتَقَمْنَا مِنْهُمْ ،فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ (الزخرف :25)
ஆதலால் நாம் அவர்களை பழிவாங்கினோம். பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று? என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.(43:25)
إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لا إِلَهَ إِلاَّ اللَّهُ يَسْتَكْبِرُونَ
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوا آلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍ (الصافات:35,36)
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்துரிய வேரொரு இறைவன் இல்லை என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக கர்வம் கொண்டு, “என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை மெய்யாகவே விட்டு விடுவோமா?” என்றும் அவர்கள் கூறுகின்றனர். (37:35’36)
عَنْ ابي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مَثَلُ ما بَعَثَنِيَ اللهُ بِهِ مِن الْهُدَى والْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيْرِ اَصَابَ اَرْضًا مِنْها نَقِيَّةٌ قَبِلَتِ الْمَاءَ فَأنْبَتَتِ الْكَلَأ والْعُشُبَ الْكَثِيْرَ، وَكَانَتْ مِنْهَا أجَادِبُ أمْسَكَتِ الْمَاءَ فَنَفَعَ اللهُ بِهَا النَّاسَ فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوْا وَاَصَابَ مِنْهَا طَائِفةٌ اُخْرَى اِنَّمَا هِيَ قِيْعَانٌ لاَتُمْسِكُ مَاءًا وَلاَتُنْبِتُ كَلَأً فَذَلِكَ مَثَلُ مَنْ فَقِهَ فِيْ دِيْنِ اللهِ وَنَفَعَهُ مَابَعَثَنِيَ اللهُ بِهِ فَعَلِمَ وَعَلَّمَ ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا وَلَمْ يَقْبَلْ هُدَى اللهِ الَّذِيْ اُرْسِلْتُ بِهِ(رواه البخاري)
“எந்த நேர்வழியையும் அறிவு ஞானத்தையும் கொண்டு அல்லாஹ் என்னை அனுப்பி வைத்தானோ, அதற்கு உதாரணம் பூமியில் விழுந்த பெரும் மழையாகும். அதில் ஒரு பகுதி சுத்தமான ஒரு நிலத்தில் விழுந்தது, அதனை அந்தப் பூமி ஏற்றுக் கொண்டது. பின்னர் அதிலே அதிகமான பயிர்களும் புற்களும் முளைத்தன. அதன் இன்னொரு பகுதி காய்யந்த இறுகிய பூமியில் விழுந்தது,அந்த நீரை அந்தப் பூமி தேக்கி வைத்துக் கொண்டது. அல்லாஹ் அதன் மூலம் மக்கள் பயனடையும் படி செய்தான். ஆகையால் அதனை அவர்கள் குடிக்கவும், இறைக்கவும், பயிரிடவும் பயன்படுத்திக் கொண்டனர். அதன் மற்றுமொரு பகுதி மேட்டு நிலத்தில் விழுந்தது, அந்த நிலம், தண்ணீரை சேமிக்கவும் இல்லை, அதிலிலிருந்து பயிர்கள் முளைக்கவும் இல்லை. இவ்வாறு அந்த மழைதான் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, தனக்கு அல்லாஹ் அளித்தவற்றின் மூலம் தானும் பயனடைந்து, அதனைக் கற்று, மற்றவர்களுக்கும் அதனைக் கற்றுக் கொடுத்த ஒருவனுக்கும், அந்த மார்க்கத்தின் மூலமும், அல்லாஹ் எனக்களித்த நேர்வழியின் மூலமும் தலையை உயர்திக் கொள்ளாத, பயனடையாத இன்னொருவனுக்கும் உதாரணம்.” என நபியவர்கள் நவின்றார்கள், என்று அபூ மூஸா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புகாரீ)
***************************
“இஸ்லாத்தை முறிக்கும் கருமங்கள்”
ஒரு முஸ்லிமிடமருந்து பத்து கருமங்கள் நிகழக் கூடாது. அவை இஸ்லாத்தை விட்டும் அவனை அப்புறப்படுத்தி விடும். அவையாவன:
முதலாவது: இணையை ஏற்படுத்தக் கூடிய காரியங்களும், அல்லாஹ் அல்லாதவைக்காக அறுத்தலு மாகும். இதனைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,
اِنَّ اللهَ لاَيَغْفِرُ اَنْ يُشْرَك بِهِ وَيَغْفِرُ مَا دُوْنَ ذَلِكَ لِمَنْ يَشَاء(النساء:116)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனை அல்லாததை, தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான்.(4:116)
اِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللهِ فَقَدْ حَرَّمَ الله عَلَيْهِ الْجَنَّةَ وَمأْوَاهُ النَّارُ، وَمَا للظَّالِمِيْنَ مِنْ أنْصَارٍ(المائدة:72)
எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். அநியாயக் காரர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை (5”72)
இரண்டாவது: அல்லாஹ்வுக்கும் தனக்கும் மத்தியில் தரகர்களை ஏற்படுத்தி அவர்களிடம் பிரார்த்தனை செய்தலும், அவர்களிடம் பொறுப்புக் களைச் சாட்டுதலுமாகும். இது இணையை ஏற்படுத்தும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
மூன்றாவது: இணை வைப்பவனை காபிர் எனக் கருதாமை, அல்லது அவனைக் காபிர் எனக் கருதுவதில் ஐயம் கொள்ளல், அல்லது அவனின் கொள்கையைச் சரியெனக் காணுதல் என்பவை யாகும். எனவே யாரேனும் இந்தக் காரியம் எதையேனும் செய்தால் அவன் காபிராவான்.
நான்காவது: ரஸூல்(ஸல்) அவர்களின் வழியையும், சட்டத்தையும் விட, ஏனைய வழிகளையும், சட்டங்களை யும் பரிபூரணவை என்றும், சிறந்தவை என்றும் நம்புவது. அப்படி யாரேனும் நம்பினால் அவனும் காபிராவான்.
ஐந்தாவது: நபியவர்கள் கொண்டு வந்த விடயம் எதையேனும் வெறுத்தல். இந்த செயலும் குப்ரை உண்டாக்கும்.
ஆறாவது” ரஸூல் (ஸல்) அவர்களின் மார்க்க விடயம் எதையேனும் கேவலப்படுத்துதல். இதுவும் குப்ரை உண்டாக்கும் ஒரு காரணியாகும். நல்ல கருமங்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும், தீய கருமங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும், மார்க்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ள விடயங்களை இழிவு படுத்துவதும் இதில் அடங்கும். இதனை அல்லாஹ்வின் இந்த வசனம் உறுதி படுத்துகிறது.
قُلْ اَبِاللهِ وَآيَاتِهِ وَرَسُوْلِهِ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ. لاَتَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إيْمَانِكُمْ (التوبة:65,66)
“அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கின்றீர்கள்” என்று நீங்கள் கேளுங்கள்.(9:65)
:நீங்கள் வீண் சாட்டுச் சொல்ல வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் நிச்சயமாக நிராகரித்து விட்டீர்கள்”(9:66)
ஏழாவது: பில்லி, சூனியம், இதுவும் இஸ்லாத்தை விட்டும் அப்புறப்படுத்தும் ஒரு செயலாகும். யார் இந்தக் கருமத்தைச் செய்வாரோ, அவரும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய காபிராவார்.இதன் ஆதாரம் வருமாரு:
وَمَا يُعَلِّمَانِ مِنْ اَحَدٍ حَتَّى يَقُوْلاَ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلاَ تَكْفُرْ(البقرة:102)
அவ்விரு மலக்குகளோ, ”நாங்கள் சோதனை யாக இருக்கின்றோம், நீங்கள் நிராகரிப்வர்களாகி விட வேண்டாம். என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (2:102)
எட்டாவது: முஷ்ரிக்குகளை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதும், முஸ்லிம்களை எதிராக அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும். இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் அப்புறப் படுத்தும் இந்த செயலைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,
وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإنَّهُ مِنْهُمْ،اِنَّ اللهَ لاَيَهْدى الْقَوْمَ الظَّالمِيْنَ(المائدة:51)
உங்களில் எவரும் அவர்களில் எவரையும் நண்பர்களாக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். (5:51)
ஒன்பதாவது: மூஸா (அலை) அவர்களின் சில ஷரீஆ சட்டங்களில் இருந்து ‘கிழ்ர்’ (அலை) தவிர்ந்து கொண்டது போன்று, முஹம்மது (ஸல்) அவர்களின் ஷரீஆவிலிருந்து தவிர்ந்து கொள்வ தற்கு சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டள்ளது என்று நம்புதல். எனவே இப்படி யாரேனும் நம்பினால் அவர் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிய காபிராவார்.
பத்தாவது: இஸ்லாமிய மார்க்கத்தைப் புறக்கணிக்கும் விதத்தில் அதனைக் கற்றுக் கொள்ளாமலும், அதன் படி செயற்படாமலும் இருத்தல். இப்படி யாரும் நடந்து கொண்டால், அவரும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய காபிராவார். இதனை உறுதிப் படுத்தும் ஆதாரம் வருமாறு,
وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنتَقِمُونَ (السجدة:22)
இறைவனின் அத்தாட்சியைக் கொண்டு ஞாபகமூட்டிய பின்னரும் இதனைப் புறக்கணித்து விடுபவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் இத்தகைய குற்றவாளிகளை பழிவாங்கியே தீருவோம்.(32:22)
பரவலாகத் தென்படும் இந்தக் காரியங்களின் முடிவு மிகவும் பயங்கரமானவை. இந்த விடயத்தில் நிர்பந்தத்திற்கு இலக்கானவனைத் தவிர பலவீனமானவன், வசதியுள்ளவன், அச்சமுள்ளவன் என்ற பாகுபாடின்றி சகலரும் சமம். எனவே இந்தக் கருமங்கள் யாரிடமிருந்து நிகழ்ந்தாலும் அது அவரை இஸ்லாத்தை விட்டும் வெளியே தள்ளிவிடும். எனவே இவ்விடயத்தில் சகல முஸ்லிம்களும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆகையால் அல்லாஹ்வின் கோபத்தையும், தண்டனையும் தேடித் தரும் இந்த விடயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோமாக.
“ஏகத்துவம் மூன்று வகைப்படும்”
முதலாவது,"توحيد الربوبية"
'رُبُوْبِيَّةٌ' என்பது வளர்த்தல், போஷித்தல் என்ற பொருளைத் தருகின்றது. அனைத்தையும் போஷிக்கும் பொறுப்பு அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு என நம்புவதே, توحيد الربوبية எனப்படுகிறது. இதனை ரஸூல் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த காபிர்களும் ஏற்றுக் கொண்டனர். எனினும் இஸ்லாத்தில் பிரவேசிக்க இதுவொன்று மாத்திரம் போதாது. எனவேதான் ரஸூல்(ஸல்) அவர்களை எதிர்த்து, இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாத அந்தக் காபிர்களுடன் நபியவர்கள் போரிட்டார்கள். அப்போது அவர்களின் இரத்தம் சிந்துவதையும் அவர்களின் உடமைகளைக் கைப்பற்றுவதையும் நபியவர்கள் அனுமதித்தார்கள். இந்த ஏகத்துவத்தை காபிர் களும் ஏற்றிருந்தனர் என்பதை அல்குர்ஆனின் பல வசனங்கள் உறுதி படுத்துகின்றன. அவ்வாரான ஒரு வசனத்தைக் இங்கு கவணியுங்கள்.
قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاء وَالأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلاَ تَتَّقُونَ (يونس:31)
“வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்த வற்றிலிருந்து உயிர் உள்ளவற்றையும், உயிருள்ள வற்றிலிருந்து இறந்த வற்றையும் வெளிப்படுத்து பவன் யார்? எல்லா காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்?” என்று நீங்கள் கேளுங்கள். அதற்கவர்கள் “அல்லாஹ் தான்” என்று கூறுவார்கள்.”அவ்வாராயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?” என்று கேளுங்கள். (10:31)
இரண்டாவது “توحيد الإلوهية”
கடவுள் தன்மை ஒருவனுக்கே சொந்தம். அந்த விடயத்தில் பலரையும் இணையாக்க முடியாது என்ற கொள்கையே توحيد الألوهية எனப்படுகிறது. இதன் பிரகாரம் அடியார்களின் சில செயல்கள் அல்லாஹ் ஒருவனுடன் மாத்திரம் சம்பந்தப்பட வேண்டியவையாகும். அந்த செயல்களை மற்றவர்களுடன் தொடர்பு படுத்துவது ஷிர்க்காகும். எனினும் இந்த விடயத்தில் ஆதி காலம் முதல் நவீன காலம் வரையிலும் சர்ச்சை இடம் பெற்று வருகிறது. உதாரணமாக பிரார்த்தனை செய்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல், அல்லாஹ் வின் அருளை எதிர்பார்த்தல், அவனின் தண்டனைகளை எண்ணி அஞ்சுதல், அவனிடம் பாவ மண்னிப்புக் கோருதல் போன்ற செயல்களைக் குறிப்பிடலாம்.
மூன்றாவது “توحيد الذات والأسماء والصفات”
அல்லாஹ் தன் யதார்த்தத்திலும், பண்புகளிலும், நாமங்களிலும், தனித்துவமானவன். அவனைப் போன்று எதுவும் இல்லை யென்பதையே توحيد الذات والأسماء والصفات என்பது குறிக்கின்றது. இதனை அல்லாஹ்வின் வேத வாக்குகள் தெளிவு படுத்துகின்றன.
قُلْ هُوَاللهُ اَحَدٌ، اللهُ الصَّمدُ،لَم يَلِدْ، وَلَمْ يُوْلَدْ، وَلَمْ يَكُنْ لهُ كُفُوًا اَحَدٌ (الإخلاص)
நீங்கள் கூறுங்கள் அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் எதன் பாலும் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை பெறப்படவும் இல்லை. அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை(الإخلاص:1,2,34 )
وَللهِ الأسْمَاءُ الْحُسْنَى فَادْعُوْهُ بِهَا ،وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُونَ فِيْ أسْمَائِهِ،سَيُجْزَوْنَ مَاكَانُوا يَعْمَلُوْنَ(الأعراف:180)
அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே அவற்றைக் கொண்டு நீங்கள் அவனை அழையுங்கள். அவனுடைய திருப் பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டு விடுங்கள், இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள்.(7:180)
ليس كَمِثْلِهِ شَيْئٌ وَهُوَ السَّمِيْعُ البَصِيْرُ(الشورى:11)
அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் செயவியுருபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.(42:11)
இணை வைத்தல் ஏகத்துவத்திற்கு எதிரானது
இணை வைத்தல் மூன்று வகைப்படும். அவையாவன, பெரிய, சிறிய, மறைவான இணைகள் என மூன்று வகைப்படும்.
பெரிய இணையை அல்லாஹ் மன்னிப்தில்லை. மேலும் பெரிய இணை உடையவனின் நல்லமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வது மில்லை. இதனை அல்லாஹ்வின் திரு வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
إنَّ اللهَ لاَيَغْفِرُ أنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُوْنَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ، وَمَنْ يُشْرِكْ بِاللهِ فَقَدْ ضَلَّ ضَلاَلاً بَعِيْدًا (النساء:116)
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதுவல்லாததை தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே எவரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் அவர் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கின்றார்.(4:116)
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُواْ إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُواْ اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ (المائدة:72)
அந்த மஸீஹோ, “இஸ்ராயீலின் சந்ததிகளே! என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்.” என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் செல்லும் இடம் நரகம்தான். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.(5:72) என்றும்,
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ (الزمر:65)
“நீங்கள் இணை வைத்தால் உங்கள் நன்மைகள் அனைத்தும் அழிந்து நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்த வர்களில் ஆகிவிடுவீர்கள். (39”65) என்றும்,
ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَن يَشَاء مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُواْ لَحَبِطَ عَنْهُم مَّا كَانُواْ يَعْمَلُونَ (الأنعام: 88)
அவர்கள் இணை வைத்தாலோ, அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும்.(6”88) என்றும் குறிப்பிடுகின்றான்.
பெரிய இணை நான்கு வகைப்படும்
• شِرْكُ الدَّعْوَة பிரார்த்தனையில் இணை என்பது இதன் பொருள். அல்லாஹ் அல்லாதவைகளிடம் பிரார்த்தனை புரிவது, இதில் அடங்கும். இது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,
فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ (العنكبوت:65)
அவர்கள் கப்பலில் ஏறிக் கொண்டால் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன் அவர்களைக் கரையில் பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்கு கின்றனர்.(29:65)
• شِرْكُ الإِرَادَة ‘எண்ணத்தில் இணை’ என்பது இதன் பொருள். நல்ல கருமத்தைச் செய்யும் போது அல்லாஹ்வுக்கென்ற தூய எண்ணம் இல்லாது, உலக இலாபத்தைக் கருத்திற் கொண்டு மேற் கொள்ளும் கருமங்கள் இதில் அடங்கும். இதனைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
مَن كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لاَ يُبْخَسُونَ
أُوْلَئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الآخِرَةِ إِلاَّ النَّارُ وَحَبِطَ مَا صَنَعُواْ فِيهَا وَبَاطِلٌ مَّا كَانُواْ يَعْمَلُونَ(هود:15,16)
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்பினால், அவர்களின் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவாம். அதில் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
எனினும் மறுமையிலோ, இத்தகையவர்களுக்கு நரக நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் செய்த வை யாவும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணானவையே. (11:15’16)
• شِرْكُ الطَّاعَة ‘வணக்க வழிபாடுகளில்’ இணை என்பது இதன் பொருள். அல்லாஹ் ஒருவனுக்கு வழிபட வேண்டிய அடியான் அல்லாஹ் அல்லாதவைகளை வழிப்படும் காரியங்கள் இதில் அடங்கும். இந்த இணையைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,
اتَّخَذُواْ أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُواْ إِلاَّ لِيَعْبُدُواْ إِلَهًا وَاحِدًا لاَّ إِلَهَ إِلاَّ هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ (التوبة:31)
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரி களையும், சன்னியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் கடவுல்களாக எடுத்துக் கொண்டிருக் கின்றனர். எனினும் வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்தின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனை யன்றி இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன். (9:31)
அறிஞர்களிடமும், அடியார்களிடமும் பிரார்த்தணை செய்வது மாத்திரமின்றி, பாவ காரியங்களில் அவர்களுக்கு கட்டுப்படுவதும், அவர்களுக்கு வழிப்படும் ஒரு செயல்தான் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் “பாதிரிகளுக்கு வழிப்படுவதென்றால்” யாது? என அதிய் இப்னு ஹாதம் என்பார், நபியவர்களிடம் விளக்கம் கோரிய போது, நபியவர்கள் “பாவ காரியத்தில் பாதிரிகளுக்குக் கட்டுப்படுவதுதே, அவர்களுக்கு வழிப்படுவதாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் விளக்கம் கொடுதார்கள்.
• شِرْكُ الْمُحَبَّة ‘பரிவில் இணை’ என்பது இதன் பொருள். அல்லாஹ்வை நேசிப்பது போன்று ஏனைய பொருட்களையும் நேசிக்கும் விடயம் இதில் அடங்கும். இதனைத் தெளிவு படுத்தும் இறைவசனம் வருமாறு,
وِمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُوْنِ اللهِ اَنْدادًا يُحِبُّوْنَهُمْ كَحُبِّ اللهِ (البقرة:165)
மேலும் அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர்.(2:165)
❄❄❄❄❄❄
2ம் வகை ஷிர்க்கு, رياء எனும் முகஸ்த்துதியாகும்
இது சிறிய இணையெனவும் அழைக்கப் படுகிறது
அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையுடன் செய்ய வேண்டிய காரியத்தை முகஸ்துதிக்காகவும், பாராட்டைப் பெறுவதற்காகவும் செய்யும் போது, அத்தகைய கருமங்கள் இந்த சிர்க்கில் அடங்கும். இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,
فَمَنْ كَانَ يَرْجُوْ لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحاً وَلاَيُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ اَحَدًا (الكهف :110)
ஆகவே எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ, அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் இணையாக்காமல் இருப்பாராக.(18:110)
3ம் வகை இணை- شِرْكٌ خَفِي ‘மறைவான இணை’
இணையை ஏற்படுத்தும் நுற்பமான, மறைவான விடயங்கள் இதில் அடங்கும். இவற்றை அறிந்து கொள்வது மிகவும் கடினம். மறைவான இதன் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவதொன்றே இதன் பரிகாரமாகும். அதனைப் பற்றி நபியவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்,
اَلشِّرْكُ فِي هَذِهِ الأُمَّةِ اَخْفَى مِنْ دَبِيْبِ النَّمْلَةِ السَّوْداءِ عَلَى صَفَاةٍ سَوْدَاءَ فِيْ ظُلُمَةِ اللَّيْلِ
“கும்மிருட்டில் கரும்பாரையில் ஊர்ந்து செல்லும் கருப்பெறும்பைப் பார்க்கிலும் இந்த சமூகத்தின் ‘ஷிர்க்கு’- இணையை ஏற்படுத்தும் காரியம் மிகவும் மறைவானது.” என்று நபியவர்கள் கூறினார்கள். எனவே மிகவும் மறைவான இந்த ஷிர்க்கிற்குக் குற்றப் பரிகாரம், நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனை ஒன்றுதான். அந்த துஆ வருமாறு:
اَللهُمَّ اِنِّيْ أعُوذُ بِكَ أنْ اُشْرِكَ بِكَ شَيْأً وَاَنَا أعْلَمُ وَاَسْتَغْفِرُكَ مِن الذَّنْب الَّذيْ لاَاَعْلَمُ (رواه احمد)
“இறைவா! நான் அறிந்து கொண்ட உனக்கு எதையேனும் இணையாக்குவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நான் அறியாமல் செய்த பாவத்தை மன்னித்தருளுமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.”
ஒரு நீண்ட ஹதீஸில் இந்த துஆ இடம் பெற்றுள்ளது. இமாம் அஹ்மத் அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை அஷ் ஷைக் அல்பானீ அவர்கள் சரி கண்டுள்ளார்கள்.
✳✳✳✳✳✳✳
اَلكُفْر- இறை நிராகரிப்பு இரு வகைப்படும்
ஒன்று இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் அப்புறப் படுத்தும் நிராகரிப்பு. இது ஐச்து வகைப்படும். அவையாவன:
(كُفْرُالتَّكْذِيْب (1 - அல்லாஹ்வையும் அவனுடைய வேத வாக்குகளையும் பொய்ப்பித்தலின் காரணமாக உண்டாகும் இறை நிராகரிப்பு என்பது இதன் விளக்கமாகும். இதன் ஆதாரம் வருமாறு,
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللهِ كذِبًا اَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاءَهُ،اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْكفِريْنَ(العنكوت:68)
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபனை விட அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களின் தங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது.(29:68)
(2)كُفْرُالإِبَاءِ وَالإِسْتِكْبَارِ உண்மையை ஒப்புக் கொள்ளும் அதே சமயம் அதனை அங்கீகரிக்காமலும், அகங்காரத்துடனும் இருத்தல் என்பது இதன் பொருள். இதன்ஆதாரம் வருமாறு:
واِذْ قُلْنَا لِلْمَلئكِة اسْجِدُوالآدَمَ فَسَجَدُوا إلاَّ اِبْلِيْسَ أبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِيْنَ(البقرة:34)
நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் பணிந்து ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது இப்லீஸைத் தவிர அவர்கள் ஸுஜூது செய்தனர். அவனோ பெருமை கொண்டு விலகிக் கொண்டான். மேலும் நிராகரிப்பவனாகவும் ஆகிவிட்டான்.(2:34)
(3)كُفْرُالشَّك - சந்தேக நிராகரிப்பு. அல்லாஹ்வின் வேதத்தின் மீதும் அவனது ஏனைய காரியங்களின் மீதும் உண்டாகும் சந்தேகம் இறை நிராகரிப்புக்குக் காரணமாகின்ற படியால், இதற்கு ‘குப்ருஷ் ஷக்’ என்றும் ‘குப்ருழ் ழண்’ என்றும் கூறப்படுகிறது. இதனை இந்த வசனம் தெளிவு படுத்துகிறது,
وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَن تَبِيدَ هَذِهِ أَبَدًا
وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِن رُّدِدتُّ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنقَلَبًا
قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلا
لَّكِنَّا هُوَ اللَّهُ رَبِّي وَلا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا
(الكهف) 35 -38
பின்னர் அவன் தன் தோப்புக்குள் நுழைந்து தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டான். (ஏனெனில் அவன் “இவை ஒரு காலத்திலும் அழிந்து விடுமென நான் நினைக்கவில்லை” என்றுகூறினான்.(18:35)
“மறுமை ஏற்படும் என்பதை நான் நினைக்கவே இல்லை, நான் என் இறைவனிடம் கொண்டு போகப் பட்டாலும் நான் இங்கிருப்பதை விட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்” என்றும் கூறினான்(18:36)
அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நன்பன் அவனை நோக்கி “உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கின்றா யா? மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்தும் உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான்.(18:37)
நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னையும் படைத்து வளர்ப்பவன், என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே நான் என்னுடைய இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன்” என்று கூறினார். (18:38)
(4) كُفْرُالإعْراض’ அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிப்பது, இறை நிராகரிப்புக்குக் காரணமாக அமைகிறது. ஆகையால் இதனால் ஏற்படும் நிராகரப்பு كفرُالإِعراض எனப் படுகிறது. இதற்கு இந்த இறை வசனம் ஆதாரமாக விளங்குகிறது.
وَالَّذِيْنَ كَفَرُوا عَمَّا اُنْذِرُوا مُعْرِضُوْنَ (الأحقاف:03)
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்யப் பட்டதை மறுக்கின்றனர் (46:03)
(5)كُفْرُ النِّفَاق- நயவஞ்சக நிராகரிப்பு. இறை நிராகரிப்பை மனதில் வைத்துக் கொண்டு வெளியில் முஃமினைப் போன்று காட்டிக் கொள்வது نفاق எனப்படும். இந்நிலையில் உள்ளவனின் யதார்த்தம் இறை நிராகரிப்பே, ஆகயால் இது ‘குப்ருந் நிபாக்’ எனப்படுகிறது. இதன் ஆதாரம் வருமாறு:
ذَلِكَ بِأنَّهُمْ ءَامَنُوا ثُمَّ كَفَرُوا فَطُبِعَ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لاَيَفْقَهُونَ (المنافقون:03)
இவர்கள் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறிய பின்னர் அதனை நிராகரித்து விட்டனர், ஆகையால் அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது. அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (63:03)
2ம் வகை குப்ரு, كفرٌ اَصغرُ - சிறிய நிராகரிப்பு
அல்லாஹ் தனக்களித்துள்ள அருட் கொடை களுக்கு அடியான் நன்றியுள்ளவனாக இருக்காது அவனுக்கு நன்றி கேடாக நடந்து கொள்ளும் விடயங்கள் இதில் அடங்கும். இது அடியானை இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியே தள்ளாது. எனினும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை كفران النعمة நன்றி கேடு என்று குறப்பிடுவர்.இதன் ஆதரம் வருமாறு:
وَضَرَبَ اللَّهُ مَثَلاً قَرْيَةً كَانَتْ آمِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُواْ يَصْنَعُونَ (النحل:112)
“ஓர் ஊராரை அல்லாஹ் உதரணமாகக் கூறுகிறான், அவ்வூர் திருப்தியோடும் அச்சமற்று மிருந்தது, அதற்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு திசைகளிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிகுந்தன. இந்நிலையில் (அவ்வூர் வாசிகள்) அல்லாஹ்வுடைய அருட் கொடைகளுக்கு மாறு செய்தனர். ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் காரணமாக அல்லாஹ் பசி, தாகத்தின் உடையை அவர்கள் சுவைக்கும் படி செய்தான்.(16:112)
❇❇❇❇❇❇❇
نِفَاق – நயவஞ்சகம் இரு வகைப்படும்
அவை கொள்கை சார்ந்தது, செயல் சார்ந்தது என்பன.
النفاق الإعتقادي – கொள்கை சார்ந்த நயவஞ்சகம்
نفاق – என்பது நயவஞ்சகம் என்பதைக் குறிக்கும். அதாவது மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் இன்னொன்றைக் காட்சிப் படுத்துவதே நயவஞ்சக மாகும். இஸ்லாம் மார்கத்தை வெளியில் காட்டும் ஒருவன், அதற்கு எதிரான கொள்கையை மனதில் மறைத்து வைத்திருந்தால் அவன் ஒரு منافق நயவஞ்கனாவான்.
نفاق إعتقادي - கொள்கை அடிப்படையிலான நயவஞ்சகம்
இது ஆறு வகைப்படும்
1. ரஸூல் (ஸல்) அவர்களை பொய்மைப் படுத்துதல்.
2. நபியவர்கள் கொண்டு வந்த மார்க்கத்திலிருந்து சிலதைப் பொய்மைப் படுத்துதல்.
3. ரஸூல்(ஸல்) அவர்களின் மீது வெறுப்புக் கொள்ளுதல்.
4. ரஸூல்(ஸல்) அவர்களின் வேதத்திலிருந்து சிலவற்றை வெறுத்தல்.
5. நபியவர்களின் மார்க்கம் வீழ்ச்சி யடைவதைக் கண்டு மகிழ்சி அடைதல்.
6. ரஸூல் (ஸல்) அவர்களின் மார்க்கத்திற்கு வெற்றி கிடைப்பதைக் கண்டு வெறுப்படைதல்.
❇❇❇❇❇❇❇❇✴
النفاق العملي- செயல் சார்ந்த நயவஞ்சகம்.
இது ஐந்து விடயங்களை உள்ளடக்குகின்றன. நபியர்களின் இரண்டு ஹதீஸ்களில் அது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு அறிவிப்பில் இவ்வாறு பதிவாகியுள்ளது:
آيَةُ الْمُنَافِقِ ثَلاَثَةٌ اِذَا حَدَّثَ كَذِبَ وَاِذا وَعَدَ اَخْلَفَ وَاذَا اُئْتُمِنَ خَانَ(رواه البخاري)
“நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசினால் பொய் உரைப்பான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பினால் வஞ்சிப்பான். என்று நபியவர்கள் நவின்றார்கள்.”என்றும் இன்னொரு ஹதீஸில்,
وَاِذَا خَاصَمَ فَجَرَ وَاِذَا عَاهَدَ غَدَرَ (رواه البخاري)
தர்க்கம் செய்தால் உண்மையிலிருந்து விலகிக் கொள்வான். உடன்படிக்கை செய்தால் அதனை முறித்துக் கொள்வான். என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
✳✳✳✳✳✳✳✳✳
'الطَّاغُوت' என்றால் என்ன?
இதற்கு ஷைத்தான், எல்லை மீறியவன், வழிகேடுகளின் தலைவன், கடவுள் போன்ற பொருள்கள் உள்ளன. பொதுவாகப் பார்க்கும் போது ‘தாகூத்’ என்ற சொல் சகல தீய செயல்களுடனும் சம்பந்தப் பட்டிருப்பதைக் காணலாம். எனவேதான் சகல கெட்ட காரியங்களுக்கும், ஷைத்தான்களுக்கும் கட்டுப் படாது அவைகளை நிராகரித்து விட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அல்லாஹ் மனிதனுக்குக் கட்டளை யிட்டான். இதுதான் மனிதனுக்கு அல்லாஹ் இட்ட முதல் கட்டளையாகும். இதற்காகத்தான் அவன் நபிமார் களையும் அனுப்பினான். அல்லாஹ்வின் இந்த வசனம் இதற்கு சான்று பகர்கின்றது.
وَلَقَدْ بَعثْنَا فِيْ كُلِّ اُمَّةٍ رَّسُولاً أنِ اعْبُدُوا اللهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ (النحل:36)
ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், ஷைத்தான்களி லிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள், என்று அவர்கள் கூறினர்.(16:36)
இங்கு ‘தாகூத்களை’ - ஷைத்தான்களை விட்டும் விலகிக் கொள்ளுமாறும் அல்லாஹ் ஒருவனையே வணங்கும் படியும் அல்லாஹ் கட்டளையிடு கின்றான். எனவே ஷைத்தான்களை நிரகரிப்ப தென்றால் அல்லாஹ் அல்லாத பல தெய்வ வழிபாடுகளை சரயென கூறக் கூடாது, அதனை விட்டு ஒதுங்குவது மாத்திரமின்றி அதனை வெறுப்பதுடன் யாரெல்லாம் அவற்றை வணங்கி வருகிறார்களோ, அவர்களை காபிர்களெனக் காண்பதும் அவசியம்.
இனி 'الإيمان بالله' என்றால், அதன் கருத்து யாது எனப் பார்ப்போம். அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதி யுடையவன். அவனல்லாத எதுவும் வணக்கத்திற்குத் தகுதி இல்லாதவை. மேலும் வணக்கம் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே என்ற தூய எண்ணத்துடன் நிறைவேற்றப் படல் வேண்டும். மேலும் பரிசுத்த எண்ணம் கொண்ட முஸ்லிம்களின் மீது அன்பு கொண்டு அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். அது மாத்திர மின்றி இணை வாதிகளை வெறுத்தொதுக்கவும் வேண்டும். மேலும் இதுதான், மௌட்டீக வாதிகள் விரும்பாத, நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கம், ஒரு முன் மாதிரியான மார்க்கமும் இதுதான். இதனைத்தான் பின் வரும் வசனத்தில் அல்லாஹ் அறிவிப்புச் செய்துள்ளான்.
قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَاء مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاء أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ إِلاَّ قَوْلَ إِبْرَاهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَا أَمْلِكُ لَكَ مِنَ اللَّهِ مِن شَيْءٍ رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
(الممتحنة:04)
இப்றாஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர் களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் மக்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வை யன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்வைகளில் இருந்தும் விலகிவிட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்கு மிடையில் விரோதமும் குரோதமும் ஏற்பட்டு விட்டது” என்று கூறினார்கள். (60:04)
الطاغوت என்ற பொதுச் சொல், அல்லாஹ் அல்லாத ஏனைய கடவுள்கள் அனைத்தையும் உள்ளடக்குகிறது. அவ்வாறே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்யும் விடயத்தில் யாரெல்லாம் பின்பற்றப் படுகின்ற னரோ, பூஜிக்கப் படுகின்றரோ அவர்கள் அனைவரையும் இச்சொல் உள்வாங்குகின்றது. இதன் படி ‘தாகூத்’கள் அதிக அளவில் இருக்கின்றனர் என்பது தெளிவு, ஆயினும் அவற்றில் முக்கிய தலைகள் ஐந்தினை இங்கு குறிப்பிடலாம்.
1. அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கும் படி அழைப்பு விடுக்கும் ஷைத்தான். இவனைப் பற்றித்தான் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு குறிப்பிடு கின்றான்”
اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يبَنِيْ آدَمَ أنْ لاَّ تَعْبُدُوا الشَّيْطنَ اِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ(يس:60)
“ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தான்களை வணங்கக் கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதி மொழி வாங்வில்லையா”? (36:60)
(2)அல்லாஹ்வின் சட்டங்களை மாற்றுகின்ற கொடுங்கோலன். இவனைப் பற்றிய அல்லாஹ் வின் கூற்று வருமாறு:
اَلَمْ تراِلَى الَّذِيْنَ يَزْعُمُونَ اَنَّهُمْ ءَامَنُوا بِمَا اُنْزِلَ اِلَيْكَ وَمَا اُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيْدُوْنَ اَنْ يَتَحَاكمُوا اِلَى الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْا اَنْ يَكْفُرُوْا بِهِ ، وَيُرِيْدُ الشَّيْطانُ اَنْ يُضِلَّهُمْ ضَلاَلاً بَعِيْدً (النساء:60)
உங்கள் மீது இறக்கப்பட்டதையும், உங்களுக்கு முன்னர் இறக்கப் பட்டுள்ளவற்றையும் நிச்சயமாக தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறுகின்ற அவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? புறக்கணிக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப் பட்ட ஒரு விஷமியையே அவர்கள் தீர்ப்பு கூறுபவனாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றனர். அந்த ஷைத்தானோ, அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகிறான். (4:60)
(3)அல்லாஹ்வின் வேதத்தின் படி தீர்ப்பு வழங்காத வர்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا اَنْزَلَ اللهُ فَأُولئِكَ هُمُ الْكفِرُونَ (المائدة:44)
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே.(5:44)
(4) அல்லாஹ் நீங்கலாக, மறைவான விடயங்கள் பற்றிய ஞானம் இருப்பதாக வாதிடுபவன். இவனைப் பற்றி அல்குர்ஆன் இப்படி இயம்புகிறது:
عالِمُ الْغَيْبِ فَلاَ يُظْهِرُ عَلى غَيْبِهِ اَحَدًا(الجن:26)
அவன்தான் மறைவான இவ்விஷயங்களை யெல்லாம் நன்கறிந்தவன். மறைவான இவ்விஷயங்களை அவன் ஒருவருக்கும் வெளிப் படுத்தவதும் இல்லை. (72:26)
اِلاَّ مَنِ ارْتَضَى مِنْ رَّسُولٍ فإِنَّهُ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رصَدًا(الجن:27)
ஆயினும் தூதர்களில் எவர்களைத் அவன் தேர்ந்தெடுத்தானோ அவர்களைத்தவிர, அப்போது நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் ஒரு பாதுகாப்பாளரை அனுப்பி வைக்கிறான். (72:27)
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لاَيَعْلَمُهَا اِلاَّ هُوَ، وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ،وَمَاتَسْقُطُ مِنْ وَرَقَةٍ اِلاَّ يَعْلَمُها وَلاَ حبَّةٍ فِي ظُلُماَتِ الأَرْضِ وَلاَرطْبٍ وَلاَ يَابِسٍ اِلاَّ فِي كِتَابٍ مُبِيْنٍ(الأنعام:59)
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறிய மாட்டார். நிலத்திலும் நீரிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிருவதில்லை. பூமியில் அடர்ந்த இருளில் கிடக்கும் வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான புத்தகத்தில் இல்லாமலில்லை.(6:59)
(5)அல்லாஹ் நீங்களாக, தான் வணங்கப்பட வேண்டுமென்பதை விரும்புகின்றவன். அவனின் நிலை என்னவென்பதை அல்லாஹ்வின் இந்த வசனம் தெளிவு படுத்துகிறது.
وَمَنْ يَقُلْ مِنْهُمْ اِنِّيْ اِلهٌ مِنْ دُوْنِهِ، فَذَلِكَ نَجْزِيْهِ جَهَنَّمَ ، كَذَلِكَ نَجْزِي الظَّالِمِيْنَ(الأنبياء:29)
அவர்களில் எவரேனும் “அல்லாஹ்வை யன்றி நிச்சயமாக நானும் ஒரு வணக்கத்திற்குரிய இறைவன்தான் என்று கூறினால் அவர்களுக்கு நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாய காரர்களுக்கும் அவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.(21:29)
எனவே ‘தாகூத்’களை, நிராகரிக்காத எவரும் அல்லாஹ் மீது ஈமான் கொண்ட உண்மை விசுவாசியாக மாட்டான் என்பதை, எல்லா முஸ்லிம்களும் ஐயமின்றி அறிந்து கொள்வது அவசியம். அதனையே பின் வரும் இறை வசனம் தெளிவு படத்துகிறது.
لاَاِكْرَاهَ فِي الدِّيْنِ،قَدْ تَبيَّنَ الرُّشْدُ مَنَ الْغَيِّ ، فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لاانْفِصَامَ لَهَا، وَاللهُ سَمِيْعٌ عَلِيْمٌ (البقرة:256)
மார்க்கத்தில் நிர்பந்தமேயில்லை, ஏனென்றால் வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. ஆகவே எவர் ஷைத்தானை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். (2:256)
இந்த வசனத்தில் الرشد - நேர்வழி என்பது, முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தையும், الغي - வழிகேடு என்பது அபூ ஜஹ்லின் மார்க்கத்தையும், العروة الوثقى - பலமான கயிறு என்பது மறுத்தல், உறுதி படுத்துதல் எனும் இரண்டு அம்சங்களையும் உள்ளடக்கிய لااله الاالله என்ற கலிமாவையும் குறிக்கின்றது. எனவே இந்த கலிமாவானது அல்லாஹ் அல்லாத எதனையும் வழிப்படுவதை மறுக்கின்றது. மேலும் இணை எதற்கும் பாத்திரமாகாத ஏக அல்லாஹ் ஒருவனுக்கே சகல வழிபாடுகளும் உரித்தாகும் என்பதைய உறுதி படுத்துகின்றது.
எனவே வெளிப்படையான மறைவான சகல இணைகள விட்டும் பாதுகாத்து, ஏக நாயன் அல்லாஹ் ஒருவனுக்கே தலை சாய்க்கின்ற உண்மை விசுவாசிகளாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக.
وصلى الله وسلم على محمد واله وصحبه اجمعين والحمد لله رب العلمين
Contents
الصفحة العنوان م
1 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Download
PDF
Word
About the book
Author
:
Abdullah Al-Qarawe
Publisher
:
www.islamhouse.com
Category
:
For New Muslim
Available in
English
اللغة العربية
বাংলা ভাষা
فارسى
Français
Indonesian
Português
Tagalog
Тоҷикӣ
தமிழ் மொழி
mute
Update Required
To play the media you will need to either update your browser to a recent version or update your
Flash plugin
.
© Copyright
Islam land أرض الإسلام
. All Rights Reserved 2017